Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, vasee said:

இந்த போட்டியில் ரோகித் , கில் திரும்ப அணிக்குள் வருகிறார்கள் (இந்தியாவிற்கு பாதகம்😁), அவுஸில் சர்ச்சைக்குரிய பந்து வீச்சாளர் கேசல்வூட் இந்த போட்டியில் இல்லை (இந்தியாவிற்கு சாதகம்). 

ஆனால் போலன்ட் விளையாடுகிறார் அவர் மெல்பேர்ன் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் (அவர் மெல்பேர்னை சேர்ந்தவர் பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்).

அவ‌ர்க‌ளின் நாட்டு வீர‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து எந்த‌ ஆடுக‌ள‌த்தில் எந்த‌ வீர‌ரை ப‌ய‌ன் ப‌டுத்த‌னும் என்று

 

என‌க்கு டெஸ்ட் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது

பொழுது போகாட்டி பார்ப்ப‌து ம‌ற்ற‌ம் ப‌டி இஸ்கோர் பார்ப்ப‌தோடு ச‌ரி...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

அவ‌ர்க‌ளின் நாட்டு வீர‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து எந்த‌ ஆடுக‌ள‌த்தில் எந்த‌ வீர‌ரை ப‌ய‌ன் ப‌டுத்த‌னும் என்று

 

என‌க்கு டெஸ்ட் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது

பொழுது போகாட்டி பார்ப்ப‌து ம‌ற்ற‌ம் ப‌டி இஸ்கோர் பார்ப்ப‌தோடு ச‌ரி...........................

மார்ஸ் இனால் பந்து வீச முடியாது எனும் நிலையில் அவரின் இடத்திற்கு இவரினை மாற்றீடு செய்யப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, vasee said:

மார்ஸ் இனால் பந்து வீச முடியாது எனும் நிலையில் அவரின் இடத்திற்கு இவரினை மாற்றீடு செய்யப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.

அவுஸ்ரேலியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் வாய்ப்பு கொடுக்க‌லாம்........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான், ஆனால் இவர் ஒரு சகல துறை ஆட்டக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, vasee said:

உண்மைதான், ஆனால் இவர் ஒரு சகல துறை ஆட்டக்காரர்.

ம‌கிழ்ச்சி...................திற‌மைய‌ ச‌ரியா வெளிக்காட்டினால் அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் பிடிக்க‌லாம்👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, vasee said:

இந்த போட்டியில் ரோகித் , கில் திரும்ப அணிக்குள் வருகிறார்கள் (இந்தியாவிற்கு பாதகம்😁)

🤣............

கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣)  இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................

Edited by ரசோதரன்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார்.

உங்களுக்கு நகைசுவை நன்றாக வருகிறது, ஆனால் உருவக்கேலி என பிரச்சினை வரலாம், 

கிரிக்கெட் இந்தியா, அவுஸ்ரேலியா இரு நாடுகளும் வேறு நாடுகளிடம் உதைபட்டால் யுரியூப்பில் தொகுப்பு பார்ப்பதுண்டு, இந்த இரு நாடுகளுக்கிடையே போட்டி நடந்தால் ஆடுகளத்தில்  மோசமாக நடந்து கொள்ளும் நாட்டிற்கெதிராக மற்ற அணி வெல்ல விரும்புவதுண்டு.

இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, vasee said:

உருவக்கேலி என பிரச்சினை வரலாம்

இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

பிரச்சனை வரலாம் என்றாலே அது வந்து விட்டது என்று தானே அர்த்தம்..................🤣.

இங்கும் அவர்கள் ஓரளவிற்கு அப்படியே. கிரிக்கட்டில் காட்டும் ஈடுபாட்டை வேறு எந்த விளையாட்டிலும் காட்டமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு டெஸ்ட் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது

பொழுது போகாட்டி பார்ப்ப‌து ம‌ற்ற‌ம் ப‌டி இஸ்கோர் பார்ப்ப‌தோடு ச‌ரி...........................

டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தும் சிகப்பு பந்தின் கட்டு வெள்ளைபந்தை விட உறுதியாக இருப்பதனால் இவ்வாறான பந்துவீச்சுகளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் பந்து வீச்சாளர் பந்தின் கட்டினை பைன் லெக் திசையில் வைத்து  பந்தினை வீசும் போது மணிக்கட்டினை நேராக வைத்து பிளிக் செய்வது போல் வீசும் போது இவ்வாறு நிகழும் மிக சிலரே இதனை சிறப்பாக செய்வார்கள், அத்துடன் பந்தின் கட்டினை தளம்பலாக வீசும் போது பந்து எந்த பக்கம் திரும்பும் என்பதும் கணிப்பது சிரமமாகும், இந்த பிரச்சினை 20 ஓவர் 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தும் வெள்ளை பந்தில் பெரிதாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரசோதரன் said:

🤣............

கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣)  இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................

ஹா ஹா 

யாழ் க‌ள‌த்தில் சிற‌ந்த‌ காமெடிய‌ர் இல்லை என‌ ஏங்கினோம் அந்த‌ இட‌த்தை என்ர‌ குருநாதார் பிடித்து விட்டார் ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி😁.....................

 

இப்ப‌த்த‌ கிரிக்கேட் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்

அது எல்லா அணிக்கும் பொருந்தும்

 

நீங்க‌ள் சொல்வ‌து உண்மை தான் 20வ‌ருட‌த்துக்கு முத‌ல் விளையாடின‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உய‌ர‌ம் இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ள் ப‌ர‌ட்டைய‌ல் ஆனால் ப‌ழைய‌ வீர‌ர்க‌ளை விட‌ இப்ப‌த்த‌ ப‌ர‌ட்டை வீர‌ர்க‌ள் அதிர‌டியாக‌ ஆடி மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன்ஸ்ச‌ கூட்டுவின‌ம்.......................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் விளையாடின‌ கால‌த்தில் டெஸ்ட் போட்டி ப‌ல‌ ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கு

இப்ப‌த்த‌ டெஸ்ட் போட்டி 3 நாள் அல்ல‌து 4 நாளில் முடிந்து விடும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஹித் vs ராகுல்: பிங்க் பால் டெஸ்டில் ஜெய்ஸ்வாலுடன் யார் முதலில் களமிறங்க வேண்டும்?

பெர்த் டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெர்த் டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய ராகுல்
  • எழுதியவர், நிதிஷ் குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

ஆஸ்திரேலியா அணியுடனான அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு ஓப்பனராக ஜெய்ஸ்வாலுடன் யார் களமிறங்க வேண்டும் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த கேள்விக்கு விடை தேடும் முன், ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது என்று ஆராய்வது, இதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள உதவும்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டி பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 27 தொடங்கி நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, இந்த போட்டியில் அணியின் கேப்டனான பும்ரா, வீரர்கள் சிராஜ், கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர்.

 

இதில் பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இந்திய அணியின் பேட்டர்கள், அதிலும் குறிப்பாக ஓப்பனர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுலின் பங்கு மிகப்பெரியது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளின் பேட்டர்களும் முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள் கூட பேட்டிங் ஆட முடியாமல் திணறினர். இரு அணியின் பந்துவீச்சும் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக இருந்தது.

ஆட்டம் இந்தியா வசமானது இரண்டாம் இன்னிங்ஸில் தான், அதிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆடிய விதத்தில் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமானது.

இந்த போட்டிக்கு முன் இந்தியா ஆடிய நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஆடாத ராகுல் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பேட்டிங் ஆட சவாலான ஆப்டஸ் மைதானத்தில் தான் ஆடியது மட்டும் இல்லாமல், ஜெய்ஸ்வாலிடம் ஆட்ட நுணுக்கங்களை கடத்தி அவரையும் சிறப்பாக ஆட வைத்தார். இதனை போட்டி முடிந்த பிறகு தனது சதத்தைப் பற்றி பேசும் போது ஜெய்ஸ்வால் கூறினார்.

"என்னை இந்த பாட்னர்ஷிப் முழுவதும் ராகுல் வழிநடத்தினார். நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக ஆடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். ஆட்டக் களத்தில் எப்போதெல்லாம் நான் பதற்றமாக உணர்ந்தேனோ, அப்போதெல்லாம் ராகுல் நான் கவனத்தோடு இருக்க உதவினார்," என்றார் ஜெய்ஸ்வால்.

62 ஓவர்கள் ஆடிய இந்த இணை, ரன் குவித்தது மட்டுமின்றி ஆஸ்திரேலிய வீரர்களின் மன உறுதியை உடைத்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ராகுல் ஓப்பனராக தொடர வேண்டுமா? ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது.

 

இந்திய அணியுடன் ரோஹித்

இந்திய அணியுடன் இணைந்த ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் ரோஹித்

முதல் டெஸ்ட் போட்டியின் போது தனிப்பட்ட காரணத்திற்காக விடுப்பில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டாம் போட்டியான அடிலெய்ட் போட்டிக்கு முன் அணியுடன் இணைந்தார்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் பிங்க் பால் போட்டிக்கு முன் இந்த பந்தை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சிகள் மேற்கொண்டனர். கூடுதலாக வார்ம்-அப் போட்டியும் பிரைம் மினிஸ்டர் XI அணியுடன் இந்திய அணி ஆடியது.

இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி மழையின் காரணமாக, ஒரே நாளில் அணிக்கு தலா 50 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடைபெற்றது. இதில் ரோஹித் பங்கேற்று விளையாடினார். ஆனால், அவர் வழக்கமாக ஆடுவதை போல ஓப்பனராக ஆடவில்லை, மாறாக நான்காவது வீரராக களமிறங்கினார்.

ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை இங்கும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 44 பந்துகள் ஆடிய ராகுல் விக்கெட் இழக்காமல் ஓய்வு பெற்றார். ஆனால், நான்காவதாகக் களமிறங்கிய ரோஹித் 11 பந்துகளில் விக்கெட் இழந்தார்.

 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்

பெர்த் டெஸ்டில் இந்திய அணி ரோஹித் மற்றும் கில் போன்ற அணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்த வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது. ரோஹித் விடுப்பிலும், கில் காயத்திலும் இருந்தார். அதனால் அணியில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஜூரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆடினர்.

ஆனால், அடிலெய்ட் டெஸ்டில் இவர்கள் இருவரும் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் அணிக்குத் திரும்பினால், படிக்கலுக்கு பதில் கில்லும், ஜூரேல் இடத்தில் ரோஹித்தும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடந்தால், அடிலெய்ட் டெஸ்டில் பேட்டர்களாக கேப்டன் ரோஹித், ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி, பந்த் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.

ஆனால், இதில் ராகுல் எங்கு களமிறங்குவார் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், ஓப்பனிங்கில் யார் ஆட வேண்டும் என்ற கேள்வியும் தொடர்கிறது.

 

ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியுள்ளது யார்?

ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல்

ரோஹித்தை எடுத்துக் கொண்டால், 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் தொடரில், ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் விளையாடினார்.

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 போட்டிகளில் 408 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 31 மற்றும் அதிகபட்ச ரன்கள் 63. இந்த 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஓப்பனராக 2 டெஸ்ட்களில் ஆடிய ரோஹித் 32 ரன்கள் சராசரியுடன் 129 ரன்களைக் குவித்தார்.

ராகுலை பொருத்தவரை, 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் மூலம் சர்வதேச டெஸ்டில் கால்பதித்து, இரண்டு போட்டிகளில் ஆடி, ஒரு சதத்துடன் மொத்தமாக 130 ரன்களை 33 ரன்கள் சராசரியுடன் அடித்துள்ளார்.

2018-2019 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 3 போட்டிகளில் 5 இன்னிங்ஸ் ஆடிய ராகுல் 12 ரன்கள் சராசரியுடன் 57 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

அதன் பிறகு, கடைசியாக நடந்த பெர்த் டெஸ்டில் ராகுல் 26 மற்றும் 77 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் சராசரி 51.

ஆஸ்திரேலியாவில் 11 இன்னிங்ஸில் விளையாடிய ராகுல் 9 இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஆடி 286 ரன்களை 32 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார்.

 

ரோஹித்துக்கு சிறந்த இடம் எது?

ஆறாவது இடத்தில் ரோஹித்தின் சராசரி 54.57

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆறாவது இடத்தில் ரோஹித்தின் சராசரி 54.57

ஐசிசி தரவுகளின் படி, 64 டெஸ்டில் 111 இன்னிங்ஸ் ஆடியுள்ள ரோஹித் 4,270 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 42.27 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 212.

46 போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கியுள்ள ரோஹித் 2,685 ரன்களை 44 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். அதே வேளையில், 16 போட்டிகளில் ஆறாவது இடத்தில் ஆடிய ரோஹித் சர்மா, 54.57 சராசரியுடன் 1,037 ரன்களை குவித்துள்ளார்.

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ரோஹித் 15 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 548 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.

நடுவரிசையில் ராகுல் எப்படி செயல்படுகிறார்?

ஐசிசி தரவுகளின் படி, 54 டெஸ்டில் 93 இன்னிங்ஸில் ஆடியுள்ள ராகுல் 5,867 ரன்களை 34 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். இதில் பெரும்பாலும் இவர் ஓப்பனராக ஆடியுள்ளார்.

ஆறாவது இடத்தில் 9 இன்னிங்ஸில் ராகுல் ஆடியுள்ளார். அதில், 29.25 ரன்கள் சராசரியுடன் 231 ரன்களையும், 5 இன்னிங்ஸில் மூன்றாவது இடத்தில் ஆடிய ராகுல் 88 ரன்களையும் குவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்டில் நான்காவது இடத்திலும் ராகுல் களமிறங்கினார். அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 108 ரன்களை குவித்திருந்தார்.

