Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம்.

இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.

நடுகல் வழிபாடு

மாவீரர் நாள் என்பது ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் தம்மை ஆகுதி ஆக்கிய ஈழ நிலத்து வீரர்களை அஞ்சலிக்கின்ற புனித நாள். விடுதலைத் தாகம் கொண்டு தமிழர் தேசம் எங்கும் விதைக்கப்பட்ட கல்லறைகள் கண் திறந்து பார்க்கும் உணர்வு மேலிடும் நாள்.

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! | Tamil Desiyam Maveerar Day 2024 Special Content

 

உணர்வுமயமாக மாத்திரம் இந்த நாள் முக்கியத்துவம் பெற்று முடிந்து விடுவதில்லை. பண்பாட்டு ரீதியாவும் அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இந்த நாள் முதன்மை பெறுகின்றது. இறந்தவர்களை வழிபடுதல் என்பது மானுட மாண்பு.

தமிழ் சமூகத்தில் தெய்வ வழிபாடுகளும் போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நட்டுச் செய்யப்படுகிற வழிபாடுகளும் பண்பாடாக இம்மண்ணில் தொன்று தொட்டு நிலவுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் என்பதும் மாவீரர் துயிலும் இல்லம் என்பதும் தமிழரின் பண்பாட்டுரிமை மையங்களாகும்.

 இலங்கையிலும் இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்களை உலக மரபுரிமைச் சின்னங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. உலகமெங்கும் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை பேணுதலும் அதனை மக்கள் கொண்டாடுவதும் பன்னாட்டு விதிகளுக்கு இயைபானது.

அப்படியிருக்க ஈழதேசத்தில் 2009 முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை அரசு தன் படைகளைக் கொண்டு சிதைத்தது. ஈழத் தமிழினம் மீது அறமற்ற வகையில் எப்படி இனவழிப்புப் போரைச் செய்து, இனப்படுகொலையைப் புரிந்ததோ அதேபோன்று அறமின்றி மாண்ட வீரர்களின் கல்லறைகளுடனும் யுத்தம் செய்து அழித்து.

இருப்பிற்காகப் போராடிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடங்களும் சிதைக்கப்பட்டன என்பது ஈழ மண்ணில் நாம் சந்திக்கும் இருப்பு சார்ந்த இடரையும் ஒடுக்குமுறையின் கொடூரத்தையும் இந்த உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.

இராணுவமுகமாகத் துயிலும் இல்லங்கள்

அதற்குப் பின்னரும் துயிலும் இல்லங்களில் இராணுவமுகாம்கள் அமைக்ப்பட்டுக் குடியிருந்த மற்றொரு ஆக்கிரமிப்பும் அரங்கேறியது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போதும் இன்னமும் கோப்பாய் துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முள்ளியவளை துயிலும் இல்லம், மல்லாவி ஆலங்குளம் துயிலும் இல்லம் என்பன இராணுவத்தின் பாரிய முகாம்களாக உள்ளன.

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! | Tamil Desiyam Maveerar Day 2024 Special Content

 

“என் உறவு விதைக்கப்பட்ட துயிலும் இல்லத்திற்கு நான் செல்ல முடியாமல் போனேன். என் பிள்ளை அனாதையாகக் கிடக்கிறான்…” என்ற வார்த்தைகளை நேற்று மல்லாவியில் இருந்து கேட்ட வேளை மனம் துடித்தது.

வடக்கு, தெற்கு என்ற பிரிவில்லை என்று சொல்லுகிற அநுர அரசாங்கம் இந்தத் துயிலும் இல்லங்களை உடன் விடுவிக்க வேண்டும். அரசுக்கு எதிராக தமது அரசியல் கொள்கை சார்ந்து ஆயுதம் ஏந்திய ஜேவிபி, இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலைப் போராளிகளை அங்கீகரிக்க வேண்டும். அப்படியொரு காலமும் ஈழத்தில் திரும்பும். அந்த நம்பிக்கையை நவம்பர் 27 இம்முறையும் நிரூபித்திருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெறாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் (மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த பகுதியில்) வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் தமிழ் தேசியம் இலங்கையில் வீழ்ச்சி பெற்றுவிட்டது என்ற தோரணையை பேரினவாதிகளும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களும் எற்படுத்த முனைந்தனர். அதாவது யார் ஆட்சி புரிந்தாலும் ஆதரிப்போம் என்ற பேரினவாத ஒத்தோடிகள் இதில் அகமகிழ்ந்தனர்.

தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் மீதுள்ள விரக்தியாலும் விமர்சனத்தாலும் தான் அப்படி அமைந்தன. தமிழ் தலைமைகளின் சிதறலும் தன்னல அரசியல் போக்கும் எம்மை பின்னடைவுக்குத் தள்ளின. இதனை தமிழ் அரசியல்வாதிகள் உணரத் துவங்கியுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடத்தை வழங்கியிருக்கும்.

 உணர்வுகள் சிதறாது

 

ஆனால், வாக்குகள் சிதறினாலும் உணர்வுகள் சிதறாது. இதனை மாவீரர் நாள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிறந்தநாள் என்பன உணர்த்தியுள்ளன. அத்துடன் சில கட்டுப்பாடுகளுடன் சிங்கள மக்கள் மற்றும் அரசு மாவீரர்களைக் கொண்டாட இம்முறை அதிகாரபூர்வமாக அனுமதித்துள்ளது.

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! | Tamil Desiyam Maveerar Day 2024 Special Content

இது வரலாற்றில் ஒரு முக்கியமான இடம். அத்துடன் சிங்கள நண்பர்கள், உறவுகள் பலரும் மாவீரர் நாள் பற்றியும் தலைவர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிறந்தநாள் பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள். வரும் காலத்தில் இன்னமும் இதில் முன்னேற்றம் வரும் என்றார்கள். சிங்கள மக்கள் எங்களை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படை. அந்த மாற்றம் நிகழத் தொடங்குகிற போதுதான்  இலங்கையில் அமைதி நிலையாகத் திரும்பும்.

பேரினவாத ஒத்தோடிகளாகச் செயற்படும் சில தமிழரின் அரசியல் மிகவும் ஆபத்தானது. சிங்கள மக்கள்கூட எம்மாவீரர்களை ஏற்றுக்கொண்டு வருகின்ற காலத்தில் இவர்கள், தமிழ் தேசியத்திற்கு எதிராக தம் வன்மங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதில் சில தமிழ் எழுத்தாளர்களும் உள்ளனர். போர் முடிந்த கையுடன் ஈழத்தில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் மகிந்த ராஜபக்ச ஈழ மக்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் என்றும் முள்வேலி முகாங்கள் சிறப்பாக உள்ளன என்றும் பேட்டி கொடுத்தார்கள். உலகின் முள்வேலி முகாம் என்ற நரகத்தை சிறப்பான இடம் என்று சொன்ன எழுத்தாளர்களிடம் வேறென்ன வெளிப்படும்?

பேரினவாதிகளுக்குப் பதில்

எனவே, இவர்கள் தேர்தல் முடிவுகளை வைத்து, வடக்கு கிழக்கு மக்கள் தமது கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று டில்வின் சில்வா, உதயகம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற பேரினவாதிகள் தமது இனவாத மொழியில் பேசியதைப் போலவே அரச ஒத்தோடிகளின் பதிவுகளும் கருத்துக்களும் இருந்தன.

யாவற்றுக்குமான பதில் நாளே நவம்பர் 27. எல்லா ஐயங்களுக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் கொட்டும் மழையிலும் பெரும் புயலிலும் இயற்கை இடருக்கு முகம் கொடுத்த சமயத்திலும் வடக்கு கிழக்கு எங்குமுள்ள துயிலும் இல்லங்களில் திரட்சிபெற்ற மக்கள் விண்ணீராலும் கண்ணீராலும் அஞ்சலி செலுத்தி பெருவிடையை அளித்துள்ளனர்.

நிகரற்ற தியாகங்களாலும் அதியுன்னத வீரங்களாலும் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம், எங்கள் தேசத்தில்  விதையாக இருந்து விடுதலைக்கும் அமைதிக்கும் வழிப்படுத்தும் என்ற பெரு நம்பிக்கையைப் பெற்றோம்.

https://tamilwin.com/article/tamil-desiyam-maveerar-day-2024-special-content-1732834128

