Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ ம‌ன‌ நோயாளிய‌ ந‌ம்பும் நீங்க‌ள் ச‌க‌ க‌ருத்தாள‌ர‌ ந‌ம்ப‌ வில்லை என்ப‌து வேடிக்கையாய் இருக்கு

அப்படி இல்லை பையா…

விஜி அண்ணியா, நாதமா என போட்டி வைத்தால் நான் எப்போதும் நாதம் பக்கம்தான்.

நாதத்தின் நம்பகதன்மை அவரின் சுஜ ஆக்கங்களை வைத்தே எல்லாரும் தெரிந்து கொண்டதுதான்.

அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

37 minutes ago, வீரப் பையன்26 said:

2009க‌ளில் சில‌ நாட்க‌ள் வெளிய‌ வ‌ந்து எம‌க்காக‌ ஆர்பாட்ட‌ம் செய்து விட்டு மீண்டும் சிறைக்குள்

இந்த கேப்பில் விஜி அண்ணி சொல்லும் சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்பதுதான் இந்த கயவர்கள் சொல்வது.

அதைதான் நாதத்தை தீர விசாரிக்க instructions கொடுத்துள்ளேன். அவரும் கிளம்பி போய்ட்டார்.

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்

இது திரியா இல்ல திண்ணையா எண்டு சந்தேகமா இருக்கு..😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த ஐடில எழுதி மாட்டத்தான் போறிங்க🤣

இந்த ஐடீல வரவே நேரமில்லை, உடான்சு!

நான் 23 டிசம்பரே தமிழக அசியலுக்கு கும்பிடு போட்டு ஒரு கோடு போட்டு விட்டேன்.

It doesn’t deserve my time anymore!!

ஆனால், தயவுடன், உந்தக் (கோதாரி பிடித்த) பெண் குறித்து கேள்வி வைத்தவுடன் கழண்டு கொண்டார் என்று பதியாதீர்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வீரப் பையன்26 said:

ஏதோ பெரிய‌ அறிவுஜீவி என‌ உங்க‌ளை நினைச்சேன் ப‌டு முட்டாளாய் இருக்கிறீங்க‌ள்

நீங்கள் என்னை அறிவு ஜீவி என,

சீமானை நல்லவர் என…

பலதை பிழையாக விளங்கி கொள்கிறீர்கள்.

42 minutes ago, வீரப் பையன்26 said:

ருணாதின்ட‌ பிற‌ந்த‌ நாள் தெரியும்

க‌ருணாநிதின்ட‌ திரும‌ண‌ நாள் தெரியுமா தெரிந்தால் எழுதுங்கோ உங்க‌ள் மூல‌மாய் தெரிந்து கொள்ள‌லாம்

👆 நாதம் இதையும் ஒருக்கா அதோட சேர்த்தே விசாரியுங்கோ. இதற்கான fee note ஐ பையனுக்கு அனுப்பிவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை பையா…

விஜி அண்ணியா, நாதமா என போட்டி வைத்தால் நான் எப்போதும் நாதம் பக்கம்தான்.

நாதத்தின் நம்பகதன்மை அவரின் சுஜ ஆக்கங்களை வைத்தே எல்லாரும் தெரிந்து கொண்டதுதான்.

அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த கேப்பில் விஜி அண்ணி சொல்லும் சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்பதுதான் இந்த கயவர்கள் சொல்வது.

அதைதான் நாதத்தை தீர விசாரிக்க instructions கொடுத்துள்ளேன். அவரும் கிளம்பி போய்ட்டார்.

சீமான் ப‌ற்றிய‌ உங்க‌ளுக்கு நூற்றுக்கு நூறு தெரியாட்டி பேசாம‌ இருக்க‌னும்

ஒரு இன‌ம் அழியுது அன‌க்கை

இவ‌ர் ஆர்பாட்டாம் அது இது என‌ அதிலையே இவ‌ரின் நேர‌ம் போய் விடுது

அதோட‌ விஜி அவான்ட‌ மேட்ட‌ர் 2007க‌ட‌சியில் முடிந்து விட்ட‌தாக‌ தான் க‌ட்சி பெடிய‌ங்க‌ள் என‌க்கு சொன்ன‌து.................

திராவுட‌ நையினாக்க‌ள் தான் இந்த‌ ம‌ன‌ நோயாளிக்கு காசு கொடுத்து பேச‌ வைக்கின‌ம்

பிரான்ஸ் த‌மிழ‌ச்சி வ‌லையில் இவ‌ர்க‌ள் சிக்கும் போது தெரியும் சீமானுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு த‌ங்க‌ளுக்கு இப்ப‌டி ஆகி விட்ட‌தே என‌.....................

