Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

 

large.IMG_6014.jpg.03835757b7400ca5fdc5e9a83f92da13.jpg

நம்பிக்கை ஒளி தெரிகிறது!
********************************


பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து
பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி
புதுமுக வரவால் பொங்குது மண்றம்
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை
குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை
கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை
கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை.

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை.

தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை
தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர்
போரின் அவலத்தை புரிந்ததேயில்லை
போன கதிரயை மறப்பதேயில்லை.

தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு
தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு
அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
 

Edited by பசுவூர்க்கோபி
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?! 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, பசுவூர்க்கோபி said:

 

large.IMG_6014.jpg.03835757b7400ca5fdc5e9a83f92da13.jpg

நம்பிக்கை ஒளி தெரிகிறது!
********************************


பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து
பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி
புதுமுக வரவால் பொங்குது மண்றம்
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை
குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை
கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை
கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை.

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை.

தமிழர் தரப்பிலே ஒறுமையில்லை
தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர்
போரின் அவலத்தை புரிந்ததேயில்லை
போன கதிரயை மறப்பதேயில்லை.

தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு
தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு
அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
 

நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. 
புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ  முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது.   பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?! 

75 வருடத்தைவிட
இது புதுமையாக தென்படுகிறது

என்றுநினைக்கிறேன்.

கருத்துக்கு மிக்கநன்றிகள் ஏராளன் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. 
புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ  முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது.   பொறுத்திருந்து பார்ப்போம்.

75 வருடத்துக்குப் பின் புதிய அரசின் வரவு நம்பிக்கை தருமென நினைக்கிறேன்
உங்களின் கருத்தே நானும்விரும்புகிறேன்.
உளமார்ந்த நன்றிகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பசுவூர்க்கோபி said:

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை

கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும்  இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும்   என் போன்ற பலரதும் மனதிலும்   தோன்றவில்லை

நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை.
 
சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைப்பது  இந்த NPP  யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு

அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது
 

அதாவது   அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து  வெளியேறும் பொழுது 

அடுத்த நூறு வருடங்களுக்கு

அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பசுவூர்க்கோபி said:

நம்பிக்கை ஒளி தெரிகிறது!

கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன்.

எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட......

இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம்.

இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா  என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

 

எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு   வரும் தங்களுக்கு நன்றி  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, வாத்தியார் said:

கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும்  இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும்   என் போன்ற பலரதும் மனதிலும்   தோன்றவில்லை

நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை.
 
சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
 

அடிக்குமேலடிவிழுந்து எழமுடியாத எமக்கு ஏகேடியாரின் உரையில் சில மாற்றம் தெரிகிறது. அது ஏமாற்றமா?என்பதை பொறுத்திருந்து பார்போம். 
உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றிகள்.வாத்தியார். 

15 hours ago, குமாரசாமி said:

கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன்.

எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட......

இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம்.

இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா  என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.

மற்றவர்களைவிட இவரின் கருத்தில் சில மாற்றம் தெரிகிறது.நீங்கள் சொல்வதுபோல் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்கு நெஞ்சார்ந்தநன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/11/2024 at 02:28, நிலாமதி said:

பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

 

எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு   வரும் தங்களுக்கு நன்றி  

உளமார்ந்த நன்றிகள் அக்கா.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.