Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட  பிரசன்னா பின்னர்  காணாமல் போனார்.

அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார்.

பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி  குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம்.

அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான   தண்டனை தொடரும்.  அது எப்படியும் ஒரு 5 வருஷம் கிடைக்கலாம்.

இப்படி பிரசன்னா வாழ்க்கை நயாபைசா பிரயோசனம் இல்லாம போச்சு.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவர் இங்கே சிக்காமல் சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் போதைப் பொருள் கடத்தியதாக சிக்கி இருந்தால் தீர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Edited by பகிடி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

This alleged Sri Lankan gangster lay low in Canada for a year after claiming refugee status. Now he faces extradition

The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France.

Updated Nov. 27, 2024 at 5:47 p.m.
Nov. 27, 2024
2 min read
Save  
 
 
 
Nallalingam

Prasanna Nallalingam, also known as Ajanthan Subramaniyam, in a photo included in a French warrant for his arrest. (Court filings)


 
 

A man believed to be the head of a Sri Lankan motorcycle gang is facing extradition to France to face murder charges after being arrested in Toronto this spring, the Star has learned.

The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France, Canada’s Department of Justice confirmed Wednesday.

According to an affidavit obtained by the Star, Nallalingam, 32, who also goes by the name Ajanthan Subramaniyam, is believed to be the leader of a group known as AAVA, an outlaw motorcycle club active in the northern province of Sri Lanka. The filings state the attack targeted a group known to be rivals of AAVA, the LC Boys. According to French media reports, the two groups were engaged in a multi-year conflict over control of La Courneuve, a commune located in the northern suburbs of Paris.

Alleged Sri Lankan gangster faces extradition to France



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.