4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது திரியா இல்ல திண்ணையா எண்டு சந்தேகமா இருக்கு..😂

ஓணாண்டி அது தான் என‌க்கும் தெரிய‌ல‌..............

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது திரியா இல்ல திண்ணையா எண்டு சந்தேகமா இருக்கு..😂

வந்தது யாரு நம்ம தல @Nathamuni.

அவர் பார்க்காத நிர்வாணமா, மன்னிக்கவும் நிர்வாகமா.

நிர்வாகம் திண்ணை இல்லை என்றாலும், திரியையே திண்ணையாக்கும் தீரன் எந்தலைவர் நாதம்.

3 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் ப‌ற்றிய‌ உங்க‌ளுக்கு நூற்றுக்கு நூறு தெரியாட்டி பேசாம‌ இருக்க‌னும்

ஒரு இன‌ம் அழியுது அன‌க்கை

இவ‌ர் ஆர்பாட்டாம் அது இது என‌ அதிலையே இவ‌ரின் நேர‌ம் போய் விடுது

அதோட‌ விஜி அவான்ட‌ மேட்ட‌ர் 2007க‌ட‌சியில் முடிந்து விட்ட‌தாக‌ தான் க‌ட்சி பெடிய‌ங்க‌ள் என‌க்கு சொன்ன‌து.................

திராவுட‌ நையினாக்க‌ள் தான் இந்த‌ ம‌ன‌ நோயாளிக்கு காசு கொடுத்து பேச‌ வைக்கின‌ம்

பிரான்ஸ் த‌மிழ‌ச்சி வ‌லையில் இவ‌ர்க‌ள் சிக்கும் போது தெரியும் சீமானுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு த‌ங்க‌ளுக்கு இப்ப‌டி ஆகி விட்ட‌தே என‌.....................

எதுக்கும் நாதம் விஜி அண்ணியின் டேட்ஸ்சோட வருவார். வெயிட் பண்ணி பாப்பம்.

7 minutes ago, Nathamuni said:

இந்த ஐடீல வரவே நேரமில்லை, உடான்சு!

நான் 23 டிசம்பரே தமிழக அசியலுக்கு கும்பிடு போட்டு ஒரு கோடு போட்டு விட்டேன்.

It doesn’t deserve my time anymore!!

ஆனால், தயவுடன், உந்தக் (கோதாரி பிடித்த) பெண் குறித்து கேள்வி வைத்தவுடன் கழண்டு கொண்டார் என்று பதியாதீர்கள்.

நன்றி!

ஆயிரம் திரி இருக்க, இந்த திரியை நீங்கள் திரும்பி வந்து எழுத தேர்ந்தெடுத்த போதே நினைத்தேன்.

நாதம் மானஸ்தன் - 2003 டிசம்பர் கிழிஞ்சது, கிழிஞ்சதுதான் என (கோட்டை சொன்னேன்).

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நியூஸ் 18 இல் செய்திகளின் ஒரு பகுதியாக அதன் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் வழங்கிய நேர்கணலின் சில பகுதிகள் போய்க் கொண்டிருந்தது.

அந்தப் பகுதிகளை பார்த்த பின், தலைவர் மேல் இன்னும் மரியாதை கூடியது. 'கொன்று போட்டீர்களே...................' என்று உலகத்தின் மேல் உள்ள கோபம் அப்படியே துயரமாக மாறி உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.

சீமானின் ஏமாற்று வேலைகளுக்கும், போலிப் பாவனைகளுக்கும் இது இன்னுமொரு சாட்சியமாகவும் இருந்தது. எவ்வளவு ஏமாற்று வேலைகள், அது அவ்வளவும் ஒரு தனிமனிதனின் நலனுக்கு மட்டுமே என்னும் போது இன்னும் அருவருப்பாகவும் இருந்தது. இன்று எங்களின் சமூகத்திற்கு, எம்மக்களுக்கு ஒரு மாற்று, ஒரு தலைமை இல்லை என்னும் நிலையில், சீமான் போன்ற ஒருவரை நம்பும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது ஒரு பெரும் ஏமாற்றம் ஆகவும் இருக்கின்றது.     

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

வந்தது யாரு நம்ம தல @Nathamuni.

அவர் பார்க்காத நிர்வாணமா, மன்னிக்கவும் நிர்வாகமா.

நிர்வாகம் திண்ணை இல்லை என்றாலும், திரியையே திண்ணையாக்கும் தீரன் எந்தலைவர் நாதம்.

எதுக்கும் நாதம் விஜி அண்ணியின் டேட்ஸ்சோட வருவார். வெயிட் பண்ணி பாப்பம்.

ஆயிரம் திரி இருக்க, இந்த திரியை நீங்கள் திரும்பி வந்து எழுத தேர்ந்தெடுத்த போதே நினைத்தேன்.

