Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்!

1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அமெரிக்க ஊடகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது மனிதாபிமானப் பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர், 1976 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் ஃபோர்டை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார்.

முன்னதாக கலிபோர்னியா ஆளுநராக பணியாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான ரொனால்ட் ரீகனால் 1980 தேர்தலில் கார்ட்டர் தோற்கடிக்கப்பட்டார்.

கார்ட்டரின் மறைவு குறித்து அவரது புல்வர் சிப் கார்ட்டர் இட்டுள்ள பதிவொன்றில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” என்று கூறியுள்ளார்.

Image

கார்ட்டர், அண்மைய ஆண்டுகளில், கல்லீரல் மற்றும் மூளைக்கு பரவிய மெலனோமா உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் தொடர்ந்தும் போராடி வந்தார்.

அவர் 2023 ஆம் ஆண்டில் தீவிர நோய்வாய்ப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வகை சுகாதாரப் பராமரிப்பைப் பெற முடிவு செய்தார்.

மேலும் கூடுதல் மருத்துவ தலையீட்டிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் தீர்மானித்திருந்தார்.

2023 நவம்பர் 19 அன்று, 96 வயதில் உயிரிழந்த அவரது மனைவி ரோசலின் கார்டரின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொண்டார்.

இதன்போது அவர் பலவீனமான நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

எவ்வாறெனினும், கார்ட்டர் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர், மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதியையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற சிறப்பை அடைந்தார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதைத் தவிர, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஓவல் அலுவலகத்தில் (அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகம்) அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றியது இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் உடன்படிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பை நல்கியது.

இது இரு நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவும் உதவியது.

எனினும் ஒரு பொருளாதார மந்தநிலை, அவரது செல்வாக்கற்ற தன்மை மற்றும் 1979 ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை அவருக்கு எதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.

மேலும் அவர் 1980 அமெரிக்க தேர்தலில் ரீகனிடம் தோற்று வெளியேற்றப்பட்டார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர் மேலும் அதில், கார்டரை “அசாதாரண தலைவர், அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானவாதி” என்றும் நினைவு கூர்ந்தனர்.

Image

அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கார்ட்டர் தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட தலைவர் என்று கூறினார்.

கார்ட்டர் ஒரு பிரபலமற்ற ஜனாதிபதியாக பதவியை விட்டு வெளியேறினார், ஆனால் அவரது பதவிக்காலத்திற்குப் பின்னர், அவர் மனிதாபிமான காரணங்களுக்காக பல தசாப்தங்களாக ஆர்வத்துடன் பணியாற்றினார்.

அடுத்த ஆண்டுகளில், கார்ட்டர் ஒரு மனித உரிமை சாம்பியனாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், மேலும் பின்தங்கியவர்களுக்கான குரலாக பிரபலமடைந்தார்.

அவர் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார் மற்றும் முன்னோடியில்லாத புகழ் பெற்றார், இது ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது கூட அவரால் அடைய முடியாத பெருமிதம் ஆகும்.

During a tour of Kennedy Space Center, President Jimmy Carter, smiling, with wife Rosalynn and daughter Amy, listen to center director Lee R. Scherer discuss a crawler-transporter model on the table in front of them. They are wearing hard hats with the NASA "worm" logo, and each Carter family member's name. Credit: NASA

https://athavannews.com/2024/1414431

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

December 30, 2024  11:22 am

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார்.

தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் இவராவார்.

மேலும், கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார்.

ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198012

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்மி கார்டர் காலமானார்: வெள்ளை மாளிகையில் தடம் பதித்த வேர்க்கடலை விவசாயி

ஜிம்மி கார்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஜிம்மி கார்டர்
30 டிசம்பர் 2024, 02:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100.

கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

''ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்'' என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.

''எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ'' என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின் 39ஆவது அதிபராக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார். 100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.

அவரது பதவி காலத்தில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல பிரச்னைகளை எதிர்கொண்டார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், மீண்டும் அதிபராகும் முயற்சியில் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியடைந்தார்.

