Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!

  • கருத்துக்கள உறவுகள்

🤣.......................

விவேக்கை முதலில் அனுப்புங்கப்பா............

அப்புறம் சுந்தர்...................

அப்புறம் சத்யா.................

நான் வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, இவர்களின் பெயர்கள் விடுபட்டு விடுமோ என்று ஒரு ஆதங்கம் தான்...................😜.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, valavan said:

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!

ரம்பின் சட்டம் அமெரிக்க நாட்டுக்கு உகந்த சட்டம். 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 14:55, ரசோதரன் said:

🤣.......................

விவேக்கை முதலில் அனுப்புங்கப்பா............

அப்புறம் சுந்தர்...................

அப்புறம் சத்யா.................

நான் வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, இவர்களின் பெயர்கள் விடுபட்டு விடுமோ என்று ஒரு ஆதங்கம் தான்...................😜.

நானும் வீடியோவை பார்க்கவில்லை. 

இணைத்த @valavan பார்தாரோ அல்லது கவர்சிகரமான தலைப்பை பார்த்து விட்டு பார்காமலே இணைத்தரோ தெரியவில்லை.

@குமாரசாமிகு -சா அண்ணை போன கிழமை எனக்கு சொன்னவர் வீடியோவை பார்க்காமல் கருத்து சொல்ல கூடாது என. நான் வீடியோவை ஒட்டி கருத்து சொன்னேன். அதற்கு வீடியோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் பெரிய மனுசன் சொன்னதால் 30 நிமிட வீடியோவை பார்த்து பின் கருத்து எழுதினேன்.

ஆகவே அவர் கட்டாயம் வீடியோவை ஒரு செக்கனும் விடாமல் பார்த்து விட்டுத்தான் கருத்து எழுதி இருப்பார்.

ஆனால் நீங்கள் எல்லாரும் ஒரு பெரிய பொயிண்டை மிஸ் பண்ணுவதாக எனக்கு படுகிறது.

அது….

டிரம்ப் சொன்னது - அமெரிக்காவில் பிறந்தாலே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்ற சட்டத்தை மாற்றப் போவதாக.

அமெரிக்காவில் பெற்றாருக்கு வதிவிட அனுமதி இருந்தாலும், இல்லாத போதும் பிள்ளை அமேரிக்காவில் பிறப்பின் அது அமேரிக்க குடி என்பது சட்டம்.

அநேக ( வேறு எந்த -பிழை திருத்தம், கீழே @நிழலி சொன்னதை பார்க்கவும்) மேற்கு நாடுகளில் இப்படி இல்லை. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகளும் இமிகிராசனை பொறுத்தமட்டில் சட்டவிரோத குடியேறிகளே.

அண்மைகாலம் வரை அயர்லாந்திலும் அமெரிக்காவை போல சட்டம் இருந்தது ஆனால் இதை 2005 இல் நீக்கினர்.

இதைத்தான் டிரம்ப் நீக்குவதாக கூறினார். ஏலவே naturalisation மூலம் அமெரிக்க குடிமக்கள் ஆகிவிட்ட, சுந்தர், நாதெல்லா,  போன்ரோரை அல்ல.

அவர்கள் சட்டபூர்வமாக அமெரிக்கர்களாக மாறிய தற்போதைய அமேரிக்க பிரசைகள்.விவேக் பிறக்கும் போதே அமெரிக்க பிரசை.

இவர்கள் பிரசாஉரிமையை பறிப்பதாக டிரம்ப் கூறவில்லை.

அதே போல் இவர்கள் பிள்ளைகளும் பிறக்கும் போதே அமேரிக்கர்தான்.

இப்போ அமேரிக்காவில் இருக்கும் இந்தியர் கூட, போதுமான வருடங்களை அங்கே சட்டபூர்வமாக கழிக்கின் அவர்களுக் அமேரிக்க பிரசா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இவை எதையும் டிரம் நிறுத்தபோவதாக சொல்லவில்லை.

