Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் 

ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்)

அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன:

  1. சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும்.
  2. அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு.

இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. 

முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது.

இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது.

யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. 

களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல.

ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே.

தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா.

அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு,  அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது.

சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள்.

இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல்.

இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன்.

50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல்.

நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும்.

இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது.

பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது.

பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய

மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, 

கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள்.

இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள்.

எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர்.

அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. 

ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம்.

இப்போ….

பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல்.

மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்).

இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது.

ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல்.

இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். 

இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம்.

இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும்.

இதுதான் என் பார்வை.

————————————————

அடுத்து……

இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன்.

கேள்வி1

அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்?

பதில்

இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில். 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 2

சரி நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும், ஆனால் கெளரவமாக வாழ முடியும் எனும் போது அதை ஏற்றால் என்ன பிழை?

பதில்

இதை பிழை என வெளிநாட்டு பிரசை நான் சொல்ல முடியாது. இன்று ஒருவர் கூறினார் போதை பொருளை யாழில் ஒழிப்பார்கள் எனவே என் வோட்டு என் பி பிக்குத்தான்.

நாம் உரிமையை (பிச்சை) கேட்ட போது அவர்களாகவே நாயை (போதைபொருள்) அவிழ்த்து விட்டார்கள். இப்போ நாம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்கிறோம்.

ஆனால் இதுதான் வாக்காளர் தேர்வு என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது.

யாழ்களத்தில் உள்ள பலர் மற்றும் வெளிநாட்டில் உள்ள பலர் தமிழரசு கட்சி தமிழ்ஈழம் சுயநிர்ணய கோட்பாடு நோக்கி செயற்படாமல் தமிழர்களை ஏமாற்றி கோண்டிருக்கின்றது  தமிழ்ஈழம் அல்லது ஆக குறைந்தது அதற்கீடான ஒரு தீர்வு கிடைக்கும் வரை அபிவிருத்தி உதவிகள்  எதையும் அரசிடம் இருந்து பெற்று கொள்ள கூடாது என்ற கொள்கை கொண்ட தன்மான தமிழர்களாக  தங்களை காட்டி கொண்டனர்.சிங்கள மக்கள்  13 ம் இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு கூட கிடையாது ஐக்கிய சிறிலங்கா என்ற அனுரகுமார திசநாயக்கவை தங்கள் தெரிவாக தெரிவு செய்தவுடன் அவரின் புகழ்பாடுபவர்களாகவே இவர்கள் மாறிவிட்டனர்.இப்போது இவர்கள் ஜேவிபி மீது நிறைய நம்பிக்கை கொள்கிறார்கள் என்றால் முன்பு இவர்கள் போலியாக போலி பக்தர்கள் போன்று இருந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

.இப்போது இவர்கள் ஜேவிபி மீது நிறைய நம்பிக்கை கொள்கிறார்கள் என்றால் முன்பு இவர்கள் போலியாக போலி பக்தர்கள் போன்று இருந்துள்ளார்கள்.

அரசியல் தெளிவூட்டல் இல்லை என்றும் பொருள் கொள்ளலாமல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che நன்றி தரமான செயல். நான் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றி தான் அதிகம் எழுதுவேன். அதில் பலதையும் நீங்கள் சரியாக தொட்டிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உடைக்க முடிந்த அளவுக்கு கூட புலம்பெயர் அமைப்புகளை உடைக்க முடியாத படி இருந்தன. உங்கள் பலருக்கும் இது 2009 க்கு பின்னர் என்று தான் தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிய 2002 லிலேயே இது மும்மரமாகக்கப்பட்டு விட்டது. இதனை செய்வதற்கு சிறீலங்கா அரசுக்கு புலம்பெயர் தேசங்களில் சிங்களவர்கள் தேவையே இல்லை என்ற அளவிற்கு எமது இனத்தவர் முழுவதுமாக முழுநேரமாக உழைத்தனர் என்பது தான் கிரகித்து கொள்ள முடியாத நிஜம். இதனாலேயே யாழ் களத்தில் இவர்கள் சார்ந்த எழுத்துருக்களை காணும் போதெல்லாம் என் என் கண்கள் சிவக்கும். 

