Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்.

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று (04) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://athavannews.com/2025/1415241

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

எதிர் எதிராக  வரும் வாகான சாரதிகள்  ,பொலிசார் வீதியில் நிற்கின்றனர்  என  "ஹைய் பீம் லைட்" அடித்து காட்டுவதற்கு என்ன தண்டனை ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

எதிர் எதிராக  வரும் வாகான சாரதிகள்  ,பொலிசார் வீதியில் நிற்கின்றனர்  என  "ஹைய் பீம் லைட்" அடித்து காட்டுவதற்கு என்ன தண்டனை ?

P90 LED Rechargeable Tactical Laser Flashlight – seaqers

இவர்களை பிடித்து,  ஐந்து Battery போட்ட ரோச் லைற்றால்,
கண்ணுக்குள் வெளிச்சம் பாய்ச்ச  வேண்டும். 😂

அதிக வெளிச்சம்  உடலுக்கு துன்பத்தை கொடுக்கும்.
"முள்ளை... முள்ளால்தான் எடுக்க வேண்டும்". 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

எதிர் எதிராக  வரும் வாகான சாரதிகள்  ,பொலிசார் வீதியில் நிற்கின்றனர்  என  "ஹைய் பீம் லைட்" அடித்து காட்டுவதற்கு என்ன தண்டனை ?

இதை இன்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட நடைமுறை படுத்த முடியவில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தால் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளோம் முறையாக செயற்படாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

Published By: VISHNU   05 JAN, 2025 | 05:53 PM

image
 
(இராஜதுரை ஹஷான்)

'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தால் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பதில் பொலிஸ்மா அதிபருடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ' க்ளீன் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சேவையில் ஈடுபடும் பேருந்துகளை இடைநிறுத்தி பொலிஸார் சோதனை செய்கிறார்கள். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை முதலில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.

மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பேருந்தின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளில் அலங்காரங்கள் மற்றும் பொருத்தமற்ற ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இணைப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொலிஸார் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.

பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த வாரம் பதில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பொலிஸார் சிவில் உடையில் பேரூந்தில் பயணித்தவாறு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொலிஸார் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

தனியார் பேருந்து சாரதிகள் கவனயீனமாக செயற்படுவதால் வாகன விபத்து இடம்பெறுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 3500 முதல் 4000 பேரூந்துகள் உள்ளன. தனியார் துறையில் 13500 பேருந்துகள் உள்ளன. ஆகவே தனியார் பேருந்துகளை காட்டிலும் அரச பேருந்துகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகுகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/203051

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அனைத்து பொலிசாருக்கும் body camera பொருத்தவும். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இதை இன்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட நடைமுறை படுத்த முடியவில்லையே. 

கூகிழ் போக்குவரத்து வழிகாட்டி செயலியே காவல்துறை முன்னால் நிற்பதை எச்சரிக்கை செய்கின்றதே. இது சட்டவிரோதமானது இல்லை போலும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பொருத்தப் பட்ட ஒலி  பெருக்கிகள், 
அலங்கார விளக்குகளை  அகற்றும் பணி இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

#######   ############    ###########   ##########

472571879_2792094010951169_8387191740500

May be an image of trolley and text

ஆயிரம் நபர் ஆயிரம் விதமாக சொன்னாலும் இப்படி வாகனங்களை அலங்கரிப்பது தண்டனைக்குரிய குற்றம் காரணம். இதனால் எண்ணில் அடங்காத விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தில் சேதம் அடைந்த ஆட்களுக்கு தான் தெரியும் இதன் விளைவு. வெறும் விமர்சனம் செய்றவனுக்கும் இதை எல்லாம் வாங்கி பொருத்துபவனுக்கும் எப்போதும்  புரியபோவதே இல்லை.

Ahamed Bary Bilal

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of trolley and text

May be an illustration of train, trolley, street and text

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2025 at 03:18, நியாயம் said:

கூகிழ் போக்குவரத்து வழிகாட்டி செயலியே காவல்துறை முன்னால் நிற்பதை எச்சரிக்கை செய்கின்றதே. இது சட்டவிரோதமானது இல்லை போலும். 

எவ்வளவோ சீரமைப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் இருக்கும் போது வாகனங்களில் உள்ள வர்ண விளக்குகள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்கள் சார்ந்து ஏன் அவசரமாக தண்டிக்க துடிக்கிறார்கள் என்று புரியவில்லை. இவையெல்லாம் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட இன்னும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

எவ்வளவோ சீரமைப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் இருக்கும் போது வாகனங்களில் உள்ள வர்ண விளக்குகள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்கள் சார்ந்து ஏன் அவசரமாக தண்டிக்க துடிக்கிறார்கள் என்று புரியவில்லை. இவையெல்லாம் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட இன்னும் உண்டு. 

