Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !

image
 
கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர்.

அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வேனுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கடும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தமிழ்ச் செல்வன், பொலிஸில்முறைப்பாடளிந்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  •  
  • கருத்துக்கள உறவுகள்

கலர் மாறினாலும்   காட்சி மாறவில்லை

3 hours ago, யாயினி said:

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வேனுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இலங்கையில் வான் எப்போது வேன் ஆச்சு?

முன்னர் வெள்ளைவான்

இப்போ கறுப்புவான்

நிறந்தான் வித்தியாசம்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தேசம்.நெற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:
"கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.
தேசம்நெற்றுக்குத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்."
ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் சூழலியற் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் ஊடகவியலாளர். அவ்வகையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது 'நஞ்சாகும் நிலம்' நூல் சூழல், சூழல் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இவ்வகையில் முக்கியமான நூல். கிளிநொச்சியிலிருந்து வெளிவந்த 'வெள்ளிநாதம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராகவிருந்தவர். அக்காலத்திலிருந்து சூழலியல் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகின்றார். தினகரன் பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது சூழற் பாதுகாப்பு பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பே 'நஞ்சாகும் நிலம்'.
மேற்படி செய்தியில் மு.தமிழ்ச்செல்வன் கூறிய "என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்" என்னும் கூற்று துயரம் தருவது. ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலவற்றில் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம். நம் மக்கள் மாற வேண்டும்.
இந்நிலை தொடர்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. இவ்விடயத்தை எவ்வகையில் நம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கையாள்கின்றார்கள் என்பதைக் காலம் வெளிப்படுத்தும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசு இது போன்ற விடயங்களை எவ்விதம் கையாள்கின்றது என்பதையும் அவதானிப்போம்.
May be an image of 1 person and smiling
 
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல்

kili.jpg

கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முற்பட்டவேளை அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஏ9 வீதி ரெலிக்கொம் முன்பாக நேற்று மாலை 5.20 மணியளவில் நடைபெற்றுள்ளது. இனந்தெரியாத இரண்டு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.

அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு நிற வானில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வானுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இத் தாக்குதல் தொடர்பாக தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/314166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி செய்த சந்தேக நபர் இருவரும் பொலிசாரால் கைது

Published By: Vishnu

28 Dec, 2024 | 12:15 AM
image
 
கிளிநொச்சியில் வியாழக்கிழமை (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளி நொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்

  •  
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் மு. தமிழ்ச்செல்வன்…..

அவங்கள் இருவரும் அடிச்சது இப்பவும் நெஞ்சுக்கு மேல்தான் வலிக்கிறது. ஆனால் கூட்டம் கூட்டமாக  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களின் செயற்பாடுகள் நெஞ்சுக்குள் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.

———

நவரத்தினம் கிரிதரன்..

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது!

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகத் தேசம்.நெற் செய்தி வெளியிட்டுள்ளது. 

சூழலியாளர், ஊடகவிலயாளர், எழுத்தாளர், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் என்னும் பன்முக ஆளுமையாளரான மு.தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டது அதிர்ச்சி தருவது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மு.தமிழ்ச்செல்வனைத் தாக்கியவர்கள் சட்டத்தின் மும் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவார்கள் என எதிர்பார்ப்போம்.

தேசம்.நெற் செய்தியில்  பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:

"கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.

தேசம்நெற்றுக்குத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்."

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் சூழலியற் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் ஊடகவியலாளர். அவ்வகையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட.  இவரது 'நஞ்சாகும் நிலம்' நூல் சூழல், சூழல் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இவ்வகையில் முக்கியமான நூல்.  கிளிநொச்சியிலிருந்து வெளிவந்த 'வெள்ளிநாதம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராகவிருந்தவர். அக்காலத்திலிருந்து சூழலியல் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகின்றார். தினகரன் பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது  சூழற் பாதுகாப்பு பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பே 'நஞ்சாகும் நிலம்'.

மேற்படி செய்தியில் மு.தமிழ்ச்செல்வன் கூறிய "என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்" என்னும் கூற்று துயரம் தருவது. ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலவற்றில் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம். நம் மக்கள் மாற வேண்டும். 

இந்நிலை தொடர்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. இவ்விடயத்தை எவ்வகையில் நம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கையாள்கின்றார்கள் என்பதைக் காலம் வெளிப்படுத்தும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசு இது போன்ற விடயங்களை எவ்விதம் கையாள்கின்றது என்பதையும் அவதானிப்போம்.

https://www.facebook.com/share/1GUJKfAXqa/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலை - தமிழ் படங்களை ஞாபகல்படுத்துகின்றது. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு விசாரணை கோரியிருக்கும் அமெரிக்கா

சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து, முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள் தமிழ்ச் செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை
தொடர்பில் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழு ஆவணப்படுத்தி இருக்கிறது. 1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் கோரியுள்ளார்.

https://thinakkural.lk/article/314539

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.