நன்றி சகோ நேரத்திற்கும் ஆக்கத்திற்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது இவர்கள் ஜேவிபி மீது நிறைய நம்பிக்கை கொள்கிறார்கள் என்றால் முன்பு இவர்கள் போலியாக போலி பக்தர்கள் போன்று இருந்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் softening the audience என்பார்கள். பார்வையாளரை மெதுமைப்படுத்துவது - அதன் பெறுபேறைரைத்தான் நீங்கள் பார்கிறீர்கள்.

இப்போ அல்ல, சில காலத்துக்கு முன்பே யாழில் கூட இதை நான் கண்டுள்ளேன்.

யாழில் சில காலத்துக்கு முன், மேற்கை, தமிழக கட்சிகளை நம்பமுடியாது - நாம் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம் என ஒருவர் தொடர்ச்சியாக எழுதினார்….

சீனா உள்ளே வந்தே விட்டது, தமிழர் சீனாவோடு பேரம் பேச வேண்டும் என்ற இன்னொரு மாயக்கதையின் பிண்ணனியில் இது வெளிவந்தது.

அதில் ஒரு பலத்த தேசியவாதி கூட அள்ளுண்டு போய் கருத்துக்களை அதே தொனியில் எழுதினார். நான் கூட, நீங்களா இப்படி எழுதுவது என கேட்டிருந்தேன்.

அவர் போல தேசிய உணர்வில் அர்ப்பணிப்பான, உண்மையானவர்களையே மெதுமைபடுத்த முடியும் போது, சாதாரணமானவர்கள் எம்மாத்திரம்.

யாழில் நடந்தது ஒரு சோறு, புலத்தில், புலம்பெயர் நாட்டில் நடந்தது, நடப்பது ஒரு பானை. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இதை பிழை என வெளிநாட்டு பிரசை நான் சொல்ல முடியாது. இன்று ஒருவர் கூறினார் போதை பொருளை யாழில் ஒழிப்பார்கள் எனவே என் வோட்டு என் பி பிக்குத்தான்.

நாம் உரிமையை (பிச்சை) கேட்ட போது அவர்களாகவே நாயை (போதைபொருள்) அவிழ்த்து விட்டார்கள். இப்போ நாம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்கிறோம்.

ஆனால் இதுதான் வாக்காளர் தேர்வு என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது.

இங்கே கவனிக்க வேண்டியது, பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால், அவர் பின்னால் அவன் போய்விடுவான்.

சிங்களவன் அடித்தான் பொதுமகன் வடக்கு/கிழக்குக்கு ஓடி வந்துவிட்டான். கொஞ்சக் காலம் கழித்துத் தயங்கித் தயங்கி மீண்டும் போனான். திரும்பவும் சிங்களவன் அடித்தான். ஓடிவந்தான். பொதுமகனுக்கு இந்தப் பரமபதம் விளையாட்டு நன்றாகப் பழகிவிட்டது.

அரசியல் கட்சியில் முக்கியமானவர்களில் இருவர் தோற்றுப் போயினர். தங்கள் இருப்பைத் தக்க வைக்கதமிழ் ஈழம்தான் தீர்வு என்றார்கள். ஆயுதம் இளைஞர் கைகளுக்குப் போனது. அப்பொழுதும் பொதுமகன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகனும் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான் என்றவுடன் பொதுமகனும் தனிநாடுதான் தீர்வு என்றான். அதுவும் வரலாறு காணாத இழப்பைத் தந்துவிட, ‘உலகநாடுகள் சும்மாவிடாதுஎனச் சொல்லிக் கொண்டு திரிந்தான்.

உலக நாடுகளுடன் தாங்கள் கதைக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்டதற்கு இணங்கி அவர்களைத் தெரிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்க பொதுமகன் போய்விட்டான்.

இப்பொழுது போதைப் பொருட்கள், வாள் வீச்சுகள் நடுவில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த பொதுமகனிடம், சிங்களவனே நேரில் வந்து, “உனக்கென்ன பிரச்சினை இருக்கிறது? நான் தீர்த்து வைக்கிறேன். மறந்தும் தனிநாடோ சுயாட்சியோ கேட்டு விடாதே. வெளிநாடு போனவனின் பணம் தேவைப்படுகிறது. கொண்டுவரச் சொல்லு இந்த நாடு சொர்க்கபுரி  ஆகிவிடும்என்கிறான்.