நாதம் மானஸ்தன் - 2003 டிசம்பர் கிழிஞ்சது, கிழிஞ்சதுதான் என (கோட்டை சொன்னேன்).

வந்த படியால் தான், எல்லோரும் கழண்டு கொள்ள, நான் மட்டுமே.... என்ற வீரப் பிரதாபத்தை காணக்கிடைத்தது.

இதை internet possessiveness என்றும் சொல்லுவினம்.

விளங்கினால் சரி. 😂 

தமிழக அரசியல் குப்பைக்குள் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நேற்று நியூஸ் 18 இல் செய்திகளின் ஒரு பகுதியாக அதன் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் வழங்கிய நேர்கணலின் சில பகுதிகள் போய்க் கொண்டிருந்தது.

அந்தப் பகுதிகளை பார்த்த பின், தலைவர் மேல் இன்னும் மரியாதை கூடியது. 'கொன்று போட்டீர்களே...................' என்று உலகத்தின் மேல் உள்ள கோபம் அப்படியே துயரமாக மாறி உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.

சீமானின் ஏமாற்று வேலைகளுக்கும், போலிப் பாவனைகளுக்கும் இது இன்னுமொரு சாட்சியமாகவும் இருந்தது. எவ்வளவு ஏமாற்று வேலைகள், அது அவ்வளவும் ஒரு தனிமனிதனின் நலனுக்கு மட்டுமே என்னும் போது இன்னும் அருவருப்பாகவும் இருந்தது. இன்று எங்களின் சமூகத்திற்கு, எம்மக்களுக்கு ஒரு மாற்று, ஒரு தலைமை இல்லை என்னும் நிலையில், சீமான் போன்ற ஒருவரை நம்பும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது ஒரு பெரும் ஏமாற்றம் ஆகவும் இருக்கின்றது.     

குருநாதா சீமான் எங்க‌ளுக்கு ஈழ‌ம்பெற்று த‌ருவார் என்று நாம் ஆத‌ரிக்க‌ வில்லை

அவ‌ர் பேசுகிர‌ த‌மிழ்தேசிய‌ம் எம‌க்கு ச‌ரி என்று ப‌டுது

திராவிட‌ மாட‌ல் என்று சொல்லி த‌மிழ் நாட்டையே ஒரு குடும்ப‌ம் ஆட்டைய‌ போடுது அவ‌ர்க‌ள் தான் காங்கிர‌ஸ் கூட‌ நின்று எம் இன‌த்தை அழித்தார்க‌ள்

சீமான் ஏதும் துரோக‌ம் 2009க‌ளில் செய்தாரா அல்ல‌து அப்போது த‌மிழ் நாட்டின் முத‌ல‌மைச்ச‌ரா இருந்து எம் இன‌ம் அழிவ‌தை சீமான் வேடிக்கை பார்த்த‌வ‌ரா

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளே திராவிட‌ மாவியாக்க‌ளின் கையில்.................

இன்று சீமான் போன் ப‌ண்ணி இருந்தார் நீங்க‌ள் சொல்லும் நெறியாள‌ருக்கு அவ‌ர் போன் எடுக்க‌ வில்லை...............ச‌ந்தோஷ் கூட‌ உங்க‌ள் முன் நிலையில் விவாத‌த்துக்கு நான் த‌யார் நீங்க‌ள் அத‌ற்க்கு த‌யாரான‌ கேட்டு இருக்கிறார்.........................இப்ப‌டியே விட்டால் ஆள் ஆளுக்கு க‌ண்ட‌ க‌ரும‌த்தை எல்லாம் சீமான் மேல் பூச‌ பாப்பின‌ம் சீமான் இத‌ற்க்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பார்..................

உந்த‌ ச‌ந்தோஷ் சீமான் போட்ட‌ பிச்சையில் தான் க‌ன‌டாவில் 14வ‌ருட‌மாய் வாழ்ந்து விட்டு இப்போது வ‌ந்து பேட்டி கொடுக்கிறார்

முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் த‌ங்க‌ளின் முக‌த்தை காட்டி பேட்டி கொடுக்க‌ த‌யார் ஆகி கொண்டு இருக்கின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

கடைசிவரை செந்தமிழன் சீமான் அண்ணா என்ற அயோக்கியன் நியூஸ் 18 விவாதத்துக்கு வரவேமாட்டார்!😂

Screenshot-20250127-193726-Chrome.jpg

இதில‌ யாழ் கோழை யார் பொய்ய‌ர்க‌ள் இப்ப‌ தெரியுதா

நீ தான் துணிஞ்சவ‌ன் ஆச்சே விவாத‌த்துக்கு வா 

ச‌ந்தோஷ் சீமான் அண்ணா என்னை ம‌ன்னித்துடுங்கோ வேண்டின‌ காசுக்கு மேல‌ கூவி விட்டேன்......................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வீரப் பையன்26 said:

