Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல

Sri Lanka.4 hours ago

Oruvan

 

தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல.

“இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும்.

ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமையும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியாக - பிரதமராக பதவி வகிக்க முடியாத பின்னணிகளும் இனவாத நோக்கம் கொண்டவை என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா?

1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், 'சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (Equal Rights and Self-Determination of Peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிய சட்டவிளக்கம் உண்டு.

இலங்கைத்தீவில் 'சோசலிச சமத்துவம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜேவிபி இரண்டு முறை அயுதப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்ட நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் அரசியலுக்குள் நுழைந்தது. ஆனால் ஆரம்பகாலம் முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்க மறுத்திருந்தது.

இப் பின்னணியில் 2024ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்துடனும் ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி எனப்படும் மக்கள் சக்தி தற்போது 'தேசம்' 'சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு இனத்தின் சுயமரியாதைக்குரிய கோட்பாடுகளை இனவாதமாகச் சித்தரிக்க முனைவது அரசியல் வேடிக்கை.

வெளிச் சக்திகளின் வற்புறுத்தல்கள் இன்றி, ஒரு இனக் குழுமம் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்ளும் தத்துவமே சுயநிர்ண உரிமை என்பதன் மற்றுமொரு விளக்கம்.

தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்.

நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.

சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக ”மொழி” என்பதை மையமாக் கொண்டு சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வகுக்கப்படுகிறது.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை எடுத்துரைத்த திம்புக் கோட்பாட்டின் முதலாவது பகுதியானது 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்று சட்ட வியாக்கியாணம் செய்கிறது.

தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் காம்யூனிஸ போராளியான ஜோசப் ஸ்டாலின், 'வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்' என்று வரையறுக்கிறார்.

குறிப்பாக பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும்.

ஒரு தேசத்தின் இருப்பு என்பது, 'நித்திய பொதுவாக்கெடுப்பு' என்று ஏனஸ்ட் றெனன் என்ற அறிஞன் வரையறுக்கிறார்.

இதனை மையமாக் கொண்டே வடக்குக் கிழக்கு இணைந்த தயாகம் என்பதற்கும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அங்கீகரிக்கவும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் கோரி வருகின்றன.

'சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது” என்று கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பான வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பொருள் கோடல் செய்துள்ளது.

ஆகவே இச் சர்வதேச சட்ட விளக்கங்களை எவருமே மறுக்க முடியாது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கப்பிளவும் 1921 இல் உருவான தமிழர் மகா சபையுயும் சிங்கள - தமிழ் இன முரண்பாட்டின் ஆரம்பம்.

அன்றில் இருந்து இன்றுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்புக்களிலும் ஈழத்த் தமிழர்களின் சுயநிரிணய உரிமை மறுதலிக்கப்பட்டு வந்த பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களும் உருவெடுத்திருந்தன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான 15 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மறுதலிப்புகளே விஞ்சிக் காணப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்கும் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்கிறது என ஜெனீவா மனித உாிமைச் சபையும் குற்றம் சுமத்தியிருந்தது.

இப் பின்னணியில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் போது தமிழர்களின் ”தேசம்” ”சுயநிர்ணய உரிமை” மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமாகவே கருதும் என்றால், பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது.

1948இல் இருந்து அரசியல் - பொருளாதார பொறிமுறைகள் வகுக்கப்பட்ட போது தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டவில்லை. இதனால் எழுந்த 30 வருட போர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்கிறார் அசோக லியனகே என்ற பொருளியல் ஆய்வாளர்.

இன்று வெளியான 'ஒருவன்' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்

https://oruvan.com/sri-lanka/2024/11/18/nation-right-to-self-determination

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, nochchi said:

னால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல.

