Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்

விராட் கோலி - பார்டர் கவாஸ்கர் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன?

கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுகிறார்.

அதனால்தான் கோலியின் ரசிகர்கள் அவரை “கிங் கோலி” என்று புகழ்கிறார்கள்.

களத்தில் சுறுசுறுப்பு

சச்சின், திராவிட், கங்குலி, லாரா, உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் எட்டிய இலக்கை குறைந்த வயதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்தவர் விராட் கோலி.

விராட் கோலி களத்தில் சக வீரர்களை குஷிப்படுத்துவது, விக்கெட் வீழ்த்தினால் பாராட்டுவது, எதிரணி வீரர்கள் சீண்டினால் பதில் தருவது என களத்தை எப்போதுமே பரபரப்பாக வைத்திருப்பார்.

கோலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் சரி, அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பும் சரி அவரது நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாறிவிடவில்லை.

 

கோலியின் கடைசி பார்டர் கவாஸ்கர் தொடரா?

விராட் கோலி - பார்டர் கவாஸ்கர் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரும் 22-ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்த தொடராக உள்ளது.

அதேநேரம், தனது கிரிக்கெட் வாழ்க்கை தோல்வியுடன் முடிந்துவிடக் கூடாது என்பதால் விராட் கோலிக்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனென்றால் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசியாக விளையாடும் பார்டர்-கவாஸ்கர் தொடராக இது இருக்கக்கூடும். அதன் காரணமாகவும் இந்தத் தொடர் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

 

கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்

விராட் கோலி - ஆஸ்திரேலியா - பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி, 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்களை சேர்த்துள்ளார். 29 சதங்கள், 31 அரைசதங்கள் என கோலியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் அவரை முன்னணி வீரராகக் காட்டுகின்றன.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தால் சராசரியை சரிய வைக்கும் விதத்தில் இருந்துள்ளது. ஏனென்றால், 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கோலி டெஸ்ட் அரங்கில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலி 250 ரன்கள் மட்டுமே டெஸ்டில் சேர்த்து 22 சராசரி வைத்துள்ளார் என கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோலியின் டெஸ்ட் சராசரி 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 55 ஆக இருந்த நிலையில் சமீபத்திய மோசமான ஃபார்ம் காரணாக 47 ஆகக் குறைந்துவிட்டதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இவ்வளவு மோசமான ஃபார்மில் விராட் கோலி இருந்தும், அவர் பார்டர்-கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை பல ஆஸ்திரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துப் பேசுவது வியப்பை ஏற்படுத்தியது.

‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ‘தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்’, உள்ளிட்ட பல நாளேடுகள் கோலிக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டன.

“தி ஹெவி கிரவுன்”, “கோட்”, “தி ரிட்டன் ஆஃப் தி கிங்”, “கோலி'வுட் இன் ஆஸ்திரேலியா”, “ஹோலி கோலி” என அவை கோலியைப் பற்றிக் குறிப்பிட்டன.

ஒரு பேட்டர் ஃபார்ம் இழந்த நிலையில் அவர் விளையாட வரும்போது அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைவிட விமர்சனங்களே அதிகம் இருக்கும். ஆனால், கோலியின் விவகாரத்தில் அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் கால்பதித்தவுடன் அவரை அந்நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

விராட் கோலி ஃபார்மில் இல்லாவிட்டாலும் ஏன் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன என்பதற்கு அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சுவரஸ்யமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய ரசிகர்கள்

விராட் கோலி - பார்டர் கவாஸ்கர் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிக்கி பாண்டிங் ஐசிசி தளத்துக்கு அளித்த பேட்டியில், "விராட் கோலியின் செயல்பாடுகள், சவாலான பேட்டிங், ஆஸ்திரேலியர்களின் திறமைக்கு சவால்விடும் போக்கு, ஸ்லெட்ஜிங்கில் பதிலடி தருவது ஆகியவை ஆஸ்திரேலியரை போன்று இருப்பதால், அவரை சக நாட்டவராக நினைத்து ஆஸ்திரேலிய நாளேடுகளும், ஊடகங்களும் கொண்டாடுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

திறமையான எந்த நாட்டு கிரிக்கெட் வீரருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் வீரராகத் தற்போது கோலி பார்க்கப்படுகிறார்.

கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கூட கோலியை புகழாமல் இருக்கவில்லை.

ஐசிசி தளத்துக்கு பாண்டிங் அளித்த பேட்டியில் “கோலி ஒரு சூப்பர் ஸ்டார் பேட்டர். அவர் விளையாடும் போக்குதான் அவருக்கு ரசிகர்களைக் கொடுத்துள்ளது. களத்துக்கு வந்துவிட்டால் கிரிக்கெட்டின் மீதான அர்ப்பணிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, போராட்டக் குணம், கிரிக்கெட் திறமை ஆகியவைதான் ஆஸ்திரேலிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதனால்தான் கோலிக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் இருக்கிறது. இதுபோன்ற சூப்பர் ஸ்டார் பேட்டர்கள் உலகம் முழுவதும் தங்களுக்கென தனித்துவமான ரசிகர்களை உருவாக்கிக் கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கோலியின் உச்சமும் சரிவும்

விராட் கோலி - ஆஸ்திரேலியா - பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2016 முதல் 2019 வரை உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியில் 4,208 ரன்கள் சேர்த்தார், இதில் 16 சதங்கள், 10 அரைசதங்கள் அடங்கும். இதில் 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார்.

ஆனால், 2020ஆம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலியின் ஃபார்ம் ஆட்டம் கண்டது. குறிப்பாக அவரிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்த பிறகு அவரின் பேட்டிங் மந்தமானது.

கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,838 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். அதிலும் சமீபத்தில் வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியின் மோசமான ஃபார்ம் உச்சத்துக்குச் சென்றது.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் டாப்-20 வரிசையில் இருந்தே கோலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோலியின் பெயர் ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

 

அசைக்க முடியாத நம்பிக்கை

விராட் கோலி - பார்டர் கவாஸ்கர் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும் கோலி போன்ற வீரர் ஒரு போட்டியில் சிறந்து ஆடினாலும் இழந்த ஃபார்மை மீட்பார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். கோலி போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் வீரருக்கு ஃபார்ம் ஒரு பொருட்டல்ல என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் கோலி குறித்து தலைப்பிட்டு பல செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் கோலியின் ஃபாரம் குறித்து பெரிதாக எந்த ஊடகமும் விமர்சித்து எழுதவில்லை.

மேலும், மைக்கேல் கிளார்க், பாண்டிங், லாங்கர், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரே, சேப்பல் போன்ற பலரும் புகழ்ந்துள்ளனர்.

முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி ஒன்றில், “ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனை அளப்பரியது. இந்தியாவில் கோலி சாதித்த சாதனைகளைவிட, ஆஸ்திரேலிய மண்ணில் கோலி சாதித்தது அதிகம். இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால், அதில் நிச்சயம் கோலி அதிக ரன்கள் சேர்த்த பேட்டராக இருப்பார் என்று கணிக்கிறேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

 

கோலி ஆஸ்திரேலியாவில் சாதிப்பாரா?

விராட் கோலி - பார்டர் கவாஸ்கர் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலான பேட்டராக கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் நம்புகிறார்கள்.

கோலியின் ஃபார்ம் மீதான நம்பிக்கையைவிட, அவரின் திறமை, கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். கடந்த காலங்களில் கோலி தனது அடையாளத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அழுத்தமாக விட்டுச் சென்றது இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2011 முதல் 2023ஆம் ஆண்டு வரை 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,042 ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 2011 முதல் 2020 வரை ஆடிய கோலி, 1,352 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 6 சதங்கள் அடங்கும்.

அதாவது கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 8 சதங்களில் 6 சதங்கள் அந்நாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் கோலியின் சராசரி 54 ரன்கள் என்றபோதே அங்கு கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம்.

இந்தத் தொடரில் விராட் கோலி ஏராளமான சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் சேர்த்த இந்திய பேட்டர் என்ற வகையில் 1,809 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 458 ரன்கள் தேவை, தற்போது கோலி 1,352 ரன்களுடன் உள்ளார்.

அடிலெய்ட் ஓவல் மைதானம் கோலிக்கு ராசியானது. இந்த மைதானத்தில்தான் 2012ஆம் ஆண்டு முதன்முதலில் கோலி தனது சதத்தைப் பதிவு செய்தார். இந்த மைதானத்தில் மட்டும் கோலி 509 ரன்கள் சேர்த்து 63 சராசரி வைத்துள்ளார். லாராவின் 610 ரன்கள் சாதனையை இந்த மைதானத்தில் கோலி இந்த முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தனது 100வது சர்வதேச போட்டியையும் ஆஸ்திரேலிய மண்ணில்தான் கோலி 3வது டெஸ்டில் விளையாடுவார்.

இந்தத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகும் விதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் முன்பாகவே கோலி அங்கு சென்றுவிட்டார். பெர்த் நகரில் 22ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக கோலி தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியாவிட‌ம் அடி வேண்டி நாடு திரும்ப‌ முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் லொள்............................

@vasee😁.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெர்த் டெஸ்ட்: அடிபட்ட புலி ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா பும்ரா தலைமையிலான படை?

பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் பும்ரா மற்றும் கம்மின்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் பும்ரா மற்றும் கம்மின்ஸ்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை(நவம்பர்22) தொடங்குகிறது.

பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.

தொடர்ந்து இருமுறை

ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி தனது வலிமையை நிரூபித்தது.

சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து 2 முறை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல.

இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா வந்துள்ள இந்திய அணி மீது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது

அனுபவமில்லா வீரர்கள்

2019-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியை வென்றப்பின் ஆடி கொண்டாடிய இந்திய வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியை வென்றப்பின் ஆடி கொண்டாடிய இந்திய வீரர்கள்

கடந்த 2 முறை இந்திய அணி கோப்பையை வென்ற போது அணியில் இருந்த பல வீரர்கள் இந்த முறை அணியில் இல்லை. குறிப்பாக, ரஹானே, புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், சஹா, பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இல்லை.

ஆனால், முற்றிலுமாக இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி மாற்றப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, கில், கே.எல்.ராகுல் தவிர பலர் புதியவர்கள்.

குறிப்பாக, நிதிஷ்குமார் ரெட்டி, அபிமன்யு ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல், சர்ஃபிராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள்.

கேப்டனாக பொறுப்பேற்கும் பும்ராவும் புதியவர், இவர்களை வைத்து டெஸ்ட் தொடரை எவ்வாறு இந்திய அணி அணுகப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.

 

வலுவான அணியாக ஆஸ்திரேலியா

சிறித்துப் பேசும் பும்ரா மற்றும் கம்மின்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணியிலும் புதிய வீரர்கள் இருந்தாலும் கடந்த முறை ஆடிய வீரர்களில் இருந்து பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

கேப்டன் டிம் பெய்னுக்குப் பதிலாக கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பல வெற்றிகளை சமீபத்தில் பெற்றுள்ளது.

கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லேயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித், லாபுஷேன், மிட்ஷெல் மார்ஷ், கவாஜா, அலெக்ஸ் கேரி ஆகியோர் கடந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியவர்கள்.

