Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!

adminDecember 15, 2024
1000395130-1170x878.jpg

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24)  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

“எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது.

நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.

மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம்.

தற்போது இருவழிக் கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8500இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும்.

மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும்
அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம்.

அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பாணங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம்.

மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது.

சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. sailsubham.com என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50ஆயிரம் வரையில் இருக்கின்றது.

இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன.

சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/209293/

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம்

காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம் 

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் சுபம் குறூப் ஒப் கம்பனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும். குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் 500 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவையை வழங்குவதாக இருக்கின்றது. 

அத்துடன் எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

இம்மாதம் 23 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம்.

மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் மீள் ஆரம்பம், 

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது.

நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.

மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம். 

தற்போது இருவழிக் கட்டணமாக 9,700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8,500 இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும்.

மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும் அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். 

அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பானங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது.

சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  https://sailsubham.com/ என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட  மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50,000 வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வளங்கள் நிறைந்த வடக்கு மாகாணம்,

வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=197340

Edited by ஏராளன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

30 DEC, 2024 | 02:06 PM
image

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை  இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. 

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. 

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் இதற்கான முன்பதிவு நத்தார் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி முதல் தொடங்கியிருக்கிறது. மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறையேனும் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவை தொடர்ந்து நீடிக்குமா..!? என்ற எண்ணம் பயணிகளிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிட்டதக்கது.

https://www.virakesari.lk/article/202535

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று  நான்கு வருடங்களில்,  காங்கேசன்துறை - நாகை படகுச் சேவை
100 தடவைக்கு மேல், நிற்பாட்டி நிற்பாட்டி... மீள ஆரம்பித்து இருப்பார்கள்.
இதற்கு ஒரு விழா எடுக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/12/2024 at 12:53, ஏராளன் said:

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். 

7 hours ago, தமிழ் சிறி said:

கடந்த மூன்று  நான்கு வருடங்களில்,  காங்கேசன்துறை - நாகை படகுச் சேவை
100 தடவைக்கு மேல், நிற்பாட்டி நிற்பாட்டி... மீள ஆரம்பித்து இருப்பார்கள்.
இதற்கு ஒரு விழா எடுக்கத்தான் வேண்டும்.

 

சாப்பாடு குடுக்க போகினமாம்.....இனி சனம் அள்ளுப்பட்டு போகும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2024 at 21:47, கிருபன் said:

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம்.

என்ன கொடுமையடாப்பா இது ? மீன் குழம்பு,அடிச்ச ஆட்டிறைச்சி ,நண்டு கறி இப்படி சுத்த அசைவ பிரியர்கள்  வாழ்ந்த பூமி ....இங்கு பிராந்திய வல்லரசு தனது உணவு பழக்கங்களை சுற்றுலா என்ற வகையில் திணித்து எம் மண்ணின் அசைவ தன்மையை இல்லாமல் பண்ணுவதில் குறியாக இருக்கின்றது ...அத்துடன் தனது பொருளாதர வளர்ச்சிக்காக  எமது பொருளாதாரத்தை கொள்ளையடிக்க முயல்கின்றனர் 

ஜெ.வி.பி யின் இந்திய எதிர்ப்பு வாதம் புஸ்வானமாக போய்விட்டது போல தெரிகின்றது ....நவீன புத்தர் அணுராவின் இந்தியா விஜயத்தின் பின்பு ..பதவி இல்லாத பொழுது அமெரிக்காவையும் சண்டைக்கு இழுப்பேன் என முழங்கலாம் ....ஆனால் பதவிக்கு வந்து கதிரையில் அமர்ந்த  பின்பு ...சரண்டர் பண்ணுவதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே...கொள்கை தான்

22 hours ago, குமாரசாமி said:

 

சாப்பாடு குடுக்க போகினமாம்.....இனி சனம் அள்ளுப்பட்டு போகும்.🤣

உவையிளின்ட கத்தரிக்காய்/பூசனிக்காய் பிரியாணிக்கே ...நெவர்😅 ...கண்ணப்ப நாயனார் பரம்பரை கண்டியளோ ...வாழையிலையில் சோறும் ஆட்டிறைச்சி கறியும் கட்டி கொண்டு போய் சாப்பிடுவான்...கொழுபு பயணத்துக்கே அப்படி செய்தவன் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

புதிய இணைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

நாகப்பட்டினம் (Nagapattinam) - காங்கேசன்துறை (Kankesanturai) இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழகம் மற்றும்  இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

பயணச்சீட்டு செலவு

இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! | Jaffna Kangesanthurai Nagapattinam Ferry Service

மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1735542938

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

 ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு சுற்றுக்கான பயணச் சீட்டு எனும் போது, 
போகவும், வரவுமான இரட்டை வழிப் பயணத்துகுரிய பயணச்சீட்டு 35,000 ரூபாய்  என கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடுவோம்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.