Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி!

christopherNov 13, 2024 09:29AM
Trump order that Elon Musk - Vivek Ramasamy get key responsibility

அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார்.

அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் டிரம்ப் ஏற்கெனவே கூறியபடி, எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவருக்கும் தனது ஆட்சியில் அரசின் செயல்திறன் துறையை (“DOGE”) வழிநடத்துவார்கள் என அவர் இன்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்படாத நிறுவனமாக உள்ளது.

Trump announces Elon Musk, Vivek Ramaswamy to lead new 'Department of Government Efficiency'

ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து எலோன் மஸ்க் இருவரும் அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றவும் வழிவகுப்பார்கள்.

குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் “DOGE” இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.

மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும்.

எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும்.

அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Image

எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள்.

முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பெரும் கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம்.

நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும், “நாம் மக்களுக்கு” அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி 2026, ஜூலை 4ஆம் தேதி முடிவடையும்.

அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

https://minnambalam.com/political-news/trump-order-that-elon-musk-vivek-ramasamy-get-key-responsibility/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச செலவழிப்பது. அரசில் நேரடியாக இருக்கும் வேலைகளை மட்டும் அல்லாது அதற்கு வெளியேயும் வேலைகள், உப தொழிதுறைகள் (industries) ஐ உருவாக்குகிறது.

இது வேலைகள் / தொழில்கள் குறையும் /முடங்கும் நிலையை ஏற்றப்படுத்தலாம், மறுவளமாக பணவீக்கத்தையும் குறைக்கலாம்.

இந்த அரச செலவுக்கு குறைப்புக்கு கிட்டத்தட்ட ஒப்பனை அளவு, தனியார் துறை முதலிடாவிட்டால், பொருளாதாரத்தை தாக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், அரசு செலவை குறைக்கும் போது, தனியார் துறை பொதுவாக முதலிடாது.

அனால், டிரம்ப் இன் எதிர்பார்ப்பு, அரச செலவை குறைப்பதன் மூலம், வரியை குறைப்பது.

இது தாக்கப்போவது டிரம்ப் க்கு வாக்களித்த நடுத்தரம் மற்றும் அதன் கீழான வருமானத்தை கொண்டவரை.

அமெரிக்க அரசின் பணம் வீணாக்குவது,முக்கியமாக, இராணுவத்தில் (என்றே நினைக்கிறன்).  

இதில் டிரம்ப் கைவைக்க போய், டிரம்புக்கு impeachment இல் வந்து நின்றாலும் ஒன்றும் புதினம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா: டிரம்ப் 2.0 ஆட்சியில் ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியின் பங்கு எப்படி இருக்கும்?

டொனால்ட் டிரம்ப் 2.0: சீனா, குடியேற்றம் மீதான அணுகுமுறை எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், அந்தோணி ஸர்ச்சர்
  • பதவி, வட அமெரிக்க செய்தியாளர், பிபிசி

டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்நிலையில், வெள்ளை மாளிகை பதவிகளுக்கான அவரது புதிய நியமனங்கள், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து உணர்த்துவது என்ன?

டிரம்ப், முதல் கட்டமாகத் தனது வெள்ளை மாளிகை நியமனங்கள் மற்றும் முக்கிய அரசாங்கத் துறைகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

அவர், 2025 ஜனவரி மாதம் பதவியேற்கும்போது அவரது முன்னுரிமைகள் என்ன என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும், குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது முதல் பதவிக் காலத்தின்போது, சில நேரங்களில் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை உணர்ந்த டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நிர்வாகத்திற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்து வருகிறார். அதற்கென தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டத்தையும், அதைச் சரி வரச் செயல்படுத்தும் பணியாளர்களையும் நியமித்துள்ளார். அதுகுறித்து இதுவரை தெரிய வந்திருப்பதை இங்கு காணலாம்.

