Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!

-சாவித்திரி கண்ணன்
24-671f2218bb0bb.jpg

சீமான் – ரஜினி சந்திப்பு என்பது இரு தனி நபர் சார்ந்த சந்திப்பு அல்ல. ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த பிம்மத்திற்குள் கரைய முயற்சிக்கும் சந்திப்பாகும். ரஜினியின் போயஸ் இல்லம் அரசியல் போக்கற்றவர்களின் போக்கிடமாக கடந்த பத்தண்டுகளாக எப்படி இயங்கி வருகிறது என்பது குறித்த ஒரு அலசல்;

அதென்னவோ தெரியவில்லை. பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது.

திமுகவில் கலைஞர் சாப்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கி வளர்ந்து வந்த நிலையில் மு.க.அழகிரி ஓரம்கட்டப்பட்டார். ரஜினியை போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்தார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் பல்லாண்டுகளாக அதிகார மையமாக வாழ்ந்த சசிகலா, அதே போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு ஒரு போதும் செல்ல நினைத்ததில்லை. சிறை சென்று வந்த பிறகு அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் – பாஜகவின் கட்டளைக்கு ஏற்ப செயல்படக் கூடிய சூழலில் – ரஜினியை போயஸ் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

1205057.jpg

ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அந்த காலகட்டங்களிலும் சரி, அதன் பிறகு அமைச்சர்,துணை முதல்வர் காலகட்டங்களிலும் சரி, போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டைக் கடந்தே பலமுறை ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற காலகட்டங்களில் எல்லாம் ரஜினி வீட்டிற்கு செல்வதையே அவர் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் எடப்படியின் கை ஓங்கி கட்சியில் இருந்து விலக்கப்பட்டு, தீவிர பாஜகவின் ஆதரவாளராக வெளிப்பட்ட நிலையில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார்.

73-1.jpg

வைகோ நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அவர் திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய 1993-ல் ரொம்ப பீக்கில் இருந்தார். ஆனால், படிப்படியாக அவர் செல்வாக்கு இறங்கி 2014 ஆம் ஆண்டு மிக நலிந்த நிலையில் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்ட நிலையில், அந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மாலினி கடிதத்துடன் ரஜினியை சந்தித்தார்.

15-vaiko-rajinikanth3434-600-jpg.jpg

அதே போல திருநாவுக்கரசர் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எப்போதும் போதும் சரி போயஸ் இல்லம் சென்று ரஜினியை சந்தித்தவர் அல்ல, ஆனால் அவர் செல்வாக்கு முற்றிலும் சரிந்த காலகட்டத்தில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார். அவர் பாஜகவில் முன்பு அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு திமுக, காங்கிரஸ் என்று பயணித்த காலங்களில் எல்லாம் திரைத்துறையில் நெருங்கி பழகிய ரஜினியைத் தேடி போயஸ் இல்லம் சென்று சந்தித்ததே இல்லை. அதே சமயம் பாஜகவில் சேர்ந்த பிறகு மிக உரிமையுடன் போயஸீல் உள்ள ரஜினி இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

15_59.jpg

தமிழருவி மணியன் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இருந்து பொது வாழ்வை தொடங்கியவர். ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, காங்கிரஸ் என்று பயணித்து இறுதியில் காந்திய மக்கள் இயக்கம் கண்டவர். 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு காரணமானவர். அப்போது கூட அவர் ரஜினி என்று யாரேனும் சொன்னால், அவரெல்லாம் நடிகர் அவரிடம் நமக்கென்ன பேச்சு வேண்டியுள்ளது என அறிவார்ந்த தளத்தில் கேள்வி எழுப்புவார். ஆனால், பிறகு பாஜகவுடன் அவர் நெருக்கமான பிறகு ரஜினியை தொடர்ந்து சந்தித்து பேசும் நிலைக்கு ஆளானார்.

320-214-15138909-thumbnail-3x2-rajini.jp

இதே போலத் தான் சீமான். அரசியலில் தன் சொந்த பலத்தை நம்பி பயணித்த வரையில் அவர் ரஜினியை எடுத்தெறிந்து பேசியவர் தான். ஆனால், விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவரது கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில், இனி தன் எதிர்காலம் கேள்விக்கு உள்ளான நிலையில் ரஜினியை சந்தித்து உள்ளார். சீமான் என்பவர் தமிழக அரசியலில் திராவிடத்தை எதிர்க்கும் ஒற்றை நோக்கத்தை கொண்டு இயங்கி வருவதோடு கே.டிராகவன் மற்றும் நடிகை கஸ்தூரி விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் என்பது கவனத்திற்கு உரியது.

