Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -

 - குரு அரவிந்தன் -
 
சிறுகதை
 
27 நவம்பர் 2024

doctor_treatment9.jpg

                                         - ஓவியம் - AI -

kuru-aravinthan_75.jpg

சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.

‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய்.

பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான்.

‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.

‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய்.

கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது.

இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.

மரணத்தின் வாசலில் நின்று தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனை காரணமாக அவனது முகம்; அப்படியே வெளிறிப்போய்;க் கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்தது.

அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்தார் டாக்டர். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார்.
போர்ச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சீருடையின் துணிவில் நடமாடும் வெறிபிடித்த இந்தவக்கிரங்கள், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை!

 ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்தது போல, உடம்பில் பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள்.

கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். அவனும் வேறு வழியில்லாமல் விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

சின்னஞ்சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.
இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயப்படுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போ புலனாகியது.

உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற முடிவைக் காலன், இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது.

ஒரு இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, ஆயுதபலத்தால் அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்திருக்கும் ராணுவ அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்படியான ஒரு சூழ்நிலையில், வெறிபிடித்தலையும் அவனைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது அவனை உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை.

எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழிக்கும் பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்கு சற்று நிம்மதி யாவது இருந்திருக்கும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார்.

இப்போ நோயாளியாக அவன் தன்னிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு டாக்டராய் விரைவாகச் செயற்பட்டார்.

கடினமான உழைப்பில், சத்திர சிகிட்சை நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவில்லை. மகனின் நினைவு வரவே, கடிகாரத்தைப் பார்த்தார்.

மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார்.

நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள்.
இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால், தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை.

இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று இரண்டு பக்கத்தில் இருந்தும்  மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும்.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது. பாசமா கடமையா என்று எடைபோட்டபோது, கடமைதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது.

சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது.
‘என்ன..?’ என்றார்.

‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’

‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’

‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின் பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கே உள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பு அப்படி இருந்தது.

‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது.

‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது.

‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு கேட்டார்.

‘வந்து.., அவசர சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவசிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’

‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார்.

‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேற வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’

‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’

‘ஆமா, டாக்டர் துப்பாக்கிச்சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’
‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’

‘மருத்துவக்கல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைத்த இராணுவகாப்டன் அகப்பட்டிருந்தான்.’

‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் சட்டென்ற அடைத்துக் கொண்டது.

‘ஆமா, காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் இங்கே கொண்டுவந்த அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’

‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் அடைத்துக் கொண்டன.

‘ஆமா டாக்டர்..!’

‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு கேட்டார் சிவகுமாரன்.

‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவரக் காவலுக்கு நின்ற சிப்பாய்ங்க விடவேயில்லை!’

‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அது சார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின.

‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க டாக்டர்.’

‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’ களைப்பும், குழப்பமும் ஒன்றாய் நிறைந்த நிலையில், மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையில் கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாகத்தான் இருக்கும், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்!

என்றுமில்லாதவாறு ஏதோ தவறு நடந்துவிட்டது போல, 'என்ர ராசா...'  என்று கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் கேட்க, ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றார் டாக்டர்!

:kuruaravinthan@hotmail.com

https://yarl.com/forum3/forum/215-கதைக்-களம்/?do=add

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வைத்திய தொழில் கடவுளுக்கு  சமம் . ஓர் உயிரைக் காக்க   போராடியவர் தன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்க முடியவில்லை. விதி வலியது. கதை உண்மை என்றால் மிகவும் சோகமானது . 

பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இனத்தின் ஒவ்வொருவரின் கதை...இப்படி எத்தனயோ சோகங்கள்  தங்கி வாழ்கிறது நம் இனம்...நன்று.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தச் சிறுமி, உயிர் பிழைத்தது பெரும் அதிசயம். இங்கு இப்போ  குளிர் ஆரம்பித்து விட்டது. இரவில் -5 பாகைக்கு மேல் கூட காலநிலை செல்லும்.  அதிலும்…. தண்ணீரில், பெரும் அலைகளுக்கு மத்தியில் மூன்று நாட்களுக்கு மேல் தத்தளித்து உயிருடன் தப்பியமை அவருக்கு கிடைத்த இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ❤️ 👍🏽  
    • 10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8    விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில்  மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில்  பயணிகளின் உடல்களும் உடமைகளும் சிதறிக்கிடந்தன. கடல்மைலிற்கு 36000 மீற்றர் மேலே பறந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானி விமானத்தை கொழும்பு விமானநிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதியை கோரினார்.சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின்படி விமானி விமானத்தை 4000 மீற்றருக்கு கீழே கொண்டுவந்தார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. எனினும் பொகவந்தலாவ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு மேலே பயணித்துக்கொண்டிருந்த விமானம் உயரத்தை குறைத்து பயணித்துக்கொண்டிந்தவேளை அதன் இறக்கைகளில் ஒன்று மலையுடன் உரசியது இதனால் வெடிப்புநிகழ்ந்தது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர். 'விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலன் அடையாளம் காட்டினார் அவரது உடல் இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது "என அவர்கள் அன்றைய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர் . இந்த கட்டுரையை எழுதியவர் அந்தபகுதி விமானவிபத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூருவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை அங்கு சென்றார். நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையின் அடிவாரத்தில் உள்ள முல்கம தோட்டத்திலேயே நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவரை பலத்த சிரமத்தின் மத்தியில் தொடர்புகொள்ள முடிந்தது.அவ்வேளை இளையவர்களாக காணப்பட்ட அவர்கள் தற்போது முதியவர்கள்எனினும் என்ன நடந்தது என்பது அவர்களின் நினைவுகளில் தெளிவாக பதிந்துள்ளது. அவர்களில் ஒருவர் நோர்வூட் கிளங்கன் தோட்டத்தை சேர்ந்த பிஎச் நிமால் டி சில்வா அவருக்கு அப்போது 19 வயதுஇதியத்தலாவ இராணுவமுகாமின் கெமுனுவோச் படைப்பிரிவின் வாகனச்சாரதியாக பணியாற்றிவந்தார். 'நான் அவ்வேளை 19 வயது இளைஞன்இகெமுனுவோட்ச் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகயிருந்தவர்லக்கி அல்கம அவர் 100 பேருடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்தார். கொத்தன்லேனவில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம்- உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதே எங்களிற்கு வழங்கப்பட்ட பணி - மலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் உடல்கள் சிதறிக்கிடந்தன.என தெரிவித்துள்ள நோர்வூட் கிளன்கனை சேர்ந்த பிஎச்நிமால் டி சில்வா நாங்கள் சிதறிக்கிடந்த உடல்களை மலைஅடிவாரத்தில் உள்ள பகுதியொன்றிற்கு கொண்டுவந்தோம்19 உடல்களை ஒரே புதைகுழியில் புதைத்தோம் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான அனுபவம் என அவர் தெரிவித்தார். அந்த துயரசம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தன்னை திலக் என அறிமுகப்படுத்தினார்- 62வயது எனக்கு அவ்வேளை 12 வயது ஆனால் சம்பவம் நன்றாக நினைவில் உள்ளது என அவர்  குறிப்பிட்டார். 'பெருமளவானவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குவிந்தார்கள் அவர்கள் விமானத்தின் சிதைவுகளை எடுத்துச்சென்றார்கள்இவிமானவிபத்து இடம்பெற்ற பகுதியை பார்ப்பதற்காக பலர் பலநாட்களாக வந்தார்கள்" என அவர் தெரிவித்தார். ஏழுகன்னி மலையின் முன்னால் உள்ள திபேர்ட்டன் தோட்டத்தை சேர்ந்த வீரன் ராஜிற்கும் ( 58) அந்த விபத்து குறித்த விடயங்;கள் நினைவில் உள்ளது.சம்பவம் இடம்பெற்றபோது தனக்கு 8 வயது என  அவர் தெரிவித்தார். இரவு பத்துமணியளவில் தோட்டத்தின் தீ அபாய மணி ஒலித்ததும்நாங்கள் அந்த தொழிற்சாலையை நோக்கி ஒடினோம்அந்த தோட்டத்தின் உரிமையாளர் சொய்சா என்ற கனவான்அவர் விமானமொன்று மலையில்மோதி விழுந்துள்ளது என தெரிவித்தார்அந்த பகுதி முழுவதும் கடும் பனியில் சிக்குண்டிருந்ததால் எங்களால் அங்கு செல்லமுடியவில்லை சொய்சா நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு அறிவித்தார்அதன் பின்னர் இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் அவ்விடத்திற்கு வந்தன என அவர் தெரிவித்தார். அதன் பின்னரே விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதையும் பலர் உயிரிழந்துள்ளதையும் நாங்கள் உணர்ந்தோம்இராணுவத்தினரும் பொலிஸாரும் உடல்களை மீட்டெடுத்தனர்." என அவர் தெரிவித்தார். ranjith rajapaksha தமிழில் -ரஜீவன் https://www.virakesari.lk/article/200883
    • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள், தாதியர்கள், வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313605
    • மிக முக்கிய செய்தி . கடைசி வரை வாசியுங்கள்! அண்மையில் ஒரு நாள் நான் இங்கிலாந்தில் கடமையில் இருந்த போது விடுதி கடும் பிஸி ஆனது. விடுதியில் இருந்த பொறுப்பு மிட் வைfப் சமாளிக்க முடியாமல் மேலதிக சீனியர் மிட் வைfப் யைக் கூப்பிடுமளவு பிஸியானது. என்னிடம் பலமுறை வந்து டிஸ்கஸ் பண்ணி கொண்டே இருந்தார்கள்.  அப்படி என்ன பிஸி? எனது விடுதியில் ஐந்து தனியறைகள் மகப்பேற்றுக்காக இருக்கும். பிரசவ வலியில் இருக்கும் தாய்மார்கள், உறவினரோடு அந்த அறையிலேயே குழந்தை பிறக்கும் வரை தங்கியிருந்து  குழந்தை பெறுவார்கள். பிரசவ வலி இல்லாத தாய்மார்கள் மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்கியிருக்க வேறு விடுதிகள் உள்ளன. அன்று பிரசவ அறைகள் நான்கில்  தாய்மார்கள் பிரசவ வலியில் இருந்தனர். மிஞ்சிய ஒரு அறையில் மிக அவசியமான, அவசர நிலமை தாயை மட்டும் அனுமதிப்பதென அந்த அறை வெறுமையாக இருந்தது.  இப்போது பொறுப்பு மிட் வைfப் பிஸி ஆனதுக்கான காரணம், அவசரமில்லாத கர்ப்பிணிகளின் பிரசவத்தை ஆரம்பிப்பபதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்?  விடுதி நிரம்பியதால் அவசரமில்லாத கர்ப்பிணிகளை வேறு வைத்தியசாலைக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க வேண்டும். சில கர்பிணிகளை வீட்டுக்கு திரும்ப அனுப்பலாமா என்று முடிவெடுக்க வேண்டும். அனைத்து முடிவுகளையும் துல்லியமாக எடுக்க வேண்டும். பிழையாக முடிவெடுத்து குழந்தை  பிறப்பைப் பின் போட்டு குழந்தைக்கோ தாய்க்கோ ஏதும் பிரச்சனை வந்தால் அது வைத்தியசாலைக்கு சிக்கலாகி விடும். அதற்காக ஒவ்வொரு முடிவெடுத்தலுக்காகவும் சீனியர் மருத்துவ மாது என்னை ஆலோசித்துக்கொண்டே இருந்தார். அதுதான் பிஸி ஆனதுக்கான காரணம்.  இது ஏன் நடந்தது? ஒரு பெண் பிரசவத்தின் போது தனி அறையில் கணவன், அம்மா, தங்கை, மாமி என உறவினர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக. சரி இதை ஏன் இப்போது சொல்கிறேன்? நான் 2013 யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும்போது விடுதியில் ஒரே ஒரு அறை இருந்தது. அதற்குள் நெருக்கமாக ஐந்து கட்டில்கள். அந்த ஐந்து கட்டிலில் தான் பிரசவம் நடக்கும். உறவினர்கள் யாரும் வர முடியாது. மற்ற பெண்கள் முன்னால் எல்லா கர்ப்பிணிகளும் நிர்வாணத்துடன் இருக்க வேண்டும். மறுபுறம், பிரசவத்திற்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் ஜெயில் போல  இன்னொரு அறையில் பாயில் படுப்பார்கள். குழந்தை பிறந்தபின் மட்டும் கட்டில் கிடைக்கும். சிலவேளை மூன்று அம்மாக்களுக்கு ஒரு கட்டில் கிடைக்கும். மூன்று பேரும்  பிள்ளைகளை கட்டிலில் வளர்த்தி விட்டு அருகே தம்ரோ கதிரையில் இரவு முழுக்க இருப்பார்கள். குழந்தை பிறந்த முதல்நாளே இரவு முழுக்க தம்ரோ கதிரையில் இருக்கும் நிலமையை யோசித்து பாருங்கள்.  பத்து வருடம் தாண்டியும் இந்த நிலமை பெரிதாக மாறவில்லை என ஒரு வைத்திய நண்பன் அழைப்பெடுத்து எழுதச் சொல்லி கேட்டான். இப்படித்தான் எம் தாய்மார்களை நடத்தினோம். அவர்களை நெருக்கமான அறைகளில் அடைத்து, ஒரு பெண்ணின் நிர்வாணத்தை சம்பந்தமில்லாத  மற்ற நபர்களுக்கும் காட்டித்தான் இனியும் பிள்ளை பெற வேண்டுமா? இன்னொரு புறம், பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அதி தீவிரப் பிரிவு அடிக்கடி இடமாற வேண்டிய தேவை. அது  அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்குவதால் தடுக்கக்கூடிய  கிருமித்தொற்றுக்கள் போன்றவற்றால்கூட பல  குழந்தைகள் இறக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தனி மகப்பேற்று , பெண்ணோயியல், குழந்தை பராமரிப்பு விடுதியை அமைக்க நிலம் உள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அதற்கான கட்டடத்தை அமைக்க 3000 மில்லியன் ரூபாய்க்கு மேல் தேவைப்படலாம். பெரிய தொகைதான். ஆனால் மக்கள் மனது வைத்தால் தமிழருக்கு இது பெரிய தொகை இல்லை. இப்போதைய நிலையில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இதை செய்ய முடியாது. தனி அமைப்பு , மனிதானால்கூட இது முடியாது. சாதி, மத , ஊர் பேதங்களை மறந்து எல்லோரும் இணைந்தால் இது இலகுவாக செய்யப்படலாம். என்ன செய்யலாம்? 