கடுமையான நிலைப்பாட்டுடன் குடியேற்றக் குழு

“அமெரிக்காவில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் முறையான ஆவணங்களின்றி வசிக்கின்றனர். அவர்களை நாடு கடத்துவதாக அளிக்கப்பட்ட டிரம்பின் பிரசார வாக்குறுதி மிகையானதல்ல” என்று டிரம்ப் அரசாங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டிரம்பின் நெருங்கிய ஆலோசகராகவும், அவரது உரையாசிரியராகவும் இருந்து வரும் ஸ்டீபன் மில்லரை, வெள்ளை மாளிகை கொள்கைகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாகத் தேர்வு செய்துள்ளார்.

பெருமளவிலான நாடு கடத்தல் தொடர்பான கொள்கைகளை ஸ்டீபன் மில்லர் வடிவமைப்பார். மேலும், ஆவணமற்ற மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்த இரண்டு கொள்கைகளையும் மில்லர் சரி பார்ப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை உருவாக்குவதில் மில்லர் ஈடுபட்டார்.

 
டிரம்ப் 2.0: வெள்ளை மாளிகை நியமனங்கள் கூறுவது என்ன? இரண்டாவது ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் பதவிக்காலத்தில் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (Immigration and Customs Enforcement) செயல் இயக்குநராகப் பணியாற்றிய தாமஸ் ஹோமன், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணமற்ற மக்களைக் கண்டறியும் அதிபரின் கொள்கையை ஆதரித்தார்.

இப்போது அவர் டிரம்பின் “குடியேற்றத் திட்டங்களின் நிர்வாக அதிகாரியாக” இன்னும் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார்.

"இந்த நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நாடு கடத்தல் படையைத் தான் இயக்கப் போவதாக" ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஹோமன் கூறினார்.

டிரம்பின் இந்த மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், "செலவு” ஒரு பிரச்னை இல்லை என்று கடந்த வாரம் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

"அவர்கள் மக்களைக் கொலை செய்தார்கள், போதைக் கடத்தல்காரர்கள் நாடுகளை நாசமாக்கினார்கள். இப்போது அவர்கள் அந்தந்த நாடுகளுக்கே திரும்பச் செல்லப் போகின்றனர். அவர்கள் இனிமேலும் இங்கே தங்க முடியாது," என்று தனது நாடு கடத்தல் திட்டம் குறித்து அவர் கூறினார்.

 

சீனாவை கடுமையாக எதிர்ப்போருக்கு வெளியுறவு பதவிகள்

டிரம்ப் 2.0: வெள்ளை மாளிகை நியமனங்கள் கூறுவது என்ன? இரண்டாவது ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலர் நம்புகின்றனர்.

வர்த்தகம் என்ற எல்லைக்குள் சீனா குறித்தான தனது விமர்சனங்களை டிரம்ப் கவனமாக வெளிப்படுத்துகிறார். தனது வெளியுறவுக் கொள்கைக் குழுவுக்கு ஆதரவாக சீன விமர்சகர்களைக் குரல் எழுப்ப வைக்கிறார்.

தனது தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகராக, டிரம்ப் ஃப்ளோரிடா நாடாளுமன்ற உறுப்பினரான மைக் வால்ட்ஸை தேர்வு செய்துள்ளார். அவர் ஓர் ஓய்வுபெற்ற ராணுவ கர்னல். இது வெள்ளை மாளிகையின் முக்கிய வெளியுறவுக் கொள்கைப் பதவி.