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மாவீரர்கள் எனப்படுவோர் ஈழத்தமிழ் மக்களின் குடும்ப உறவுகள்.  அவர்களை நினைவுகூர  மாவீரர்களின் உறவுகள் தேடி வருவது ஒன்றும் அதிசயமல்ல.  மகிந்த, கோட்டா அரசுக் காலத்தில் கெடுபிடிகள் இருந்ததால் தமது உறவுகளை வீட்டில் இரகசியமாக நினைவு கூர்ந்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவுடன் மைத்திரி/ ரணில் அரசு பதவிக்கு வந்ததும் கெடுபிடி தளர்ந்ததால் சற்று ஆறுதலாக துயிலுமிலங்களில்  தமது உறவுகளை நினைவுகூரத் தொடங்கினார்கள்.  இருப்பினும் குறைந்த அளவில் அச்சுறுத்தல் இருந்தது.  இப்போது அநுர அரசு உயிர் நீர்த்த உறவுகளுக்கு நினைவாஞ்சலி செய்ய தடை இல்லை என்ற அறிவிப்பு  வந்ததால் மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய பெருமளவில் கூடினார்கள்.

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த முறையும் பெருமளவு மக்கள் தமது உறவுகளை கண்ணீருடன் நினைவு கூர்வார்கள். தமிழரின் உரிமை போருக்காக தமது உயிர்களை கொடுத்த அந்த உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கான கெளரவத்தை அளிப்பது அனைவருக்குமே நிம்மதியைத்தரும் என்பதில் ஐயமில்லை. 

ஆனால் இதை வைத்து உசுப்பேற்றி மக்கள் தமது பக்கத்தில் இருப்பதாக போக்கு காட்டி  அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் நினைவேந்தல் செய்ய வைக்கும் முனைப்புகளில் தீவிர தேசியம் பேசி வாழும் சுயநலமிகள் ஈடுபட்டால் அவர்களின் கனவு பலிக்கப்போவதில்லை. 

Edited by island
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அறிந்தவரை எதிரிகளின் கல்லறைகள் கொண்ட இடத்தினை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இறந்தவர்களுக்குரிய குறைந்த பட்ச மரியாதை செய்வதனை கூட விரும்பாத இனமாக எந்த இனமும் இருந்ததாக அறியவில்லை, ஆனால் இந்த சிங்கள இராணுவத்தினர் தமது மூதாதையர் மிருகத்திலிருந்து வந்தவர்கள் எனும் அவர்கள் மகாவம்ச கதையினை உண்மையாக முயல்கிறார்களோ  என கருதுகிறேன்.

20 hours ago, பெருமாள் said:

முள்ளியவளை துயிலும் இல்லம், மல்லாவி ஆலங்குளம் துயிலும் இல்லம் என்பன இராணுவத்தின் பாரிய முகாம்களாக உள்ளன.

 

  • Like 2
Posted

இப்படியே உணர்ச்சி மிகு கட்டுரைகளை எழுதிக் கொண்டு தாமும்  இன்பமடைந்து மக்களில் ஒரு சிறு பிரிவினரை ஏமாற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது தம் பிள்ளைகளை, சகோதரங்களை, நண்பர்களை, அவர் தம் தியாகங்களை மதிப்பதனால்.

அடுத்த வருடமும், இன்னும் பத்து வருடங்களின் பின்னும் மக்கள் இவ்வாறு அஞ்சலிப்பர்.

அதே நேரம் தமிழ் கட்சிகள், காத்திரமான முறையில் அரசியல் செய்யாது விடின்,  வடக்கில் இருந்து ஒரு சிங்களவரைக் கூட இதே தமிழ் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்ற த்திற்கோ மாகாணசபை க்கு அனுப்பி வைப்பர்.

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடலைத்தன அரசியலிலிருந்து விடுபடுதல்

November 30, 2024
spacer.png

ஆண்டுகள் தோறும் அழுது, தங்களின் பிள்ளைகளை நினைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் கடந்த பதனைந்து வருடங்களில் பல்வேறு விதமாக நடந்தேறியிருக்கின்றது. ராஜபக்ஷக்கள் அரக்கத்தனமாக துயிலும் இல்லங்களை இடித்தழித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் எவ்வாறு ஈராயிரம் ஆண்டு கால பௌத்த அடையாளங்களை இடித்தழித்தனரோ, அதேபோன்றதொரு அடிப்படைவாத வெறித்தனத்தோடும், வெற்றி மமதையிலும், விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை, போரில் இறந்து போன அவர்களது உறுப்பினர்களின் அடையாளங்கள் மீது காண்பித்தனர். வரலாற்றில், போரில் தோற்றவர்களை, போரில் வெற்றிபெற்றவர்கள் பெருந்தன்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்தும் மரபு பண்டைய அரசர் காலத்தில் கூட இருந்திருக்கின்றது.

