Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஐயோ நான் பரிந்துரைப்பதா…

நான் எப்போதும் யாழ்களத்தின் அடிமட்ட கருத்தாளன், விதிகள் எல்லாம் well above my pay grade.

ஆனால் அன்னதானத்தில் போய் இருந்து கொண்டு ஆட்டுக்கால் சூப் கேட்க்கும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவனும் அல்ல.

முன்பு ஜோக்குகள், தரவுகள், குறிப்பாக ரஸ்ய-உக்ரேன் திரியில் டிவிட்டர் வீடியோக்கள் என பலதை பதிவது என் வழக்கம்.

ஆனால் திண்ணை திறப்பு சம்பந்தமாக ராசவன்னியன் கோரிக்கை வைத்து, அதனை நான் வழிமொழிந்து - அதற்கு மோகன் அண்ணா கொடுத்த பதிலை பார்த்த பின் -  இப்படி செய்வது சேவர் சுமையை கூட்டுமோ என ஐயப்பட்டு - அதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளேன்.

இதை பற்றிய ஒரு விளக்கம் கோரல் மட்டுமே நான் கேட்டது.

கருத்துக்களத்தை வீடியோ இணைக்கும் தளமாக மட்டும் பாவிப்பவர்கள் தம் அடிமடியில் கைவைக்கிறேன் என பயப்பட தேவையில்லை. அது என் நோக்கமும் இல்லை.

என் கேள்விக்கு நிழலி ஆம் என பதில் அளித்தால் - யாழில் வெறும் எழுத்துக்களை மட்டுமே பகிர்வேன்.

இலவசமாக தரும் ஒருவர் - சுமை அதிகமாக இருக்கிறது என சொன்னபின்னும் சுமையை கூட்டும் படி நடப்பது என்னை பொறுத்த மட்டில், அழகல்ல.

இந்த நிலைப்பாட்டை சகலரும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

உசாரய்யா உசாரு…ஓரம்சாரம் உசாரு🤣.

(வடிவேலு ஜோக்கை பதிந்திருக்க வேண்டும் - சுமை என கருதி அமைகிறேன்- ஆனால் இப்படி எழுத்தில் போடுவதும் நல்லாத்தான் இருக்கு).

வந்துட்டான்யா, வந்துட்டான் ரேஞ்சுல, நிழலியர், பெருமாளுக்கு கடுப்போட போட்ட பதிவை, பார்தியளே.....

நம்ம ரெக்கோட் அப்படீ 😂🤪😜

But, நாங்க, முன்ன மாதிரீ இல்ல, வளந்திட்டம் எண்டு சொல்லுங்க, உடான்சரே... 🤪

*****

எங்க அமையீரியள்...

24 மணித்தியாலமும் உங்க தானே நிக்கிறியள்! 😂🤣

Edited by Nathamuni

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பிகு

@செவ்வியன் உங்களிடம் நிபந்தனை அற்ற அட்வான்ஸ் மன்னிப்புகள்.

நீங்கள் போலி ஐடி என நான் குற்றம் சாட்டவில்லை.

அரிதாக வந்து சேரும் புதிய கருத்தாளரை இப்படி குற்றம் சாட்டி கலைப்பதில் என் பங்கு இருக்க கூடாது என விரும்புகிறேன்.

எழுதும் பாணி ஒத்து போவது வழமையானதுதான்.

ஆனால் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

உண்மையான ஐடி எனில் இந்த “பிக்காலி” கதைகளை கனம் பண்ணாமல் தொடருங்கள்.

போலி ஐடி எனில் - பழைய ஐடியில் தொடர்ந்து எழுதுங்கள்.

ஹாஹா மன்னிப்பெல்லாம் எதற்கு. இங்கு பலரை போல் நானும் முகமூடிக்கு பின்னால்  இருந்து எழுதுபவன் தான். சில மாதங்களுக்கு முன் இறுதி யுத்த நிகழ்வுகள் தொடர்பான விடயங்களை தேடி படிக்கும் போது யாழ் தளத்தின் அறிமுகம் கிட்டியது அவ்வளவே, எனக்கு இத்தளத்தின் பங்காற்றிய பங்காற்றுகிற உறவுகளுக்கு நேரடி தொடர்பில்லை.