குருநாதா சீமான் எங்க‌ளுக்கு ஈழ‌ம்பெற்று த‌ருவார் என்று நாம் ஆத‌ரிக்க‌ வில்லை

அவ‌ர் பேசுகிர‌ த‌மிழ்தேசிய‌ம் எம‌க்கு ச‌ரி என்று ப‌டுது

திராவிட‌ மாட‌ல் என்று சொல்லி த‌மிழ் நாட்டையே ஒரு குடும்ப‌ம் ஆட்டைய‌ போடுது அவ‌ர்க‌ள் தான் காங்கிர‌ஸ் கூட‌ நின்று எம் இன‌த்தை அழித்தார்க‌ள்

பையன் சார், சீமான் பேசும் தமிழ்த்தேசியம் சரி என்பதும், நித்தியோ அல்லது ஜக்கியோ அல்லது ரஜனிகாந்தோ பேசும் ஆன்மீகம் சரியென்பதிற்கும் வித்தியாசங்கள் கிடையாது. இந்த நால்வரும், இவர்களைப் போன்ற பலரும், வெறும் சுயலாப அடிப்படை ஒன்றில் மட்டுமே சில உயரிய, உணர்ச்சிகரமான விடயங்களை வியாபாரப் பொருட்கள் ஆக்கியுள்ளனர்.

சீமானை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, திமுக அப்படிச் செய்ததே, இப்படிச் செய்ததே என்பது ஒரு சரியான ஒப்பீடு இல்லை. இவர் அல்லாவிட்டால் அவர் என்று நாங்கள் இங்கு கருத்தாடவில்லை. மேலும் இவர் அல்லாவிட்டால் அவர் என்று இரண்டே இரண்டு தெரிவுகள் தான் எங்கள் முன் இருக்கின்றது என்றும் இல்லை.

சீமானின் மேல் இருக்கும் அதே அருவருப்பு தான் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் மீதும் இன்றும் இருக்கின்றது.

பிரணாப் முகர்ஜி இறந்த பொழுது, இதே நியூஸ் 18 இல் பிரணாப் முகர்ஜியைப் பற்றி ஒரு தொகுப்பு போட்டார்கள். அந்த தொகுப்பில் பிரணாப் முகர்ஜி எவ்வாறு கருணாநிதியை எங்கள் மக்கள் மீதான் நடவடிக்கைகளுக்கு சம்மதிக்க வைத்தார் என்றும், இது பிரணாப் முகர்ஜியின் ஒரு சாதனை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இன்று சீமான் மேல் வரும் ஒவ்வாமையும், அருவருப்பும், அன்றே கருணாநிதியின் மீதும், பிரணாப் முகர்ஜியின் மீதும் வந்தது.

நான் சொல்ல வருவது என்னவென்றால், சீமான் பற்றிய குற்றச்சாட்டுகள் வரும் வேளைகளில் எல்லாம், திமுகவையோ, வைக்கோவையோ, வேறு எவரையோ ஒப்பீடாகக் கொண்டு வந்து, அவர்கள் செய்யாததையா சீமான் செய்து விட்டார் என்று கருத்து வைப்பது சரியான நியாயப்படுத்தல் இல்லை என்பதே.

நியூஸ் 18 தாங்கள் இந்த விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றே இன்றும் அவர்களின் தளத்தில் போட்டிருக்கின்றார்கள்:

https://tamil.news18.com/tamil-nadu/news18-tamil-nadu-ready-to-arrange-debate-between-seeman-and-cameraman-santhosh-nw-azt-ws-b-1712912.html

நியூஸ் 18 திமுகவின் கைகளில் இல்லை. அது அதைவிட உச்சத்தில் இருக்கின்றது. திமுகவால் நியூஸ் 18 ஐ தொடவே முடியாது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

கார்த்திய‌ செல்வ‌ன் ஒரு திராவிட‌ நெறியாள‌ர் இன்று சீமான் இவ‌ருக்கு போன் ப‌ண்ண‌ இவ‌ர் எடுக்க‌ வில்லை

இவ‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு புதிய‌த‌லைமுறை ஊட‌க‌த்தில் இருந்தார்

இப்போது த‌க‌வ‌ல் வ‌ருது ச‌ந்தோஷ் த‌ன்னால் நேர‌டி விவாத‌த்துக்கு க‌ல‌ந்து கொள்ள‌ முடியாது என்று

இந்த‌ ச‌ந்தோஷ் சீமானின் ஆத‌ர‌வோடு க‌ன‌டாவுக்கு த‌ப்பி சென்ற‌வ‌ர்................இப்போது இவ‌ர் நியூஸ்18க்கு பேட்டி கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் எங்கிருந்து வ‌ந்த‌து

வெங்கையாம் ப‌ட‌ம் எடுத்த‌ ந‌ப‌ர் சொல்லுகிறார் தான் தான் சீமானின் ப‌ட‌த்தை எடிட் செய்து கொடுத்தேன் என‌

இவ‌ர் சொல்லுகிறார் சீமான் த‌லைவ‌ர் கூட‌ எடுத்த‌ காணொளியும் இருக்கு என்று

இவ‌ர்க‌ள் ஏன் தேவை இல்லா புர‌ளிய‌ கில‌ப்புகின‌ம்

சொறியார் மேல‌ கைவைக்க‌ அவ‌தூற‌யா கையில் எடுப்ப‌து குருநாதா................