போலாந்த், நாதன் நெக்ஸ்வீனே ஆகிய இருவர் மட்டுமே புதியவர்கள். இந்திய அணியைவிட அனுபவம் மிக்க வீரர்கள் கொண்ட அணியாகவே ஆஸ்திரேலிய அணி தயாராகியுள்ளயுள்ளது.

 

இந்திய அணிக்கு அழுத்தம்

பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுடன் திட்டம் வகுத்த பயிற்சியாளர்கள்

பட மூலாதாரம்,BCCI-X

படக்குறிப்பு, பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுடன் திட்டம் வகுத்த பயிற்சியாளர்கள்

கடந்த 2 முறை டெஸ்ட் தொடரை வென்றதைப் போல் இந்த முறையும் அனுபவமில்லா இளம் படையை வைத்து ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அது மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணி குறைந்தபட்சம் 4 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். ஆதலால், இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மேலும், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கோலி, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் ஒன்றாக பங்குபெறும் கடைசி தொடராக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆதலால், தங்களின் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயல்வார்கள்.

 

பெர்த் ஆடுகளம் எப்படி?

பிட்சை ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிட்சை ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்கள்

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள்தான் நடந்துள்ளன.

அந்த 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வென்றுள்ளது. இதே பெர்த் மைதானத்தில்தான் கடந்த 2017-18-ஆம் ஆண்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

சுழற்பந்து வீச்சாளர் நாதன் லேயான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவிருக்கும்.

மற்ற 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளையும் ஆஸ்திரேலியா துவம்சம் செய்து வலிமையை நிரூபித்துள்ளது.

இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 450 ரன்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.

பெர்த் ஆடுகளம் “ட்ராப் இன் பிட்ச்” மூலம் அமைக்கப்பட்டது. அதாவது, வெளியே ஆடுகளத்தை தனியாக வடிவமைத்து, இங்கு கொண்டு வந்து பதித்து உருவாக்குவதாகும்.

இந்த ஆடுகளத்தில் வழக்கத்துக்கு மாறாக பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும், பந்து நன்கு எகிறி பேட்டரை நோக்கி வேகமாக வரும். இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டரும் சீராக நகர்ந்து விளையாடினால் விக்கெட்டை காப்பாற்றலாம்.

அதிலும் கூக்கபுரா பந்து டெஸ்ட் போட்டிக்கு பயன்படுவதால், பந்து தேயும் வரை பொறுமையாக இந்திய பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். பந்து தேய்ந்து மெதுவாகிவிட்டால், அதன்பின் அடித்து, நொறுக்கி ஸ்கோர் செய்யலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களால் ஸ்விங் செய்ய முடியாத நிலை உருவாகும் போது, பேட்டர்கள் கை ஓங்கும். ஆதலால், முதல் 30 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் நிதானமாக, விக்கெட்டை இழக்காமல் ஆடுவது அவசியம்.

இந்த புதிய ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் 4 போட்டிகளில் 33 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். அதேசமயம், பழைய பெர்த் மைதானத்தில் 44 போட்டிகளில் 233 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த பெர்த் மைதானத்தில் சுழற்பந்துவீச்சைவிட வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என ஆடுகள வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ஐசக் மெக்டோனல்ட் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “இது ஆஸ்திரேலியா, இது பெர்த் நகரம். இங்கு உள்ள எங்கள் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றார்போல் இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும், வேகமாக பேட்டரை நோக்கி வரும், திறமையான பேட்டர்கள் நன்கு விளையாடலாம். இந்த ஆடுகளத்தில் 10 மி.மீ அளவு புற்கள் வளர்ந்திருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஆதலால், இரு அணிகளும் தங்கள் அணியில் 4வது வேகப்பந்துவீச்சாளர் அல்லது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிகிறது.

இந்திய அணியில் பும்ரா, சிராஜ், தவிர நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு இருக்கும். ஜடேஜா அல்லது அஸ்வின் இருவரில் ஒருவர் மட்டுமே இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த 4 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வென்றுள்ளதால், இந்திய அணி டாஸ் வென்றால் பேட் செய்வது சிறந்தது.

 

இந்திய அணி நிலை என்ன?

பயிற்சியின் போது தனியாக ஆலோசனை மேற்கொண்ட பும்ரா மற்றும் கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பயிற்சியின் போது தனியாக ஆலோசனை மேற்கொண்ட பும்ரா மற்றும் கம்பீர்

கடந்த இருமுறை இதே ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால்,சமீபத்தில் உள்நாட்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகியது இந்திய அணியின் திறமைக்கு பெரிய பின்னடைவாக மாறிவிட்டது.

நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்குப்பின் இந்திய அணிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டிய அழுத்தம், பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கடி, கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு நெருக்கடி போன்றவை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்தத் தொடரை இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்திய அணி 4-0 என ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போதுதான் 3வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணியால் செல்ல முடியும்.

ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை 4-0 என வீழ்த்துவது, கால்பந்தில் அர்ஜென்டினா, பிரேசில் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 4-0 என சாய்ப்பதற்கு சமமாகும்.

ரோஹித் சர்மா, சுப்மான் கில், முகமது ஷமி ஆகியோர் இல்லாத வலு குறைந்த இந்திய அணியாகத்தான் முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணியில் டாப்-6 பேட்டர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் அதிலும் இருவர் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடக்கூட முடியாமல் அடிபட்ட புலியாக ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். ஆதலால், இந்திய அணிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் கடினமான சவாலை ஆஸ்திரேலியர்கள் அளிப்பார்கள்.

பேட்டிங் பிரிவில் கோலி என்ற ஒற்றை வார்த்தை மட்டும் நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கிறது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சர்ஃபிராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள். ரிஷப் பந்த் இரு முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் துருவ் ஜூரெல் ஆடியவிதமும் நம்பிக்கையளித்தது.

இந்திய அணி முதலில் பேட் செய்ய நேர்ந்தால் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து கே.எல்.ராகுல் அல்லது ஈஸ்வரன், அல்லது தேவ்தத் படிக்கல் இதில் யார் களமிறங்குவார்கள் என்பது கடைசிநேரத்தில்தான் முடிவாகும்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் மின்னல் வேக பவுன்ஸரையும், எகிறும் பந்தையும் சமாளிக்கும் திறமையான பேட்டராக இருப்பது அவசியம்.

கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் அனுபவ பேட்டிங்கை மட்டுமே இந்திய அணி நம்பியுள்ளது. மற்ற வகையில் ஜெய்ஸ்வால், படிக்கல், ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இந்த மண்ணுக்குப் புதியவர்கள்.

பந்துவீச்சில் பும்ராவுடன் இணைந்து சிராஜ் பந்துவீசலாம். இவர்களுக்குத் துணையாக ஆகாஷ் தீப் அல்லது ஹர்சித் ராணா களமிறங்கக்கூடும். ஏனென்றால், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால், 4வது பந்துவீச்சாளருடன் களமிறங்கலாம்.

4வதாக ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் தினசரி 10 முதல் 15 ஓவர்கள் வீச முடியும். சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியில் 3 இடதுகை பேட்டர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னருக்காக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

 

கவனிக்கப்பட வேண்டிய நால்வர்

தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

தேவ்தத் படிக்கலைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் களமிறங்கி படிக்கல் அரைசதம் அடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவமுள்ள தேவ்தத் படிக்கல், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியதால் ஃபார்மில் இருப்பதாக நம்பலாம்.

துருவ் ஜூரெல் களமிறங்கினால் இது அவருக்கு 3வது டெஸ்ட் போட்டியாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து ஜூரெல் தன்னை நிரூபித்துள்ளார்.

21 வயதாகிய நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் மிக இளம்வயது வீரர். உள்நாட்டுப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என பெரிதாக எந்த அனுபவமும் இல்லை.

ஆனால், ஐபிஎல் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியிலும் 34 பந்துகளில் 74 ரன்கலும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நிதிஷ் குமார் பாராட்டைப் பெற்றார்.

ஹர்சித் ராணா இளம் வேகப்பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று கடந்த சீசனில் கலக்கினார். கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்திய ஆடுகளத்திலேயே அதிவேகமாக பந்துவீசக்கூடிய ராணாவால் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்துவீச முடியும். குறிப்பாக ஆஸ்திரேலியர்களின் ஸ்லெட்ஜிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இவரின் மனநிலையும் இருக்கும் அளவுக்கு துடுக்கானவர்.

முதல் தரப்போட்டிகள், உள்நாட்டுப் போட்டிகளில் 20க்கும் குறைவான ஆட்டங்களில்தான் விளையாடி இருந்தாலும், ராணாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், ஸ்விங் ஆகியவை ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் நின்று பேசும்.

 

“அடிபட்ட புலி” ஆஸ்திரேலியா

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அடிப்பட்ட புலி. 5 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆவேசத்துடன் காத்திருக்கிறார்கள். ஆதலால் இந்த முறை இந்திய அணியிடம் இருந்து கோப்பையை பறிக்கும் வகையில் தங்களின் உச்சபட்ச திறமையை களத்தில் வெளிப்படுத்தி விளையாடுவார்கள்.

அதனால்தான் ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் தேர்வில் பெரிதாக எந்த மாற்றத்தையும் அந்த நிர்வாகம் செய்யவில்லை. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என வலுவான, அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள், 4வது பந்துவீச்சாளராக போலந்த், பேட்டிங்கில் ஸ்மித், லாபுஷேன், கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, இங்கிலிஸ், மிட்ஷெல் மார்ஷ், சுழற்பந்துவீச்சுக்கு அனுபவம் வாய்ந்த நாதன் லேயான் என வலுவான அணியை வடிவமைத்துள்ளது.

ஆனால், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 30 ரன்கள்தான். ஆனால் டெஸ்ட் அளவில் இருவரும் சிறப்பாக ஆடி சராசரி வைத்துள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணியை புரட்டி எடுத்த டிராவிஸ் ஹெட்டும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 28 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார்.

இவர்கள் இந்த சீசனில் குறைவான சராசரி வைத்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இது தவிர மிட்ஷெல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீன் ஆகிய ஆல்ரவுண்டர்களும் உள்ளது பெரிய பலமாகும்.

பந்துவீச்சில் கம்மிஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் கம்மின்ஸ், ஹேசல்வுட்டின் ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங் இந்திய பேட்டர்களை திணறவைக்கும். இவர்கள் 3 பேரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய வலிமையாகும்.

நாதன் லேயன் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மட்டுமல்ல எந்த ஆடுகளத்திலும் பந்தை டர்ன் செய்யும் திறமையானவர் லேயான் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளது அந்நாட்டு வாரியம்.

இந்திய அணி எந்த நிலையிலும் விஸ்வரூபமெடுக்கும் என்பதால் அதைச் சமாளிக்க அனுபவமுள்ள வீரர்களை மாற்றாமல் வலுவாக அணியாக ஆஸ்திரேலியா வடிவமைக்கப்பட்டுள்ளது.