முன்னால் இருந்ததாக கூறப்படுபவரின் ஐடி என்ன? தெரிந்துக்கொள்ள ஆர்வமாய்யிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

👍...............

இப்படித்தான் சொல்லுகின்றார்கள், கிருபன்.

ஆனால், ஏதோ பிரச்சனையாகி விட்டதே என்று எல்லா வாடிக்கையாளர்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, என்னவென்று விழுந்தடித்து போய் பார்த்தால், சில சர்வர்களில் சிபியு 90 வீதத்திற்கும் மேலே போய் கடைசி மூச்சை அவை விட்டுக் கொண்டிருக்கும். இது என்ன கோலம் என்று உள்ளே தோண்டிக் கொண்டு போனல், மூல காரணம் அநேகமாக ஒரு long running SQL/Database query ஆக இருக்கும். 28 வருடங்களாக இங்கு வேலை செய்கின்றேன், எந்த தொழில்நுட்பம் வந்தும் இது மட்டும் மாறவே இல்லை...............      

 ஹாஹா எங்கும் இதே பிரச்சனை தானா, திடீர் long running queryக்கு காரணம் கேட்டால் query plan மாறிட்டது என்கிறார்கள். அது ஏன் மாறியது என்று கேட்டால், அதுக்கு பல காரணம் இருக்கிறது அது இது தான் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

எது வந்தாலும் இந்த பிரச்சனை தொடரத்தான் செய்யுது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வந்துட்டான்யா, வந்துட்டான் ரேஞ்சுல, நிழலியர், பெருமாளுக்கு கடுப்போட போட்ட பதிவை, பார்தியளே.....

நம்ம ரெக்கோட் அப்படீ 😂🤪😜

But, நாங்க, முன்ன மாதிரீ இல்ல, வளந்திட்டம் எண்டு சொல்லுங்க, உடான்சரே... 🤪

*****

எங்க அமையீரியள்...

24 மணித்தியாலமும் உங்க தானே நிக்கிறியள்! 😂🤣

அட நம்ம இங்க தானே லிவின்ஸ்டன்🤣

2 hours ago, செவ்வியன் said:

 ஹாஹா எங்கும் இதே பிரச்சனை தானா, திடீர் long running queryக்கு காரணம் கேட்டால் query plan மாறிட்டது என்கிறார்கள். அது ஏன் மாறியது என்று கேட்டால், அதுக்கு பல காரணம் இருக்கிறது அது இது தான் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

எது வந்தாலும் இந்த பிரச்சனை தொடரத்தான் செய்யுது

@Nathamuni கேட்டுகோங்க…செவ்வியன் IT காரர்.

நான் IT ல “சுத்தம்” எண்டுறது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

அட நம்ம இங்க தானே லிவின்ஸ்டன்🤣

@Nathamuni கேட்டுகோங்க…செவ்வியன் IT காரர்.

நான் IT ல “சுத்தம்” எண்டுறது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன்🤣

@செவ்வியன்சிரிச்சா மட்டும் போதாது.

ஒரே டைம்மில் நாமிருவரும் கருத்து பதிந்தால்தான் நம்ம “எனக்கொரு சந்தேகம்” @Nathamuniநம்புவார் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

@செவ்வியன்சிரிச்சா மட்டும் போதாது.

ஒரே டைம்மில் நாமிருவரும் கருத்து பதிந்தால்தான் நம்ம “எனக்கொரு சந்தேகம்” @Nathamuniநம்புவார் 🤣.