2008ம் ஆண்டே நான் யாழில் எழுதி நான் க‌ருணாநிதிய‌ ந‌ம்ப‌ வேண்டாம் என்று 

அப்ப‌ இருந்த‌ யாரோ ஒரு க‌ள‌ உற‌வு க‌ருணாநிதியின் அர‌சிய‌ல் த‌ந்திர‌ம் என‌க்கு தெரியாது என‌ என்னை ம‌ட்ட‌ம் த‌ட்டினார்

நீங்க‌ளே சொல்லுறீங்க‌ளே க‌ருணாநிதின்ட‌ உண்ணாவிர‌த‌த்தை பார்த்து வெறுத்தவ‌ர்க‌ளின் நீங்க‌ளும் ஒருவ‌ர் என‌

நான் க‌ருணாநிதியையும் அவ‌ரின் குடும்ப‌ங்க‌ளையும் பார்த்து வெறுத்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கு குருநாதா......................

எங்க‌ட‌ என‌ம் அழியும் போது மானாட‌ ம‌யில் ஆட‌ நிகழ்ச்சிய‌ ந‌ட‌த்தின‌வ‌ர் தானே க‌ருணாநிதி

அப்ப‌ எங்க‌ளுக்கு கோவ‌ம் எப்ப‌டி இருக்கும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

நியூஸ் 18 திமுகவின் கைகளில் இல்லை. அது அதைவிட உச்சத்தில் இருக்கின்றது. திமுகவால் நியூஸ் 18 ஐ தொடவே முடியாது.

யெஸ்.. நியூஸ் 18 யார் கன்றோல் என்பது ஊருக்கே தெரியும்.. சீமான்மீதான அண்மைய தாக்குதலை ஆரம்பிச்சுவச்சதே நியூஸ்18 தான்.. அப்போ B ரீமை ஓனரே அழிக்கிறாங்க அப்புடித்தானே.. ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யெஸ்.. நியூஸ் 18 யார் கன்றோல் என்பது ஊருக்கே தெரியும்.. சீமான்மீதான அண்மைய தாக்குதலை ஆரம்பிச்சுவச்சதே நியூஸ்18 தான்.. அப்போ B ரீமை ஓனரே அழிக்கிறாங்க அப்புடித்தானே.. ?

சீமான் மீதான அண்மைக்கால தாக்குதலை ஆரம்பித்து வைத்தது சீமான் தான். சீமான் பெரியாரைப் பற்றி சொல்லிய கருத்துகள் தான் சமீபத்திய நிகழ்வுகளின் தொடக்கம்.

சீமான் மெதுவாக ஒரு சின்ன ஊர்வன என்று தான் இலேசாக ஒரு வாலைப் பிடித்து இழுத்தார், இப்பொழுது அது ஒரு பாம்பாக படமெடுத்துக் கொண்டு நிற்கின்றது.

நியூஸ் 18 இன் முதலாளி பாஜகவின் அபிமானி தான், ஆனால் இதுவரை காலமும் நியூஸ் 18 குழுமம், இந்தியாவின் பல மொழிகளிலும், மிக நல்லதொரு ஊடகமாகவே இருந்து வருகின்றது. இன்னமும் அவர்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

சீமான் மீதான அண்மைக்கால தாக்குதலை ஆரம்பித்து வைத்தது சீமான் தான். சீமான் பெரியாரைப் பற்றி சொல்லிய கருத்துகள் தான் சமீபத்திய நிகழ்வுகளின் தொடக்கம்.

அது சீமானின் பெரியார் மீதான தாக்குதல்.. நான் சொல்வது சீமான் மீதான அதன் எதிர்வினை தாக்குதல் ஆரம்பம்.. 

உங்களுக்கு நான் சொல்லவந்தது விளங்கேல்லை.. நம்பிட்டம்..😂

என் பொருளை எடுத்து என்னையே போடுறாராம்.. நைஸ் றை..😂

5 minutes ago, ரசோதரன் said:

நியூஸ் 18 இன் முதலாளி பாஜகவின் அபிமானி தான், ஆனால் இதுவரை காலமும் நியூஸ் 18 குழுமம், இந்தியாவின் பல மொழிகளிலும், மிக நல்லதொரு ஊடகமாகவே இருந்து வருகின்றது. இன்னமும் அவர்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை.  