துட்டகைமுனு கூட, அவ்வாறான நற்புண்புகளை வெளிப்படுத்தியதாக, வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தங்களை நவீன துட்டகைமுனுக்கள் என்று அழைத்துக் கொள்ள முற்பட்ட ராஜபக்ஷக்கள் தங்களை வெறித்தனத்தின் கோரமுகமாகவே காண்பித்தனர். ஆனால், அப்போது கூட கோபங்களை தங்களுக்குள் புதைத்துக்கொண்டு, தங்களின் பிள்ளைகளை நினைவு கூர்வதை அவர்களது உறவினர்கள் கைவிடவில்லை. ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில்தான், முதல் முதலாக அச்சமின்றி நினைவு கூர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

எனினும் கண்காணிப்புகள் தொடரவே செய்தது. கோட்டாபயவின் குறுகிய கால ஆட்சியிலும் கண்காணிப்புகள் தீரமடைந்தது, ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தப்பட்டன – எனினும், துயிலும் இல்லங்களில் முடிந்தவரையில் மக்கள் ஒன்று திரண்டனர். ஆனால், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மிகவும் சுதந்திரமாகவும் கண்காணிப்புக்கள் இன்றியும் தங்களின் பிள்ளைகளை நினைத்து அழுவதற்காக மக்களால் ஒன்று கூட முடிந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் மக்கள் சுதந்திரமாக தங்களின் பிள்ளைகளை நினைவு கூர முடிந்திருக்கின்றது என்று கூறுவதில் தவறில்லை – அதற்காக அநுர அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு விட்டதாக அர்த்தமில்லை.

வடக்கு மாகாணத்தில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எதிர்பார்த்திராத, தமிழ்த் தேசிய அரசியலை அரைகுறையாக புரிந்து கொண்டிருக்கும் ஒரு குழுவினர், தங்களின் பிள்ளைகளை, உறவுகளை நினைவு கூர்வதற்காக ஒன்றுதிரண்ட மக்கள் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டி விட்டதாக கதைகள் புனைய முற்படுகின்றனர். தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்தி, புதிய சூழலுக்கு ஏற்றவாறு எவ்வாறு அரசியலை கட்டியெழுப்புவது என்று தெரியாத குழுக்கள், மக்கள் தங்களை விட்டுப் பிரிந்த உறவுகளை எண்ணி சிந்தும் கண்ணீருக்கு தமிழ்த் தேசிய விளக்கமளிக்க முற்படுகின்றனர். ஏனெனில் அரசியலை புதிய சூழலுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கும் வழிவகைகள் இவர்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகவே இவ்வாறானவர்களை அரசியல் விடலைகள் என்று வரையறுக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இவ்வாறானவர்கள் அரசியலை மந்திரம் போன்று உச்சரித்துவிட்டு தங்களின் வசதியான வாழ்வுக்குள் சுருங்கிக் கொள்கின்றனர்.

தங்களால் நேசிக்கப்படும் ஒருவர் பிரிவுறும் போது, ஏற்படும் துயரம், அதன் மீதான நினைவுகள் என்பது, அந்த குடும்பத்திற்கானது, அவர்களை நேசித்தவர்களுக்கானது. அதற்கு தமிழ்த் தேசிய விளக்கமளிப்பதானது, தேசிய அரசியல் பற்றிய அறியாமையிலிருந்தே நிகழ்கின்றது. விடுதலைப் புலிகள் அவர்களை நினைவுகூரும் போது இருந்த அரசியல் சூழல் வேறு. இப்போது, அவர்களை நினைவு கூர்வதென்பது முற்றிலும் அவர்களின் உறவுகள் தொடர்பானது மட்டும்தான்.

தேசிய அரசியல் என்பது, சூழ்நிலைகளை துல்லியமாக மதிப்பிட்டு, அந்தச் சூழலில் அரசியலை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்னுமடிப்படையில் அரசியலை திட்டமிடுவதாகும். இன்றைய காலத்தில், தூய தேசிய அரசியல் என்று ஒன்றில்லை – மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்தும் ஏதேவொரு வகையில் தேசிய அரசியல்தான்.

 

https://eelanadu.lk/விடலைத்தன-அரசியலிலிருந்/

 

குறிப்பு: ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் யதீந்திரா என்று கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்தமுடியவில்லை.

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.