அமெரிக்கா சீனாவுடன் "பனிப்போரில்" இருப்பதாகத் தெரிவித்த அவர், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்கா அழைப்பு விடுத்தபோது நாடாளுமன்ற கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் வால்ட்ஸ் இருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் ஸ்டெஃபானிக், கடந்த அக்டோபர் மாதம், சீனா அமெரிக்க தேர்தலை முடக்கத் திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

சீன ஆதரவு ஹேக்கர்கள் டிரம்பின் செல்போனில் உள்ள தகவல்களைத் திருட முயல்வதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் தற்போது டிரம்பால் ஐ.நா சபைக்கு அமெரிக்க தூதுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிரம்ப் தனது வெளியுறவுத் துறை செயலராக, ஃப்ளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோவை அறிவிக்கவுள்ளார். அவரும் சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020இல் ரூபியோ சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் போராடி வரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அதனால், சீன அரசு அவர்மீது பயணக் கட்டுப்பாடு மற்றும் வணிகரீதியாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், வர்த்தக சச்சரவுகள், கோவிட் பேரிடர் என அமெரிக்கா – சீனா உறவு நிலையற்றதாக, பதற்றம் நிறைந்து இருந்தது. சீனா மீதான டிரம்பின் பல கடுமையான கொள்கைகளை பைடன் நிர்வாகம் தொடர்ந்த போதிலும், மேலும் சில புதிய வரிகளைச் சேர்த்தது, சிறிதளவு பதற்றத்தைக் குறைக்க உதவியது. ஆனால், முழுமையாகப் பதற்றம் குறையவில்லை. இந்நிலையில், டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்து, சீனா மீதான அதே கடினமான நிலைப்பாட்டைத் தொடர்வார் எனத் தெரிகிறது.

 

ஈலோன் மஸ்க் புதிய அவதாரம்

டிரம்ப் 2.0: வெள்ளை மாளிகை நியமனங்கள் கூறுவது என்ன? இரண்டாவது ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நியமனங்களின் பட்டியல் வளரும் அதேவேளையில், மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு சிறிய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ தலைமையகத்தில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். டிரம்ப் தனது அமைச்சரவைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் மஸ்க் உதவுவதாகவும், டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி இடையிலான தொலைபேசி உரையாடலிலும் அவர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியுடன் இணைந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்க “அரசாங்கத் திறன் துறையை” உருவாக்குவார் என்று டிரம்ப் அறிவித்தார்.

மஸ்க் தன் அரசியல் கருத்துகளைத் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். மேலும், ஃப்ளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட்டை அடுத்த செனட் பெரும்பான்மைத் தலைவராக ஆதரித்துள்ளார்.

மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைக் குழு டிரம்பின் பிரசாரத்திற்கு உதவுவதற்காக சுமார் 200 மில்லியன் டாலர்களை செலவிட்டது. எதிர்காலத் தேர்தல்களில் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுக்கு நிதியளிக்கும் முயற்சிகளைத் தொடர மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் டிரம்ப் நிர்வாகத்தில் எப்படிப் பங்கு வகிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்பை ஆதரிப்பதற்காக சுயேச்சையாகப் போட்டியிடுவதில் இருந்து விலகிய அவருக்கு அமெரிக்காவை மீண்டும் “ஆரோக்கியமானதாக” மாற்றுவது தொடர்பான வேலையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

 
டிரம்ப் 2.0: வெள்ளை மாளிகை நியமனங்கள் கூறுவது என்ன? இரண்டாவது ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் பதவியேற்கத் தயாராகும்போது, குடியரசுக் கட்சியினர் செனட் சபையில் சிறிய வித்தியாசத்திலாவது பெரும்பான்மை பெறக்கூடும். ஆனால், டிரம்ப் நாடாளுமன்றத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதைவிட தனது அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.

செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர், செனட் சபையின் ஒப்புதலின்றிச் செயல்பட அவருக்கு உதவ வேண்டுமென்று பரிந்துரைத்தார். இது நாடாளுமன்ற அமர்வு இல்லாதபோது செனட் ஒப்புதலின்றி முக்கியமான அரசுப் பதவிகளை நிரப்புவதற்கான ஒரு வழி. புதிய நியமனங்களை அங்கீகரிப்பதில் செனட்டின் பங்கைப் புறக்கணிப்பதன் மூலம் இது அவருக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும்.