அவர் வந்துட்டுப் போனாப்பிறகு இவர் வருவார். இவர் வந்திட்டுப் போனாப்பிறகு அவர் வருவார். 😎

ஒரேயடியா வர try பண்ணப் போகினமாம். 🤪

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு ஜோக் பார்த்தன் உடான்சர்:

ரம்பர் மெக்சிகன் சுவர் எழுப்ப, குடியேறியள் வருகினமோ இல்லையோ, பவுடர் வருவது நிண்டால், அமேரிக்கர்கள் தான் மதில் பாய்வார்களாம்! 🤪🤣

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்

இது தலைப்பு.

இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

@செவ்வியன்சிரிச்சா மட்டும் போதாது.

ஒரே டைம்மில் நாமிருவரும் கருத்து பதிந்தால்தான் நம்ம “எனக்கொரு சந்தேகம்” @Nathamuniநம்புவார் 🤣.

அடடே அவசரத்தில மண்டையில உள்ள கொண்டைய மறந்துட்டேன்😃

1 hour ago, Nathamuni said:

அவர் வந்துட்டுப் போனாப்பிறகு இவர் வருவார். இவர் வந்திட்டுப் போனாப்பிறகு அவர் வருவார். 😎

ஒரேயடியா வர try பண்ணப் போகினமாம். 🤪

நீங்கள் ஒரு புலனாய்வு புலி😃

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Paanch said:

சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்

இது தலைப்பு.

இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔

திண்ணை பத்தி கேட்டா, நிழலி கடுப்பாகிறார், my lord. 🤗

நிக்கிற திரியை திண்ணையாக்கிட்டு போய்க் கொண்டே இருப்பம்!😂🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திண்ணை பத்தி கேட்டா, நிழலி கடுப்பாகிறார், my lord. 🤗

நிக்கிற திரியை திண்ணையாக்கிட்டு போய்க் கொண்டே இருப்பம்!😂🤣

திரியை திசை திருப்புவதாக ஐயா டென்சன் ஆகிறார்.

அடங்குங்கோ நாதம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

திரியை திசை திருப்புவதாக ஐயா டென்சன் ஆகிறார்.

அடங்குங்கோ நாதம்🤣

உங்களுக்கெண்டு மினக்கெட்டு ஒரு டிரம்ப் ஜோக் போடுறன்... ஒரு லைக்கும் போடுறியள் இல்லை,

ஒரு வருசம் இந்தப் பக்கம் வரேல்ல... 

உங்களை... மாத்திப் போட்டீனம்...🥹

இருக்கட்டும். வைச்சு செய்வம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

உங்களுக்கெண்டு மினக்கெட்டு ஒரு டிரம்ப் ஜோக் போடுறன்... ஒரு லைக்கும் போடுறியள் இல்லை,

ஒரு வருசம் இந்தப் பக்கம் வரேல்ல... 

உங்களை... மாத்திப் போட்டீனம்...🥹

இருக்கட்டும். வைச்சு செய்வம். 👍

நான் சொன்னேனே நாதம்…

களம் மாறிவிட்டது🤣.

உப்பிடி எல்லாம் செய்தால் பூமர் அங்கிள் எண்டு சொல்லி போடுவினம், கவனம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் சொன்னேனே நாதம்…

களம் மாறிவிட்டது🤣.

உப்பிடி எல்லாம் செய்தால் பூமர் அங்கிள் எண்டு சொல்லி போடுவினம், கவனம் 🤣.

களத்தை விட்டு நான் எங்கையா போனேன், பூமர் அங்கிள்?

உங்கள் ஊர் பயணக் கதை முதல், ஒவ்வொருவர் பதிவையும் பார்த்துக் கொண்டு தானே இருநதேன்.

பிளேன் ஏறினா, டயற்கோக் கேட்டமா, ஜஸ் வாங்கினமா, அடிச்சமா.... மப்பீல சாப்பிட்டு படுத்தமா எண்டு இருக்க வேணும்.

ரீ குடிக்கிறன் எண்டு, பின்னால போய் கடலை போடக்கூடாது. 😎

தமிழக அரசியலில் இருந்து, லீவ் எடுத்து, இலங்கை தேர்தல் நேரத்தில் மட்டும் ஆஜராகி, போட்டியில் பங்கு பற்றி, லீவை முடித்து திரும்பியதையும் பார்த்தேன்.