அவர் சொன்னது அமேரிக்காவில் பிறக்கும் குழந்தை எல்லாம் தானியங்கியாக அமேரிக்கன் பிரசை ஆகும் என்ற சட்டத்தை மாற்றுவேன் என்பதை மட்டுமே.

ஆனால் இதுக்கு கூட அரசியலமைப்பை மாற்ற வேண்டி வரும். 

https://oklahomavoice.com/2024/12/10/dc/despite-doubts-on-legality-trump-pledges-to-sign-order-revoking-birthright-citizenship/

Edited by goshan_che

4 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் பெற்றாருக்கு வதிவிட அனுமதி இருந்தாலும், இல்லாத போதும் பிள்ளை அமேரிக்காவில் பிறப்பின் அது அமேரிக்க குடி என்பது சட்டம்.

வேறு எந்த மேற்கு நாட்டிலும் இப்படி இல்லை. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகளும் இமிகிராசனை பொறுத்தமட்டில் சட்டவிரோத குடியேறிகளே.

கனடாவில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கனடாவின் பிரஜை தான் - சில விதிவிலக்குகள் மட்டுமே.

விதி விலக்குகள்

1. பெற்றோர்கள் இன்னொரு நாட்டின் இராஜதந்திரிகளாக, பிரதிநிதிகளாக அல்லது இன்னொரு நாட்டின் அரசாங்கத்தில் உள்ளவராக இருக்க கூடாது

2. பெற்றோர்கள் ஐக்கிய நாட்டு சபையின் அமைப்புகளின் கீழ் வேலை செய்கின்ற இராஜதந்திரியாக இருக்க கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நானும் வீடியோவை பார்க்கவில்லை. 

இணைத்த @valavan பார்தாரோ அல்லது கவர்சிகரமான தலைப்பை பார்த்து விட்டு பார்காமலே இணைத்தரோ தெரியவில்லை.

தந்தி டிவி எனும் இந்திய செய்தி சேவை நிறுவனம் தனது நாட்டு அமெரிக்க குடியேறிகளை பற்றி தானே சொன்ன செய்தியை இங்கே தெரிவித்தது மட்டுமே நான், 

நீங்க சொன்னபடியே அந்த வீடியோவை பார்க்காமலே தீர்மானிக்கிறது நீங்கள்.

ஒரு செய்தி பிரிவில் ஒரு செய்தியை தெரிவிப்பது எனது கடமை, அதுபற்றிய தீர்மானங்கள்  உங்கள் உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

கனடாவில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கனடாவின் பிரஜை தான் - சில விதிவிலக்குகள் மட்டுமே.

விதி விலக்குகள்

1. பெற்றோர்கள் இன்னொரு நாட்டின் இராஜதந்திரிகளாக, பிரதிநிதிகளாக அல்லது இன்னொரு நாட்டின் அரசாங்கத்தில் உள்ளவராக இருக்க கூடாது

2. பெற்றோர்கள் ஐக்கிய நாட்டு சபையின் அமைப்புகளின் கீழ் வேலை செய்கின்ற இராஜதந்திரியாக இருக்க கூடாது

தகவலுக்கும், பிழை திருத்ததுக்கும் நன்றி.

இது அரசியலமைப்பில் உள்ளதா? அல்லது சாதாரண சட்டமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

தந்தி டிவி எனும் இந்திய செய்தி சேவை நிறுவனம் தனது நாட்டு அமெரிக்க குடியேறிகளை பற்றி தானே சொன்ன செய்தியை இங்கே தெரிவித்தது மட்டுமே நான், 

நீங்க சொன்னபடியே அந்த வீடியோவை பார்க்காமலே தீர்மானிக்கிறது நீங்கள்.

ஒரு செய்தி பிரிவில் ஒரு செய்தியை தெரிவிப்பது எனது கடமை, அதுபற்றிய தீர்மானங்கள்  உங்கள் உரிமை.

செய்தியின் தலைப்பு நிச்சயம் தவறாகவே இருக்கிறது. 

இது ஒரு கிளிக் பேயிட் தனமான வீடியோ தலைப்பு என நினைக்கிறேன்.

