Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில்  நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில்  நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.

போகிற போக்கில்... அடுத்த தேர்தலிலும் யாழ். மாவட்ட ஆறு தொகுதிகளையும் 
அனுர கட்சி அள்ளும் போல் தெரிகின்றது. 

பாரம்பரிய தமிழ் கட்சித் தலைவர்கள், மழையில் நனைந்தால்... 
தடிமல், இருமல் பிடித்துவிடும் என்று யோசிக்காமல், தெருவில் இறங்கி... 
மக்களின் குறையை கேளுங்கப்பா.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாரம்பரிய தமிழ் கட்சித் தலைவர்கள், மழையில் நனைந்தால்... 
தடிமல், இருமல் பிடித்துவிடும் என்று யோசிக்காமல், தெருவில் இறங்கி... 
மக்களின் குறையை கேளுங்கப்பா.  

மாவை:சித்தரே நல்ல தலைவர்! - pathivu

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மாவை:சித்தரே நல்ல தலைவர்! - pathivu

ஒராள்... குடை பிடித்துக் கொண்டு நிற்க, மாவை Football   விளையாடுகிறார். animiertes-fussball-bild-0001
எல்லாம்... விசர் முத்தின  கூட்டங்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நன்றி பெருமாள் இணைப்பிற்கு. இதைத்தான் நான் முன்பு கூறியிருந்தேன், அதற்கு ஒரு உறவு, சுமந்திரன் இராணுவ பாதுகாப்போடு வரவில்லை, இராணுவ புலனாய்வு பாதுகாப்புத்தான் கொடுக்கப்பட்டது, இது இன்றும் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவருக்கு இந்தப்படம் சமர்ப்பணம். சவேந்திர சில்வா புடைசூழ வந்த படமும் வெளிவந்தது. முடிந்தால், இணைத்துவிடவும். பார்த்து ரசிக்கலாம் முன்னைய வசந்த  கால நினைவுகளை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சில படங்கள் இவர்களை பற்றிய கேவலமான தரவு படங்களை கூகிளில் இருந்து பெட்டிசம் போட்டு அழித்து விட்டார்கள் இதுக்கு ஒரு வழி இருக்கு செய்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் .

உயிருக்கு  ஆபத்து இருந்தால் பாதுகாப்பு கொடுக்கப்படுவது சாதாரண  விடயம். 

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? 

26 minutes ago, பெருமாள் said:

சில படங்கள் இவர்களை பற்றிய கேவலமான தரவு படங்களை கூகிளில் இருந்து பெட்டிசம் போட்டு அழித்து விட்டார்கள் இதுக்கு ஒரு வழி இருக்கு செய்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் .

கேவலமான படங்கள் என்று தாங்களே கூறுகிறீர்கள். அதை அழிப்பதில் என்ன தவறு? 

உங்களைப் பற்றி இழிவான படங்கள் வந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காது விடுவீர்களா? 

4 hours ago, தமிழ் சிறி said:

ஒராள்... குடை பிடித்துக் கொண்டு நிற்க, மாவை Football   விளையாடுகிறார். animiertes-fussball-bild-0001
எல்லாம்... விசர் முத்தின  கூட்டங்கள். 😂 🤣

மாவையர் பழைய உதைபந்தாட்ட வீரனாயிருப்பாரோ,? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கேவலமான படங்கள் என்று தாங்களே கூறுகிறீர்கள். அதை அழிப்பதில் என்ன தவறு? 

உங்களைப் பற்றி இழிவான படங்கள் வந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காது விடுவீர்களா? 

கேவலமான படங்கள் என்பது அவர்களுக்கு அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் இப்படி சொல்லியும் உங்களுக்கு புரியாது என்றால் இதுக்கு மேல் கதைக்க முடியாது .

7 minutes ago, Kapithan said:

உயிருக்கு  ஆபத்து இருந்தால் பாதுகாப்பு கொடுக்கப்படுவது சாதாரண  விடயம். 

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? 

ஏன் அவரின் உயிருக்கு ஆபத்து வந்தது ? மற்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வராத உயிர் ஆபத்து உங்கடை சுமத்துக்கு மட்டும் ஏன் வந்தது ?

