Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி

கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி

கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாக கூறி உள்ளனர்.

விலைவாசியை குறைப்பதற்காக சில அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1409547

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் சொல்லுகிறேன்.

ஓர் வளர்ந்த நாட்டில் (கனடடா) , நலன்புரி அரசு கொண்ட நாட்டில், இவ்வளவு வாழ்க்கை, உணவுக்கு வழியில்லை என்பது மறைந்த நிலையில் இருக்கும் போது,

சிறு காலம் அங்கு (இலங்கை) சென்று விட்டு, யுத்தத்தால் அழிந்த  பகுதியில், அதுவும் அண்மையில் கே வங்குரோத்து அடையும் நிலைக்கு சென்ற பொருளாதாரத்தில்,  எல்லாம் நன்றாகவே (hunkydory) இருக்கிறது என்பது, மேலெழுந்தவாரியாக அவதானம். 

எதைத்  சொன்னாலும், இயலுமானவரை இரந்து கேட்கும் நிலைக்கு பொதுவாக எந்த தனிநபருக்கு, மக்கள் கூட்டமும் வரமாட்டார்கள்.

இலவசமாககிடைப்பதை முண்டியடித்து கொண்டு பெற முனைவது வேறுவிடயம்.

தொழுநோய் அங்கு மீள்மலர்ச்சி கொள்வதற்கு, இந்த மறைந்த வறுமை, குறியாக உணவு வறுமை ஓர் முக்கியகாரணம்  என்பது (எனது நம்பிக்கை). 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒரு ஊதிப்பெருத்த முருங்கை நிலை தான். காசுகளையும் கடன்களையும் அள்ளி அள்ளி கொடுத்து மக்களை வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாகவே வைத்திருக்கும் வைத்திருக்க முனையும் நாடு. கடனிலையே வாழ்நாள் முழுவதையும் தொலைத்து போய்ச்சேர்ந்த பலர் என் குடும்பத்திலேயே உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

கனடா ஒரு ஊதிப்பெருத்த முருங்கை நிலை தான். காசுகளையும் கடன்களையும் அள்ளி அள்ளி கொடுத்து மக்களை வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாகவே வைத்திருக்கும் வைத்திருக்க முனையும் நாடு. கடனிலையே வாழ்நாள் முழுவதையும் தொலைத்து போய்ச்சேர்ந்த பலர் என் குடும்பத்திலேயே உண்டு. 

அரசங்கம் வற்புறுத்துகிறதா கடனை எடுக்குமாறு.

தனிப்பட்ட வாழ்க்கையில் நிதி ஒழுக்கம் இல்லாதார்கள் (உங்கள் உறவினரை மட்டும் சொல்லவில்லை) செய்வதற்கு, ஏன் நாட்டை . அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kadancha said:

அரசங்கம் வற்புறுத்துகிறதா கடனை எடுக்குமாறு.

தனிப்பட்ட வாழ்க்கையில் நிதி ஒழுக்கம் இல்லாதார்கள் (உங்கள் உறவினரை மட்டும் சொல்லவில்லை) செய்வதற்கு, ஏன் நாட்டை . அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும்? 

அரசின் வங்கிகளின் திட்டங்கள் கடன் கொள்கைகள் தான் காரணம்.

பிரான்சில் எனது மகனின் மேற் படிப்புக்கு வங்கிகளில் கடன் கேட்டபோது ஆகக் கூடியது 15 ஆயிரம் ஈரோக்கள் அதுவும் கடன் பெற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் (அதுவும்  வருடத்திற்கு 50 ஆயிரம் ஈரோக்கள் சம்பளம் எடுக்கும் ஒருவரின் உத்தரவாதத்துடன்) கடன் தந்தார்கள். மகன் படிப்பு முடித்து வேலைக்கு போய் முதல் வேலையாக கடனை கட்டி முடித்தான். 

கனடாவில்.....?

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

30 minutes ago, விசுகு said:

அரசின் வங்கிகளின் திட்டங்கள் கடன் கொள்கைகள் தான் காரணம்.

பிரான்சில் எனது மகனின் மேற் படிப்புக்கு வங்கிகளில் கடன் கேட்டபோது 15 ஆயிரம் ஈரோக்கள் அதுவும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கடன் தந்தார்கள். மகன் படிப்பு முடித்து வேலைக்கு போய் முதல் வேலையாக கடனை கட்டி முடித்தான். 

கனடாவில்.....?

உங்கள் மகன் பெற்றது முதலீட்டு கடன்.

வீட்டுக் கடனும் சரி, அளவான வீடு, வருமானத்துக்குள் கட்டக்கூடியதாக இருப்பின். 

இதிலும் சில விதிவிலக்குகளும் இருக்கிறது, தொழில் இழத்தல், வருமானம் குறைவடைதல் போன்றவை.