1. தற்போதைய அரசியல் வாதிகள் இதற்கான முனைப்பை அரசாங்கத்துடன் பேச வேண்டும். அரசிடமிருந்து பெறக்கூடிய உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும். 2. இதற்கான சரியான திட்டமிடலை எழுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும். 3. இறுதியாக பொதுமக்கள் நிதி சேகரிப்பு. யாழ் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைமையில் ஒரு வெளிப்படையான நிதி சேகரிப்பைச் செய்யலாம். லைக்கா, IBC  போன்ற பெரிய புலம்பெயர் வியாபார நிறுவனங்களை நேரடியாக அனுகி உதவி கேட்க வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் அரச அங்கிகாரத்துடன் நேரடியாக பொதுக் கணக்கு ஒன்றில் வெளிப்படையான  நிதிச் சேகரிப்பு செய்தால்  நமது மக்கள் கொட்டிக் கொடுப்பார்கள்.  தனி மனிதனாக நான் 2500$ சிலநாட்களில் சேகரிக்க முடிந்தது. எல்லோரும் சேர்ந்தால் 3000 மில்லியன் சின்ன காசு. இதற்காக அனைத்து சமூக அமைப்புக்களும் சுயநலம் பார்க்காமல் ஒன்றிணைந்து இதை விளம்பரப்படுத்த வேண்டும். எல்லோரும் சுயநலம் மறந்து மனசு வைத்தால் சில வருடங்களில் நமது தாய்மார்களும் கெளரவமான பிரசவத்தை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை கிடைக்கும். இந்தப் பதிவை  எந்த தனிநபர்களும் , ஊடகங்களும் எனது பெயர், அனுமதி இல்லாமல் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். வைத்தியசாலை நிர்வாகம் , பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , யாழ் மகப்பேற்று நிபுணர்கள் இது பற்றி அவர்களது திட்டங்களை வெளிப்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க உங்களின் ஆதரவு உதவும். இந்த செய்தியை #Respectfulmaternitycare என்ற ஹஷ் tag உடன் பகிருங்கள். இந்த ஹஷ் tag 1000  என்ற அளவை தாண்டும் போது இது சர்வதேச அளவில் வைரலாகி உலகமெல்லாம் பரவி இருக்கும் நம் உறவுகள் அனைவரையும் போய்ச் சேரும். சிலவேளை இது சர்வதேச அளவில் ட்ரென்ட் ஆகும்போது வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடைக்கும். சமூக வலைத்தள பிரபலங்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிருங்கள். பகிருங்கள். எல்லோரும் சேர்ந்து தட்டினால் நிறைய கதவுகள் திறக்கும். #Respectfulmaternitycare https://www.facebook.com/story.php?story_fbid=10237366930094514&id=1286697015&rdid=ew4TXgeiyWJmNwnH
    • சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் திகதி முடிவுக்கு வந்தது. சிரியா ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. சிரியாவில் முகமது அல் பஷீர் தலைமையில் எதிர்க்கட்சியினர் மாற்று அரசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சி படைக்கு அல்-கய்தா, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. இதனால் சிரியாவின் ராணுவ கிடங்குகளில் இருந்த ஆயுதங்கள் எல்லாம் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஆபத்து என உணர்ந்த இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஆயுத கிடங்குகளை எல்லாம் அழிக்க முடிவு செய்தது. இந்தப் பணியை முப்படைகளிடமும் இஸ்ரேல் ஒப்படைத்தது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா மீது இஸ்ரேல் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியதால், சிரியாவை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், “சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேலின் பகுதியை கைப்பற்றத்தான் ராணுவம் நுழைந்தது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் டேங்க்குகள் செல்கின்றன, என்ற செய்தி தவறானவை” என்றனர். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் கூறுகையில், “தெற்கு சிரியாவை ராணுவம் பலம் அற்றதாக மாற்ற இந்த தாக்குதல் அவசியம். ஆசாத் ஆட்சியை பின்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் இதே கதிதான் ஏற்படும். சிரியா எல்லையில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஆயுத கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார். இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்டன், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. சிரியாவின் ஒரு பகுதிக்குள் இஸ்ரேல் ஊடுருவியது 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது என ஐ.நா கூறியுள்ளது. https://thinakkural.lk/article/313597
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.