பின்கதவால் வந்த நா.....ஏன் இரண்டாவது தேர்தலில் ராணுவ பாதுகாப்புடன் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டிய தேவை என்ன ?

மூன்றுக்கும்  உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கேவலமான படங்கள் என்பது அவர்களுக்கு அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் இப்படி சொல்லியும் உங்களுக்கு புரியாது என்றால் இதுக்கு மேல் கதைக்க முடியாது .

அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் என்றால் என்ன? மீம்ஸ் களைச் சொல்கிறீர்களா? 

சுமந்திரன் சொல்லித்தான் அழித்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அல்லது இதுவும் Jaffna Central College மோசடி மாதிரி எழுத்தறிவு அற்ற அல்லது பகுத்து அறியும் அற்ற ஆட்களின் கொசிப் தானா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சுமந்திரன் சொல்லித்தான் அழித்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அல்லது இதுவும் Jaffna Central College மோசடி மாதிரி எழுத்தறிவு அற்ற அல்லது பகுத்து அறியும் அற்ற ஆட்களின் கொசிப் தானா? 

சர்வ சாதரணமா கூகிளில் தட்டும் போது வந்து விழும் படங்கள் தற்போது வரவில்லை மற்றபடி கொசிப் ஒன்றும் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

ஏன் அவரின் உயிருக்கு ஆபத்து வந்தது ? மற்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வராத உயிர் ஆபத்து உங்கடை சுமத்துக்கு மட்டும் ஏன் வந்தது ?

பின்கதவால் வந்த நா.....ஏன் இரண்டாவது தேர்தலில் ராணுவ பாதுகாப்புடன் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டிய தேவை என்ன ?

மூன்றுக்கும்  உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் .

 சொந்தப்புத்தி இல்லாத புலம்பெயர்ஸ் நா,.... கள் (உங்கள் கூற்றுப்படி 😉), இந்தியாவின் சொல்கேட்டு, இலங்கையில் இருக்கும் நா,... களைக்(உங்கள் கூற்றுப்படி,.😉) கொண்டு கொலை செய்ய முயற்சித்தனர். 

5 minutes ago, பெருமாள் said:

சர்வ சாதரணமா கூகிளில் தட்டும் போது வந்து விழும் படங்கள் தற்போது வரவில்லை மற்றபடி கொசிப் ஒன்றும் கிடையாது .

அப்படியென்றால் J/  Central College தேர்தலில் கள்ளா கள்ளா என்று கத்தியவுடன் சுமந்திரன் கள்ளன் ஆனது போல இதுவும்  உங்கள் யூகம்தானா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

 சொந்தப்புத்தி இல்லாத புலம்பெயர்ஸ் நா,.... கள் (உங்கள் கூற்றுப்படி 😉), இந்தியாவின் சொல்கேட்டு, இலங்கையில் இருக்கும் நா,... களைக்(உங்கள் கூற்றுப்படி,.😉) கொண்டு கொலை செய்ய முயற்சித்தனர். 

ஆதராம் ?

22 minutes ago, Kapithan said:

அப்படியென்றால் J/  Central College தேர்தலில் கள்ளா கள்ளா என்று கத்தியவுடன் சுமந்திரன் கள்ளன் ஆனது போல இதுவும்  உங்கள் யூகம்தானா? 

விடியோ பார்க்கவில்லையா ? நீங்கள் பார்க்காமல் இருந்து இருக்க சந்தர்ப்பம் இல்லை இப்ப மறுபடியும் பார்க்கணும் என்று ஆசைப்பட கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி நேரத்தில் முதலில்

பேரலை  வந்தது, பின் புலிகள் வந்தனர் மக்களுக்கு உதவ.

அவர்கள் தோற்றபின், வியாபாரிகள் எம் பிரதிநிதிகள் என்ற வேடம் போட்டு வந்தனர்.

மக்களின் எந்த இடரையும் களைய விருப்பின்றி காலம் கடத்தினர்.

மக்கள் இம் முறை அவர்களுக்கு பாடம் படிப்பித்தனர்.