இல்லை இல்லை.. அவர்கள் யார் என்பது எல்லாம் இந்தியாவில் பல இணையங்களில் தெளிவாக எழுதப்பட்டது.. அதன்படி பார்த்தால் B ரீமை ஓனரே அழிக்கிறார்.. இனி மிஞ்சப்போறது பி டீமே இல்ல.. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

சீமான் மீதான அண்மைக்கால தாக்குதலை ஆரம்பித்து வைத்தது சீமான் தான். சீமான் பெரியாரைப் பற்றி சொல்லிய கருத்துகள் தான் சமீபத்திய நிகழ்வுகளின் தொடக்கம்.

சீமான் மெதுவாக ஒரு சின்ன ஊர்வன என்று தான் இலேசாக ஒரு வாலைப் பிடித்து இழுத்தார், இப்பொழுது அது ஒரு பாம்பாக படமெடுத்துக் கொண்டு நிற்கின்றது.

நியூஸ் 18 இன் முதலாளி பாஜகவின் அபிமானி தான், ஆனால் இதுவரை காலமும் நியூஸ் 18 குழுமம், இந்தியாவின் பல மொழிகளிலும், மிக நல்லதொரு ஊடகமாகவே இருந்து வருகின்றது. இன்னமும் அவர்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை.  

பெரியாரை சீமான் தொட‌ர்ந்து தானே அடிக்கிறார் குருநாதா...............நேருக்கு நேர் மோத‌ விவாத‌ம் செய்ய‌ துணிவு இல்லை இப்ப‌டியான‌ சில்ல‌றைக‌ளை இற‌க்கி விடுவ‌து...................

இதில் என்ன‌ பெரியாரை தொட்ட‌த‌ன் விலைவு

நாமும் சேர்ந்து அடிப்போம் திருட்டு திராவிட‌ கும்ப‌ல‌

த‌மிழ‌க‌ வெற்றிக் க‌ழ‌ த‌லைவ‌ர் விஜேய் இதுவ‌ரை பெரியார் ப‌ற்றி வாய் திற‌க்க‌ வில்லை.................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது சீமானின் பெரியார் மீதான தாக்குதல்.. நான் சொல்வது சீமான் மீதான அதன் எதிர்வினை தாக்குதல் ஆரம்பம்.. 

உங்களுக்கு நான் சொல்லவந்தது விளங்கேல்லை.. நம்பிட்டம்..😂

என் பொருளை எடுத்து என்னையே போடுறாராம்.. நைஸ் றை..😂

🤣...................

அந்த 'மோட்' இலேயே நீங்கள் எப்பவும் இருக்கின்றீர்கள், ஓணாண்டியார்.................😜.

சீமானின்பெரியார் மீதான விமர்சனத்தின் பின் தாக்குதலை முதலில் ஆரம்பித்தது பெரியார் கட்சியைச் சேர்ந்தவர்களும், திராவிட கழகத்தவர்களும். பின்னர் பல பிரபலங்கள் சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் தான் அதிமுக ஜெயக்குமாரே கருத்துச் சொன்னார். பின்னர் அன்புமணி சொன்னர்................பின்னர் தான் நியூஸ் 18 உள்ளே வந்தது.

 என்ன, எழுத்தாளர்கள் பலர் இன்னும் கருத்து வைக்கவில்லை. அவர்களைத் தான் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

பெரியார் பற்றி சீமான் பேசியது சரியா, தவறா, பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவாரா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்..,

ஒரு கட்சியின் தலைவர் இந்த மாதிரி விடயங்களில் பேசுவது தேவை இல்லாத விஷயம்… திமுக மாதிரி கட்சிகளிடம் இந்த மாதிரி விஷயங்களில் சீமான் கற்றுகொள்ள வேண்டும்... அவர்கள் இந்த மாதிரி யார் மீதாவது சேறை வாரி இறைக்க வேண்டுமானால், ஸ்டாலினோ, உதயநிதியோ நேரடியாக எதும் சொல்ல மாட்டார்கள்... எதாவது இரண்டாம், மூன்றாம், கடை நிலை ஆட்களிடம் ப்ரொஜெக்டை ஒப்படைத்து விடுவார்கள்…

பேசாமல் சாட்டைய கோத்து உட்டிருக்கலாம்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

இதில் என்ன‌ பெரியாரை தொட்ட‌த‌ன் விலைவு

த‌மிழ‌க‌ வெற்றிக் க‌ழ‌ த‌லைவ‌ர் விஜேய் இதுவ‌ரை பெரியார் ப‌ற்றி வாய் திற‌க்க‌ வில்லை.................

