Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்!

December 12, 2024  09:35 pm

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்!

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விடப்படவுள்ளன.

இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 4.5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, நீண்டகாலத்திற்காக குரங்குகளை கட்டுப்படுத்தும் முன்னோடி செயற்திட்டம் ஒன்றே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயம் மற்றுமத் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து கடந்த ஓராண்டுக்கு முன்னர் செயற்படுத்திய குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவிக்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் குறைந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக  அத தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197208

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம்.
சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால்,

நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல், 

உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம்.

நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.