உத்தேச அணி (ப்ளேயிங் லெவன்)

கோப்பையுடன் அணித் தலைவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்பையுடன் அணித் தலைவர்கள்

இந்தியா:

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ஆர்.எஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), சிராஜ்.

ஆஸ்திரேலியா:

நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மிட்ஷெல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, வீரப் பையன்26 said:

அவுஸ்ரேலியாவிட‌ம் அடி வேண்டி நாடு திரும்ப‌ முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் லொள்............................

@vasee😁.................................

இந்தியா மூடிய  பயிற்சி மைதானத்தில் இரகசியமாக பயிற்சி எடுக்கிறதாக இங்கு செய்திகளில் காட்டுகிறார்கள், அவுஸிற்கு ஒரு ஸ்பெசலாக இந்தியா செய்யப்போகிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

STUMPS 

1st Test, Perth, November 22 - 26, 2024, India tour of Australia

 

India FlagIndia                               150
Australia FlagAustralia        (27 ov) 67/7

Day 1 - Australia trail by 83 runs.

Current RR: 2.48 • Last 10 ov (RR): 29/2 (2.90)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா, ஆஸி. துடுப்பாட்ட வரிசைகள் வேகப்பந்துவீச்சாளர்களால் சின்னாபின்னம்; முதல் நாளில் 17 விக்கெட்கள்

image

(நெவில் அன்தனி)

பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் அணிகளுக்கு இடையிலான முதலாவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் வேகப்பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் திக்குமுக்காடிப் போயின.

2211_border_and_gavaskar_with_pat_cummin

போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை (22) 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன்  அவை அனைத்தும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமாகின.

2211_rishab_pant.png

வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர் தலைவர்களாக விளையாடும் இப் போட்டியின் முதல் நாளன்று வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.

2211_nitish_kumar_reddy.png

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தியாவின் முன்வரிசை வீரர்கள் யஷஸ்வி ஜய்ஸ்வால் (0), டேவ்டத் படிக்கல் (0), மூத்த அனுபவசாலி விராத் கோஹ்லி (5), கே.எல். ராகுல் (26), மத்திய வரிசையில் த்ருவ் ஜுரெல் (11), வொஷிங்டன் சுந்தர் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 73 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் ரிஷாப் பான்ட், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இந்தியாவை பெரு வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றினர்.

ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்களே முதலாம் நாள் ஆட்டத்தில்  அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

பின்வரிசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மிச்செல் மார்ஷ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், மிச்செல் ஸ்டார்க் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அணித் தலைவர் பெட் கமின்ஸ் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்தியாவைப் போன்றே அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசையும் வேகப்பந்துவீச்சில் சிதறிப்போனது.

உஸ்மான் கவாஜா (8), மானுஸ் லபுஸ்ஷேன் (2), ஸ்டீவன் ஸ்மித் (0), மிச்செல் மார்ஷ் (6), பெட் கமின்ஸ் (3) ஆகிய அனைவரும் தங்களது விக்கெட்களை எதிரணியின் வேகப்பந்துவீச்சில் தாரைவார்த்தனர்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

அவரை விட ட்ரவிஸ் ஹெட் (11), நேதன் மெக்ஸ்வீனி (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பதில் அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மொஹமத் சிராஜ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ரானா 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/199454

  • கருத்துக்கள உறவுகள்
Posted

STUMPS 

India FlagIndia         (57 ov) 150 & 172/0
Australia FlagAustralia    104

Day 2 - India lead by 218 runs.

Current RR: 3.01  • Last 10 ov (RR): 46/0 (4.60)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் - ராகுல் இணை
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது.

முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை.

பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார்.

ராணாவை சீண்டிய ஸ்டார்க்

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. அலெக்ஸ் கேரே 19, ஸ்டார்க் 6 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அலெக்ஸ் கேரே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் சேர்ந்தார்.

பும்ரா, ஹர்ஷித் ராணா வீசிய பந்துகள் பிட்சில் பட்டு பேட்ஸ்மேனை நோக்கி எகிறி, சீறிப்பாய்ந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ராணாவை வம்புக்கு இழுத்தார் மிட்செல் ஸ்டார்க். ஆனால், ராணா எந்தவித பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஸ்டார்க் நிதானமாக ஆடி 26 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களைக் கடக்க உதவி செய்தார்.

நேதன் லயன் 5 ரன்கள் சேர்த்தநி லையில் ராணா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்டார்க் 26 ரன்னில் ராணாவிடமே விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இன்றைய ஆட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

2வது குறைந்தபட்ச ஸ்கோர்

ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகி இருந்தது. அதேநேரத்தில், பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 1985 ஆம் ஆண்டுக்குப்பின், மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2016-ல் ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 85 ரன்களிலும், 2010ம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து அணியிடம் 98 ரன்களுக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர்.

டாப்-6 பேட்டர்கள் நிலை

ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். கடந்த 1978-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டாப்-6 பேட்டர்கள் 22 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் இப்போதுதான் டாப்-6 பேட்டர்கள் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளனர்.

கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா

இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா டெஸ்ட் அரங்கில் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்துக்கு வெளியே 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனையை சமன் செய்தார்.

30 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

2007-ஆம் ஆண்டில் மெல்போர்ன் டெஸ்டின்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நங்கூரமிட்ட ஜெய்ஸ்வால், ராகுல்

முதன் இன்னிங்சில் கிடைத்த 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கிரீஸுக்கு உள்ளே நின்றே பந்துகளைச் சந்தித்ததால், எளிதாக பேக்ஃபுட் செய்து ஆட முடிந்தது.

புதிய பந்தில் ஹேசல்வுட்டும், ஸ்டார்க்கும் ஆவேசமாகப் பந்துவீசியும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக எதிர்கொண்டார். அவர் தேவையற்ற பந்துகளை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிடவும் செய்தார். எந்த பந்தையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், பந்து செல்லும் போக்கிலேயே தட்டிவிட்டு ஜெய்ஸ்வால் ரன் சேர்த்தார். சில நேரங்களில் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அப்பர்கட் ஷாட், ஸ்டார்க் பந்துவீச்சில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் ஷாட் அடித்து பவுண்டரி அடித்தார்.

ராகுல் 124 பந்துகளில் அரைசதமும், ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி நங்கூரமிட்டனர். 2-வது செஷனில் ராகுல், ஜெய்ஸ்வால் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது, இதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களும் சோர்வடையத் தொடங்கினர். நேதன் லயன், டிராவிஸ் ஹெட் என சுழற்பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தினார். அவர்களின் ஓவர்களில் ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சில பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறல்

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுதான் ஓங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ராகுல் சிதைத்துவிட்டனர்.

முதல் இன்னிங்ஸில் ராகுல்,ஜெய்ஸ்வாலை எளிதாக ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்ட்ராக், கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் பலவிதமான வித்தைகள் செய்தும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.

பெர்த் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. கூக்கபுரா பந்தில் விரைவாக விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கருதி, ஜெய்ஸ்வாலும், ராகுலும் ரன் சேர்ப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், விக்கெட்டை நிலைப்படுத்தவும் கவனம் செலுத்தினர்.

இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று முற்றிலும் தோல்வி அடைந்து, சோர்வடைந்தனர். அவர்கள் சோர்வடைந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தினர்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

218 ரன் முன்னிலை

இருவரின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

38 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை

20 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் அடித்துள்ளனர். கடைசியாக 1986்-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கி இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அதன்பின் எந்த இந்த தொடக்க ஜோடியும் அரைசதம் அடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் அடித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத‌லாவ‌து டெஸ்ட் ம‌ச்சை

இந்தியா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜய்ஸ்வால், கோஹ்லி அபார சதங்கள்; மிகப் பலம் வாய்ந்த நிலையில் இந்தியா, ஆஸி.க்கு வெற்றி இலக்கு 534 ஓட்டங்கள்

24 NOV, 2024 | 05:16 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிகப் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி ஆகியோர் குவித்த சதங்கள், கே.எல். ராகுல் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் விராத் கோஹ்லி சதம் குவித்தவுடன் அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்துவதாக அறிவித்தார்.

download.png

போட்டியில் 2 நாட்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில்  இந்தியா   534 ஓட்டங்களை வெற்றி இலக்காக    அவுஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.

போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 12ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆரம்ப வீரர் நேதன் மெக்ஸ்வீனி (0), இராக்காப்பாளனாக களம் புகுந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் (2), மானுஸ் லபுஸ்ஷேன் (3) ஆகிய மூவரே ஆட்டம் இழந்த வீரர்களாவர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் 4.4 ஓவர்கள் மீதம் இருந்தபோதிலும் லபுஸ்ஷேன் ஆட்டம் இழந்ததும் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

உஸ்மான் கவாஜா 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டத்திற்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 172 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்து இந்தியா 6 விக்கெட்களை இழந்த 487 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

தனது இன்னிங்ஸை 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கே. எல். ராகுல் முதலாவது விக்கெட்டில் ஜய்ஸ்வாலுடன் 201 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஜய்ஸ்வாலுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்த தேவ்டத் படிக்கல் 25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜய்ஸ்வால் 297 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 161 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரிஷாப் பான்ட், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் தலா ஒரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

எனினும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி, 6ஆவது விக்கெட்டில் வொஷிங்டன் சுந்தருடன் 89 ஓட்டங்களையும் பிரிக்கப்பட்டாத 7ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

143 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 8 பவுண்டறி கள், 2 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களைப் பெற்றவுடன் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை பும்ரா டிக்ளயா செய்தார்.

வொஷிங்டன் சுந்தர் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிட்டிஷ் குமார் ரெட்டி ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப் போட்டியில் 161 ஓட்டங்களைக் குவித்த ஜய்ஸ்வால் மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்று சச்சின் டெண்டுல்கரின் இந்திய சாதனையை சமப்படுத்தினார்.

அவுஸ்திரேலியாவின் டொனல்ட் ப்ரட்மன் மிகக் குறைந்த வயதில் 8 தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததுடன் பாகிஸ்தானின் ஜாவேட் மியண்டாட், தென் ஆபிரிக்காவின க்ரேம் ஸ்மித் ஆகியோர் 4 தடவைகள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, 16 மாதங்களுக்குப் பின்னர் விராத் கோஹ்லி முதல் தடவையாக சதம் குவித்துள்ளார். இது அவரது 30ஆவது டெஸ்ட் சதமாகும்.

https://www.virakesari.lk/article/199567

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இமாலய இலக்கை நிர்ணயித்த ஜெய்ஸ்வால், கோலியின் சதம், மிரட்டிய பும்ரா - நெருக்கடியில் ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 534 ரன்கள் என்னும் இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

ஜெய்ஸ்வாலின் சாதனை சதம் (150), 491 நாட்களுக்குப் பின் கோலி அடித்த சதம் ஆகியவற்றால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

ஆட்டம் எப்படி செல்லும்?

ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் மிகப்பெரிய இலக்கைத் துரத்தியது. ஆனால், பும்ராவின் துல்லியமான லைன் அண்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியுள்ளது.

இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது டிரா செய்யுமா அல்லது தோல்வியடையுமா என்பது மதில் மேல் பூனையாக இருக்கிறது.