பையன் சார், விஜய் அன்றே அறிக்கை ஒன்றை, வழமை போல பனையூரிலிருந்து, விட்டிருந்தார். பெரியார் அவரின் கொள்கை தலைவர் என்று ஆரம்பித்து, அந்த அறிக்கை சீமானை சினம் கொண்டு எதிர்த்தது. இது விஜய்யின் வழமையான ஒரு வகை 'மேட்டுக்குடி அரசியல்'. அவருடைய ரசிகர்களே விஜய்யின் அறிக்கை அரசியலால் துவண்டு போயிருக்கின்றார்கள், இதில் நாங்கள் எங்கே விஜய்யின் அறிக்கையை தேடி வாசிக்கப் போகின்றோம்..........

சீமான் பெரியாரை ஏற்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சீமான் இந்த தடவை ஒரு தமிழ்ப் படத்தின் கடைசி சண்டைக் காட்சி போல ஆரம்பித்து இருக்கின்றார்............... கிளைமாக்ஸ் ஃபைட்......😜.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

 என்ன, எழுத்தாளர்கள் பலர் இன்னும் கருத்து வைக்கவில்லை. அவர்களைத் தான் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் 80 வீதமான எழுத்தாளர்கள் திமுக தானே.. மீதி 20 வீதத்தில்தான் அதிமுக விசிக கம்யூனிஸ்ட் வருவார்கள்.. அப்புறம் அவர்கள் திமுக பக்கமாகத்தானே எழுதிவார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், விஜய் அன்றே அறிக்கை ஒன்றை, வழமை போல பனையூரிலிருந்து, விட்டிருந்தார். பெரியார் அவரின் கொள்கை தலைவர் என்று ஆரம்பித்து, அந்த அறிக்கை சீமானை சினம் கொண்டு எதிர்த்தது. இது விஜய்யின் வழமையான ஒரு வகை 'மேட்டுக்குடி அரசியல்'. அவருடைய ரசிகர்களே விஜய்யின் அறிக்கை அரசியலால் துவண்டு போயிருக்கின்றார்கள், இதில் நாங்கள் எங்கே விஜய்யின் அறிக்கையை தேடி வாசிக்கப் போகின்றோம்..........

சீமான் பெரியாரை ஏற்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சீமான் இந்த தடவை ஒரு தமிழ்ப் படத்தின் கடைசி சண்டைக் காட்சி போல ஆரம்பித்து இருக்கின்றார்............... கிளைமாக்ஸ் ஃபைட்......😜.  

ச‌ந்தோஷ் என‌த‌னால் விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை குருநாதா

யாழில் சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ள் துள்ளிகுதிச்சின‌ம் சீமான் ச‌ரி என‌

நீங்க‌ள் நினைப்ப‌து போல் இந்த‌ சொறியாரிஸ்சுக‌ளால் சீமானை ஒன்றும் செய்ய‌ முடியாது

இர‌ண்டு ல‌ச்சுமிக‌ளை வைச்சு விளையாட்டு காட்டினார்க‌ள் அதில் ஒரு ல‌ச்சுமி காணாம‌ போய் விட்டா

இப்போது திராவிட‌ கும்ப‌ல்க‌ளால் இய‌க்க‌ப் ப‌டும் ல‌ச்சுமி இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இவ‌ர்க‌ள் சொல்லித் தான் , தான் அப்ப‌டி காணொளி விட்டேன் என‌ புது காணொளி விடும்😁😛...................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டில் 80 வீதமான எழுத்தாளர்கள் திமுக தானே.. மீதி 20 வீதத்தில்தான் அதிமுக விசிக கம்யூனிஸ்ட் வருவார்கள்..

👍...............

மனுஷ்யபுத்திரன் முன்னரே திமுகவின் அரசவைப் புலவர் போலத் தான்............ இப்ப இன்னும் கூட. இப்படித்தான், நீங்கள் சொல்வது போலவே, பல முன்னணி எழுத்தாளர்களும்.

விசிக மற்றும் இடதுசாரிகளின் பக்கம் இருப்பவர்கள் குறைவு என்றாலும், இவர்கள் நன்றாக எழுதுவார்கள்.

அதிமுக என்றாலே................. சிக்கல் தான். ராஜூ அண்ணனிடமும், ஜெயக்குமாருடனும் இலக்கியம் பேச எக்கச்சக்கமான பொறுமை வேண்டும் என்று நினைக்கின்றேன்.........................