ஆக… இங்கின தான் சுத்திக் கிட்டிருந்தேன்! 🤗🤪😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

உங்களுக்கெண்டு மினக்கெட்டு ஒரு டிரம்ப் ஜோக் போடுறன்... ஒரு லைக்கும் போடுறியள் இல்லை,

கோசான் அவர்களுக்கு லைக்போடும் எல்லை முடிந்திருக்கலாம். லைக்குக்கு எல்லை போடக் கூடாது. அந்தவகையில் சாடிநிற்க நான் உங்கள் கட்சி.😌

எல்லைச் சண்டை யாழ்வாசிகளுக்கு மட்டுமே உரித்தானது. களம், யாழ் என்றாலும்! அதில் பங்குபோட முடியாது!!.🧐

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

கோசான் அவர்களுக்கு லைக்போடும் எல்லை முடிந்திருக்கலாம். லைக்குக்கு எல்லை போடக் கூடாது. அந்தவகையில் சாடிநிற்க நான் உங்கள் கட்சி.😌

எல்லைச் சண்டை யாழ்வாசிகளுக்கு மட்டுமே உரித்தானது. களம், யாழ் என்றாலும்! அதில் பங்குபோட முடியாது!!.🧐

ஆள் வலு சுளியன். எல்லை கடந்தவர்! 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆள் வலு சுளியன். எல்லை கடந்தவர்! 😎

யார் கோசானா? அவர் இல்லை என்றால் பரமும் இல்லை, பரையும் இல்லை ஐயா!🧐

  • கருத்துக்கள உறவுகள்

வாயாலே வடை சுட்ட செந்தமிழன் சீமான் அண்ணா இனித் தப்பிக்கவே முடியாது!

👇

காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வாலி said:

வாயாலே வடை சுட்ட செந்தமிழன் சீமான் அண்ணா இனித் தப்பிக்கவே முடியாது!

👇

காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்

ஜ‌யா ப‌ர‌திராஜா த‌லைவ‌ரை ச‌ந்திச்ச‌ போது சீமானை ப‌ற்றி விசாரிச்சு இருந்தார் அதை ஜ‌யாவே நேர்கான‌லில் சொல்லி 

இருந்தார்

சீமான் ஈழ‌த்துக்கு வ‌ரும் போது அங்கு சீமானை ஒருத‌ருக்கும் தெரியாதாம் இந்த‌ கூ முட்டை.................ஜ‌யா ப‌ர‌திராஜா 2006க‌ளில் த‌லைவ‌ரை நேரில் ச‌ந்திச்ச‌வ‌ர்

இணைய‌த்தில் தேடி பாருங்கோ அந்த‌க் காணொளி இப்ப‌வும் இருக்கு

இவ‌ரின் அன்ட‌ல்  புழுகு பேட்டிய‌ இதோட‌ நான் பார்க்க‌ விரும்ப‌ல‌

இத‌ற்கான‌ உண்மை ஒரு சில‌ நாட்க‌ளில் வெளிய‌ வ‌ரும்

வாலி அது ம‌ட்டும் திராவிட‌ இன்ப‌ம் காணுங்கோ.......................சூசை அண்ணா சொன்ன‌து

சீமான் நெடுமாற‌ன் வைக்கோ இவையை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்ல‌ சொல்லி அத‌ன் ஒலி நாடா 2009ம் ஆண்டே வெளியில் வ‌ந்து அதை நான் என் காதால் கேட்டு இருக்கிறேன்

வைக்கோ போன்ர‌ இன‌த் துரோகிய‌லை நான் ந‌ம்ப‌ மாட்டேன் அவ‌ர்க‌ளின் உத‌வி ந‌டிப்பு எல்லாம் 2009ம் ஆண்டோட‌ முடிந்து விட்ட‌து

இப்போது அவ‌ர் அர‌சிய‌லில் இல்லை அவ‌ரின் ம‌க‌னை MP ஆக்கி இருக்கிறார் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளுக்கு ம‌த்தியில்.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம், நாடே பேசுகிற நிலையில்...