 

சமீபத்திய ஃபார்ம்

ரோஹித் ஓப்பனராக தான் ஆட வேண்டும் என்று கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான பாஸ்கி

பட மூலாதாரம்,BOSSKEY BALASUBRAMANIAM/FACEBOOK

படக்குறிப்பு, ரோஹித் ஓப்பனராக தான் ஆட வேண்டும் என்று கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான பாஸ்கி

கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியாவிற்கு வெளியே நடந்த போட்டிகளில், அதிக பந்துகளைச் சந்தித்து விக்கெட் விட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர்.

ராகுல் 19 இன்னிங்ஸ் ஆடி அதில், 757 ரன்களை குவித்துள்ளார். 90.7 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ராகுல் ஆடியுள்ளார்.

அதே வேளையில், ரோஹித் 23 இன்னிங்ஸ் ஆடி அதில், 919 ரன்களை குவித்துள்ளார். அவர் 89.1 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ஆடியுள்ளார்.

இவர்கள் இருவரை தொடர்ந்து புஜாரா 87.5 பந்துகள், கோலி 84.4 பந்துகள் ஆடி விக்கெட் விட்டுள்ளதாக, க்ரிக்பஷின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்த் அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ரோஹித் 91 ரன்கள் மட்டுமே குவித்தார்.

ராகுல் பெர்த் டெஸ்டுக்கு முன் நியூசிலாந்த் உடன் ஆடிய டெஸ்ட் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.

 

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்

ராகுல் வெளிநாடுகளில் பல கடினமான சூழ்நிலையில் நன்றாக ஆடியுள்ளார் என்று ஆனந்த் கூறினார்

பட மூலாதாரம்,CRICANANDHA/FACEBOOK

படக்குறிப்பு, ராகுல் வெளிநாடுகளில் பல கடினமான சூழ்நிலையில் நன்றாக ஆடியுள்ளார் என்று ஆனந்த் கூறினார்

தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர் பாஸ்கி பாலசுப்ரமணியம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அடிலெய்ட் டெஸ்டில் ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவரால் புல் மற்றும் ஹூக் ஷாட்கள் (Pull and hook) நன்றாக ஆட முடியும். அவருக்குச் சிறந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.

கிரிக்கெட் விமர்சகரான ஆனந்த், "இந்த டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவர் இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பல சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018-ஆம் ஆண்டு தி ஓவல் மற்றும் 2021-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக, 2021-ஆம் ஆண்டு சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இவர் அடித்த சதங்கள் இவரின் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தின," என பிபிசி தமிழிடம் கூறினார்.

ஒன்-டவுனைப் பொருத்தவரை, கில் மற்றும் இதர இடங்களில் இப்போது உள்ளது போலவே, ஆட வேண்டுமென இருவரும் உடன்பட்டனர்.

ராகுல் பற்றி பாஸ்கி பாலசுப்ரமணியம் பேசும் போது, "ராகுல் தற்போதுள்ள இந்திய அணியில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட வீரர். அவரால் ஓப்பனிங், ஒன் டவுன், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் ஆட முடியும். அவர் ஆறாவதாகக் களமிறங்குவது அணிக்கு பலம் சேர்க்கும்" என்றார்.

ஆனால், ஆனந்தின் கருத்து இதனுடன் மாறுபட்டு இருந்தது. "ரோஹித் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவதாகக் களமிறங்கி ஆடியுள்ளார். அவரால் பந்து வீச்சாளர்களுடன் ஆடி அணிக்குத் தேவையான முக்கிய ரன்களை இறுதியில் குவிக்க முடியும்," எனக் கூறினார்.

மேலும், கடந்த போட்டியில் நன்றாக ஆடி ஃபார்மில் உள்ள ராகுல் ஓப்பனராக ஆடுவதே சிறந்தது," என அவரது கருத்தைப் பதிவு செய்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

ஹா ஹா 

யாழ் க‌ள‌த்தில் சிற‌ந்த‌ காமெடிய‌ர் இல்லை என‌ ஏங்கினோம் அந்த‌ இட‌த்தை என்ர‌ குருநாதார் பிடித்து விட்டார் ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி😁.....................

இப்ப‌த்த‌ கிரிக்கேட் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்

அது எல்லா அணிக்கும் பொருந்தும்

பையன் சார், 

அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்......................🤣.

நீங்கள் சொல்வது போலவே இன்றைய வீரர்கள் மின்னல் வேகத்தில் அடிக்கின்றார்கள், எப்படி எப்படி எல்லாமோ அடிக்கின்றார்கள்........ 'லப்பர் பந்து' படம் பார்த்தீர்களா.............👍.