முன்பு தம்பி விஜய் என வாய்க்கு வாய் அடிக்கடி வலிந்து விஜய்யைப் பற்றி பேசி விஜய்யின் ஆதரவு ஓட்டுகளையெல்லாம் அறுவடை செய்து வந்த சீமானுக்கு அந்த வாய்ப்பு தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. விஜய்யும் திமுகவை உக்கிரமாக எதிர்ப்பதால் சீமானுக்கு விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இனி விஜய் பக்கம் ஓரளவேனும் சென்றுவிடும்.

k-1725773212.jpg

சீமானின் பாஜக எதிர்ப்பு பேச்சுக்கள் எல்லாம் வெறும் பசப்பல் தானேயன்றி உண்மையல்ல..என்பது சமூகதளத்தில் பரவலாக உணரப்பட்டு வருகிறது. ஆகவே, இனி வேஷம் களைவதைத் தவிர, வேறு வழியில்லை சீமானுக்கு. அதே சமயம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை வீரியமாக எடுத்துச் சென்றவர் என்ற வகையில் சீமான் அரசியல் என்பது இந்த காலகட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.

ரஜினியை பொறுத்த வரை பாஜகவிற்கு சாதகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க அடையாளம் காணப்பட்டவர். ஆனால், அது அவரது உடல் நிலை, மன நிலையால் வெற்றிகரமாக நடக்கவில்லை. ஆனால், அவரது அணுகுமுறை என்பது அனைத்து தரப்பினரோடும் இணக்கமான இருப்பது போன்ற தோற்றத்தை காட்டினாலும், அடிப்படையில் இந்திய தேசியத்திற்கும், பிராமணிய இந்துத்துவாவிற்கும் மிக விஸ்வாசமானது என்பது கவனத்திற்கு உரியது.

இந்தப் பின்னணியில் ரஜினியை சீமான் சந்தித்து இருப்பதானது – அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ரவீந்திரன் துரைசாமியின் துணையோடு இந்த சந்திப்பும், பேச்சு வார்த்தைகளும் இரண்டரை மணி நேரம் நீடித்து இருக்கும் நிலையில் –  இது வரை சமரசமற்ற தமிழ் தேசியப் போராளியாக தன்னை அடையாளம் காட்டி வந்த சீமானின் அரசியல், இனி சரிவை நோக்கி திரும்பி சென்று கொண்டிருப்பதையே உணர்த்துகிறது.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/19981/semaan-rajini-meeting-politics/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது.

முதலில் பொதுவாழ்வு எனப்படும் அரசியலில் ரஜனி செல்வாக்குள்ளவரா? அவரே தேர்தலில் குதிக்கபோகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் தொடை நடுங்கியதால் உடல்நிலை சரியில்லை அதனால் அரசியலில் இறங்கும் முடிவிலிருந்து  விலகுகிறேன் என்று ஓடி போனவர் அவரை சந்தித்தால் எப்படி மற்றையவர்கள் செல்வாக்கு பெற முடியும்?

அதற்குபின் வருடம் இரண்டுபடம் பறந்து பறந்து நடிக்கிறார் அதற்கு மட்டும் அவருக்கு உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கிறது.

ஒரேயொருதடவை அக்கால கட்டத்தில் ஜெ’வும் சசியும் சேர்ந்து தமிழ்நாட்டையே மொட்டையடித்து ஆட்சி செய்த காலத்தில், பாட்ஷா பட விழாவில் பம்பாய் பட விஷயத்தில் மணிரத்னம் வீட்டுக்கு முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக  அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது.

பின்பு அதே வாயால் கோயம்புதூர் குண்டுவெடிப்புகளை முஸ்லீம்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று ரஜனி சொல்லபோக 15 ஆயிரம் அவரோட ரசிகர் மன்றங்களே ரசிகர்களே கலைத்ததாக கதையுண்டு.

ஜெயலலிதாவுக்கெதிராய் குட்டிகதை வேறு சொன்னார் ரஜனி, ’’ஒரு கம்பம் இருக்கிறது அதை நட முயற்சிக்கிறோம், அது ஆடிக்கொண்டிருந்தால் மறுபடியும் கல்லு மண்ணுபோட்டு அடிச்சு இறுக்கிகிட்டே இருப்போம், அதேபோல ஓவரா ஆடினா அடி விழுந்துகொண்டே இருக்கும்’’ என்றார் ரஜனி 

பின்பு அதேவாயால் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று வானளாவ புகழ்ந்தார்.