இப்பொழுதெல்லாம் பொதுமகனுக்கு தனிநாடு என்ற கனவு வருவதில்லை. சுயாட்சி என்றால் என்ன என்பதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பேசாமல் சிங்களவனுக்குப் பின்னால் போய் நிற்கிறான்.

பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால் அவர் பின்னால் அவன் போய்விடுவான்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavi arunasalam said:

இங்கே கவனிக்க வேண்டியது, பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால், அவர் பின்னால் அவன் போய்விடுவான்.

சிங்களவன் அடித்தான் பொதுமகன் வடக்கு/கிழக்குக்கு ஓடி வந்துவிட்டான். கொஞ்சக் காலம் கழித்துத் தயங்கித் தயங்கி மீண்டும் போனான். திரும்பவும் சிங்களவன் அடித்தான். ஓடிவந்தான். பொதுமகனுக்கு இந்தப் பரமபதம் விளையாட்டு நன்றாகப் பழகிவிட்டது.

அரசியல் கட்சியில் முக்கியமானவர்களில் இருவர் தோற்றுப் போயினர். தங்கள் இருப்பைத் தக்க வைக்கதமிழ் ஈழம்தான் தீர்வு என்றார்கள். ஆயுதம் இளைஞர் கைகளுக்குப் போனது. அப்பொழுதும் பொதுமகன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகனும் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான் என்றவுடன் பொதுமகனும் தனிநாடுதான் தீர்வு என்றான். அதுவும் வரலாறு காணாத இழப்பைத் தந்துவிட, ‘உலகநாடுகள் சும்மாவிடாதுஎனச் சொல்லிக் கொண்டு திரிந்தான்.

உலக நாடுகளுடன் தாங்கள் கதைக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்டதற்கு இணங்கி அவர்களைத் தெரிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்க பொதுமகன் போய்விட்டான்.

இப்பொழுது போதைப் பொருட்கள், வாள் வீச்சுகள் நடுவில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த பொதுமகனிடம், சிங்களவனே நேரில் வந்து, “உனக்கென்ன பிரச்சினை இருக்கிறது? நான் தீர்த்து வைக்கிறேன். மறந்தும் தனிநாடோ சுயாட்சியோ கேட்டு விடாதே. வெளிநாடு போனவனின் பணம் தேவைப்படுகிறது. கொண்டுவரச் சொல்லு இந்த நாடு சொர்க்கபுரி  ஆகிவிடும்என்கிறான்.

இப்பொழுதெல்லாம் பொதுமகனுக்கு தனிநாடு என்ற கனவு வருவதில்லை. சுயாட்சி என்றால் என்ன என்பதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பேசாமல் சிங்களவனுக்குப் பின்னால் போய் நிற்கிறான்.

பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால் அவர் பின்னால் அவன் போய்விடுவான்.

 

 

மிகவும் தெளிவான அவதானிப்பு.

முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என.

அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும்,  ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. 

அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்…..

நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம்.

இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம்.

இப்போ நீங்கள் சொன்ன விடயம்….

நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே?

சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான்.

அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை.

புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம்.

யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்….

திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை?

கூர்ப்பில் சறுக்கிறோமோ?

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான்.

உண்மை.

அவர்களிடம் பொருள் இல்லாத போதும் ‘பௌத்த சிங்கள இலங்கை’ என்பதில் ஒற்றுமையாக   இருக்க முடிகிறது. பொருள் இருந்தும் எங்களிடம் அந்த ஒற்றுமை இல்லை. எங்களிடம் ‘நான்’ என்பது ஓங்காரமாக வளர்ந்து நிற்கின்றது. 

முன்பு, சேர சோழ பாண்டியர்களது போராட்டங்களையும், அவர்களது சிறப்புகளையும் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு புலிகளின் போராட்டங்கள், வெற்றிகளைப் பேச ஆரம்பித்தோம். அடுத்து என்ன என்பதை ஏனோ நாங்கள் சிந்திப்பதில்லை.

நீங்கள் குறிப்பிட்டபடி கூர்ப்பில்தான் கோளாறு போல் இருக்கிறது

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.