அந்த நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்கள், டேவிட் பூன், ஷேன் வார்ன் போன்ற ஓரிருவரைத் தவிர, மிகவும் சிறப்பான உடற்தகுதியுடன் இருந்தார்கள். கரீபியன் வீரர்கள் இயற்கையிலேயே அப்படி இருந்தார்கள்............

எங்களின் அர்ஜூன பந்தைப் பார்த்து பார்த்து நடந்து கொண்டு திரிந்தார், இன்னும் பலரும் அப்படியே.

இப்பொழுது பொதுவாக எல்லா நாடுகளின் வீரர்களும் நல்ல உடற்தகுதியுடனேயே இருக்கின்றார்கள்.......

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், 

அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்......................🤣.

நீங்கள் சொல்வது போலவே இன்றைய வீரர்கள் மின்னல் வேகத்தில் அடிக்கின்றார்கள், எப்படி எப்படி எல்லாமோ அடிக்கின்றார்கள்........ 'லப்பர் பந்து' படம் பார்த்தீர்களா.............👍.

அந்த நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்கள், டேவிட் பூன், ஷேன் வார்ன் போன்ற ஓரிருவரைத் தவிர, மிகவும் சிறப்பான உடற்தகுதியுடன் இருந்தார்கள். கரீபியன் வீரர்கள் இயற்கையிலேயே அப்படி இருந்தார்கள்............

எங்களின் அர்ஜூன பந்தைப் பார்த்து பார்த்து நடந்து கொண்டு திரிந்தார், இன்னும் பலரும் அப்படியே.

இப்பொழுது பொதுவாக எல்லா நாடுகளின் வீரர்களும் நல்ல உடற்தகுதியுடனேயே இருக்கின்றார்கள்.......

 

நான் சும்மா ப‌ண்ணுக்கு எழுதினே குருநாதா உங்க‌ளை செந்தில் க‌வ‌வுண்ட‌ம‌னி கூட‌ ஒப்பிட‌லாமா லொள்

 

ஆம் நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி 

ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் வ‌ய‌துக்கு ஏற்ற‌ தோற்ற‌ம் அதோட‌ அவ‌ர்க‌ள் காய‌ப் ப‌டுவ‌து மிக‌ குறைவு

வெஸ்சின்டீஸ் வீர‌ர் அம்புரூஸ் அவ‌ரை நான் இப்ப‌ கூட‌ பார்க்குவில் என்ர‌ த‌லைய‌ உய‌ர்த்தி பார்த்தால் தான் அவ‌ர் என் க‌ண்ணில் தெரிவார்😁😁😁😁.....................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாட‌க் கூடிய‌வை இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ள் டெஸ்ட் விளையாட்டில் ஏனோ தானோ என்று சுத‌ப்பி விளையாடுகின‌ம் ம‌ழை வ‌ந்து விளையாட்டு இர‌ண்டு நாள் த‌டை ப‌ட்டும் இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளால் விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்க‌ மாட்டின‌ம்.................................20ஓவ‌ர் கிரிக்கேட் வ‌ருகையோடு வீர‌ர்க‌ள் ப‌ண‌ம் சாம்பாதிப்ப‌தையே விரும்புகின‌ம் அது தான் முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் டெஸ்ட் விளையாட்டில் இருந்து சீக்கிர‌ம் ஓய்வை அறிவிக்கின‌ம்.....................சில‌  ஜ‌பிஎல் சீச‌னில் விளையாடினால் போதும் முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ண‌ ம‌ழையில் மித‌ப்பின‌ம்.................

 

இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்............................. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பும்ராவின் 'பந்து வீச்சு ஸ்டைல்' விமர்சிக்கப்படுவது ஏன்? ஆஸ்திரேலிய அணி கலக்கத்தில் உள்ளதா?

ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கிரிக்கெட்டில் ஒரு வீரரை திறமையால் எதிர்கொள்ள முடியாத நிலையில், எதிரணியினர் மனரீதியாக தாக்கி அந்த வீரரின் மனஉறுதியுடன் மோதி வெற்றி பெறுவது தந்திர உத்தி.

இந்த தந்திர உத்தியை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியினரும், ஊடகங்களும், கடந்த காலங்களில் பல நேரங்களில் கையாண்டுள்ளனர், இதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டனர்.

அந்த வகையில், இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்கள், கவுன்டி வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரி்த் பும்ராதான்.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்களில் அபாரமான வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, பும்ராவின் வேகப்பந்து வீச்சுதான்.

 

இந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்த் டெஸ்டுக்கு இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு, பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் பும்ரா இருந்தார்.

அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைவிட, பும்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியின் பேட்டர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக பும்ரா இருந்தார் என்பதை அந்த அணி வீரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

விமர்சனங்களில் சிக்கியவர்கள்

ஆஸ்திரேலிய ஊடகங்களின் விமர்சனங்கள், வீரர்களின் ஸ்லெட்ஜிங்கில் சிக்கியவர்களில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், ஷாஹித் அஃப்ரிடி, ஷோயப் அக்தர் என பந்து வீச்சாளர்களின் பட்டியல் நீளும். அதேசமயம், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைப் பற்றி இந்திய நடுவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அம்பலத்தில் ஏறவில்லை.

ஆஸ்திரேலிய அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் மனரீதியாகத் தாக்கப்பட்டு, பந்துவீச்சு மீது அவதூறு கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

'பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது'

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "பும்ராவின் பந்து வீச்சு விளையாட முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கிறது. பும்ரா ஓடி வரும் ஸ்டைலும், பந்து வீச்சு முறையும் வித்தியாசமாக இருக்கிறது, மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. வித்தியாசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பும்ராவின் பந்து வீச்சு இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 

'பேரன்களிடம் சொல்லி பெருமைப்படுவேன்'

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் 'டான்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் பார்த்த பந்து வீச்சாளர்களிலேயே சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். அவரின் பந்து வீச்சை சமாளித்து பேட் செய்வது சவாலானது. என் பேரக்குழந்தைகளிடம் பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" என டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கவலை

இந்த சூழலில், அடிலெய்ட் டெஸ்ட் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பும்ராவின் பந்து வீச்சைப் பார்த்து நடுக்கத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், அதிவேக பெர்த் ஆடுகளத்திலேயே பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்டு சிதறிய ஆஸ்திரேயாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள், அடிலெய்டில் பிங்க் பந்தில் பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியினரை தற்போது சூழ்ந்திருப்பது, "பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது" என்ற கவலைதான்.

டாப் ஆர்டர்கள் பரிதாபம்

ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை கடந்த 7 டெஸ்ட்களில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் சிதைத்துள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தானின் அமர் ஜமால், ஷாஹின் ஷா அஃப்ரிடி, மிர் ஹம்சா, அல்சாரி ஜோசப், ஷாமர் ஜோசப், மாட் ஹென்றி, பென் சீர்ஸ் ஆகியோர், கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டர்களை சிதைத்து, 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, டாப் ஆர்டர் பேட்டர்கள் எந்த அளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

 

அன்று பிளின்டாப், இன்று பும்ரா

கடந்த 2005ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்டுக்கு கடும் பிரச்னையாக பிளின்டாப் பந்து வீச்சு இருந்தது. 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பயணத்தில் கில்கிறிஸ்டை 6 முறை பிளின்டாப் ஆட்டமிழக்கச் செய்தார்.

பிளின்டாப் பந்து வீச்சை சமாளித்து ஆடமுடியாமல் கில்கிறிஸ்ட் விக்கெட்டை இழப்பது தொடர்ந்தது. இதை களைவதற்கு பேட்டிங் பயிற்சியாளர் பாப் மயூல்மேனிடம் பிரத்யேகமாக கில்கிறிஸ்ட் பயிற்சி எடுத்து 2007ம் ஆண்டு ஆஷஸ் தொடரை எதிர்கொண்டார். அந்த ஆஷஸ் தொடரில் பிளின்டாப் பந்து வீச்சை கில்கிறிஸ்ட் அனாசயமாக விளையாடினார்.

அதேபோல, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் கலக்கம் கொண்டுள்ளது. பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஸ்மித், லாபுஷேன், கவாஜா, மார்ஷ் என அனைவரும் பிரத்யேக பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிரத்யேக பயிற்சி எடுத்து வருகின்றனர்

பும்ரா பந்து வீச்சை கண்டு ஏன் அச்சம்?

பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு இருக்கும் பிரச்னை, "பும்ரா தனது கையில் வைத்திருக்கும் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளிதான். எப்போது, எப்படி பந்தை ரிலீஸ் செய்கிறார்" என்பதை ஆஸ்திரேலிய பேட்டர்களால் கணிக்க முடியவில்லை.

இதனால் பும்ராவின் பந்து வீச்சில் அனைத்துப் பந்துகளையும் எதிர்கொண்டு விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் இருக்கிறார்கள். பும்ரா வீசும் ஓவரில் எந்த பந்து அவுட் ஸ்விங் (outswing) ஆகிறது, இன்ஸ்விங் (inswing) ஆகிறது, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் (stump to stump) வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறுகிறார்கள்.