 

ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித், கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகிய 4 பேரில் ஏதேனும் இருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும், குறைந்தபட்சம் டிரா செய்ய முடியும்.

பெர்த் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் அதிகமான பிளவுகளைக் கொண்டிருக்கும். பும்ரா, ஹர்ஷித் ராணா, சிராஜ் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பிட்ச்சில் பிளவுகளை மறைக்க “ரோலர்” உருட்டி இறுக வைத்தால் மட்டுமே பேட்டிங்கிற்கு ஓரளவு சாதகமாக இருக்கும்.

இல்லாவிட்டால் நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் புதிய பந்தில் பும்ரா, சிராஜின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வதும், பவுன்சர்களை சமாளிப்பதும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். கூக்கபுரா பந்து தேய்ந்து, மெதுவாக மாறும் வரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழக்க நேர்ந்தால் நாளையே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.

 

தடுமாறாத பும்ரா - மிரளும் ஆஸி

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருவேளை இந்தியாவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தால் நாளையே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள்கூட பெர்த் பிட்ச்சில் சரியான லைன் அண்ட் லென்த்தை கண்டு பந்துவீச முடியாமல் கோட்டைவிட்டனர். ஆனால், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, லைன் அண்ட் லென்த்தில் பட்டு பந்து சீறிப் பாய்வது, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, முதல் ஓவரை வீசிய பும்ரா நான்காவது பந்திலேயே நேதன் மெக்ஸ்வீனை கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்ததாக லபுஷேன் 10 பந்துகளைக்கூட எதிர்கொள்ளவில்லை, பும்ராவின் கத்திபோன்ற பந்தைவீச்சை எதிர்கொண்டு கால்காப்பில் வாங்கி வெளியேறினார். லபுஷேன் ஆட்டமிழந்த அந்தப் பந்தை எதிர்த்து நின்று பேட்டில் வாங்க முடியாத அளவுக்குத் துல்லியமான பிரமாஸ்திரமாக பும்ரா பந்துவீச்சு இருந்தது. இந்தப் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் லபுஷேன் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

நைட்வாட்ச் மேனாக களமிறங்கிய கம்மின்ஸின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தவே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகத்தை, நம்பிக்கையை, ஆவேசத்தை ஒற்றை மனிதராக பும்ரா தனது பந்துவீச்சில் குறைத்துள்ளார்.

இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை எவ்வாறு ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் போகிறது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், இந்திய அணிக்கு அதன் திட்டம் தெளிவாக இருக்கிறது, வெற்றி ஒன்று மட்டும்தான் இலக்கு என்று விளையாடி வருகிறது.

 

கோலி 491 நாட்களுக்குப் பின் சதம்

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்து கடுமையான விமர்சனத்தை கோலி எதிர்கொண்டார். ஆனால், அனைத்துக்கும் இந்த டெஸ்டில் கோலி சதம் அடித்து பதிலடி கொடுத்தார்.

டெஸ்ட் அரங்கில் 491 நாட்களுக்குப் பின், கோலி இன்று 143 பந்துகளில் சதம் அடித்தார். 70 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட கோலி 20 பந்துகளையே எடுத்துக்கொண்டார் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளை அடித்து கோலி சதத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச அரங்கில் கோலியின் 30வது டெஸ்ட் சதம், ஒட்டுமொத்தத்தில் 81வது சதமாகும். சச்சின், சுனில் கவாஸ்கர், டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் 30 சதங்களை கோலி எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெர்த் மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் கோலி கடைசியாக சதம் அடித்தநிலையில் தொடர்ந்து இந்த முறையும் சதம் விளாசியுள்ளார்.

கடைசியாக 2023, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.

இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடிக்கும் 10வது சதம். அதோடு, அந்நாட்டு மண்ணில் 7வது சதம். இதன் மூலம் சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக சச்சின் அடித்த 6 சதங்களை அடித்திருந்த நிலையில் கோலி அதை முறியடித்து 7வது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி நேற்றைய 2வதுநாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.

இன்றை 3வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், ராகுல் தொடர்ந்தனர். 205 பந்துகளில் ஜெய்ஸ்வால் 122 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான அறிமுக ஆட்டத்திலேயே சதத்தைப் பதிவு செய்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுக டெஸ்டில் சதத்தை, ஜெய்சிம்மா(1968), சுனில் கவாஸ்கர்(1968) ஆகிய இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இப்போது மூன்றாவது பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

 

வரலாற்று பார்ட்னர்ஷிப்

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே ராகுல் 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 38 ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பையும், 200 ரன்களுக்கு மேலும் குவித்த பெருமையை ஜெய்ஸ்வால், ராகுல் பெற்றனர். இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் கூட்டணி தொடக்க ஜோடியாக 181 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி கடந்துள்ளனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் தொடக்க ஜோடி மூன்றாவது முறையாக 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதற்கு முன் 1970ஆம் ஆண்டு ஓவலில் கவாஸ்கர், சேத்தன் சௌகான் ஜோடி 213 ரன்களும, 1936ஆம் ஆண்டு விஜய் மெர்ச்சன்ட்- முஸ்தாக் அலி ஜோடி 203 ரன்களும் சேர்த்திருந்தனர்.

குறிப்பாக கே.எல்.ராகுல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடக்க ஜோடியில் ஒருவராக இருந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மேனாக உள்ளார்.

லாட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மாவுடன் இணைந்த 2021 ஆம் ஆண்டில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப், 2021ஆம் ஆண்டில் செஞ்சூரியனில் மயங்க் அகர்வாலுடன் இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் ராகுல் அமைத்துள்ளார்.

அடுத்து களமிறங்கிய படிக்கல், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனதால், படிக்கல் மிகுந்த கவனத்துடன் தேவையற்ற பந்துகளைத் தொடாமல் பேட் செய்தார். கால்களை நகர்த்தி நன்றாக ஆடியதால், எளிதாக டிபென்ட் செய்து ஆட்டத்தைக் கையாள முடிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 275 ரன்கள் சேர்த்திருந்தது.

 

சாதனை நாயகன் ஜெய்ஸ்வால்

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் சற்று வேகமாக ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், 275 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.

ஜெய்ஸ்வால் 23 வயதைக் கடக்கும் முன்பே டெஸ்ட் போட்டியில் நான்காவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். டான் பிராட்மேனின் ஐந்தாவது சதத்தை எட்ட ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஒரு சதம் தேவை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் தனது முதல் 4 சதங்களையும் 150 ரன்களாக மாற்றிய வகையில் இரண்டாவது வீரராக ஜெய்ஸ்வால் பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.

மேலும் சர்வதேச அளவில், முதல் இன்னிங்ஸில் டக்-அவுட்டில் ஆட்டமிழந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்திய அணி அளவில் நான்காவது இந்திய பேட்ஸ்மேன் (ஆப்தே, நயன் மோங்கியா, சர்ஃபிராஸ் கான்) என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் 150 ரன்களை 3 அல்லது அதற்கு அதிகமாக 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே வைத்திருந்தனர். சச்சின்(2002, 2004), சேவாக்(2004, 2008), கோலி(2016, 2017). இப்போது நான்காவது வீரராக அந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் சேர்ந்துள்ளார்.

அனுபவமற்ற பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை ஹேசல்வுட் எளிதாக வெளியேற்றினார். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து பந்து வீசிய ஹேசல்வுட் ஆஃப் ஸ்டெம்பில் இருந்து சற்று விலக்கி வீசியபோது படிக்கல் அதை அடிக்க முற்பட்டு, ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்சானது. படிக்கல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். கோலியும் ஜெய்ஸ்வால் ஆட்டத்தைப் பார்த்துப் புகழ்ந்து சல்யூட் செய்து மைதானம் சென்றார்.

கோலி - ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் நீண்டநேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஸ்குயர்கட் ஷாட் அடித்தபோது அதை எட்ஜ் எடுத்து ஸ்மித்திடம் கேட்சானது. ஜெய்ஸ்வால் 161 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பும்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

 

திடீர் சரிவு

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால், கோலி, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ரிஷப் பந்த்(1), ஜூரெல் (1) என விரைவாகச் சரிந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், கோலியுடன் இணைந்து ஆடினார்.

முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சுந்தர், இந்த முறை கோலிக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்கி, நிதானமாக பேட் செய்தார். விராட் கோலி 94 பந்துகளில் அரைசதம் அடித்து, கடந்த கால விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுமையாக ஆடிய சுந்தர், ஸ்வீப் ஷாட் அடிக்கும் முயற்சியில் லயன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதிஷ் குமார், கோலியுடன் இணைந்தார். கோலி வேகமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒவரில் அப்பர் கட் ஷாட் அடித்து கோலி சிக்சர் விளாசினார். கோலி அடித்த அப்பர் கட் ஷாட்டில் பவுண்டரி எல்லையில் அமர்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பந்து பட்டு அவருக்குக் காயம் ஏற்பட்டது.

நிதிஷ் குமார், வந்ததில் இருந்து அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரி என விளாசினார். விராட் கோலி சதம் அடிப்பதற்காக கேப்டன் பும்ரா காத்திருந்தார். 70 ரன்களை எட்டிய கோலி, அடுத்த 30 ரன்களை 20 பந்துகளில் எட்டி 30வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

கோலி, 100 ரன்களும், நிதிஷ்குமார் 38 ரன்களும் சேர்த்திருந்தபோது, டிக்ளேர் செய்வதாக கேப்டன் பும்ரா அறிவித்தார். 134.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா வரலாற்று வெற்றி: அதிவேக பெர்த் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவை மிரட்டிய பும்ராவின் வேகக் கூட்டணி

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 534 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, 4-வது நாளான இன்று 58.4 ஓவர்களில் 238 ரன்களில் ஆட்டமிழந்தது.
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 534 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, 4-வது நாளான இன்று 58.4 ஓவர்களில் 238 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆட்டம் 5 நாட்கள் வரை நீடிக்காது என்று முன்பே கூறியிருந்தார். அதுபோல ஆஸ்திரேலிய அணி 4வது நாளிலேயே தோல்வி அடைந்து ஆட்டத்தை முடித்துள்ளது.

பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தோல்வி அடையாமல் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தியது.

“இந்தியாவிலிருந்து எந்தவிதமான தோல்வி சுமையையும் எடுத்துவரவில்லை” என்று கேப்டன் பும்ரா தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தார். அதை மெய்யென நிரூபிக்கும் வகையில் தனது கேப்டன்ஷிப்பில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

தடுமாறிய ஆஸ்திரேலியா

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியான பெர்த் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களும் சேர்த்தன. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, ஜெய்ஸ்வால் 161 ரன்கள், கோலி சதம், ராகுல் 77 ரன்கள் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 534 ரன்கள் வெற்றி இலக்குடன் நேற்று மாலை 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ராவின் துல்லியமான லைன் அன்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால், இயல்பாகவே ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் கவாஜா ஆடியது நன்கு தெரிந்தது. ஆனால், ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலேயே சிராஜ் பந்துவீச்சில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து கவாஜா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் டாப்-4 பேட்டர்கள் மெக்ஸ்வீனி(0), கவாஜா(4), கம்மின்ஸ்(2), லாபுஷேன்(3) என ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ராவின் துல்லியமான லைன் அன்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

மீட்க முயன்ற ஸ்மித்-ஹெட் கூட்டணி

5வது விக்கெட்டுக்கு ஸ்மித், டிராவிஸ் ஹெட் கூட்டணி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர். ஸ்டீவ் ஸ்மித் ஏற்கெனவே ஃபார்மில் இல்லை என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார். முதல் இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்ததால், க்ரீஸை விட்டு இறங்கி ஆடி, கால்களை நகர்த்தி ஆடி விழிப்புடன் பேட் செய்தார்.