நாடாளுமன்றத்தில், குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையையும் டிரம்ப் மெதுவாகக் குறைத்து வருகிறார். அவரது நிர்வாகத்தில் சேர்வதற்காக செனட்டர்கள் வெளியேறினால், அவர்களின் இடங்களை மாகாண ஆளுநர்களால் விரைவாக நிரப்ப முடியும். ஆனால், செனட் சபை உறுப்பினர்கள் வெளியேறினால், சிறப்புத் தேர்தல்கள் தேவை. அதற்குச் சில மாதங்கள் ஆகலாம்.

ஈலோன் மஸ்க் உள்பட டிரம்பின் ஆலோசகர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையைக் குறைப்பது, சட்டங்களை இயற்றும் அவரது திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை இயற்ற நிறைய நேரமும், பேச்சுவார்த்தையும் தேவைப்பட்டாலும், குடியேற்றம் போன்ற விஷயங்களில் அதிபர் ஒரே கையெழுத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.

டிரம்ப் இப்போது, நாடாளுமன்றத்தின் மூலம் பணியாற்றுவதற்குப் பதிலாக, அதிபராகத் தனது நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.

 

விசுவாசிகளுக்கு முக்கியத்துவம்

டிரம்ப் 2.0: வெள்ளை மாளிகை நியமனங்கள் கூறுவது என்ன? இரண்டாவது ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூத்த அரசாங்க ஊழியர்களை மாற்றுவது உள்பட புதிய அதிபரின் கீழ் நிர்வாகம் தொடங்கும்போது உருவாக்கப்படும் பதவிகளை நிரப்ப டிரம்ப் இப்போதுதான் தொடங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டில், அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதால், முக்கியப் பாத்திரங்களுக்கு அவர் பாரம்பரிய குடியரசுக் கட்சியினரையே நம்ப வேண்டியிருந்தது.

ஆனால், இப்போது நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, முதல் முறை ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கட்சிக்குள் இருந்து அவருக்கு விசுவாசமான நிறைய ஆதரவாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

கடந்த செவ்வாயன்று, டிரம்ப் தெற்கு டகோட்டா ஆளுநர் கிறிஸ்டி நோயமை உள்நாட்டு பாதுகாப்புச் செயலராகவும், ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் பீட் ஹெக்செத்தை பாதுகாப்புச் செயலராகவும் நியமித்தார். இருவரும் ஆரம்பம் முதலே டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

மார்கோ ரூபியோ, எலிஸ் ஸ்டெஃபானிக் போன்ற சிலர் ஆரம்பத்தில் டிரம்பை விமர்சித்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டியுள்ளனர்.

புகழ் அல்லது கவனம் ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோரை நியமிப்பதில் டிரம்ப் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கிறார். எனவே, அவர் தனது ஆரம்பக்கால பணியாளர் தேர்வுகளில் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்.

ஆனால், ஆட்சியின்போது ஏற்படும் அழுத்தங்களை அவர் எப்படி நிர்வகிக்கிறார் என்பதைப் பொறுத்தே, அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் ஆட்சி, முதல் ஆட்சியில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது தெரிய வரும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளை மாளிகைக்கு இளம் ஊடக செயலாளர் நியமனம்

image

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக  நியமித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கைகளின் ஊடக பேச்சாளராக கரோலின் லீவிட் செயற்பட்டுள்ளார். அத்தோடு, முன்பு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உதவி ஊடக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், 27 வயதான கரோலின் லீவிட்  அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு நியமிக்கப்பட்ட  முதல் இளம் ஊடக செயலாளராவார். 

"கரோலின் புத்திசாலி, திடமானவர், மிகவும் திறமையான செய்தி தொடர்பாளர் என்பதை நிரூபித்துள்ளார்" என டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட லீவிட், தனது சொந்த மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கக் கல்லூரியான செயிண்ட் அன்செல்ம் கல்லூரியில் தகவல் தொடர்பு மற்றும் அரச அறிவியலைப் படித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198898



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.