செய்தியை தெரிவிப்பது மட்டும் அல்ல, அதன் தலைப்பு உண்மையானதா என்பதும் முக்கியம்.

அப்படி இல்லாதவிடத்து ஒரு டிஸ்கி போடலாம்.

ஏன் என்றால் இவ்வாறான தவறான தலைப்புகள் தலைப்பை மட்டும் வாசிப்போரை தவறாக வழிநடத்தி விடும்.

பிகு

டிரம் என்ன சொன்னார் என்பதை அறிய அவர் பேசிய வீடியோவையே பார்க்க முடியும் போது - அதை பற்றிய தமிழ் நாட்டு சென்சேசனல் வீடியோவை பார்த்து என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. 

ஆனல் பின்னூட்டங்கள் இந்த வீடியோ  தவறான செய்தியை பரப்புவதை கண்ட பின்பே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

அவர் சொன்னது அமேரிக்காவில் பிறக்கும் குழந்தை எல்லாம் தானியங்கியாக அமேரிக்கன் பிரசை ஆகும் என்ற சட்டத்தை மாற்றுவேன் என்பதை மட்டுமே.

இந்த சட்டம் யாரை பாதிக்கும்?? பெற்றோர்கள் அமெரிக்கா குடியுரிமையுடன். இருந்தால்  பிறக்கும் குழந்தை அமெரிக்கா பிரஜை தானே   ! 

ஆகவே அவர்களை பாதிக்காது   

வதிவிட உரிமையுடன். அதாவது இந்தியா பாஸ்போர்ட்  இல் விசா உள்ளவர்களை தான் பாதிக்கும் அவர்கள் குழந்தைகள் இந்தியார்கள் தான் ...சரியா???

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

வதிவிட உரிமையுடன். அதாவது இந்தியா பாஸ்போர்ட்  இல் விசா உள்ளவர்களை தான் பாதிக்கும் அவர்கள் குழந்தைகள் இந்தியார்கள் தான் ...சரியா???

வீடியோவின் தலையங்கம் (அமெரிக்க) குடியுரிமை ரத்து—-பகீர் கிளப்பிய டிரம்ப்.

ரத்து என்றால் இப்போ இருக்கும் குடியுரிமையை இல்லாது செய்வது.

இங்கே எந்த குடியுரிமையும் ரத்து செய்யபடவில்லை.

வரும் காலத்தில் - தானியங்கி குடியுரிமை பெறும் முறையை ரத்து செய்வேன் என்பதும் குடியுரிமை ரத்து என்பதும் ஒன்றல்ல.

இதனால்தான் இந்த தலையங்கம் தவறாக உள்ளது என்றேன்.

———

உங்கள் கேள்விக்கும் நான் சொன்னதுக்கும் சம்பந்தமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

வரும் காலத்தில் - தானியங்கி குடியுரிமை பெறும் முறையை ரத்து செய்வேன்

ஒம் இந்த சட்டத்தால் என்ன நன்மை?? அதாவது வதிவிட உரிமை உள்ளவர்களின். குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது  என்பது மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

ஒம் இந்த சட்டத்தால் என்ன நன்மை?? அதாவது வதிவிட உரிமை உள்ளவர்களின். குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது  என்பது மட்டுமே 

இதுதான் நடக்கும் என சொல்ல முடியாது. 

1. உதாரணமாக - யூகேயில் - இங்கே பிறக்கும் சகலருக்கும் தானியங்கி பிரஜா உரிமை இல்லை. ஆனால் பிறக்கும் சமயம், பெற்றாரில் ஒருவர் நிரந்தர வதிவிட உரிமை எனில் பிள்ளை தானியங்கியாக பிரித்தானிய பிரசை.

2. அமெரிக்காவில் - பிறக்கும் சகல குழந்தைகளும் பிறப்பால் அமெரிக்கர் எனும் போது - இதுவரைக்கும் இந்த கேள்வி எழவில்லை.

3. இனி சட்டம் மாறினால் - யூகே போல அமெரிக்காவும் சட்டத்தை அமைக்க கூடும்.

