Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.

 

பெண் அடிமைத்தனம். கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"சாகும் போது கூட சமைத்து வைத்து விட்டுத்தான் சாகனும்.."..

எத்தனயோ பெண்களின் வலியை அழகாக சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல  சற்று தரம் பிழைத்தால் ஏச்சு வேறு இவற்றையும் தங்கி   பிள்ளகளுக்காக  சமுதாயத்துக்காக என்று தியாகம் செய்து ஒன்றாக வாழும் பெணகளும் உண்டு ....

ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி  மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை.

 இது சற்று முன்னரான கால நடை முறையாக இருக்கலாம். ஒரு சில இடங்களில் இன்னும் நடக்கிறது . பகிர்வுக்கு நன்றி.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, தமிழ் சிறி said:

பெண் அடிமைத்தனம். கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணை.

பொதுவாக பெரும்பாலான உலகம் முழுவதும் இருக்கும் ஒரு சிந்தனை என்னவென்றால் வீட்டு  சமையல் அறை என்றால் அம்மாக்கள் நினைவு அல்லது அக்கா தங்கச்சி நினைவு வருவது ஏன் என்று தெரியவில்லை?
உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, நிலாமதி said:

ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி  மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை.

ஆண்களும் சமைக்கின்றார்கள்,வீட்டு வேலைகளும் செய்கின்றார்கள் தான் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்களின் அடிமனதில் சமையல் என்றால் பெண்கள் தான் முதல் நினைவாக வருவார்கள்.இதை பன்னாட்டு மக்களிடம் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன்.

பல இடங்களில் மனைவியின் வேலையை நானும் பங்குபோட்டு சரிசமமாக வேலை செய்கின்றேன் என சொல்லும் ஆண்களையே பார்த்திருக்கின்றேன். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்ணுக்கு இறப்பின் போதுதான் விடுதலை.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

ம் வழக்கு எப்படி முடிந்திருக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

குமாரசாமி, இணைப்புக்கு நன்றி.

குறும்படத்தை வெறும் மூன்று பாத்திரங்களை வைத்து அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகாவானந்தா.

பெண்கள் மேல் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறை இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதை பழையதுதான். 55 வயதில் விவாகரத்து கேட்பதை வேண்டுமானால் இங்கே புதிது என்று சொல்லலாம். 10 சிறார்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் தான் வாழ்ந்துவிடுவேன் என்று சொல்லும் ஆளுமையுள்ள ஒரு பெண் விவாகரத்து இல்லாமலேயே தனியாகப் போய் வாழ்ந்து விடலாமே என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

சென்ற நூற்றாண்டில், ஒரு பெண் தன் குடும்பத்துக்காக எப்படித் தன் தூக்கத்தையே தியாகம் செய்தாள்,எவ்வளவு தொல்லைகள் அவளுக்கு இருந்தன என்பதை கண்ணதாசன் 1966இல் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“….கை நடுங்கிக் கண் மறைந்து

காலம் வந்து சேரும்

காணாத தூக்கமெல்லாம்

தானாகச் சேரும்…”

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எடுத்துக் கொண்ட கதைக்கரு நிஜமாகவே நெகிச்சியானதுதான் . ....... ஆனாலும் புலத்தில்  இன்றைய தலைமுறையினர் ஆண்களைப்போலவே பெண்களும் வேலைசெய்வதால் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கிறது ...... ஒருத்தருக்கு ஒருத்தர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கும் மேலாக வீட்டில் இருக்கும் வேலைகளை சமையல் உட்பட   மற்றவர் வரும்வரை காத்திருக்காமல் செய்து விடுகிறார்கள் ....... அதற்குப் பின்தான் மையல் எல்லாம் .......!  😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/11/2024 at 22:26, ஈழப்பிரியன் said:

பெண்ணுக்கு இறப்பின் போதுதான் விடுதலை.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

ம் வழக்கு எப்படி முடிந்திருக்கும்.

பல குடும்பங்களில் அன்பு பாசம் எனும் பெயரில் பெண்ணடிமை மறைந்திருக்கின்றது 😀



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.