Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!

ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!

இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

https://athavannews.com/2025/1415834

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் இன்று (09) நிராகரித்தார்.

இஸ்லாம் மதத்தை அவதூறு செய்யும் வகையில் அவதூறு பேசியமைக்காக ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதால், மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

எனினும், அந்த கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் பசன் அமரசேன நிராகரித்தார்.

https://athavannews.com/2025/1415921

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் குறைவு   ...... 1/2    யூரோ  கூட இல்லை    ......🤣 மீண்டும் ஒருமுறை சரி பிழை பாருங்கள்,      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இது மிகவும் குறைவு   ...... 1/2    யூரோ  கூட இல்லை    ......🤣 மீண்டும் ஒருமுறை சரி பிழை பாருங்கள்,      

பிக்குகள்.... சொத்து , சுகம் எல்லாம் துறந்தவர்கள்.
அவர்கள் வேலை வெட்டிக்குப் போய் சம்பாதிப்பதில்லை.
அதனால் அவர்களிடம் பணம் பெரிதாக இராது என்று, 
நீதவான், 1500 ரூபாவை அபராதமாக  விதித்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

பிக்குகள்.... சொத்து , சுகம் எல்லாம் துறந்தவர்கள்.
அவர்கள் வேலை வெட்டிக்குப் போய் சம்பாதிப்பதில்லை.
அதனால் அவர்களிடம் பணம் பெரிதாக இராது என்று, 
நீதவான், 1500 ரூபாவை அபராதமாக  விதித்திருக்கலாம். 

இவருக்கு,.இந்த பிக்குக்கு    இலங்கையிலும் பிரான்ஸ்லும்.   மனைவி பிள்ளைகள் உண்டு”   என்று வாசித்த

ஞாபகம் உண்டு”   ......இவர் ஒரு பணக்காரர் கூட    இப்ப அபராதம் கூட்டுவீர்களா???   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இவருக்கு,.இந்த பிக்குக்கு    இலங்கையிலும் பிரான்ஸ்லும்.   மனைவி பிள்ளைகள் உண்டு”   என்று வாசித்த

ஞாபகம் உண்டு”   ......இவர் ஒரு பணக்காரர் கூட    இப்ப அபராதம் கூட்டுவீர்களா???   🤣

பிரான்ஸ் மனைவிக்கு... இரண்டு பெரிய பெண் பிள்ளைகள்.
அவர் மனது வைத்தால்... ஞானசார தேரரின் அபராதத்தை 1500 ஐரோவாக  கட்டி...
கந்தையா அண்ணையை குளிர்விப்பார் என நினைக்கின்றேன். 😂
இப்ப சந்தோசமா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஞானசாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் இன்று (09) நிராகரித்தார்.

இஸ்லாம் மதத்தை அவதூறு செய்யும் வகையில் அவதூறு பேசியமைக்காக ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதால், மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

எனினும், அந்த கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் பசன் அமரசேன நிராகரித்தார்.

https://athavannews.com/2025/1415921

இந்த வெள்ளிக்கிழமை ஜூம்மாவில்..அனுரவிற்கு மிகப்பெரிய துஆ ஓதப்படும் என்கிறியள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

இந்த வெள்ளிக்கிழமை ஜூம்மாவில்..அனுரவிற்கு மிகப்பெரிய துஆ ஓதப்படும் என்கிறியள்...

அத்துடன்... முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையையும் மறந்து விடுவார்கள். 😂
வரும் உள்ளூராட்சி தேர்தலிலும்... முஸ்லீம்களின் வாக்கை, அனுர... கொத்தாக அள்ளுகின்றார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையையும் மறந்து விடுவார்கள். 😂
வரும் உள்ளூராட்சி தேர்தலிலும்... முஸ்லீம்களின் வாக்கை, அனுர... கொத்தாக அள்ளுகின்றார். 🤣

இனி அங்கால் பக்கமும் ..சிவத்த அலைதான்....அப்ப அந்த ஜனாசா எரிப்பை தூக்கிப் பிடிக்கிறவை பாடு எப்படிப் போகும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

இனி அங்கால் பக்கமும் ..சிவத்த அலைதான்....அப்ப அந்த ஜனாசா எரிப்பை தூக்கிப் பிடிக்கிறவை பாடு எப்படிப் போகும்..

கொரோனாவின் போது...  ஜனாஸாவை எரித்த, 
கோத்தாவும் பதவியில் இல்லை என்ற படியால்...
அனுரா... "அது, ஒரு துன்பியல் சம்பவம்" என்று  சொன்னால், 
காத்தான்குடிகாரனின் வாக்கும், அனுரவுக்கே கிடைக்கும். 
animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

காத்தான்குடிகாரனின் வாக்கும், அனுரவுக்கே கிடைக்கும். 

காத்தான்குடிகாரன்      தமிழன் இல்லை என்பது நினைவிருக்கட்டும் 🤣🤣  

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் வெலிக்கடை சிறையில்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/314542

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை

கலகொட அத்தே ஞானசார

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபான் வாங்க்
  • பதவி, பிபிசி நியூஸ்

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய, இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர்.

கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

இலங்கையில் பௌத்த துறவிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பேசி வந்த ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இது இரண்டாவது முறை.

கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனைவியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போதைய வழக்கை விசாரித்த கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவருக்கு 1500 இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறையீடு செய்துள்ளார்.

கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் ஒருவராக ஞானசார அறியப்படுகிறார். 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்.

பொது மன்னிப்பு பெற்ற ஞானசார

கலகொட அத்தே ஞானசார
படக்குறிப்பு, தனது மகனுடன் சந்தியா எக்னெலிகொட

கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள பௌத்த தேசிய குழுவை வழி நடத்தினார் ஞானசார. மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பணிக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ப்ரதீக் எக்னெலிகொட அரசியல் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். ஆளும் சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த அவரை 2010ஆம் ஆண்டு முதல் காணவில்லை.

இந்நிலையில், அவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொடவை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் 2018ஆம் ஆண்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்கள் கழித்து, அன்றைய ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்ரிபால சிறிசேன அவருக்கு பொது மன்னிப்பை வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார பிணையில் விடுவிப்பு!

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

https://www.samakalam.com/சிறைத்தண்டனை-விதிக்கப்-3/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-371.jpg?resize=750%2C375&ssl

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் 9 மாத சிறைத்தண்டனை உத்தரவினை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி 09 அன்று, கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒன்பது மாத சிறைத்தண்டனை உத்தரவை பிறப்பித்தது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1500 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1422908

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.