 அனால், அவற்றையும் தயை கூர்ந்து, கடனாளியுடன் வங்கிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே பெதுவாக eu  வில், uk இல் நிதி ஒழுங்குமுறைகள்.  கனடா, அமெரிக்காவிலும் பொதுவாக அப்படித் தான்.

நான் சொல்வது நுகர்வுக்கான கடனை, விடுமுறையில் (இலங்கை) சென்று விளாசுவது உட்பட.

அல்லது, அங்கெ நுகர்வதற்கு இங்கிருந்து கடன் எடுத்து அனுப்புவது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

மக்களுக்கு இவ்வாறு மேற்படிப்புக்கு கடன் எடுத்து ஊர் சென்று படம் காட்டியவர்களையும் தெரியும் அந்த கடனை அவர்களது பிள்ளைகள் மேற்படிப்புக்கு போகும் வரை கட்டிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளையும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

மக்களுக்கு இவ்வாறு மேற்படிப்புக்கு கடன் எடுத்து ஊர் சென்று படம் காட்டியவர்களையும் தெரியும் அந்த கடனை அவர்களது பிள்ளைகள் மேற்படிப்புக்கு போகும் வரை கட்டிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளையும் தெரியும். 

அப்போது பிழை எவரில்?

படம் காட்டுவதற்கா படிப்பது? 

(நான் சொல்லியதே, முதலீட்டை நுகர்வாக அணுகியதன் விளைவு )

அனால், எல்ல்லோருக்கும் வாழ்கை  ஒரே நேர்கோட்டில் அல்ல என்பதும் உண்மை, அனுபவ அடிப்படையில் கண்டது.

படிக்கும் கடனை எடுத்து, வீட்டு  கடனை அடைத்து, பின் அதன் மூலம் பெற்றோரின்  உழைப்பில் வந்த சேமிப்பையும், பகுதி நேர தொழிலும் செய்து, படித்து  முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள் .

இப்போதும் அப்படி செய்பவர்கள் இருப்பார்கள்.

அதே போல உங்கள் மகனுக்கு அவர்  தேர்வு செய்த படிப்பு சரி  வந்ததால், அப்படி எல்லோரும் இருக்கமுடியும் என்று சொல்லவும் முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நான் சொல்ல வந்தது மிகவும் இலகுவாக பல லட்சம் கடன்களை எடுக்க முடிகிறது என்பது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

நான் சொல்ல வந்தது மிகவும் இலகுவாக பல லட்சம் கடன்களை எடுக்க முடிகிறது என்பது. நன்றி.

இப்போதும் எனது கேள்வி எந்த காரணத்துக்காக கடன் எடுக்கிறார்கள்?

இதை ஏதாவது, பணம் ஈட்டும் தொழில் முயதர்சி (உ.ம். உங்கள் மகன் செய்ட்து போல) அல்லது அதை போன்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தினால் பொதுவாக நன்மை வரும்.

எதிர்பார்க்கப்படாத, நட்டம் அல்லது இழப்புகளும் இருக்கும். இது  தான் (முன்பே கணித்து) எடுக்ப்படும் risk, இழந்தாலும் ஈடுகட்ட முடியும் நிலையில் இருப்போம் என்று. முற்றாக சரி வந்தால், அதிமிகை ஆதாயம். 

(பொதுவாக நுகர்வுக்கான கடனை இப்படியான தொழில் முயற்சிக்கு வழங்கப்படாது. ஆயினும் எடுத்து விட்டு எப்படி பாவிப்பது என்பட்டு அவரவரின் முடிவு) 

மறுவளமாக, நுகர்வுக்கு எடுத்தால், கட்டமுடியும் என்ற வருமான ஆதாரத்தை காட்டித் தானே எடுக்கிறார்கள்.   
   
நீங்கள் சொல்லும் கடன்கள், காப்பிலாத (unsecured loans) கடன்கள், இவை பொதுவாக நுகர்வுக்கே (அடு எதுவாகவும் இருக்கலாம், விடுமுறை, கொண்டாட்டம், வீட்டை மீள்புதுப்பித்தல் .. என்று நுகர்வு, எந்த தொழில் அல்லது முதலீடு அல்ல).

எனவே, சுருக்கமாக, கடன் எடுக்கும் வசதிகளை உருவாகும் கொள்கைகளை அரசாங்கம் உருவாக்குகிறது.

அனால், எடுக்குமாறு வற்றபுறுத்தவில்லை. 

கடன் எடுப்பது, அதன் நோக்கம், அவரவின் தனிப்பட்ட தெரிவும், முடிவும்.

குறிப்பாக, தனிப்பட்டவரின் நிதி ஒழுக்க நடத்தையே அதை தீர்மானிக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.