பின்பு நடந்த தேர்தல்களிலும் திமுக அனுதாபியாக ரஜனி இருந்தார் ஆனால் ரஜனி செல்வாக்கினால் எந்த தேர்தலிலும் திமுக வென்றதாக பதிவுகள் இல்லை.

ரஜனி ஒரு சேற்றில் விழுந்த பன்றி என்று நேரடியாகவே மருத்துவர் ராமதாஸ் விமர்சித்து பாபா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டியபோது ரஜனிக்காக எந்த பிரமாண்ட கட்சிகளும் களமிறங்கவில்லை.

அந்த கோபத்தில் அடுத்த தேர்தலில் நாம் யாரென்று காட்டுவோம் என்று முழங்கினார் ரஜனி , ஆனால் ரஜனியின் செல்வாக்கினால் அடுத்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக ஒரு துரும்புகூட நகரவில்லையென்பதே வரலாறு.

சீமானும் அப்படித்தான் எவரையாவது திட்டிக்கொண்டே இருந்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கிறார், செயல்வடிவில் மக்கள் பணியாற்றி அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறாரா என்று பார்த்தால் செயல் என்று எதுவுமேயில்லை.

எல்லோரிலும் குற்றம் கண்டுபிடிப்பார் பின்னர் அவர்களையே புகழ்ந்து தள்ளுவார், 

வாரிசு அரசியலை கடுமையாக கண்டிப்பார் பின்னர் என் அன்புதம்பி உதயநிதி என்பார். ஜாதி அரசியல் என்று சொல்லி அன்புமணி ராமதாசை திட்டி தீர்ப்பார் பின்பு என் அருமை அண்ணன் அன்புமணி என்பார்.

அதிமுகவை கண்டிப்பார், பின்பு ஐயா எடப்பாடி பழனிசாமி என்பார். ரஜனியை சத்ராஜுக்கு அடுத்ததா கிழித்து தொங்கபோட்டது சீமான் தான், இப்போ ரஜனி வீட்டில் போய் நிற்கிறார்.

இதுநாள்வரை விஜய்யை தன் கடைசிபிள்ளைபோல தூக்கி கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சியவர் இப்போது விஜய் கொள்கை  எதிர்ப்பில் ஆவேசமாக இருக்கிறார்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே விஜய் வீட்டில்  ஒரு சில மாதங்களிலோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ ஒரு பூங்கொத்து பொன்னாடையுடன் மின்னலடிக்கும் வெண்மையான பற்களை விரிசலாய் காட்டியபடி கூட்டணிக்காக போய் நிற்பார் சீமான்.

தமிழர் தமிழ்தேசியம் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது எந்தகாலமும் வெற்றிபெறாது, ஏனென்றால் தமிழகம் மேற்குலக நாகரிகத்துக்கும், மொழி கலப்புக்கும், சினிமா, தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு என்பதற்கும்,

மறுபக்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்கள், வியாபாரம், உயர்பதவிகள், மத்தியபாதுகாப்பு படைகள், ஆட்சிக்கூட்டணி, கல்வி திட்டங்கள்  மொழி கலவை, புராணகதைகள், வழிபாட்டு முறைகள் என்று வடநாட்டவர்களின் முழுகட்டுப்பாட்டில் என்றோ கையைமீறி போய்விட்ட தமிழகம் இனிஒருபோதும் மீண்டு வராது.

சும்மா கூட்டங்களில் மட்டும் தமிழ்  தமிழர் என்று முழங்கும்போது  கைதட்டல்கள் வரும் விசில்கள் பறக்கும்  ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக ஒருபோதும் மாறாது, அது சாத்தியமாக இருந்தால் கருணாநிதி நிரந்தர முதல்வராக இருந்திருப்பார், சீமானும் எப்போதோ முதல்வராகியிருப்பார். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, valavan said:

முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக  அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது.

கட்டுரையில் எனக்கு தெரிந்திராத நடந்த பல தகவல்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, சுவைப்பிரியன் said:

ரெடி ஸ்ராட்.😄

அடிப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் அடித்து விடலாம்….

வெளுப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் வெளுத்து விடலாம்….

ஆனால் இருப்பதோ சீமானும்…சாராய சிறியும் 🤣

நான் என்ன செய்வேன்…

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.