இல்லை இது இனவாதம் தான் என வகுப்பு எடுக்க போயினம் 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்லாக் காசாக் கிடந்த ரில்வின் எல்லாம் இப்ப தமிழருக்கு வகுப்பெடுக்க... அவருக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தமிழர்கள். ஏன் இதெல்லாம் ரில்வினுக்கு தெரியாதோ..?! தெரியும் அவரிடம் உறைந்துள்ள பேரினவாதச் சிந்தனை எல்லாத்தையும் இனவாதமாகப் பார்க்கத் தூண்டுகிறது அவ்வளவும் தான். சிங்களவர்களைப் பொறுத்தவரை சொறீலங்கா தங்கள் நாடு. தமிழர்கள்.. வந்தேறிகள். இந்த அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராமல்.. தமிழர்களுக்கு சிங்களவர்களால்... உரிமை வழங்கப்படப் போவதில்லை.  அந்த வகையில் தான் தமிழர்கள் உரிமையை போராடிப் பெற முனைந்தார்கள். அதனை பயங்கரவாதமாக்கிய மேற்குலகும்.. கிந்தியாவும் தான் எனி இதற்குப் பதில் சொல்லனும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, putthan said:

இல்லை இது இனவாதம் தான் என வகுப்பு எடுக்க போயினம் 😅


செப்ரெம்பர் 21 வரை தேசம் சுயநிர்ணயம் என்று சொல்லி பேய்காட்டி கொண்டிருந்தவர்கள் இப்போது வந்து ஜேவிபி வகுப்பு எடுப்பார்கள் கொடுமை😭



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆச்சரியமில்லையே. 1987 இல் மைசூர் பருப்பையும்.. பம்பாய் வெங்காயத்தையும் வெறுத்தவர்கள் ஆட்சிப் பீடம் ஏறி இருக்கும் நிலையில்... கிந்தியா எனி வாய் தான் பார்க்க முடியும். எனி ரகன் இன்னும் பூந்து விளையாடும்.  2009 மே யின் விளைவுகளை விரைவில் கிந்தியா தீவிரமாக உணர்ந்து கொள்ளும். 
    • உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.
    • யாழ்ப்பாணத்தில் சீன தூதரகம் திறக்கப்பட்டு யாழ் மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் படிக்க புலமைப் பரிசில்கள் வழங்கப்படல் வேண்டும்  பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்  பண்டைய தமிழர்களுக்கும் சீனார்களுக்கும் இடையில் இருந்த வியாபார கலாச்சார உறவுகள் பற்றி ஆராய நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்  கன்பூசியஸ் தத்துவங்கள் குறித்து தமிழில் சீன அரசின் உதவியுடன் தமிழில் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும் சீன உதவியுடன்  யாழ்ப்பாணம் வவுனியா வன்னி முல்லைத்தீவு போன்ற இடங்களில் திறன் சார் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்     
    • ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே .... இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை, மாவீரர்நாளை சுதந்திரமாக நினைவுகூர மைத்திரி, ரணில் ஆட்சியிலேயே அனுமதித்துவிட்டார்கள். அநுர வந்து புதிதாக செய்ய என்ன இருக்கு? அநுர உங்களுக்கு பிடித்திருந்தால் அவர் புகழ் பாடுங்கள் தப்பில்லை, எதுக்கு விடாத அறிக்கையை விட்டதென்று சொல்லி  அண்டா கணக்குல உருட்டி விடுறீங்க?.
    • இது ஜே ஆர் சாவகச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 1981 இல் சொன்னது தான். இப்ப இவர். அதன் பின்னர் நடத்தவை நாடறியும். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை.. பிரிவினைவாதம் என்ற வகைக்குள் வைத்து சில பத்தாயிரம் வாக்குகளால் மதிப்பிடக் கூடாது. ஏனெனில்.. இதே சனாதிபதியை வடக்குக் கிழக்கு மக்கள் நிராகரித்து வாக்களித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு.  இப்படி வாக்குச் சீட்டு அரசியல் பேசுவதாக இருந்தால்.  அடிப்படையில் அனுர ஒரு சிங்கள பெளத்த பேரினவாத சனாதிபதி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எனி ஜே வி பி சார்ப்பில் நின்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை வாங்கிய தமிழர்கள் தான் இவருக்கு கள நிலவரத்தைச் சொல்லிக் கொடுக்கனும். இன்றேல்.. கடந்த காலத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த பதிலையே தமிழ் மக்கள் இவைக்கும் அளிப்பார்கள்.  எதுக்கும்  சொறீலங்கா சனாதிபதி சந்திரசேகரத்திடம் ஆலோசனை பெறுவது நல்லது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.