4. நிரந்தர வதிவிட உரிமை உள்ள பெற்றாரின் பிள்ளைகள் தானியங்கியாக பிறப்பில் அமெரிக்க பிரசைகள் ஆவதையும் தடுப்பேன் என டிரம்ப் எங்கும் கூறவில்லை. நான் அறிந்த வரையில்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

4. நிரந்தர வதிவிட உரிமை உள்ள பெற்றாரின் பிள்ளைகள் தானியங்கியாக பிறப்பில் அமெரிக்க பிரசைகள் ஆவதையும் தடுப்பேன் என டிரம்ப் எங்கும் கூறவில்லை. நான் அறிந்த வரையில்

இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.??  அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா.  ?? 🤣🤪🙏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.??  அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா.  ?? 🤣🤪🙏

இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையாக இருக்குமோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.??  அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா.  ?? 🤣🤪🙏

அண்ணா, நீங்கள் எலிக்கு தேங்காய்த் துண்டு காட்டுகிறீர்கள்............. மீனுக்கு புழு ஒன்றை தூக்கிப் போடுகிறீர்கள்................ நாங்கள் மாட்டுப்பட்டால் நீங்கள் எங்களை வைச்சு செய்வீர்கள் என்பது மட்டும் உறுதி............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

அண்ணா, நீங்கள் எலிக்கு தேங்காய்த் துண்டு காட்டுகிறீர்கள்............. மீனுக்கு புழு ஒன்றை தூக்கிப் போடுகிறீர்கள்................ நாங்கள் மாட்டுப்பட்டால் நீங்கள் எங்களை வைச்சு செய்வீர்கள் என்பது மட்டும் உறுதி............🤣.

இதை வாசிக்க, வடிவேலுவிடம் சிறுவன் கிட்னி திருடிய சீன் மனதில் ஓடுகிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு விடயம் @ரசோதரன் உங்களின் முதலாம் பதிவு நகைச்சுவையானது என நான் ஊகித்து கொண்டேன். அமெரிக்காவில் வாழும் உங்களுக்கு இது விளங்கும் என்பது வெளிப்படை.

ஆனால் செய்தியின் தலைப்பை, உங்கள் பின்னூட்டத்தை வாசிப்பவர்கள், இந்திய படை இலங்கையில் இறங்கியது என்ற ஏப்ரல் பூல் செய்தியை நம்பியது போல இதையும் நம்பகூடும் என்பதாலேயே பதில் எழுதினேன்.

1 hour ago, goshan_che said:

இது அரசியலமைப்பில் உள்ளதா? அல்லது சாதாரண சட்டமா?

 1946 இல் கொண்டு வரப்பட்ட  Canadian Citizenship Act மூலம் இது நிகழ்கிறது.  இது அரசியலமைப்பின் படியா என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையாக இருக்குமோ🤣

🤣..............

போன தடவை ட்ரம்ப் வந்து ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. இந்த தடவை தனிப்பட்ட சில கணக்கு வழக்குகளை அவர் தீர்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு வேற வேலைகளுக்கு நேரமே இருக்காது. உலகம் முழுக்க சண்டைகள் வேற................ அவர் சும்மா ஏதாவது சொல்லிவிட்டு நாலு வருடத்தில் போய்விடுவார்.................. 

3 minutes ago, goshan_che said:

இதை வாசிக்க, வடிவேலுவிடம் சிறுவன் கிட்னி திருடிய சீன் மனதில் ஓடுகிறது🤣

அர்ச்சுனா திரியிலேயே இலவசப் பிரச்சனை என்ன ஓட்டம் ஓடினது........... அர்ச்சுனாவிற்கு இது தெரிந்தால், இப்ப உடனடியாக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்குள்ள போகப் போகுது..............  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

 1946 இல் கொண்டு வரப்பட்ட  Canadian Citizenship Act மூலம் இது நிகழ்கிறது.  இது அரசியலமைப்பின் படியா என தெரியவில்லை.

நன்றி.

