Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !

November 10, 2024
IMG-20241109-WA0051-696x522.jpg

கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும்.

இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் .

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்கும் என்றும் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

அன்று கருணா மட்டும் வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதறடித்தார். இன்று படகு வீடு சைக்கிள் திசைகாட்டி மணிக்கூடு என வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அழிக்க புறப்பட்டு இருக்கின்றனர் .
இவர்களெல்லாம் கடந்த காலத்தில் இங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் அறிவார்கள்.

தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் தெரிந்தும் களம் இறங்கி இருக்கின்றார்கள்.

புளட் சித்தார்த்தன் இயக்கத்தில் இயங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு படு தோல்வி அடைய இருக்கின்றது. தெரிந்தும் சுரேஷ் சித்தரின் தேசிய பட்டியலுக்காக இங்கு அவர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

75 வருட கால பழந்தமிழ் கட்சியான எமது கட்சியை உடைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே எடுபடாது .
நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் 2015 தொடக்கம் 2020 வரைக்கும் 1800 மில்லியன் பெறுமதி யான அபிவிருத்தியை செய்து இருக்கின்றோம்.

இம்முறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்க இருக்கிறது.

எனவே தமிழரசுக் கட்சி வெல்லப்போவது தெரிந்த விஷயம்.அதுக்கு மட்டும் ஆதரவு அளித்து உங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் .
வேட்பாளர் கே.யசோதரனும் கலந்து சிறப்பித்தார்.

IMG-20241109-WA0048-300x225.jpg

IMG-20241109-WA0053-300x170.jpg

https://www.supeedsam.com/209335/IMG-20241109-WA0050-300x225.jpg

IMG-20241109-WA0051-300x225.jpg

IMG-20241109-WA0052-300x225.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் தெரியாமல் அதை செய்தார்.

அறியாத வயதில தெரியாமச் செய்திட்டார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அறியாத வயதில தெரியாமச் செய்திட்டார்🤣

யாரு கருணாம்மானோ? இல்லாட்டி நிலாந்தன் மாஸ்டரோ (மாஸ்டர்தானே சங்கு நாயகன்)?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்

ஐயோ சிரித்து வயிறு வலிக்குது. தெரிந்தே செய்தார் என்றால் ஏன் தெரிந்தே செய்தார் என்று சொல்ல வேண்டி வரும். அதை சொல்லப்போனால் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். இது தேவையா நம்ம பாட்டில் Safe game யே ஆடுவோம். கருணா தெரியாமல் செய்தார் என்று கருணாவே சொல்லவில்லை, அதுக்குள்ள நம்ம கோட்டீஸ் பாவம் நிலவரம் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.

இப்படிக்கு கோட்டீஸ் முன்னால் தமிழ் தேசிய கூத்தமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்.  உண்மையிலே இது ஒரு வரலாற்று பதிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவிருக்கும் தேர்தலில்... சங்கு, திருகோணமலையில் தமிழர்  பிரதிநிதித்துவம் 
பறி போகக் கூடாது என்று தமிழரசு கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் போது... 
அம்பாறையில்... தமிழரசு கட்சி ஒற்றுமையாக சங்கிற்கு ஆதரவு கொடுத்திருக்கலாம் தானே.

அது ஏன்... தமிழரசு கட்சி இங்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு போட்டியிடுவேன்  என போட்டியிட்டு அம்பாறையில் தமிழர் வாக்குகளை சிதறப் பண்ணி... தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் பண்ண கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. 

தமிழரசு கட்சிக்கு... நெடுகவும் மற்றவன் செம்பு தூக்கிக் கொண்டு திரிய வேணும் என்ற நினைப்பு எல்லா இடமும் எடு படாது. அம்பாறையில்... வாக்குகள் சிதறி, தமிழர் தெரிவு செய்யப் படா விட்டால்...  அதற்குரிய முழுப் பொறுப்பும்...    சுமந்திரனையே சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில்... சங்கு செய்தது துரோகம் என்று சொல்வதற்கு முன்,
தமிழரசு கட்சி எவ்வளவு துரோகம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று 
உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். 
சும்மா.... சகட்டு மேனிக்கு சேறு அடிக்கும் அரசியல், இனி எடுபடாது. 

###########    ###########   ###############   ############### 

திருமலையில் தமிழ் அரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த்  தேசியக் கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.

எனினும், அம்பாறையில் சங்குச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக்கட்சி மறுதலித்தமையால் இருதரப்பினரும் தனித்தனியாக களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளன.

திருகோணமலையிலும், அம்பாறையிலும் தலா ஒவ்வொரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், திருமலை மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து தமிழ் அரசுக்கட்சியையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியையும் இணைத்து களமிறங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனடிப்படையில், திருகோணமலையில் இருதரப்பினரும் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்காக ஏழுவர் களமிறங்கவுள்ள நிலையில் நான்கு வேட்பாளர்கள் தமிழ் அரசுக்கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.