ஸ்மித் நிதானமாக பேட் செய்ய, டிராவிஸ் ஹெட் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார். இதனால், இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஆனால் சிராஜ் வீசிய அற்புதமான ஆஃப் ஸ்டெம்பிலிருந்து சற்று விலக்கி பேக்ஆஃப் லென்த்தில் வீசிய பந்தை ஸ்மித்தால் ஆடவும் முடியவில்லை, பேட்டை எடுக்கவும் முடியாமல் தவித்தார். இறுதியில் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்சானது. சிராஜின் ஆகச்சிறந்த பந்துவீச்சில் ஸ்மித் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்மித், டிராவிஸ் ஹெட் கூட்டணி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர்.

டிராவிஸ் அதிரடி அரைசதம்

அடுத்து வந்த மார்ஷ், டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்தார். நண்பகல் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களுடன் இறுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் டிராவிஸ் ஹெட் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்குப்பின் மார்ஷ், ஹெட் இருவரும் சேர்ந்து ரன்களை வேகமாகச் சேர்க்கத் தொடங்கினர். வாஷிங்டன் சுந்தர், ராணா, நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் இருவரும் பவுண்டரிகளை அடித்தனர். இதனால் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ரா வீசிய 39-வது ஓவரில் ஆடமுடியாத அவுட்சைட் ஆப்சைடில் விலக்கி வீசிய பந்தை ஹெட் தொட முயற்சிக்கவே பேட்டில் பட்டு ரிஷப்பந்திடம் கேட்சானது.

பும்ரா வலையில் சிக்கிய ஹெட்

டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்கும் முயற்சியில் பும்ரா இறங்கினார். சதத்தை நோக்கி நகர்ந்த ஹெட்டுக்கு துல்லியமாக லென்த்தில் பந்துவீசியதால் சற்று தடுமாறினார். பும்ரா வீசிய 39-வது ஓவரில் ஆடமுடியாத அவுட்சைட் ஆப்சைடில் விலக்கி வீசிய பந்தை ஹெட் தொட முயற்சிக்கவே பேட்டில் பட்டு ரிஷப்பந்திடம் கேட்சானது. டிராவிஸ் ஹெட் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்தனர்.

மிட்ஷெல் மார்ஷும் அரைசதம் நோக்கி நகர்ந்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் 47 ரன்கள் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டார்க் 12 ரன்களிலும், லேயான் டக்அவுட்டிலும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே கடைசிவரை போராடிய நிலையில் ராணா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

58.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியிருந்ததால் இந்திய அணியை ஆஸ்திரேலிய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். கேப்டன் கம்மின்ஸ் கடந்த மார்ச் மாதத்துக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு வந்தார். ஸ்மித், லாபுஷேன் ஃபார்மில் இல்லாத நிலையில் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெர்த் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். இந்த மைதானத்தில் 4 போட்டிகளிலும் தோல்வி அடையாததால் இந்த ஆட்டத்திலும் தோற்கமாட்டோம் என்று நினைத்திருந்தனர். ஆனால், 2வது நாளில் இருந்து ஆடுகளம் வேறுவிதமாக மாறியதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை, இதனால் ஜெய்ஸ்வால்-ராகுல் பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும், கோலியை ஆட்டமிழக்கச் செய்யவும் கடும் சிரமப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் 4வது நாளில் இருந்து ஆடுகளத்தில் உள்ள பிளவுகள் பெரிதாகியதால், பேட் செய்வது கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல், இன்றைய ஆட்டத்தில் திடீரென வீசப்பட்ட பவுன்ஸர்கள், தாழ்வாக வந்த பந்து என சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினர்.

ஆனால், இந்திய அணியோ கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இல்லாத நிலையிலும், அஸ்வின், ஜடேஜா ஆகிய மூத்த வீரர்களை பெஞ்சில் அமர வைத்து, இளம் வீரர்களுடன் துணிச்சலாக களமிறங்கியது. இந்த முடிவு தவறாகிவிட்டதோ என்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தபோது ரசிகர்கள் எண்ணினர்.

ஆனால், பும்ரா, சிராஜ், ராணா, நிதிஷ் ரெட்டியின் பந்துவீச்சு பட்டையைக் கிளப்பி ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களில் சுருட்டியது. அதன்பின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் அற்புதமான சதம், கோலியின் 500 நாட்களுக்குப் பின் சிறந்த சதம் ஆகியவை இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக அமைந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ரா, சிராஜ், ராணா, நிதிஷ் ரெட்டியின் பந்துவீச்சு பட்டையைக் கிளப்பி ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருட்டியது.

1991 ஆட்டத்தை நினைவுபடுத்திய இந்திய அணி

இந்திய அணி வெளிநாட்டில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற 3வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 318 ரன்களிலும், இலங்கைக்கு எதிராக304 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றிருந்தது. இது 3வது மிகப்பெரிய வெற்றியாக இந்திய அணிக்கு அமைந்தது.

ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்த பின், வீறுகொண்டு எழுந்து டெஸ்ட் போட்டியை வென்றது இது 2வது முறையாகும்.

இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1991ம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இதேபோன்ற ஆகச்சிறந்த வெற்றியைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 2வது இன்னிங்ஸில் 536 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து, 343 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை பந்தாடியது.

அப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கர்ட்னி வால்ஷ், அம்புரோஸ், மால்கம் மார்ஷல், பேட்டர்ஸன் என 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களை துவம்சம் செய்தனர்.

அதேபோன்று இந்த டெஸ்டில் இந்திய அணி பும்ரா, சிராஜ், புதுமுகங்கள் ராணா, நிதிஷ் ரெட்டியை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணியை புரட்டியெடுத்துள்ளது.

அதிலும் பும்ராவின் பந்துவீச்சுதான் இந்த ஆட்டத்தின் பிரம்மாஸ்திரமாக இருந்தது. பும்ராவின் டெஸ்ட் பந்துவீச்சு குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஆஸ்திரேலிய மண்ணில் 19-ஆக இருக்கிறது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கூட இந்த அளவு குறைவான சராசரி வைக்கவில்லை, ஆனால், பும்ரா அசாத்தியமான சராசரியை வைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் போட்டியிலேயே பும்ரா பொறுப்புடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.

பும்ரா அசத்தல்

பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முதல்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் போட்டியிலேயே கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததால், ஆட்டநாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார்.

கோலி ஃபார்மில் இல்லையா?

வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேசுகையில் “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் மிகவும் அழுத்தத்தில் இருந்தோம். ஆனால், அருமையாக மீண்டுவந்து பதிலடி கொடுத்தோம். 2018-ஆம் ஆண்டில் இதே பெர்த் மைதானத்தில் விளையாடியுள்ளேன். இந்த விக்கெட் தொடக்கத்தில் மெதுவாகவும், பின்னர் மாறும் என்றும் தெரிந்துகொண்டேன். நாங்கள் மிகவும் சிறப்பாகவே டெஸ்டுக்கு தயாரானோம்."

"உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள் என அனைத்து வீரர்களிடம் தெரிவித்தேன். ஜெய்ஸ்வால் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஃபார்மில் இல்லை என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, கடினமான ஆடுகளத்தில் கோலியின் ஆட்டத்தைக் கணிப்பது கடினம். ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்திய அணி 61.11 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி மீண்டும் முதலிடம்

இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும் என்பதால், கடும் நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையிலும், இந்திய அணி 15 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 5 தோல்விகள், ஒரு டிரா என 110 புள்ளிகளுடன், 61.11 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி 13 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 90 புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் 57.69 எனக் குறைந்து 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஏராளன் said:
 
  •  
  •  

கோலி ஃபார்மில் இல்லை என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை........................

 

பும்ரா பொய் சொல்லுகின்றார்...................🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேர்த் கிரிக்கட் ஆடுகளம் கிட்டத்தட்ட இந்திய ஆடுகளங்கள் போல தட்டையான ஆடுகளம்.  அதனால் முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவீரர்கள் சொதப்பினாலும் இந்தியர்களால் நன்றாக ஆடமுடிந்தது.

அடிலெட்ய்ட், பிறிஸ்பேர்ண், மெல்பேர்ண்,  சிட்னி ஆடுகளங்களில் இந்தியா எப்படி ஆடுகின்றது என்பதை பார்ப்போமே।😕

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

பேர்த் கிரிக்கட் ஆடுகளம் கிட்டத்தட்ட இந்திய ஆடுகளங்கள் போல தட்டையான ஆடுகளம்.  அதனால் முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவீரர்கள் சொதப்பினாலும் இந்தியர்களால் நன்றாக ஆடமுடிந்தது.

அடிலெட்ய்ட், பிறிஸ்பேர்ண், மெல்பேர்ண்,  சிட்னி ஆடுகளங்களில் இந்தியா எப்படி ஆடுகின்றது என்பதை பார்ப்போமே।😕

இந்த ஆடுகளம் பொதுவாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், உண்மையில் இந்தியா சிறப்பாக விளையாடி இருந்தது அதே நேரம் அவுஸ் மோசமாக விளையாடியுள்ளது.

இந்தியா அனைத்து போட்டிகளில் வென்றால் உலக டெஸ் தொடர் இறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோஷ் ஹேசில்வுட் மீது முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி

பெர்த் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியோடு நிறைவு செய்தது. அவுஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. அந்த அணி இதிலிருந்து மீள்வது கடினம். ஆனால், அணியை பேட்டர்கள், பவுலர்கள் என்று ஜோஷ் ஹேசில்வுட் பேசியிருப்பது கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.

3-ம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ஓட்டங்கள் என்று மடிந்ததையடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பேட்டியளித்த போது ஆடம் கில்கிறிஸ்ட், ‘இங்கிருந்து அவுஸ்திரேலிய அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

அதற்கு ஹேசில்வுட், “நீங்கள் இந்தக் கேள்வியை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரிடம் கேட்டிருக்க வேண்டும். நான் ரிலாக்சாக இருக்கிறேன். ஒரு சிறிய சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறேன். அடுத்த டெஸ்ட்டைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

உடனே அடம் கில்கிறிஸ்ட், ‘அணியில் துடுப்பாட்ட வீரர்கள் , பந்து வீச்சாளர்கள் என்று பிளவு இருக்கிறதா என்ன?’ என்றார். ஜோஷ் ஹேசில்வுட் இப்படிக் கூறியது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஒன்று டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 நாட்கள் இருக்கும் போது ‘நான் அடுத்த டெஸ்ட்டை எதிர்நோக்குகிறேன்’ என்று பொறுப்பில்லாமல் பேசியது, இன்னொன்று பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஏதோ அணி பேட்டர்கள், பவுலர்கள் என்று பிளவுண்டு கிடப்பது போல் பேசியது.