 

வாசிம் அக்ரமின் விளக்கம்

பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறுகையில், "பும்ரா தனது பந்து வீச்சில் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளி என்பது பேட்டர்களின் கால்களை நோக்கி இருக்கிறது. எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அங்குள்ள ஆடுகளங்களில் ஒரு பேட்டர் பேட்டின் நுனியில் பட்டு (அவுட்சைட் எட்ஜ்) ஆட்டமிழப்பதுதான் அதிகம். அதிகமான பவுன்ஸர், அதிகமான சீமிங் இதற்குக் காரணம்.

ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்வாகு, அதிகமான உயரத்தால், அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் வேகத்தால் எதிரணி பேட்டர்களை கிளீன் போல்ட் செய்ய சரியான லைன் அன்ட் லென்த்தில் பிட்ச் செய்வது கடினம். ஆதலால், ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை பேட்டர் ஒருவர் லீவ் செய்து பழகினாலே களத்தில் நிற்க முடியும்.

வாசிம் அக்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" - வாசிம் அக்ரம்

பேட்டர்களுக்கு சவால்

ஆனால், பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை, பெர்த் டெஸ்டில் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் முறையைக் கையாண்டார். பும்ரா பந்துவீச்சில் எந்தப் பந்து இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. பும்ராவின் பந்து வீச்சில் இருக்கும் வேகம், பேட்டருக்கு அருகே அவரின் ரிலீஸ் பாயிண்ட் அமைந்திருப்பது, ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இதனால் பும்ராவின் பந்து வீச்சை லீவ் செய்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஆடுவது சிரமம். அவ்வாறு ஆடுவதும் ஆபத்தானது. ஏனென்றால், பும்ராவின் பந்துவீச்சு ரிலீஸ் பாயிண்ட் குழப்பமாக இருப்பதால், லீவ் செய்து விளையாட ஆஸ்திரேலிய பேட்டர்கள் முயன்றால், கால்காப்பில் வாங்கி ஆட்டமிழக்க நேரிடும்.

கடந்த பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். அதில், 4 எல்பிடபிள்யூ பும்ரா எடுத்தது. பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், லாபுஷேன் 52 பந்துகளை வீணடித்து 2 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தப் பந்தை லீவ் செய்வது, எந்தப் பந்தில் ஷாட் அடிப்பது என்ற குழப்பத்தில் லாபுஷேன் ஆடினார். 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்தை லீவ் செய்ய முயன்றபோது கால்காப்பில் வாங்கி லாபுஷேன் ஆட்டமிழந்தார்.

பிரத்யேகப் பயிற்சி

ஆதலால், பும்ராவின் பந்து வீச்சை அடிலெய்டு டெஸ்டில் சமாளித்து ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பேட்டிங் ஆலோசகர் மைக் ஹசி, லாச்சலான் ஸ்டீவன்ஸ், பயிற்சியாளர் மெக்டோனல்ட் ஆகியோர் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என கிரிக்இன்போ (cricinfo) தளம் தெரிவித்துள்ளது.

பும்ரா பந்து வீச்சு மீது விமர்சனம்

இதற்கிடையே, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல், பந்தை எறிவது போன்று இருக்கிறது, அவரின் பந்து வீச்சை ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய கவுன்டி வீரர்கள் விமர்சித்துள்ளனர். இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவர் பந்தை எறிகிறார் என கூறுவதற்கு நடுவருக்கு அச்சமா என்றும் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளனர்.

"பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் சட்டவிரோதமானது, ஐசிசி விதிகளுக்கு புறம்பாக கை மணிக்கட்டை மடக்குகிறார், இதை ஆய்வு செய்ய வேண்டும்," என எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

 

முதல்முறையாக குற்றச்சாட்டு

ஆனால், பந்து வீச்சு எறிவது போல் இருக்கிறது என்ற பும்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு, விமர்சனம் வைக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பும்ராவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணி, 10 ஆண்டுகளுக்கு முன் பும்ராவின் பந்து வீச்சையும், இப்போதுள்ள பும்ராவின் பந்து வீச்சையும் வீடியாவாகப் பதிவு செய்து, "10 ஆண்டு சவால்" என எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிபிஎல் தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்தை எறிவதாக குற்றசாட்டு வந்து அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.

ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் ஆஸ்திரேலிய அணியினரால் விமர்சிக்கப்படுகிறது.

ஐசிசி விதி கூறுவது என்ன?

இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் இயான் பாண்ட், பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் விதிகளுக்கு புறம்பாக இல்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் " பும்ராவின் கையில் முழங்கை முதல் மணிக்கட்டுவரை நேராகவே இருக்கும் வளையாது.

