Jump to content

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது.

இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

காற்றின் தரமானது இன்று வியாழக்கிழமை (7) கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்தது.

மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198142

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்க…. டில்லி, ஷங்காய் போன்ற மாசு அடைந்த நகரம் போல் கொழும்பு தெரிகின்றது. தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் காற்று மாசு படுவதை தீவிரமாக கண்காணித்து எடுக்க வேண்டிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். 

 நகரம் இப்படி  மாசு பட்டுப் போனால்… மக்கள்தான் நோயாளிகள் ஆவார்கள். ஆரோக்கியமில்லாத மக்களும் அரசுக்கு சுமை என்பதை மறக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

படத்தைப் பார்க்க…. டில்லி, ஷங்காய் போன்ற மாசு அடைந்த நகரம் போல் கொழும்பு தெரிகின்றது.

அங்கையிருந்து தான் காற்று வருகிறதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் சுற்றுலாவிற்கு திறமான நாடு என்று எப்படி????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

இந்த நிலையில் சுற்றுலாவிற்கு திறமான நாடு என்று எப்படி????

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ...

சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் ....
இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அங்கையிருந்து தான் காற்று வருகிறதோ?

இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன் 
இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ...

சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் ....
இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...

மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக்,  தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது.

கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.

விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் | Auto fare  should be fixed according to the price

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக்,  தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...

பணம் தான் முக்கியம் கெளரவம் முக்கியமில்லை ...இடதுசாரி அபிமானியா கியுபா போ...வலதுசாரி அபிமானியா தாய்லாந்து போ....இதுதான் உலகம் ..பணம் பணம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

பணம் தான் முக்கியம் கெளரவம் முக்கியமில்லை ...இடதுசாரி அபிமானியா கியுபா போ...வலதுசாரி அபிமானியா தாய்லாந்து போ....இதுதான் உலகம் ..பணம் பணம் ....

ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில்.

அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில்.

அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 

உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.