Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு

 

கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/15-மனனள-அமசசரகளன-வமன-பயண-வபரஙகள-கசவ/175-349037

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே அடுத்து வரும் ஐந்து வருடங்களும் ஆட்சியை கொண்டு போகப்போயினம் போல....

  • Like 1
Posted
54 minutes ago, putthan said:

 முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே அடுத்து வரும் ஐந்து வருடங்களும் ஆட்சியை கொண்டு போகப்போயினம் போல....

இதுவும் ஒரு தனி ரகம் என அநுர நினைத்தார் போல.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, putthan said:

 முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே அடுத்து வரும் ஐந்து வருடங்களும் ஆட்சியை கொண்டு போகப்போயினம் போல....

அனுரா தானும் ஒரு சிங்களவர் என்று நிருபித்து உள்ளார் இவரால் தமிழர்கள் ஒரு போதும் நிம்மதி அடைய போவதில்லை சிங்கள தொடர் தொல்லை தான் அவர் ஊழல் புரிந்தார் இவர் ஊழல் புரிந்தார் என்று சொல்லுகினமே தவிர இவர்தான் என்று குற்றம் சாட்ட முடியாதளவுக்கு நுண் அரசியல் செய்கிறார் பின்னால் அநேகமா சீனா இருக்கலாம் .

இனியும் அந்த ஊழல் இந்த ஊழல் என்று பெரிதாய் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் ஏனென்றால் இது அனுரா அரசியல் அவ்வளவே சிங்களம் மாறவில்லை முகமூடி மாற்றி உள்ளனர் .

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.