அயலவர்கள். ஒருவர் நாய் வளர்த்தார். அடுத்தவர் ஆடு வளர்த்தார்.

ஆட்டை நாய் கடித்துவிட, பெரிய வாக்குவாதம்.

மத்தியதஸ்துக்கு வந்தது ஒரு அமைப்பு.

சட்டபூர்வமானதோ தெரியவில்லை.

நாயை தூக்கீல போட்டு படத்தை தமக்கு அனுப்ப உத்தரவு போட அவ்வாறே நடந்திருக்கிறது.

இப்போது விலங்கு நல அமைப்புகள் விடயத்தை கையில் எடுத்துள்ளன.

தென் பகுதியில் மாதனமுத்தா கதை பிரபலம். அதில் வரும் கதை போல, இனி ஆட்டை வெட்டி தின்றால் கதை முடிந்தது.

இவர்களை என்ன செய்வது?

https://www.dailymirror.lk/breaking-news/Mediation-Board-says-hang-the-dog-and-send-a-photo/108-300965

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பொய்யன், கபடன், ஏமாற்றுகாரன், வாயால் வடைசுடுபவன், புளுகன். அவனை ஓரம்கட்டுவோம், ஓரம் கட்டுவதால் யாருக்கு இலாபம்??

ஓரம் கட்டிவிட்டு தமிழினத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவரைக் கொண்டுவருவோம். அவர் யார்????? தெலுங்கனா? மலையாளியா? கன்னடனா? கர்னாடகனா? யார் அவர்?? நிச்சயம் அவர் ஒரு தமிழராக இருப்பார் என்பதில் தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நம்பிக்கை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

கோமாளி பெரியாரில்  கைவைக்க‌ 

த‌மிழ் நாட்டு எச்சை ஊட‌க‌ங்க‌ள் இப்ப‌டித் தான் எப்ப‌வும் ஆனால் சீமானை இந்த‌ அவ‌தூறுக‌ளால் வீழ்ந்த‌ முடியாது ப‌ஞ் ஜ‌யா🙏👍.................

சீமான் கேட்க்கும் ஒவ்வொரு கேள்விக்கும் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்திட‌ம் ப‌தில் இல்லை........ இப்ப‌டி வாய் மூடி மெள‌வுன‌மாய் இருந்த‌வ‌ர்க‌ளை இழுத்து வ‌ந்து பேட்டி எடுக்கின‌ம் என்றால் இத‌ன் உள் நோக்க‌ம் வேற‌

இவ‌ர் சொல்வ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை..............ஜ‌யா பார‌திராஜா த‌லைவ‌ரை 2006ம் ஆண்டு ச‌ந்திக்கும் போது த‌லைவ‌ர் பார‌திராஜாவிட‌ம் சீமான் ப‌ற்றி சில‌ விடைய‌ங்க‌ள் கேட்டு இருக்கிறார்

ஆனால் போட்டி கொடுப்ப‌ர்வ‌ர் சொல்லுகிறார் சீமான் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது ஒருத‌ருக்கும் அவ‌ரை தெரியாதாம்😁கால‌க் கொடுமை .................

ஜ‌யா ந‌டேஷ‌ன் தொட்டு ப‌ல‌ர் சீமான் கூட‌ அருகிள் நின்ற‌ ப‌ட‌ங்க‌ள் நீங்க‌ள் பார்த்து இருப்பிங்க‌ள்...............ந‌டேஷ‌ன் ஜ‌யா த‌ல‌மையில் தான் அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ரை ச‌ந்திச்சார் ச‌ந்திப்பு இர‌வு நேர‌ம் ந‌ட‌ந்த‌து👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

வாயாலே வடை சுட்ட செந்தமிழன் சீமான் அண்ணா இனித் தப்பிக்கவே முடியாது!