வெளிநாடுகளிலும் வானகத்தை அளங்கரிப்பது, மின்குமிழ்கள் இணைப்பது விடயத்தில் கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளன. 

வாகன ஓட்டிகளின் கவனத்தை குலைப்பது தொடக்கம் பல இடர்ப்பாடுகள் இதில் உள்ளன.

இலங்கையில் பெரும்பாலும் வண்ணமயமான பிரகாசமான ஒளி அமைப்பு மூலம் சுவாமி உருவங்கள், படங்கள் இவற்றையே முன்னிலைப்படுத்துகின்றார்கள். பல பேருந்துகளில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யாது. பலவற்றில் பாட்டு பெட்டி வேலை செய்யாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

நீங்கள் இங்கே வேகப் பாதைகளில் பார ஊர்திகளை கண்டதில்லை என்று நினைக்கிறேன். இலங்கையில் கூட அவ்வாறு நான் கண்டதில்லை. எல்லா வகையான அலங்காரத்திலும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நீங்கள் இங்கே வேகப் பாதைகளில் பார ஊர்திகளை கண்டதில்லை என்று நினைக்கிறேன். இலங்கையில் கூட அவ்வாறு நான் கண்டதில்லை. எல்லா வகையான அலங்காரத்திலும். 

பாரவூர்திகளில் அதிலும் குறிப்பாக நீண்டதூர பாரவூர்திகளில் மிகையான ஒளியமைப்பு/அலங்காரம் உள்ளது உண்மைதான். ஆனால், அவை மீது நடவடிக்கைகள் முற்றிலுமாக எடுக்கப்படுவது இல்லை எனவும் கூறமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

பாரவூர்திகளில் அதிலும் குறிப்பாக நீண்டதூர பாரவூர்திகளில் மிகையான ஒளியமைப்பு/அலங்காரம் உள்ளது உண்மைதான். ஆனால், அவை மீது நடவடிக்கைகள் முற்றிலுமாக எடுக்கப்படுவது இல்லை எனவும் கூறமுடியாது.

அதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். இவை சில கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மூலம் சரி செய்யக் கூடிய விடயங்கள். இலங்கையில் அவசரமாக கிளீன் செய்ய எவ்வளவோ விடயங்கள் இருக்க இவற்றை எதுக்காக அவசரமாக என்று தான் கேட்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/1/2025 at 09:05, தமிழ் சிறி said:

இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

இலங்கை போக்குவரத்து வாகனங்களை பாகிஸ்தான் மாதிரி கொண்டுவந்து விட்டார்களாம்.வெகு விரைவில் அந்தப்புர பஸ்களும் இலங்கையில் ஓடக்கூடும்.
ஏனெண்டால் பக்கத்து நாட்டில் அந்தமாதிரி விவகாரங்கள் எக்கச்சக்கம்மாம்....

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2025 at 09:11, putthan said:

எதிர் எதிராக  வரும் வாகான சாரதிகள்  ,பொலிசார் வீதியில் நிற்கின்றனர்  என  "ஹைய் பீம் லைட்" அடித்து காட்டுவதற்கு என்ன தண்டனை ?

ஆளுக்கு ஐயாயிரம் படி பொலிசாரின் பொக்கெட்டுக்குள் காசை தவற விட வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆளுக்கு ஐயாயிரம் படி பொலிசாரின் பொக்கெட்டுக்குள் காசை தவற விட வேண்டும்🤣

ஐயோ அது ஊழல் ..அதை பிடிக்க யாழ் தோழர் எம்.பி ..மரத்தில் ஏறி நிற்பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தில் தனியார் அரசு பஸ்கள் இடையான போட்டிகளைத் தடுத்து நிறுத்தினால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து போகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, jeep, motorcycle and text

தேவையற்ற அலங்காரங்களை காசு கொடுத்து வாங்கி, பூட்டி...
காசு கொடுத்து கழட்டுகின்றார்கள். 
இவற்றின் இறக்குமதிக்கு, விற்பனைக்கும் முன்பே தடை விதித்து இருந்தால்...
தேவையற்ற பண விரயத்தையும், நூற்றுக்காணக்கான உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.