அம்பாறையைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் மாவை.சோனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் அச்சின்னத்தின் கீழ் உள்வாங்கப்படுவதாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வடக்கு,கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் அரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும் என்று சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுக்களில் அம்பாறையிலும் வீட்டுச்சின்னத்திலேயே களமிறங்குவதில் உறுதியாக இருந்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவிலலை. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமது விட்டுக்கொடுப்புக்களை தமிழ் அரசுக்கட்சி புரிந்து கொண்டு இணக்கப்பாடு எட்டிய விடயத்தினை அமுலாக்குவதற்கு தயாரில்லாத காரணத்தினால் தாம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தனியாக அம்பாறையில் களமிறங்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசுக் கட்சியின் விட்டுக் கொடுக்காத நிலைமையால் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அக்கட்சியே கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

https://www.ilakku.org/tamil-govt-cut-c-democratic-tamil-national-alliance-contest-in-trincomalee/?amp

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

விளக்கமான பதிவை தேவையான நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஐயோ சிரித்து வயிறு வலிக்குது. தெரிந்தே செய்தார் என்றால் ஏன் தெரிந்தே செய்தார் என்று சொல்ல வேண்டி வரும். அதை சொல்லப்போனால் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். இது தேவையா நம்ம பாட்டில் Safe game யே ஆடுவோம். கருணா தெரியாமல் செய்தார் என்று கருணாவே சொல்லவில்லை, அதுக்குள்ள நம்ம கோட்டீஸ் பாவம் நிலவரம் அப்படி.

இதை சொல்ல கூட தைரியம் இல்லை எண்டா பிறகு என்ன ஹைகோர்ட்டுக்கு பாராளுமன்றம் போற ஆசை.

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.

அவர் சொல்லாட்டில் என்ன? நீங்களே  ஏத்துறது தண்டவாளத்தில்?

கலையரசனும் கேக்கிறாதாமா?

பிறகு நம்மட நேரு ஜூனியர் - இலண்டனில் குளிர் எண்டா அம்பாறை அரசியலில் கூதல் காய்வாரே, அவரும் கேட்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அவர் சொல்லாட்டில் என்ன? நீங்களே  ஏத்துறது தண்டவாளத்தில்?

கலையரசனும் கேக்கிறாதாமா?

பிறகு நம்மட நேரு ஜூனியர் - இலண்டனில் குளிர் எண்டா அம்பாறை அரசியலில் கூதல் காய்வாரே, அவரும் கேட்கிறாரா?

இதுவரை ஏத்தினது காணாதா...செத்த பாம்பை எத்தினை தரம் தான் தூக்கி தூக்கி சாத்துறது சாரி ஏத்துறது .

கலைஸ் தான் தலைமை வேட்பாளர்   

ஜுனியர் நேரு லண்டனில் குளிர் காய்ந்தாலும், கடைசி யுத்த நேரம் இந்தியாவுக்குஒடிப்போய் போனை அணைத்துவிட்டு குப்புறப்படுக்காமல் இலங்கையில் நின்ற அந்த துணிவுக்காகவே மற்ற கூத்தமைப்பான்களை விட இவர் மேல் கொஞ்சம் மரியாதை உண்டு.

இம்முறை திகாமடுல்லவில் போட்டியிடுபவர்கள் 

spacer.png

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அம்பாறையில்... சங்கு செய்தது துரோகம் என்று சொல்வதற்கு முன்,
தமிழரசு கட்சி எவ்வளவு துரோகம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று 
உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். 
சும்மா.... சகட்டு மேனிக்கு சேறு அடிக்கும் அரசியல், இனி எடுபடாது. 

###########    ###########   ###############   ############### 

திருமலையில் தமிழ் அரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த்  தேசியக் கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.

எனினும், அம்பாறையில் சங்குச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக்கட்சி மறுதலித்தமையால் இருதரப்பினரும் தனித்தனியாக களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளன.

திருகோணமலையிலும், அம்பாறையிலும் தலா ஒவ்வொரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், திருமலை மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து தமிழ் அரசுக்கட்சியையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியையும் இணைத்து களமிறங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனடிப்படையில், திருகோணமலையில் இருதரப்பினரும் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்காக ஏழுவர் களமிறங்கவுள்ள நிலையில் நான்கு வேட்பாளர்கள் தமிழ் அரசுக்கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.

அம்பாறையைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் மாவை.சோனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் அச்சின்னத்தின் கீழ் உள்வாங்கப்படுவதாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வடக்கு,கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் அரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும் என்று சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுக்களில் அம்பாறையிலும் வீட்டுச்சின்னத்திலேயே களமிறங்குவதில் உறுதியாக இருந்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவிலலை. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமது விட்டுக்கொடுப்புக்களை தமிழ் அரசுக்கட்சி புரிந்து கொண்டு இணக்கப்பாடு எட்டிய விடயத்தினை அமுலாக்குவதற்கு தயாரில்லாத காரணத்தினால் தாம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தனியாக அம்பாறையில் களமிறங்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசுக் கட்சியின் விட்டுக் கொடுக்காத நிலைமையால் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அக்கட்சியே கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

https://www.ilakku.org/tamil-govt-cut-c-democratic-tamil-national-alliance-contest-in-trincomalee/?amp

10 hours ago, ஈழப்பிரியன் said:

விளக்கமான பதிவை தேவையான நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி சிறி.

ஈழப்பிரியன்... திருகோணமலை / அம்பாறையில் நடந்த விரிவான  செய்திக் குறிப்பை, 
நான் வேறு ஒரு திரியில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க @goshan_che தான் தேடி எடுத்துத் தந்தவர். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.