👇

காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்

வீடியோவை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை.

கேணல் சூசை அனுப்பியதாக சொல்லப்படும் ஆடியோ இவருக்குத்தான் அனுப்ப பட்டதாம்.

இப்படியானவர்களே சீமானின் உண்மை முகம் கண்டு விலகும் போது - இங்கே சிலர் பெட்டை கோழி கெக்கெரிப்பது போல் இன்னும் முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

2 hours ago, வீரப் பையன்26 said:

ஜ‌யா ப‌ர‌திராஜா த‌லைவ‌ரை ச‌ந்திச்ச‌ போது சீமானை ப‌ற்றி விசாரிச்சு இருந்தார் அதை ஜ‌யாவே நேர்கான‌லில் சொல்லி 

இருந்தார்

சீமான் ஈழ‌த்துக்கு வ‌ரும் போது அங்கு சீமானை ஒருத‌ருக்கும் தெரியாதாம் இந்த‌ கூ முட்டை.................ஜ‌யா ப‌ர‌திராஜா 2006க‌ளில் த‌லைவ‌ரை நேரில் ச‌ந்திச்ச‌வ‌ர்

இணைய‌த்தில் தேடி பாருங்கோ அந்த‌க் காணொளி இப்ப‌வும் இருக்கு

இவ‌ரின் அன்ட‌ல்  புழுகு பேட்டிய‌ இதோட‌ நான் பார்க்க‌ விரும்ப‌ல‌

இத‌ற்கான‌ உண்மை ஒரு சில‌ நாட்க‌ளில் வெளிய‌ வ‌ரும்

வாலி அது ம‌ட்டும் திராவிட‌ இன்ப‌ம் காணுங்கோ.......................சூசை அண்ணா சொன்ன‌து

சீமான் நெடுமாற‌ன் வைக்கோ இவையை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்ல‌ சொல்லி அத‌ன் ஒலி நாடா 2009ம் ஆண்டே வெளியில் வ‌ந்து அதை நான் என் காதால் கேட்டு இருக்கிறேன்

வைக்கோ போன்ர‌ இன‌த் துரோகிய‌லை நான் ந‌ம்ப‌ மாட்டேன் அவ‌ர்க‌ளின் உத‌வி ந‌டிப்பு எல்லாம் 2009ம் ஆண்டோட‌ முடிந்து விட்ட‌து

இப்போது அவ‌ர் அர‌சிய‌லில் இல்லை அவ‌ரின் ம‌க‌னை MP ஆக்கி இருக்கிறார் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளுக்கு ம‌த்தியில்.....................

ஒ…

இதுதான்..

ஆட்டுக்க மாட்ட விடுவதா 🤣.

சீமானை பற்றிய திரிக்கும் ஆட்டுக்கும் என்னையா சம்பந்தம்.

செய்யிற கோக்கு மாக்கை எல்லாம் செய்து போட்டு…

பிறகு நிர்வாகத்தின் மீது பிராது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

வீடியோவை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை.

கேணல் சூசை அனுப்பியதாக சொல்லப்படும் ஆடியோ இவருக்குத்தான் அனுப்ப பட்டதாம்.

இப்படியானவர்களே சீமானின் உண்மை முகம் கண்டு விலகும் போது - இங்கே சிலர் பெட்டை கோழி கெக்கெரிப்பது போல் இன்னும் முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒ…

இதுதான்..

ஆட்டுக்க மாட்ட விடுவதா 🤣.

சீமானை பற்றிய திரிக்கும் ஆட்டுக்கும் என்னையா சம்பந்தம்.

செய்யிற கோக்கு மாக்கை எல்லாம் செய்து போட்டு…

பிறகு நிர்வாகத்தின் மீது பிராது🤣.

நீங்க‌ள் கோமாளி பெரியாரின் பகுத்தறிவை வாசித்து வ‌ள‌ந்த‌ நீங்க‌ள்😁😁😁😁😁😁😁😁.................

