Jump to content

நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-1-10.jpg?resize=750,375&ssl=

நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்துள்ளார்.

மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

அந்த செய்தியில்,

எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில் உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1407480

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Trump returns! 

இந்தமுறை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்।

Wait and see!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Modi-and-Trump-.webp?resize=596,336&ssl=

மோடி உண்மையான நண்பன் – ட்ரமப்க்கு வாழ்த்திய மோடி.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407576

Link to comment
Share on other sites

ட்ரம்ப்,  உங்களை இந்தியாவுக்கு அழைத்து ஏழைகளின் குடிசைகளை மறைத்து மதில் கட்டிய பெருமைக்கு உரிய தலைவர் தான் மோதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

ட்ரம்ப்,  உங்களை இந்தியாவுக்கு அழைத்து ஏழைகளின் குடிசைகளை மறைத்து மதில் கட்டிய பெருமைக்கு உரிய தலைவர் தான் மோதி.

204695a2-bdce-4062-8edb-7ae76731e491-AP2

மோடி- ட்ரம்ப்

gallerye_074225833_3307444.jpg

5e53ae3bfee23d4d7b5cf912?width=700&forma

மதிலும் இல்லை... பல இடங்களில், படங்கு துணி. (தார்ப்பா) 😂
அங்காலை ட்ரம்ப், இங்காலை குடிசை. 
🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image-17-1024x576.jpg

இந்தப்  படத்தில்... சிவப்பு கட்டத்தில் உள்ளவர் செய்யும் வேலை, 
வட இந்தியர்களுக்கே பிரத்தியேகமானது. 😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.