Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது

இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு  நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர்.

அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி | Archchuna Disqualified To Be Mp

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார்.

அரச சேவையில் இருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும், தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன்படி,  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/archchuna-disqualified-to-be-mp-1734425548

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அருச்சுனாவின் இனிங்ஸ் முடிபுக்கு வருமா? 

Edited by RishiK
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி " என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது . ......!  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருச்சுனாவிற்கும் இந்த issues பற்றி தெரிந்து இருக்கும், இலங்கை தேர்தல் சட்டத்தில் தெளிவாக உள்ளது. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.