டேவிட் வார்னர் உடனடியாக ஹேசில்வுட் கருத்தை எதிர்த்துள்ளார்: “எல்லா பேட்டர்களும் கிரீசிற்குச் சென்று நன்றாக ஆட வேண்டும் என்றுதான் செல்வார்கள். ஒரு சீனியர் வீரராக அணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் போது அக்கறை வேண்டும். ரன்கள் இல்லை, ஆனால் ஹேசில்வுட் போன்ற மூத்த பவுலர் ஒருவர் இப்படிப் பேசுவது தேவையற்றது.

அணியில் பிளவெல்லாம் ஒன்றுமில்லை. நீண்ட காலம் கழித்து ஒன்று சேரும்போது பெரிய அணிகளில் கூட ஒருவரையொருவர் குற்றம்சாட்ட முடிகிறது. ஆனால் பிளவு ஒன்றும் இல்லை. ” என்றார்.

முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், “ஒரு ஆஸ்திரேலிய வீரர் வெளிப்படையாக பேட்டர், பவுலர் என்று பிரித்து பேசுவதை இப்போதுதான் கேட்கிறேன். 11 பேட்டர்கள் இருக்கின்றனர், இது மாறவே மாறாது அனைவரும் தான் பேட் செய்ய வேண்டும். அதுவும் அடுத்த போட்டியை எதிர்நோக்குகிறேன் என்று ஹேசில்வுட் போன்ற ஒருவரே கூறும்போது நான் இதுவரை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. களத்தில் ஸ்பிரிட் இல்லாமல் ஆடினர் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு ஒருபோதும் சாற்ற முடியாது” என்றார்.

ரவி சாஸ்திரி கூறும்போது, “இது போன்ற கருத்துகள், பிட்சில் இருக்கும் பிளவுகளுடன் மண்டையில் உள்ள பிளவுகளையும் காட்டுகிறது” என்று கிண்டலடித்தார்.

https://thinakkural.lk/article/312639

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ரசோதரன்

குருநாதா உங்க‌ட‌ ஆள் செஞ்சேரி அடித்து விட்டார் இர‌ண்டாவ‌து இனிங்சில்.................போட்டி முடிந்த‌தும் த‌ன‌க்கு செஞ்சேரி அடிச்ச‌தை விட‌ வெற்றி தான் முக்கிய‌ம் என‌ சொல்லி இருந்தார்

 

கோலி டெஸ்ட் போட்டியில் சில‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் செஞ்சேரி அடிச்சு இருக்கிறார்..................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, வீரப் பையன்26 said:

கோலி டெஸ்ட் போட்டியில் சில‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் செஞ்சேரி அடிச்சு இருக்கிறார்..................................

இனி அடுத்த செஞ்சரி அடிக்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குதோ என்று நினைத்துத்தான், செஞ்சரி எல்லாம் ஒன்றுமேயில்லை, அணியின் வெற்றிதான் முக்கியம் என்று இப்பவே தற்காப்பாக  ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கின்றார் போல கோலி பாய்................🤣.

 

spacer.png

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2024 at 08:39, ரசோதரன் said:

இனி அடுத்த செஞ்சரி அடிக்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குதோ என்று நினைத்துத்தான், செஞ்சரி எல்லாம் ஒன்றுமேயில்லை, அணியின் வெற்றிதான் முக்கியம் என்று இப்பவே தற்காப்பாக  ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கின்றார் போல கோலி பாய்................🤣.

 

spacer.png

அடுத்த போட்டி அடிலேட்டில் இளஞ்சிவப்பு (பிங்) பந்தில் விளையாட உள்ளார்கள் அதுவும் பகல் இரவு ஆட்டம், பந்து அதிகமாக சுயிங் ஆகும் இந்தியாவினால் அது போன்ற சூழ்நிலையினை கையாள முடியாது, அடுத்த போட்டி அவுஸ் வெல்வதற்கே வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் போட்டி நடைபெறவுள்ளது, அந்த போட்டியினை அவுஸ் வெல்லும் என கூறினாலும் இந்தியர்கள் இந்தியா இலகுவாக வென்றுவிடும் என கூறுகிறார்கள், பேர்த் போட்டியில் பெரிய ஓட்டங்களை எடுத்த ஜெஸ்வால் மிக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பார் என கருதுகிறேன், ரோகித், கோலி இருவராலும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ராக்கினை எதிர்கொள்வது கடினமாக இருக்கும், ராகுல் இந்த போட்டியிலும் திறமையாக விளையாட வாய்ப்புள்ளது, ஆனாலும் இந்த போட்டியினை இந்தியாவினால் வெல்ல முடியாது நியுசிலாந்திடம் முதல் போட்டியில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது போல இந்த மைதானத்தில் இந்தியா ஒரு சாதனையினை வைத்துள்ளதாக நினைவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

அடுத்த போட்டி அடிலேட்டில் இளஞ்சிவப்பு (பிங்) பந்தில் விளையாட உள்ளார்கள் அதுவும் பகல் இரவு ஆட்டம், பந்து அதிகமாக சுயிங் ஆகும் இந்தியாவினால் அது போன்ற சூழ்நிலையினை கையாள முடியாது, அடுத்த போட்டி அவுஸ் வெல்வதற்கே வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் போட்டி நடைபெறவுள்ளது, அந்த போட்டியினை அவுஸ் வெல்லும் என கூறினாலும் இந்தியர்கள் இந்தியா இலகுவாக வென்றுவிடும் என கூறுகிறார்கள், பேர்த் போட்டியில் பெரிய ஓட்டங்களை எடுத்த ஜெஸ்வால் மிக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பார் என கருதுகிறேன், ரோகித், கோலி இருவராலும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ராக்கினை எதிர்கொள்வது கடினமாக இருக்கும், ராகுல் இந்த போட்டியிலும் திறமையாக விளையாட வாய்ப்புள்ளது, ஆனாலும் இந்த போட்டியினை இந்தியாவினால் வெல்ல முடியாது நியுசிலாந்திடம் முதல் போட்டியில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது போல இந்த மைதானத்தில் இந்தியா ஒரு சாதனையினை வைத்துள்ளதாக நினைவுள்ளது.

என‌க்கு புரிய‌ வில்லை டெஸ்ட் போட்டிய‌ ஏன் இர‌வு நேரத்தில் ந‌ட‌த்துகின‌ம் என‌

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை முன் நோக்கி பார்த்தா எல்லா டெஸ்ட் போட்டிக‌ள் ப‌க‌ல் பொழுதில் தான் ந‌ட‌க்கும்.....................ப‌க‌லில் ந‌ட‌க்கும் டெஸ்ட் போட்டியில் மெதுவாய் இருட்டினால் விளையாட்டை நிறுத்தி விடுவின‌ம் ஹா ஹா 

 

இவ‌ங்க‌ளும் இவ‌ங்க‌ட‌ டெஸ்ட் விளையாட்டும்....................டெஸ்ட் விளையாட்டு இருக்கும் வ‌ரை கிரிக்கேட் வ‌ள‌ராது

இப்ப‌ 10ஓவ‌ர் கிரிக்கேட்டுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம் அதோட‌ இங்லாந்தில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் 100 ப‌ந்து விளையாட்டையும் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கின‌ம்....................டெஸ்ட் விளையாட்டால் காசு பெரிசா ச‌ம்பாதிக்க‌ முடியாது...................நேற்று வெஸ்சின்டீஸ் எதிர் வ‌ங்கிளாதேஸ் விளையாடின‌ போட்டிய‌ பார்த்தேன் மைதான‌த்தில் விளையாட்டு வீர‌ர்க‌ளை த‌விற‌ ம‌க்க‌ளை காண‌ வில்லை😁..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு புரிய‌ வில்லை டெஸ்ட் போட்டிய‌ ஏன் இர‌வு நேரத்தில் ந‌ட‌த்துகின‌ம் என‌

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣.

7 hours ago, vasee said:

அடுத்த போட்டி அடிலேட்டில் இளஞ்சிவப்பு (பிங்) பந்தில் விளையாட உள்ளார்கள் அதுவும் பகல்

டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரசோதரன் said:

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣.

டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.

டெஸ்ட் விளையாட்டுக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌வேற்ப்பு குறைந்து விட்ட‌து...............

 

டெஸ்ட் விளையாட்டுக்கு ப‌தில் 100ப‌ந்து விளையாட்டை இன்னும் டெவ‌ல‌ப் ஆக்க‌னும்..................ஒரு விளையாட்டின் முடிவுக்கு 5நாள் காத்து இருக்க‌னும் அதோட‌ மைதான‌ங்க‌ளில் ம‌க்க‌ள் இல்லாம‌ டெஸ்ட் போட்டி ந‌ட‌ந்தால் உண்மையில் அது விறுவிறுபாக‌ இருக்காது.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்?

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியா - ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.

பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் முற்றிலும் வேறுபட்டது.

பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து, டெஸ்ட் போட்டியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுரா(எஸ்ஜி, டியூக்ஸ்) பந்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

பேட்டர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும். பேட்டர்களின் பேட்டிங் திறமைக்கு பெரிய சவாலாக அமையும்.

டெஸ்ட் போட்டி பாரம்பரியம் காக்க

கிரிக்கெட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டி என்றாலே பகலில் தொடங்கி மாலையில் முடிக்கப்படும் என்ற நிலை மாறி, பிற்பகலில் தொடங்கி இரவு வரை நடக்கும் பகலிரவு டெஸ்ட் முறை 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குரிய இடத்தை டி20 போட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியபின், டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களின் ஆர்வம் மெல்ல குறையத் தொடங்கியது.

டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், மாலை நேரத்தில் ரசிகர்களின் கூட்டத்தை கவர்ந்திழுக்கவும் பகலிரவு டெஸ்ட் நடத்தும் புதிய சிந்தனை உதயமானது.

பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், புதிய கோணத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றவும் கொண்டுவரப்பட்டதே பகலிரவு டெஸ்ட் போட்டி.

இந்த டெஸ்ட் போட்டியின் முற்பகுதி சூரியஒளியிலும் பிற்பகுதி ஆட்டம் மின்னொளியில் நடக்கும்.

வழக்கமான சிவப்பு பந்துக்குப் பதிலாக எந்த நிறத்தில் பந்தைப் பயன்படுத்துவது என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரஞ்சு நிறம், மஞ்சள், பிங்க் ஆகிய வண்ணங்களில் பந்துகள் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன.

 
பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் இளஞ்சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது

2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்(ஈசிபி) ஒர் அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வங்கதேசத்துக்கு எதிராக 4 நாட்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்பட்டு அதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் துர்ஹாம் மற்றும் வோர்ஷெஸ்டர்ஷையர் அணிகள் அதற்கு மறுத்துவிட்டன.