மெலனொமா எனும் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. மெலனோமா அவரது கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவியது. கடந்த ஆண்டு அவரது மருத்துவச் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டது.

ஜிம்மி கார்டர்

பட மூலாதாரம்,THE CARTER CENTER/X

படக்குறிப்பு, சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

தனது மனிதாபிமான செயல்களால் நோபல் பரிசை ஜிம்மி கார்டர் பெற்றார். அமெரிக்க அதிபராக அவரது பதவி காலம் முடிந்தபிறகு நோபல் பரிசை பெற்றார்.

100 வயதில் காலமான முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரை "கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்" என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன், வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

''நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்த சவால்களை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி எதிர்கொண்டர். மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.'' என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யார் அவர்?

ஜேம்ஸ் ஏர்ல் கார்ட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜார்ஜியாவில் உள்ள தனது வேர்க்கடலை பண்ணையில் ஜிம்மி கார்டர்

ஜேம்ஸ் ஏர்ல் கார்ட்டர், அக்டோபர் 1, 1924 அன்று ஜார்ஜியாவில் பிறந்தார்.

கார்ட்டர், நான்கு குழந்தைகளில் மூத்தவர். அவர்களது குடும்ப வியாபாரமான வேர்க்கடலை வியாபாரத்தை,அவரது தந்தை தொடங்கினார். அவரது தாயார் ஒரு செவிலியர்.

பொருளாதார வீழ்ச்சி மற்றும் அவரது மத நம்பிக்கையின் தாக்கத்தால், கார்டரின் அரசியல் தத்துவம் வடிவம் பெற்றது.

உயர்நிலைப் பள்ளியில் ஒரு நட்சத்திர கூடைப்பந்து வீரரான அவர் அமெரிக்க கடற்படையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவர் தனது சகோதரியின் நண்பரான ரோசலினை மணந்தார்.

பின்னர், நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரியானார். ஆனால் 1953 இல் அவரது தந்தை இறந்த பிறகு, குடும்பப் பண்ணையை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு ஊருக்குத் திரும்பினார்.

முதல் ஆண்டு பயிர் வறட்சியால் தோல்வியடைந்தது, ஆனால் கார்ட்டர் திறமையாகக் செயல்பட்டு லாபம் ஈட்டினார்.

உள்ளூர் பள்ளி மற்றும் நூலக வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அனுபவம் பெற்ற பிறகு, கார்ட்டர் ஜார்ஜியா செனட்டிற்கு போட்டியிட முடிவு செய்தார்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு பற்றிய தாராளவாதக் கருத்துக்களுடன் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை சமநிலைப்படுத்த கார்டர் போராடினார்.

கருக்கலைப்பு தொடர்பான பெண்களின் உரிமைகளை அவர் ஆதரித்தார், ஆனால் அதற்கான நிதியை அதிகரிக்க மறுத்துவிட்டார்.

1974 இல் அவர் தனது அதிபர் பிரசாரத்தைத் தொடங்கியபோது, வாட்டர்கேட் ஊழல் பிரச்னையில் இருந்து தேசம் மீண்டு கொண்டிருந்தது.

நேர்மையான கடலை விவசாயியாக கார்ட்டர் தன்னை வெளிப்படுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜிம்மி காட்டர் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல்வாதி..இஸ்ரேல் பலஸ்தினிய பிரச்சனையாகட்டும்....ஈரான் பயணக்கதிகள் விடயமாகட்டும் சுமுகமாக தீர்த்து வைத்தவர். இருந்தாலும் அவர் பின் வந்த ஆட்சியாளர்கள் அதே பிரச்சனைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது  கவலைக்குரிய விடயம்.

ஆத்மா சாந்தியடையட்டும்.

Jimmy Carter - DER SPIEGEL

அடுத்த பிறவியிலும் அமெரிக்க ஜனாதிபதியாக வந்து உலக  சமாதானத்தை நிலைநாட்டுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.