Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,

 உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம்  ஒன்றுக்கு சென்ற நிலையில், தங்க நகை போன்ற ஆபரணம் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்தேன்.

 அதனை எடுத்து அந்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த  வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர்

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த  வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம்  ஒப்படைத்தீர்களா? என கேட்ட நிலையில்  ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர்.

இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன்.

இதன்போது குறித்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர்.

“நான் சொல்வதை கேளுங்கள் ஏன்? தாக்குகிறீர்கள் என கத்தினேன் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன்  கம்பத்தில்  கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர்”.

வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர்.

முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன்.

 வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின்  கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார்.

”எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”  என அவர் மேலும் தெரிவித்தார்.

பு.கஜிந்தன்

image_3b1384e7a8.jpg

 


  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பிழம்பு said:

முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன்.

 வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின்  கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார்.

கிளீன் சிறிலங்கா.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யப் போய்…. உபத்திரவத்தை வாங்கியுள்ளார்.
இனிமேல்… கீழே கிடந்ததை எடுத்து மற்றவர்களிடம் கொடுக்காமல்,
சம்பந்தப் பட்டவரை கண்டு பிடிக்கும் மட்டும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படி கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில்… அனாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கி விடுங்கள்.
மூன்றாம் நபரிடமோ, காவல் துறையிடமோ… ஒப்படைப்பது எல்லாம் நம்பிக்கை அற்ற செயல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

கிளீன் சிறிலங்கா.

இது புரையோடிப்போனதொன்று...அதுவும் நம்ம பகுதியில்...மாற்றவே முடியாது......பணம்தான் பிரதான காரணி..

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார்.

மீண்டும், போலீஸ், சட்டத்தரணி. இது என்ன போலீஸ் நிலையமா? நீதிமன்றமா? சட்டத்தரணி நீதிபதியா? அவர் எதற்கு போலீசுக்கு சென்று சமாதானம் பேசுகிறார்? அதுவும் தாக்கப்பட்ட மனிதருக்கு எதிராக? மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  நகையை அபகரித்ததுமட்டுமல்ல அவரை தாக்கியது இரண்டு குற்றம். ஏன் சட்டத்தரணி அவரை சமாதானமாக போகச்சொன்னார்? ஏன் அவரை தாக்கினர் என்கிற காரணத்தை சொன்னார்களா? இங்கே யார் யார் திருடர் பாருங்கள். இதுதான், நாம் எமது சமூகத்திலேயே போராட எத்தனையோ உள்ளது. அதிகாரிகள், போலீசார், சமூகவிரோதிகள், சட்டத்தரணிகள் நட்பு. ஏழைமக்கள் வாழமுடியுமா? நீதி கிடைக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதுக்கு காலம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

 

May be an image of 1 person and beard

என்ன மனிசனுகள்ர நீங்க ….?
தவற விடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவரையே கட்டிவைத்து தாக்கியுள்ளார்கள்,
தாக்குதலுக்குள்ளான நபரின் வாக்குமூலம் இது.
 
24 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றுக்கு பாண் வாங்கச் சென்ற போது பேக்கரியின் முன்னால் உள்ள நிலத்தில் தங்க நகை ஒன்று கிடந்தது,அதை எடுத்து அந்த பேக்கரி உரிமையாளரிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினேன்.
 
இரண்டு நாட்களில் அந்த வழியால் செல்லும் போது அந்த பேக்கரிக்குச் சென்று நான் கொடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறினர்கள்.
 
இதை நான் எனக்கு நெருக்கமானவர்களுக்கு சொன்னபோது அனைவரும் என்னை ஒரு முட்டாள் என்று திட்டினார்கள்,நீயே அதை வைத்திருந்து தொலைத்தவர்கள் தேடுவதை அவதானித்து கொடுத்திருக்க வேண்டும்.
அப்படி உரிமையாளர் கிடைக்கவில்லையென்றால் எத்தனை அனாதை ஆச்சிரமங்கள் உள்ளன அங்கு சென்று கொடுத்திருக்கலாம் என்று ஏசினார்கள்.இப்ப அந்த நகையை பேக்கரிக்காரனே ஆட்டையைப் போட்டிடுவான் என்றும் கூறினார்கள்.
 
அதனால் இரண்டு நாட்கள் கழித்து நானாகவே அந்த பேக்கரிக்குச் சென்று நகையை உரியவர்களிடம் கொடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லை என்று கூறினார்கள்.
அப்போது பொருளைத் தாருங்கள் ஏதாவது அனாதை இல்லத்திற்கு கொடுப்போம் என்று கூறினேன்.
 