இன்று தேசியப்பட்டியல் மூலம் தெரிவான,

கடல் சூழா ஒரு இடத்தில் பிறந்து

கடல் அலைகளில் கால்கள் நனைக்காது

உப்புக் காற்றை கொஞ்சம் தானும் சுவாசிக்காது

மலையகத்தில் வாழ்ந்த ஒருவர்

கடல் வள , மீன் பிடித்துறை அமைச்சராகியவுடன்

மீனவர்களை நோக்கி ஓடோடி வருகின்றார் 

துயர் துடைக்க!

இது தான் மக்கள் சேவை.

தமிழ் தேசியம் வாழ,

முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும்.

அதற்காகத்தான் தமிழ் மக்கள மாற்றத்தை கோரினர்.

இப்போதைக்காவது அது நிகழ்கின்றது.

தமிழ் கட்சிகளின் கடைசிக் கோவணமும்

உருவப்பட்டுக் கொண்டு இருக்கு இப்போது.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

1) ஆதராம் ?

2) விடியோ பார்க்கவில்லையா ? நீங்கள் பார்க்காமல் இருந்து இருக்க சந்தர்ப்பம் இல்லை இப்ப மறுபடியும் பார்க்கணும் என்று ஆசைப்பட கூடாது .

1) கொலை முயற்சி தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 

2) மட்டி, மோடன், முட்டாள் ஆகிய மூன்று தரப்பினர் மட்டும்தான் எந்த ஆதாரமுமில்லாமல் கும்பலில் கோவிந்தா, கோவிந்தா என்று கத்துவதையெல்லாம் ஆதாரமாகக் கொள்வார்கள்.

கல்வியறிவுள்ள + பகுத்து அறியும் ஆற்றல் உள்ள எவரும் ஆதாரம் இல்லாத ஒன்றையும் நம்பமாட்டார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

) கொலை முயற்சி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 

அப்படியா ஏன் அது பற்றிய விபரங்கள் தமிழ் ஊடகங்களில் வரவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

அப்படியா ஏன் அது பற்றிய விபரங்கள் தமிழ் ஊடகங்களில் வரவில்லை ?

உங்களுக்கு விரும்பியதை மட்டும் தேடினால் இவை எதுவும் கண்ணில் படாது.  ஆனாலும் இது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். 

""இலங்கை: சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?""

30 ஜனவரி 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-38797677.amp

https://www.virakesari.lk/article/24627

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

மாவை:சித்தரே நல்ல தலைவர்! - pathivu

குடைக்குள் பந்து விளையாடும் மகா ராசன்  உலகில் இவர் ஒருத்தர்தான் .

2 minutes ago, Kapithan said:

உங்களுக்கு விரும்பியதை மட்டும் தேடினால் இவை எதுவும் கண்ணில் படாது.  ஆனாலும் இது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். 

""இலங்கை: சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?""

30 ஜனவரி 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-38797677.amp

https://www.virakesari.lk/article/24627

தமிழ் bbc யார் ? டெல்லிக்கு சார்பானவர்கள் அதுவும் கேள்விதான் போட்டு உள்ளார்கள் பேராண்ட்டி நீங்க நாலு படிப்பு படிச்சவர் தானே கேள்விகுறி எல்லாம் ஆதாரத்துக்கு எடுத்து செல்ல முடியுமா பேராண்டி ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குடைக்குள் பந்து விளையாடும் மகா ராசன்  உலகில் இவர் ஒருத்தர்தான் .

தமிழ் bbc யார் ? டெல்லிக்கு சார்பானவர்கள் அதுவும் கேள்விதான் போட்டு உள்ளார்கள் பேராண்ட்டி நீங்க நாலு படிப்பு படிச்சவர் தானே கேள்விகுறி எல்லாம் ஆதாரத்துக்கு எடுத்து செல்ல முடியுமா பேராண்டி ?

வாலைப் பார்க்கதேயுங்கோ. விசயத்தை பாருங்கோ. 

விடயம் உண்மைதானே?  இப்போது சொல்லுங்கள். சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கொடுப்பதில் தவறு என்ன? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கொக்குதொடுவாய் மனித  புதைகுழி அகழ்வு பணி. - NewMannar நியூ மன்னார் இணையம்

இந்த வெயிலில் தொரைக்கு கோட் கேக்குதாம் .