நான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் கொள்கையை பார்த்து வள‌ந்த‌வ‌ன்💪👍...................ஜ‌யா பார‌திராஜா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஈழ‌த்து விடைய‌ம் ப‌ற்றி த‌மிழ் நாட்டு ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுத்தார் அந்த‌ பேட்டியில் பார‌திராஜா த‌லைவ‌ருட‌ன் ந‌ட‌ந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல‌ சொல்லி இருந்தார் அப்போது சீமான் ப‌ற்றி த‌லைவ‌ர் த‌ன்னிட‌ம் கேட்ட‌தாக‌வும் தான் சீமானை ப‌ற்றி சொன்ன‌தாக‌வும் சொல்லி இருந்தார்..............ஜ‌யா பார‌திராஜா ஈழ‌த்துக்கு போன‌து 2006 அல்ல‌து 2007.................ஆனால் இவ‌ர் சொல்லுகிறார் சீமான் ஈழ‌த்துக்கு வ‌ந்த‌ போது அங்கு இருக்கும் ஒருத‌ருக்கும் சீமானை தெரியாதாம்😁😂....................

நீங்க‌ள் திராவிட‌த்துக்கு க‌ழுவி விடும் ந‌ப‌ர்..................நான் திராவிட‌த்துக்கு முற்றிலும் எதிரான‌வ‌ன்😡.....................பெரியார் என்ற‌ போலி விம்ப‌ம் உடை ப‌ட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து 3000ஆயிர‌ம் பேர் இணைந்தார்க‌ள் என்று சொல்லும் அள‌வுக்கு அடி ஓவாரா விழுந்து இருக்கு உண்மையை ஆராய்ந்து பார்த்தால்  10ரூபாய் பாலாஜி த‌லைமையில் இணைந்த‌வ‌ர்க‌ள் தான் துண்ட‌றிக்கை பார்த்தும் ஒழுங்காய் வாசிக்க‌த் தெரியாத‌ முத‌ல‌மைச்ச‌ர் முன் நிலையில் இணைந்த‌வ‌ர்க‌ள் அதுவும் வெறும் 37 பேர் மீதம் ப‌ர‌ம்ப‌ரை தீமுக்காவின‌ர்..............................ஹிந்தி தினிப்புக்கு எதிராக‌ போராடி உயிர் நீத்த‌ குடும்ப‌த்துக்கு இப்ப‌ தான் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு வீடு க‌ட்டி கொடுக்குதாம்.................வீர‌ வ‌ண‌க்க‌ம் சொல்லாத‌ திராவிட‌ம் இப்போது வீர‌ வ‌ண‌க்க‌ம் வீர‌ வ‌ண‌க்க‌ம் சொல்லுகின‌ம்.................. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஓரம் கட்டுவதால் யாருக்கு இலாபம்??

ஈழத்தமிழருக்கு…

எப்படி?

எமக்கும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சி சார், சாரா 92% மக்களிற்கும் இடையே மலையாளி-தமிழர், சோனகர்-தமிழர் பிணக்கு போல் ஒரு வரலாற்று பிணக்கு வராமல் தடுப்பது ஈழத்தமிழருக்கு இலாபமே.

1 hour ago, Paanch said:

ஓரம் கட்டிவிட்டு தமிழினத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவரைக் கொண்டுவருவோம். அவர் யார்????? தெலுங்கனா? மலையாளியா? கன்னடனா? கர்னாடகனா? யார் அவர்?? நிச்சயம் அவர் ஒரு தமிழராக இருப்பார் என்பதில் தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நம்பிக்கை இல்லை.

அப்படி ஒருவர் வராமலே போனால் கூட, சீமான் உருவாக்கும் எதிர்மறை தாக்கத்தை விட அது பரவாயில்லை.

ஆனால் விஜை அப்படி ஒரு தலைவராக வரலாம்.

வருவார் என சொல்லவில்லை. வரலாம்.

சீமான் முழு மலையாளி.

விஜைக்கு அப்பாவாவது தமிழன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.