Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?

spacer.png

 

சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார்.
 

https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824

 

 

 

தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு; காரணம் என்ன?

3 டிசம்பர் 2024, 17:20 GMT
யூன் சாக் யோல்

Getty Images

அதிபர் யூன் சாக் யோல்

 

தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர்.

வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார்

ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல் கூறினார். எனினும், இதன் கீழ் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ராணுவச் ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது

ராணுவச் ஆட்சியை அமல்படுத்துவதாக அதிபர் அறிவித்துள்ள போதிலும், நாட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அது தவறானது என்றும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவரான ஹான் டோங்-ஹூன் கூறியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் யோல் இந்தக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் சோலில் போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டது.

இன்னும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு விரைந்தனர். ''ராணுவ ஆட்சி இல்லை! ராணுவ சட்டம் இல்லை" என்று கோஷமிட்டனர். அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

யூன் சாக் யோல்

Getty Images

 

அழுத்தத்தில் அதிபர்

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் தீர்மானங்களுக்கு எதிராக அவரது அரசு போராடி வந்தது.

அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் ஜனநாயக விரோத உக்தியாக ராணுவத்தின் ஆட்சியை அறிவிக்கும் நிலைக்கு அவர் இப்போது தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அவரச காலத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட முடியாது எனக் கருதப்படும் போது, ராணுவ சட்டத்தின் கீழ் தற்காலிக ராணுவ ஆட்சி அமைக்கப்படும்.

தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது

 


https://www.bbc.com/tamil/articles/c9831gnq2gvo

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் கைவிடப்பட்டது

04 Dec, 2024 | 10:28 AM

image

சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

marshall_south1.jpg

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த பார்க் சங் ஹீ 1979-ல் கொல்லப்பட்டபோது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

 

https://www.virakesari.lk/article/200379

  • கருத்துக்கள உறவுகள்

South korea-வில் ராணுவ ஆட்சி அறிவிப்பை பின்வாங்க வைத்த மக்கள் போராட்டம்

தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை நாட்டின் அதிபர் அறிவித்து எதிர்ப்பின் காரணமாக அதை திரும்பப் பெற்ற நிலையில் அதிபர் யூன் சாக் யோல் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக “தேசத்துரோக” விசாரணை!

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக “தேசத்துரோக” விசாரணை!

தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை அந்நாட்டு பொலிஸார் வியாழனன்று (05) ஆரம்பித்தனர்.

தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைவாக,

குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபியிடம் விசாரணை மேற்கொள்ள தேசிய பொலிஸார் முகவர் நிலையத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இராஜினாமா செய்த பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், இராணுவ தளபதி ஜெனரல் பார்க் அன்-சு மற்றும் உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் ஆகியோர் மீதும் தேசத்துரோகம் மற்றும் பிற தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03) இரவு ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தென் கொரியாவின் முதல் இராணுவச் சட்டத்தை திணிக்க யூனின் அதிர்ச்சி முயற்சி, அதன் நவீன ஜனநாயக வரலாற்றில் நாட்டை அதன் ஆழ்ந்த கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

இது நாடு முழுவதும் பரவலான கோபம் மற்றும் எதிர்ப்புக்களை தூண்டியதுடன், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் பல தசாப்தங்களில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில், யூனுக்கு எதிரான முறைப்பாடுகள் அரசுத் தரப்பிலும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது தோல்வியுற்ற இராணுவச் சட்ட நடவடிக்கையை அடுத்து, ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான ஆறு எதிர்க்கட்சிகள் யூன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஆகியோருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

பாதுகாப்பு அமைச்சர் கிம் இராஜினாமா செய்ததையடுத்து அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், யூனுக்கு எதிரான பதவி நீக்க வாக்கெடுப்பு சனிக்கிழமை (07) நடைபெற உள்ளது.

https://athavannews.com/2024/1411223

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார்.

மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை
நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும்.
 

https://oruvan.com/south-koreas-president-very-sorry-as-impeachment-vote-looms/

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களிடம் மன்னிப்புக் கேட்ட ஜனாதிபதி!

‘தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில், அடுத்த வருடம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து தேச விரோத சக்திகளை ஒழிக்க, அவசரநிலை இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி யூன் சுக் இயோல் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தென்கொரியா பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் இராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, ஜனாதிபதி யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ”மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இராணுவ ஆட்சி அமுல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள் என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://www.itnnews.lk/ta/2024/12/07/646067/

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்புக் காவலில் தற்கொலைக்கு முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்!

தடுப்புக் காவலில் தற்கொலைக்கு முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்!

இராணுவச் சட்ட முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் (Kim Yong-Hyun) புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.

அதன்படி, தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தடுப்புக் காவலில் தற்கொலை செய்து கொள்ள தனது உள்ளாடைகளை பயன்படுத்தினார் என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், தேசத்துரோக குற்றச்சாட்டை விசாரித்து வந்த தென் கொரிய வழக்கறிஞர்களால், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரவை அண்மையில் கைது செய்தனர்.

தனது பதவியை இராஜினாமா செய்த கிம் யோங்-ஹியூன், தற்காலிக இராணுவ சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த வாரம் நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி யூன் சுக் யோலின் குறுகிய கால இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் உள்ள சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

சிறப்பு புலனாய்வுக் குழு ஜனாதிபதி அலுவலகம், தேசிய பொலிஸ் முகவர் நிலையம், சியோல் பெருநகர பொலிஸ் முகவர் நிலையம், மற்றும் தேசிய சட்டமன்ற பாதுகாப்பு சேவை என்பவற்றில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1411753

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.