தொழில் நிமித்தம் சென்ற போது எடுத்த படம் என நினைக்கின்றேன். மற்றும் படி சுமந்திரன் அர்ச்சுனா போல் எங்கும் எப்போதும் கோட் சூட்டுடன் திரிவதில்லை.

அதை விட சுமந்திரன்  ஒரு சில இடங்களில் தமிழர் தரப்பு மக்களுக்கு உதவிகளையும் செய்திருக்கின்றார்.

எமது அரசியல்வாதிகளை ஒரேயடியாக ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

""இலங்கை: சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?""

ம்.... விடுதலைப்புலிகள் ஏன் இவரை கொலை செய்ய வேண்டும்? விடுதலைக்கெதிரான வேலைகளை செய்திருப்பாரோ? இருக்கும் இருக்கும். அன்றைய அரசு சொன்னது, தங்களுடன் சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் என்பதால் பாதுகாப்பளிக்கபடுகிறதென. சரி, ஒரு பொதுமகன் கொலை செய்ய நினைத்தால் அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு பெற்றோரும், வழங்கியோருமே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள். அது இருக்க, சுமந்திரனின் ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்தோரே அவரை கொலைசெய்ய ஆட்களை ஏவியதாக பிரச்சாரம் செய்கின்றனர். செய்தி உண்மையெனில், ஏன் அவர்களுக்கெதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொலிகண்டி பேரணியில்  சுமந்திரனும் சாணக்கியனும் புகுந்து பிரபல்யம் காட்டியபோது, அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏதுமில்லை அவரது இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்படும் என அரசாங்கம் கூறிய போது, தான் பாதுகாப்பு கோரவில்லை என்று சொன்னவர், அதை ஏற்க முன்னரே ஏன் கூறவில்லை? மறுக்கவில்லை? வாக்குகளுக்கு மக்கள், பின் அந்த மக்களாலேயே தனக்கு ஆபத்து என பாதுகாப்பு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த மக்கள் மேலேயே பழி போட்டு அச்சுறுத்துவது. தான் பாதுகாப்பு கோரவில்லை, எனக்கு அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பவர், ஏன் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை? அவர்கள் சிறை வாழ்வுக்கு காரணமே இவர்தானே? இப்போ தாராளமாக நேரமிருக்கிறது, யோசித்து திருந்துவதற்கு. எதற்கெடுத்தாலும், இவர் கிறிஸ்தவர் என ஒரு துண்டை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மூடுவீர்களே, இதுதான் கிறிஸ்தவ பண்பா? கிறிஸ்தவர் என இவரை காட்டி நீங்கள் மார் தட்டலாமா? அது நிஞாயமா? அன்று பாதுகாப்பினரின் கெடுபிடி மத்தியிலும்,  இன்று இந்த இயற்கை அனர்த்த நிலையிலும் மாவீரர்களுக்கு முண்டியடித்து வணக்கம் செலுத்தும் மக்கள், சுமந்திரனுக்கு வாக்களிப்பது அந்த மாவீரர்களுக்கு செய்யும் துரோகம். இன்று அதற்குரிய தண்டனையை அளித்து தமது சபதத்தை முடித்துள்ளனர்.          

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) விடுதலைப்புலிகள் ஏன் இவரை கொலை செய்ய வேண்டும்? விடுதலைக்கெதிரான வேலைகளை செய்திருப்பாரோ? இருக்கும் இருக்கும். அன்றைய அரசு சொன்னது, தங்களுடன் சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் என்பதால் பாதுகாப்பளிக்கபடுகிறதென.

2) சரி, ஒரு பொதுமகன் கொலை செய்ய நினைத்தால் அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு பெற்றோரும், வழங்கியோருமே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள்.

3) அது இருக்க, சுமந்திரனின் ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்தோரே அவரை கொலைசெய்ய ஆட்களை ஏவியதாக பிரச்சாரம் செய்கின்றனர். செய்தி உண்மையெனில், ஏன் அவர்களுக்கெதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?

4) சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொலிகண்டி பேரணியில்  சுமந்திரனும் சாணக்கியனும் புகுந்து பிரபல்யம் காட்டியபோது, அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏதுமில்லை அவரது இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்படும் என அரசாங்கம் கூறிய போது, தான் பாதுகாப்பு கோரவில்லை என்று சொன்னவர், அதை ஏற்க முன்னரே ஏன் கூறவில்லை? மறுக்கவில்லை? வாக்குகளுக்கு மக்கள், பின் அந்த மக்களாலேயே தனக்கு ஆபத்து என பாதுகாப்பு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த மக்கள் மேலேயே பழி போட்டு அச்சுறுத்துவது. தான் பாதுகாப்பு கோரவில்லை, எனக்கு அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பவர், ஏன் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை? அவர்கள் சிறை வாழ்வுக்கு காரணமே இவர்தானே? இப்போ தாராளமாக நேரமிருக்கிறது, யோசித்து திருந்துவதற்கு. எதற்கெடுத்தாலும்,

5) இவர் கிறிஸ்தவர் என ஒரு துண்டை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மூடுவீர்களே, இதுதான் கிறிஸ்தவ பண்பா? கிறிஸ்தவர் என இவரை காட்டி நீங்கள் மார் தட்டலாமா? அது நிஞாயமா?

6) அன்று பாதுகாப்பினரின் கெடுபிடி மத்தியிலும்,  இன்று இந்த இயற்கை அனர்த்த நிலையிலும் மாவீரர்களுக்கு முண்டியடித்து வணக்கம் செலுத்தும் மக்கள், சுமந்திரனுக்கு வாக்களிப்பது அந்த மாவீரர்களுக்கு செய்யும் துரோகம். இன்று அதற்குரிய தண்டனையை அளித்து தமது சபதத்தை முடித்துள்ளனர்.          

1) விபு க்கள் கொலை செய்ய முயன்றதாக எங்குமே சொல்லப்படவில்லை. 

3) புலம்பெயர்ஸ் இந்தியாவின் வழிநடாத்துதலின் கீழ்  சுமந்திரனுக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்பது எனது குற்றச்சாட்டு. (உண்மையும் அதுதான் 😉.)

4) எந்தவிதமான பயனுமற்ற எழுத்து 

5) கிறீஸ்தவர் என்று இவருக்கு எதிராக முரண்டுபிடிப்பது எல்லோரும் அல்ல. யாழ் களத்தில் மீரா போன்ற மிகச் சிலரே மத அடிப்படையில் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆட்கள் சும் மின் "வாய்ப்பிழை" காரணமாக அவரை எதிர்க்கிறார்கள. ஓரிருவர் நான்  அவருக்கு முன்புதான் ஆதரவளித்தேன் இப்போது இல்லை (🤣) என்கிறார்கள். குசா போன்ற சிலர் நிதானமாக யோசித்து பிழை என்றால் பிழை என்கிறார்கள். சரி என்றால்  சரி என்கிறார்கள்.  இங்கே கூறப்பட்ட மதம் சார்ந்து எதிர்ப்பவர்களைத்தான் மூர்க்கமாக எதிர்க்கிறேன். இரண்டாவது வகையினரின் தான்தோன்றித்தனமான சும் எதிர்ப்பை நையாண்டி செய்கிறேன். மற்றய தரப்பினரது கருத்துக்களுக்கு மனதார மதிப்பளிக்கிறேன். அவர்களது கருத்துக்களுடன் மிகப் பெருமளவு முரண்பாடு எனக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

விபு க்கள் கொலை செய்ய முயன்றதாக எங்குமே சொல்லப்படவில்லை. 

முன்னாள் விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

முன்னாள் விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

முன்னாளுக்கும் இன்னாளுக்கும் இடையே  வேறுபாடு இல்லையா? 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

முன்னாளுக்கும் இன்னாளுக்கும் இடையே  வேறுபாடு இல்லையா? 

🥺

ஏங்கோ, இந்நாளில் விடுதலைப்புலிகள் இயங்குகின்றனரா? அல்லது அவர்களை நீங்கள்  உருவாக்குகிறீர்களா? உங்களுக்கு, புலிகளுக்கும் விசுவாசத்தை காட்ட வேண்டும். அதே நேரம் சுமந்திரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும். ஒரு தோணியில் காலை வைத்து பயணியுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.