இதனிடையே 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கிந்தியத்தீவுகளில் பிங்க் பந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கவுன்டிஅணிகளைச் சமாதானம் செய்தபின் 2010-ஆம் ஆண்டு “சாம்பியன்ஸ் கவுன்டி” போட்டித் தொடரை அபுதாபியில் மின்னொளியில் பிங்க் பந்தில் நடத்த ஈசிபி முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கேன்டர்பரி கிளப்பும் கவுன்டி சாம்பியன்ஷிப்பை பிங்க் பந்தில் மின்னொளியில் நடத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2010-11-ஆம் ஆண்டில் “குவாதி-இ-ஆசம்” கோப்பைத் தொடரை பகலிரவாக ஆரஞ்சு பந்தில் நடத்திப் பரிசோதித்து, இறுதிப்போட்டியை பிங்க் பந்தில் நடத்தியது.

2012ல் தென் ஆப்பிரிக்காவும், 2013-ஆம் ஆண்டில் வங்கதேச அணியும் பிங்க் பந்தில் விளையாடி பரிசோதனை செய்தன.

ஆஸ்திரேலியாவில் 2014-ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிகள் அனைத்தும் பிங்க் நிற கூக்கபுரா பந்திலேயே நடத்தி பரிசோதிக்கப்பட்டது.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

முதல் பகலிரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,SAEED KHAN/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நவம்பர் 27, 2015 அன்று அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது பந்து வீசத் தயாராக இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிங்க் நிறப் பந்தை டாஸ் செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

3 நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பிங்க் பந்து பயன்பாட்டுக்காக பிட்ச்சில் கூடுதலாக புற்கள் வளர்க்கப்பட்ட நிலையில் பந்துக்கு லேசாக மட்டுமே தேய்ந்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பிங்க் பந்து அமைந்திருந்தது. அதிகமான ஸ்விங், கூடுதல் வேகம், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் போட்டியாக பிங்க் டெஸ்ட் அமைந்திருந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் 81 சதவீத ரசிகர்கள் பிங்க் டெஸ்ட் போட்டியை ரசிப்பதாகவும், பிற்பகலில் தொடங்கும் டெஸ்டை இரவுவரைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அடுத்தார் போல் ரசிகர்கள் கூட்டமும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இருந்தது.

2வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே துபாயில் நடத்தப்பட்டது. பல அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியநிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் 2019-ஆம் ஆண்டுதான் இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடியது.

2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பிங்க் பந்தில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

 

22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள்

2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அளவில் 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று அசுரத்தனமாக இருக்கிறது. அடியெல்ட் மைதானத்தில்தான் அதிகபட்சமாக 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

இதில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய நாடுகள்தான் 22 போட்டிகளில் 18 ஆட்டங்களில் வென்றுள்ளன, 4 போட்டிகளில்தான் விருந்தினராக வந்த அணிகள் வென்றுள்ளன.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை அணிகள் தங்கள் நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவில்லை.

பிங்க் பால் டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019 இல் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஈடன் கார்டன் மைதானம் அருகே கட்டிடங்களில் பிங்க் நிற விளக்குகள் ஒளிர்ந்தன

ஏன் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும்போது, இரு அணிகளின் வீரர்களும் வண்ண உடைகளில் விளையாடுவார்கள், அப்போது பந்து தெளிவாக பேட்டர்களுக்கு தெரிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெள்ளை ஆடையயில் வீரர்கள் களமிறங்கி, வெள்ளைப் பந்து பயன்படுத்தப்பட்டால் பேட்டர்களால் பந்தை அடையாளம் காண்பதும், கவனிப்பதும் கடினம்.

மேலும் ஆடுகளத்தின் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு எதிராக பந்து தெளிவாக தெரிய வேண்டும், பேட்டர்களுக்கு நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே “பிங்க் நிற” பந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிங்க் நிறத்துக்காகவே பந்தில் சிறப்பு ரசாயனப் பூச்சு பூசப்படுகிறது.

வழக்கமான வெள்ளைப்பந்து விரைவில் நிறத்தை இழந்துவிடும்நிலையில் இந்த பிங்க் நிறம் எளிதாக தனது நிறத்தை இழக்காது, பந்தை தேய்ந்துபோகவிடாமல் ரசாயனப்பூச்சு பாதுகாக்கிறது.

ரசயான பூச்சால் பிங்க் பந்து கூடுதல் பளபளப்பாக இருப்பதால் வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஸ்விங் செய்ய முடியும், ஸ்விங் அளவும் அதிகரிக்கும்.

அதாவது புதிய சிவப்பு பந்தில் குறைந்த ஓவர்கள்தான் ஸ்விங் செய்ய முடியும், ஆனால், பிங்க் பந்தில் 40 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும்.

 

பிங்க் - சிவப்பு பந்து வேறுபாடு என்ன?

கிரிக்கெட்டில் விளையாடப்படும் பந்தின் எடை 156 கிராம் முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பந்து நிராகரிக்கப்படும். இதற்காகவே கிரிக்கெட் பந்து தரமான தோலால் தயாரிக்கப்படுகிறது.

சிவப்பு பந்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தோலைவிட, பிங்க் பந்து தயாரிக்க அதிக தரமான தோல் பயன்படுத்தப்படுகிறது.

ஹாக்கி பந்து அளவுக்கு இணையாக, பிங்க் பந்து இருக்கும், இதன் விட்டம் 22.5 செ.மீ ஆகும். இதில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும்.

பிங்க் பந்தில் பந்துவீசும் போது, தொடக்க ஓவர்களில் வழக்கமான சிவப்பு பந்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஸ்விங் ஆகும். இதற்கு பந்தின் மீது பூசப்பட்ட பிரத்தேய பிங்க் நிறமும், ரசாயன பாலிஷ்தான் காரணம்.

சிவப்பு பந்து வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிங்க் பந்தில் கறுப்பு நூலால் தைக்கப்பட்டிருக்கும். பேட்டர்களுக்கு பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நூலால் தைக்கப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் பயன்படுத்தப்படும் கூக்கபுரா பிங்க் பந்தில் மொத்தம் 6 தையல்கள் போடப்பட்டிருக்கும். இரு தையல்கள் கையாலும்,4 தையல்கள் எந்திரத்திலும் போடப்பட்டிருக்கும். இதன் விலை சர்வதேச அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம்வரை விற்கப்படுகிறது.

3 வகை பந்துகள்

சர்வதேச அளவில் கிரிக்கெட் பந்துகள் 3 வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஜி’ பந்துகளும் , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தானில் ‘டியூக்ஸ்’ பந்துகளும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ‘கூக்கபுரா’ பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பந்திலும் அதன் தையல்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் பந்தின் வேகமும், உழைப்பும் மாறுபடும். அதாவது எஸ்ஜி(சான்ஸ்பேரல் க்ரீன்லாந்த்), டியூக்ஸ் பந்துகள் முற்றிலுமாக கையால் தைக்கப்படுபவை. ஆனால், கூக்கபுரா பந்துகள் எந்திரத்தாலும், கையாலும், சில நேரங்களில் முழுவதும் எந்திரத்தாலும் தைக்கப்படுகிறது.

 

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏன் சாதகம்

பிங்க் பந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும்

பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பந்தின் மீது பூசப்பட்ட ஒருவகை ரசாயனத்தால் பந்தின் பளபளப்பு 40 ஓவர்கள்வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் நன்கு ஸ்விங் செய்யலாம், பந்தின் வேகமும் அதிகரிக்கும்.

பிங்க் பந்தில் இருக்கும் பாலிஷ் காரணமாக வழக்கமான சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதைவிட கூடுதலாக 20 சதவீதம் ஸ்விங் ஆகும். அதாவது, பிங்க் பந்தை பந்துவீச்சாளர் வீசும்போது கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையிலான வேகம் வழக்கமான சிவப்பு பந்தைவிட அதிகமாக இருக்கும்.

இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டர் தனது பேட்டிங்கின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும்.

ஆனால், சிவப்பு நிறப் பந்து மீது போடப்பட்ட வேக்ஸ்(மெழுகு) தேயும்வரை மட்டும் ஸ்விங் ஆகும், அது தேய்ந்தவுடன் ஸ்விங் தன்மை குறைந்தவிடும். ஆனால், 40 ஓவர்களுக்குப்பின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். ஆனால், பிங்க் பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்து நன்றாகத் தேய வேண்டும்.

பிங்க் பந்தைத் தயாரிக்கப்படும் செயற்கை சணல் இரவு நேர பனிப்பொழிவின் போது ஈரப்பதத்தை உறிஞ்சிகொள்ளவும், பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசவும் பயன்படுத்தப்படுகிறது. 40 ஓவர்களுக்கு மேல் பந்து தேயும்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்து ஓரளவுக்கு உதவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு புரிய‌ வில்லை டெஸ்ட் போட்டிய‌ ஏன் இர‌வு நேரத்தில் ந‌ட‌த்துகின‌ம் என‌

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை முன் நோக்கி பார்த்தா எல்லா டெஸ்ட் போட்டிக‌ள் ப‌க‌ல் பொழுதில் தான் ந‌ட‌க்கும்.....................ப‌க‌லில் ந‌ட‌க்கும் டெஸ்ட் போட்டியில் மெதுவாய் இருட்டினால் விளையாட்டை நிறுத்தி விடுவின‌ம் ஹா ஹா 

 

இவ‌ங்க‌ளும் இவ‌ங்க‌ட‌ டெஸ்ட் விளையாட்டும்....................டெஸ்ட் விளையாட்டு இருக்கும் வ‌ரை கிரிக்கேட் வ‌ள‌ராது

இப்ப‌ 10ஓவ‌ர் கிரிக்கேட்டுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம் அதோட‌ இங்லாந்தில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் 100 ப‌ந்து விளையாட்டையும் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கின‌ம்....................டெஸ்ட் விளையாட்டால் காசு பெரிசா ச‌ம்பாதிக்க‌ முடியாது...................நேற்று வெஸ்சின்டீஸ் எதிர் வ‌ங்கிளாதேஸ் விளையாடின‌ போட்டிய‌ பார்த்தேன் மைதான‌த்தில் விளையாட்டு வீர‌ர்க‌ளை த‌விற‌ ம‌க்க‌ளை காண‌ வில்லை😁..............................

ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தும் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன்.

 

2 hours ago, ரசோதரன் said:

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣.

டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.

மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது.

2 hours ago, வீரப் பையன்26 said:

டெஸ்ட் விளையாட்டுக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌வேற்ப்பு குறைந்து விட்ட‌து...............

 

டெஸ்ட் விளையாட்டுக்கு ப‌தில் 100ப‌ந்து விளையாட்டை இன்னும் டெவ‌ல‌ப் ஆக்க‌னும்..................ஒரு விளையாட்டின் முடிவுக்கு 5நாள் காத்து இருக்க‌னும் அதோட‌ மைதான‌ங்க‌ளில் ம‌க்க‌ள் இல்லாம‌ டெஸ்ட் போட்டி ந‌ட‌ந்தால் உண்மையில் அது விறுவிறுபாக‌ இருக்காது.....................

மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு  இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும்.

34 minutes ago, ஏராளன் said:

Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்?

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியா - ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.

பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் முற்றிலும் வேறுபட்டது.

பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து, டெஸ்ட் போட்டியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுரா(எஸ்ஜி, டியூக்ஸ்) பந்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

பேட்டர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும். பேட்டர்களின் பேட்டிங் திறமைக்கு பெரிய சவாலாக அமையும்.

டெஸ்ட் போட்டி பாரம்பரியம் காக்க

கிரிக்கெட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டி என்றாலே பகலில் தொடங்கி மாலையில் முடிக்கப்படும் என்ற நிலை மாறி, பிற்பகலில் தொடங்கி இரவு வரை நடக்கும் பகலிரவு டெஸ்ட் முறை 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குரிய இடத்தை டி20 போட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியபின், டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களின் ஆர்வம் மெல்ல குறையத் தொடங்கியது.

டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், மாலை நேரத்தில் ரசிகர்களின் கூட்டத்தை கவர்ந்திழுக்கவும் பகலிரவு டெஸ்ட் நடத்தும் புதிய சிந்தனை உதயமானது.

பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், புதிய கோணத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றவும் கொண்டுவரப்பட்டதே பகலிரவு டெஸ்ட் போட்டி.

இந்த டெஸ்ட் போட்டியின் முற்பகுதி சூரியஒளியிலும் பிற்பகுதி ஆட்டம் மின்னொளியில் நடக்கும்.

வழக்கமான சிவப்பு பந்துக்குப் பதிலாக எந்த நிறத்தில் பந்தைப் பயன்படுத்துவது என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரஞ்சு நிறம், மஞ்சள், பிங்க் ஆகிய வண்ணங்களில் பந்துகள் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன.

 

பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் இளஞ்சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது

2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்(ஈசிபி) ஒர் அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வங்கதேசத்துக்கு எதிராக 4 நாட்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்பட்டு அதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் துர்ஹாம் மற்றும் வோர்ஷெஸ்டர்ஷையர் அணிகள் அதற்கு மறுத்துவிட்டன.

இதனிடையே 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கிந்தியத்தீவுகளில் பிங்க் பந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கவுன்டிஅணிகளைச் சமாதானம் செய்தபின் 2010-ஆம் ஆண்டு “சாம்பியன்ஸ் கவுன்டி” போட்டித் தொடரை அபுதாபியில் மின்னொளியில் பிங்க் பந்தில் நடத்த ஈசிபி முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கேன்டர்பரி கிளப்பும் கவுன்டி சாம்பியன்ஷிப்பை பிங்க் பந்தில் மின்னொளியில் நடத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2010-11-ஆம் ஆண்டில் “குவாதி-இ-ஆசம்” கோப்பைத் தொடரை பகலிரவாக ஆரஞ்சு பந்தில் நடத்திப் பரிசோதித்து, இறுதிப்போட்டியை பிங்க் பந்தில் நடத்தியது.

2012ல் தென் ஆப்பிரிக்காவும், 2013-ஆம் ஆண்டில் வங்கதேச அணியும் பிங்க் பந்தில் விளையாடி பரிசோதனை செய்தன.

ஆஸ்திரேலியாவில் 2014-ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிகள் அனைத்தும் பிங்க் நிற கூக்கபுரா பந்திலேயே நடத்தி பரிசோதிக்கப்பட்டது.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

முதல் பகலிரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,SAEED KHAN/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நவம்பர் 27, 2015 அன்று அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது பந்து வீசத் தயாராக இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிங்க் நிறப் பந்தை டாஸ் செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

3 நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பிங்க் பந்து பயன்பாட்டுக்காக பிட்ச்சில் கூடுதலாக புற்கள் வளர்க்கப்பட்ட நிலையில் பந்துக்கு லேசாக மட்டுமே தேய்ந்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பிங்க் பந்து அமைந்திருந்தது. அதிகமான ஸ்விங், கூடுதல் வேகம், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் போட்டியாக பிங்க் டெஸ்ட் அமைந்திருந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் 81 சதவீத ரசிகர்கள் பிங்க் டெஸ்ட் போட்டியை ரசிப்பதாகவும், பிற்பகலில் தொடங்கும் டெஸ்டை இரவுவரைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அடுத்தார் போல் ரசிகர்கள் கூட்டமும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இருந்தது.

2வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே துபாயில் நடத்தப்பட்டது. பல அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியநிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் 2019-ஆம் ஆண்டுதான் இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடியது.

2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பிங்க் பந்தில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

 

22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள்

2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அளவில் 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று அசுரத்தனமாக இருக்கிறது. அடியெல்ட் மைதானத்தில்தான் அதிகபட்சமாக 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

இதில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய நாடுகள்தான் 22 போட்டிகளில் 18 ஆட்டங்களில் வென்றுள்ளன, 4 போட்டிகளில்தான் விருந்தினராக வந்த அணிகள் வென்றுள்ளன.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை அணிகள் தங்கள் நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவில்லை.

பிங்க் பால் டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019 இல் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஈடன் கார்டன் மைதானம் அருகே கட்டிடங்களில் பிங்க் நிற விளக்குகள் ஒளிர்ந்தன

ஏன் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும்போது, இரு அணிகளின் வீரர்களும் வண்ண உடைகளில் விளையாடுவார்கள், அப்போது பந்து தெளிவாக பேட்டர்களுக்கு தெரிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெள்ளை ஆடையயில் வீரர்கள் களமிறங்கி, வெள்ளைப் பந்து பயன்படுத்தப்பட்டால் பேட்டர்களால் பந்தை அடையாளம் காண்பதும், கவனிப்பதும் கடினம்.

மேலும் ஆடுகளத்தின் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு எதிராக பந்து தெளிவாக தெரிய வேண்டும், பேட்டர்களுக்கு நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே “பிங்க் நிற” பந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிங்க் நிறத்துக்காகவே பந்தில் சிறப்பு ரசாயனப் பூச்சு பூசப்படுகிறது.

வழக்கமான வெள்ளைப்பந்து விரைவில் நிறத்தை இழந்துவிடும்நிலையில் இந்த பிங்க் நிறம் எளிதாக தனது நிறத்தை இழக்காது, பந்தை தேய்ந்துபோகவிடாமல் ரசாயனப்பூச்சு பாதுகாக்கிறது.

ரசயான பூச்சால் பிங்க் பந்து கூடுதல் பளபளப்பாக இருப்பதால் வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஸ்விங் செய்ய முடியும், ஸ்விங் அளவும் அதிகரிக்கும்.

அதாவது புதிய சிவப்பு பந்தில் குறைந்த ஓவர்கள்தான் ஸ்விங் செய்ய முடியும், ஆனால், பிங்க் பந்தில் 40 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும்.

 

பிங்க் - சிவப்பு பந்து வேறுபாடு என்ன?

கிரிக்கெட்டில் விளையாடப்படும் பந்தின் எடை 156 கிராம் முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பந்து நிராகரிக்கப்படும். இதற்காகவே கிரிக்கெட் பந்து தரமான தோலால் தயாரிக்கப்படுகிறது.

சிவப்பு பந்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தோலைவிட, பிங்க் பந்து தயாரிக்க அதிக தரமான தோல் பயன்படுத்தப்படுகிறது.

ஹாக்கி பந்து அளவுக்கு இணையாக, பிங்க் பந்து இருக்கும், இதன் விட்டம் 22.5 செ.மீ ஆகும். இதில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும்.

பிங்க் பந்தில் பந்துவீசும் போது, தொடக்க ஓவர்களில் வழக்கமான சிவப்பு பந்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஸ்விங் ஆகும். இதற்கு பந்தின் மீது பூசப்பட்ட பிரத்தேய பிங்க் நிறமும், ரசாயன பாலிஷ்தான் காரணம்.

சிவப்பு பந்து வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிங்க் பந்தில் கறுப்பு நூலால் தைக்கப்பட்டிருக்கும். பேட்டர்களுக்கு பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நூலால் தைக்கப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் பயன்படுத்தப்படும் கூக்கபுரா பிங்க் பந்தில் மொத்தம் 6 தையல்கள் போடப்பட்டிருக்கும். இரு தையல்கள் கையாலும்,4 தையல்கள் எந்திரத்திலும் போடப்பட்டிருக்கும். இதன் விலை சர்வதேச அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம்வரை விற்கப்படுகிறது.

3 வகை பந்துகள்

சர்வதேச அளவில் கிரிக்கெட் பந்துகள் 3 வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஜி’ பந்துகளும் , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தானில் ‘டியூக்ஸ்’ பந்துகளும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ‘கூக்கபுரா’ பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பந்திலும் அதன் தையல்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் பந்தின் வேகமும், உழைப்பும் மாறுபடும். அதாவது எஸ்ஜி(சான்ஸ்பேரல் க்ரீன்லாந்த்), டியூக்ஸ் பந்துகள் முற்றிலுமாக கையால் தைக்கப்படுபவை. ஆனால், கூக்கபுரா பந்துகள் எந்திரத்தாலும், கையாலும், சில நேரங்களில் முழுவதும் எந்திரத்தாலும் தைக்கப்படுகிறது.

 

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏன் சாதகம்

பிங்க் பந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும்

பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பந்தின் மீது பூசப்பட்ட ஒருவகை ரசாயனத்தால் பந்தின் பளபளப்பு 40 ஓவர்கள்வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் நன்கு ஸ்விங் செய்யலாம், பந்தின் வேகமும் அதிகரிக்கும்.

பிங்க் பந்தில் இருக்கும் பாலிஷ் காரணமாக வழக்கமான சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதைவிட கூடுதலாக 20 சதவீதம் ஸ்விங் ஆகும். அதாவது, பிங்க் பந்தை பந்துவீச்சாளர் வீசும்போது கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையிலான வேகம் வழக்கமான சிவப்பு பந்தைவிட அதிகமாக இருக்கும்.

இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டர் தனது பேட்டிங்கின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும்.

ஆனால், சிவப்பு நிறப் பந்து மீது போடப்பட்ட வேக்ஸ்(மெழுகு) தேயும்வரை மட்டும் ஸ்விங் ஆகும், அது தேய்ந்தவுடன் ஸ்விங் தன்மை குறைந்தவிடும். ஆனால், 40 ஓவர்களுக்குப்பின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். ஆனால், பிங்க் பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்து நன்றாகத் தேய வேண்டும்.

பிங்க் பந்தைத் தயாரிக்கப்படும் செயற்கை சணல் இரவு நேர பனிப்பொழிவின் போது ஈரப்பதத்தை உறிஞ்சிகொள்ளவும், பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசவும் பயன்படுத்தப்படுகிறது. 40 ஓவர்களுக்கு மேல் பந்து தேயும்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்து ஓரளவுக்கு உதவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த போட்டியில் ரோகித் , கில் திரும்ப அணிக்குள் வருகிறார்கள் (இந்தியாவிற்கு பாதகம்😁), அவுஸில் சர்ச்சைக்குரிய பந்து வீச்சாளர் கேசல்வூட் இந்த போட்டியில் இல்லை (இந்தியாவிற்கு சாதகம்). 

ஆனால் போலன்ட் விளையாடுகிறார் அவர் மெல்பேர்ன் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் (அவர் மெல்பேர்னை சேர்ந்தவர் பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்).

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.