அயர்லாந்தில் இதுபோல் இருந்த சட்டத்தை யூகே, ஏனைய நாடுகள் அளுத்தம் கொடுத்து மாற்றினர் என அப்போ வாசித்த நினைவு.

1 minute ago, ரசோதரன் said:

🤣..............

போன தடவை ட்ரம்ப் வந்து ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. இந்த தடவை தனிப்பட்ட சில கணக்கு வழக்குகளை அவர் தீர்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு வேற வேலைகளுக்கு நேரமே இருக்காது. உலகம் முழுக்க சண்டைகள் வேற................ அவர் சும்மா ஏதாவது சொல்லிவிட்டு நாலு வருடத்தில் போய்விடுவார்.................. 

அர்ச்சுனா திரியிலேயே இலவசப் பிரச்சனை என்ன ஓட்டம் ஓடினது........... அர்ச்சுனாவிற்கு இது தெரிந்தால், இப்ப உடனடியாக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்குள்ள போகப் போகுது..............  

🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இன்னுமொரு விடயம் @ரசோதரன் உங்களின் முதலாம் பதிவு நகைச்சுவையானது என நான் ஊகித்து கொண்டேன். அமெரிக்காவில் வாழும் உங்களுக்கு இது விளங்கும் என்பது வெளிப்படை.

ஆனால் செய்தியின் தலைப்பை, உங்கள் பின்னூட்டத்தை வாசிப்பவர்கள், இந்திய படை இலங்கையில் இறங்கியது என்ற ஏப்ரல் பூல் செய்தியை நம்பியது போல இதையும் நம்பகூடும் என்பதாலேயே பதில் எழுதினேன்.

ஒரு சிரிப்புக்காகவே அதை எழுதினேன், கோஷான்..........

கூகிள், மைக்கிரோசாஃப்ட் இப்படி எல்லாமே அவர்களாலேயே நிரம்பி இருக்கின்றது என்றும் அதில் சொல்லியிருந்தேன். 

தொழில்நுட்ப துறை மட்டும் அல்ல, மருத்துவர்கள், விஞ்ஞானிகள்................ இப்படி இந்தியா அமெரிக்காவிற்கு துறைசார் நிபுணர்களையும், பணியாளர்களையும் உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஆகிவிட்டது. இரு பக்கங்களும் வெற்றி - வெற்றி என்று கருதுகின்றார்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

ஓம்…டிரம்பும் இந்தியரை எதிர்க்கவில்லை.

அவர் குறி வைப்பது சட்டவிரோத குடியேறிகளையே.

இதுவும் மெக்சிகோ சுவர் மாரித்தான் முடியும் என நினைக்கிறேன். ஆனால் அதற்குள் 4 வருடம் ஓடிவிடும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எந்த நாடுகள் jus soli எனப்படும் அங்கே பிறந்தாலே-பிரசை கொள்கையை பின்பற்றுகிறன என்ற தகவல் கீழே👇.

https://worldpopulationreview.com/country-rankings/countries-with-birthright-citizenship

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஓம்…டிரம்பும் இந்தியரை எதிர்க்கவில்லை.

அவர் குறி வைப்பது சட்டவிரோத குடியேறிகளையே.

இதுவும் மெக்சிகோ சுவர் மாரித்தான் முடியும் என நினைக்கிறேன். ஆனால் அதற்குள் 4 வருடம் ஓடிவிடும்🤣.

11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........

எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அண்ணா, நீங்கள் எலிக்கு தேங்காய்த் துண்டு காட்டுகிறீர்கள்............. மீனுக்கு புழு ஒன்றை தூக்கிப் போடுகிறீர்கள்................ நாங்கள் மாட்டுப்பட்டால் நீங்கள் எங்களை வைச்சு செய்வீர்கள் என்பது மட்டும் உறுதி............🤣.

நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வீங்கள். என்று நான் கனவிலும். நினைக்கவில்லை 🤣 சரி போகட்டும் விடுங்கள்  ஈழப்பிரியன். அண்ணை  நினைக்கவில்லை என்றால் சரி தான் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.