ஐசிசி விதிப்படி, "பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவரின் முழங்கை 15 டிகிரி அப்பால் வளையக்கூடாது" என்பதுதான். அந்த வகையில், பும்ராவின் கைகள் முன்நோக்கி வளைந்திருக்கும். ஆனால் 15 டிகிரிக்கு அதிகமாக வளையாது. இதனால்தான், பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டது என்று ஐசிசி அங்கீகரித்துள்ளது. முகமது ஹஸ்னைன் பந்து வீச்சில் ஐசிசி விதிகள் பின்பற்றப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

பும்ராவுக்கு கிரேக் சேப்பல் ஆதரவு

பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள், விமர்சகர்களை முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வெளிவரும் "தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்" நாளேட்டில் கிரேக் சேப்பல் எழுதிய கட்டுரையில், "பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து முட்டாள்தனமாக கேள்வி எழுப்புவதை முதலில் நிறுத்துங்கள். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் தனித்துவமானது, விதிகளுக்கு உட்பட்டது. அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்." என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சைவிட அவர்களின் பேட்டிங்தான் கவலைக்குரியதாக இருக்கிறது என எழுதியுள்ள கிரேக், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, கூர்மையான தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்துள்ளது. மேலும், டாப் ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும், அதிகமான மாற்றங்களைச் செய்யாமல் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"லாபுஷேன் ஸ்திரமான ஃபார்மில் இல்லை. கடந்த 16 இன்னிங்ஸில் அவர் 330 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். பெர்த் டெஸ்டில் 52 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே லாபுஷேன் சேர்த்தபோதே, அவரின் பேட்டிங் பலவீனத்தை அறிய முடிந்தது. இதே, ஆஸ்திரேலிய அணி அடிலெய்ட் டெஸ்டிலும் விளைாயடும்போது யாரெல்லாம் மோசமாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிய முடியும்," என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு நடுக்கம்

எட்வர்ட் கென்னடி
படக்குறிப்பு, பும்ராவை கண்டு ஆஸ்திரேலிய அணி அஞ்சுவதாக கூறுகிறார் எட்வர்ட் கென்னடி

பும்ராவின் பந்து வீச்சு முறை சரியானதா, ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிப்பது ஏன் என்பது குறித்து, சென்னை எம்ஆர்எப் அணியின் துணைப் பயிற்சியாளரும், டிஎன்பிஎல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் பயிற்சியாளருமான எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழுக்கு அளித்தப் பேட்டியில் " பும்ராவின் பந்து வீச்சில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறதா? இது முற்றிலும் ஆஸ்திரேலிய அணியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. சிறப்பாகப் பந்துவீசும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற பந்து வீச்சில் குறை சொல்வதை ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்" என்றார்.

மேலும், இதை ஊடகங்களும் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார்.

"பும்ராவின் பந்து வீச்சு அடிலெய்ட் மைதானத்தில் பிங்க் பந்தில் எகிறும், விளையாட முடியாத அளவு கடுமையாக இருக்கும். அவரை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு பிசிசிஐ தகுந்த பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி பும்ரா பந்து வீச்சில் அஞ்சி நடுங்கி இருக்கிறது என்பதையே ரசிகர்கள் ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2024 at 19:17, vasee said:

ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தும் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன்.

 

மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது.

மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு  இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும்.

நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி இர‌ண்டாவ‌து டெஸ்ட் விளையாட்டை அவுஸ் வெல்ல‌ போகுது................................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேனீயிலையும் ஆசியாவாலை பிரச்சினை தான்
    • "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம். இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா? எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
    • 🤣 இந்தியாவில் அரிய வகை ஏழைகள், போல் இலங்கையில் அரிய வகை அபலைகள் உள்ளார்கள் போலும்🤣. அபலைகளை முன்னேற்ற ஆயிரம் வழிகளுண்டு…இன்னொரு பெண்ணின் தாலி அறுக்கும் பார்தான் தேவை எண்டில்லை. இதை பற்றிய என் பார்வையை விரிவாக இரவு எழுதுகிறேன். உங்கள் கருத்தில் உடன்பாடுதான்…ஆனால் வட கிழக்கு சூழமைவு வேற என நினைக்கிறேன்.
    • இல‌ங்கை அணி முத‌ல் சுற்று போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடி சிமி பின‌லில் இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி   இந்தியா அணிக்காக‌ விளையாடின‌ 13வ‌ய‌து சிறுவ‌ன் இந்த சின்ன‌ வ‌ய‌தில் 5 சிக்ஸ் அடிச்ச‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு   இனி இந்த சிறுவ‌னை ஜ‌பிஎல் அடுத்த‌ ஜ‌பிஎல் ஏல‌த்தில் வேண்ட‌ முய‌ற்சிப்பினம்.........................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.