என்ன செய்யனும் என்று எங்களுக்கு தெரியும் முதல்ல நீ பேக்கரியில் இருந்து வெளியால போ என்று என்னை விரட்டினார்கள். இல்லை, இல்லை, நான் தந்த பொருளை என்னிடம் தாங்க என்று நான் கூறினேன்,
 
உடனே அங்கு நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்.
நான் சொல்வதை கேளுங்கள் என்று நானும் முட்டுக் கொடுத்து பின்னுக்குச் செல்லாமல் நின்றேன்.
 
உடனே பேக்கரியில் நின்ற மற்றவர்களும் சேர்ந்து ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை கண்டபடி அடித்து இளுத்து கம்பத்தில் கட்டிவைத்து தாறு மாறாக அடித்தார்கள்.
 
வீதியால் சென்ற பலர் அவதானித்து தடுத்து நிறுத்தி எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டு கோப்பாய் பொலீசுக்கும், அம்பிலன்சுக்கு அறிவித்தார்கள். அந்த வழியால் எனக்குத் தெரிந்த பலர் வந்து எனக்காகப் பேசினார்கள்.
 
முகத்திலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான நான் கோப்பாய் பொலீசுக்கு முறைப்பாடு தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்சில் சென்றுவிட்டேன்.
 
வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பிய நான் கோப்பாய் பொலிசுக்குச் சென்று என்னை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன்..
 
யாரோ ஒரு லோயர் சமரசம் செய்வதாக பொலிசுக்குச் சொன்னதாகவும், நாங்க அந்தபேக்கரிக் காரங்களைக் கூப்பிடுறோம் என்ற பொலிஸ் சம்மந்தப்பட்டவர்களை கோப்பாய் பொலீஸ் நிலையம் வரச் சொன்னது.
சம்மந்தப்பட்ட பேக்கரிக்காரங்களுடன் ஒரு லோயரும் வந்தார்.
 
வந்த லோயர் சமரசமாப் போங்க ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் இல்லையென்றால் கோட், ஜெயில், என்று பயமுறுத்தினார்.
 
எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறியுள்ளேன்.
 
குறிப்பு*
உதவியும் செய்து, உதையும் வாங்கி, சமரசமாகவும் போகனும், இல்லையென்றால் தற்கொலை செய்யனும்.
இந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்டாலோ, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ.. முதலாளி வர்க்கத்துக்காக செம்பு காவிக் கொண்டு வந்து விடுவார்கள் காசுக்கு  ,,,,💩,,,, தின்னிகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சட்டத்தரணியும் கைது செய்யப்படவேண்டும், காரணமில்லாமல் பாதிக்கப்பட்ட நபரை  அச்சுறுத்தியதற்காக. மேலும்  குறிப்பிடப்பட்ட  பொலிஸாரையும்  விசாரணை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, RishiK said:

 

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்களின் பதிவுக்கு நன்றி   இதன் முடிவை அதாவது குற்றவாளிகள் இனம்  காணப்பட்டு  தண்டனை வழங்கப்படுவதையும். நகை உரியவர்கள் வசம் ஒப்படைபடுவதையும்.  எந்தவொரு குற்றமும். செய்த பொது மகனுக்கு  தாக்குதலுக்கு. உள்ளனதற்க்கு நீதி வழங்கப்படுகிறதா ?? என்பதையும் அறிய ஆவலுடன் இருக்கிறேன்  ......உங்களுக்கு தெரிந்த தகவல்களை இணையுங்கள்.  நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்தான் அவர்களை கைது செய்ய பின்னடித்தவர்கள். அப்போ.... மேலே இருந்து கட்டளை வந்திருக்கோ? தொழிலை பாரபட்ஷம் இல்லாமல் செய்யத்தெரியாதவர்களை வெளியே அனுப்பி விடுங்கள். நாளைக்கு அரசியல்வாதி, சட்டத்தரணி, தொழிலதிபர் என்று யாரும் வந்தவுடன் அவர்களுக்கு விலை போய்விடுவார்கள். முதலில் அவர்களது கடமை என்ன, அதை எப்படி நிறைவேற்றுவது என்பதே பல போலீசாருக்கும் அதன் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. பயிற்சி, திறமை, அறிவு அற்றவர்களே பெரும்பாலான போலீசார். தங்களுக்கு தேவையானவர்களுக்காக குற்றம் செய்யாத வயதில் மூத்தவர்களை கூட, சிறு வயதுக்கார போலீஸ்,  அதிலும் தமிழன் பொட்டான் கட்டையால் அடிப்பதை பார்த்திருக்கிறேன். இதனால் பல பேர் எத்தனை பிரச்சனை வந்தாலும் போலீசுக்கு போவதில்லை. அத்தனையையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக சீர்கேடுகளையும் அடிதடியையும் வளர்ப்பவர்கள் போலீசாரும் சட்டத்தரணிகளுமே. காசுபேய்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளார்.

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது!

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது!

Edited by பிழம்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.