அரசு ஊழியர்களும் இதே போலவே. ஒரு 70 வீதம் திமுக தான்.......... நிறையக் கதைகள் சொல்வார்கள் தமிழ்நாட்டு நண்பர்கள் இது சம்பந்தமாக. எல்லாவற்றையும் மீறி எம்ஜிஆர் செய்தது ஒரு இமாலயச் சாதனை தான்.................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ந்தோஷ் என‌த‌னால் விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை குருநாதா

சந்தோஷ் ஏன் பின்வாங்குகின்றார் என்று தெரியவில்லை, பையன் சார். இப்படியான ஒரு தகவலும் நியூஸ் 18 தளத்திலும் இன்னும் வரவில்லை. நான் நியூஸ் 18 தினமும் பார்ப்பேன், இன்று இரவு ஏதாவது சொல்லுகின்றார்களா என்று பார்ப்போம்.......................

நீங்கள் சந்தோஷ் பின்வாங்கும் தகவலை எங்கிருந்து அறிந்தீர்கள்...............

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

முக‌ நூலில் குருநாதா👍..............

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

👍...............

மனுஷ்யபுத்திரன் முன்னரே திமுகவின் அரசவைப் புலவர் போலத் தான்............ இப்ப இன்னும் கூட. இப்படித்தான், நீங்கள் சொல்வது போலவே, பல முன்னணி எழுத்தாளர்களும்.

விசிக மற்றும் இடதுசாரிகளின் பக்கம் இருப்பவர்கள் குறைவு என்றாலும், இவர்கள் நன்றாக எழுதுவார்கள்.

அதிமுக என்றாலே................. சிக்கல் தான். ராஜூ அண்ணனிடமும், ஜெயக்குமாருடனும் இலக்கியம் பேச எக்கச்சக்கமான பொறுமை வேண்டும் என்று நினைக்கின்றேன்.........................

அரசு ஊழியர்களும் இதே போலவே. ஒரு 70 வீதம் திமுக தான்.......... நிறையக் கதைகள் சொல்வார்கள் தமிழ்நாட்டு நண்பர்கள் இது சம்பந்தமாக. எல்லாவற்றையும் மீறி எம்ஜிஆர் செய்தது ஒரு இமாலயச் சாதனை தான்.................

தமிழ்நாட்டு திமுக/அதிமுக கட்சிகளின் உட்கட்டமைப்பு அடுக்குகளால் ஆனது…

இந்த அடுக்குகளை பொறுத்து அதிகாரமும்,செல்வமும் வேறுபடும்…

இது மேலிருந்து கீழாக பிரமிட் வடிவில் செல்கிறது…

உதாரணத்திற்கு திமுகவை எடுத்து கொள்ளுங்கள்…

இந்த பிரமிட்டின் உச்ச அடுக்கு கருணாநிதியின் குடும்பம்…

அதிகாரத்தின் உச்சத்தையும், செல்வம் ஈட்டுவதற்கான வழியை அதிகம் கொண்ட குடும்பம்…

இந்த கருணாநிதியின் குடும்பம் இந்த உச்ச அடுக்கை இனி வேறு எவருக்கும் விட்டு தராது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது…

• #இது திமுகவின் எல்லா உறுப்பினர்களுக்கும் தெரியுமா?

நன்றாக தெரியும்.அப்படியானால் ஏன் எந்தவித தார்மீக கோபமும் வராமல் தொடர்ந்து கடுமையாக கட்சிக்காக உழைக்கிறார்கள்..?

காரணம் இந்த பிரமிட்டின் ஏதாவது ஒரு அடுக்கில் இருந்தாலே செல்வத்தை ஈட்டுவதற்கான வழியும் அதனோடு அதிகாரத்தை சுவைப்பதற்கான வழியும் இருக்கிறது…

கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியலை தார்மீக கோபத்துடன் கேள்வி கேட்டால் தூக்கி வீசப்படுவார்கள்…. செல்வத்தை ஈட்டுவதற்கான வழி அடைபடும்...

அதனால் தங்களின் பலத்திற்கு ஏற்ற அடுக்கிலே இருப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்…

அவர்களின் முயற்சியெல்லாம் எப்படி தனக்கு மேல் இருக்கும் அடுத்த அடுக்கிற்கு போவது என்பதாக இருக்கும்… 

மேல் அடுக்கு என்பது அதிக அதிகாரம் அதிக செல்வம்.:.

கருணாநிதியின் குடும்பத்திற்கு அடுத்த அடுக்கிலே சீனியர் திமுகவினர் வருவார்கள்… இதுதான் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு இத்யாதி , இத்யாதிகளின் அடுக்கு…

இவர்களின் இலக்கு இதே அடுக்கிலே தொடர்ந்து நீடிப்பது... தனது அடுத்த தலைமுறையை இந்த அடுக்கிலே கொண்டு அமர்த்துவது... அதே அதிகாரம் அதே செல்வம்…

இப்படியே இந்த அடுக்குகள் கடைக்கோடி உறுப்பினர் வரை செல்லும்…

இந்த பிரமிட் அடுக்கிலே உள்ள அனைவருமே அல்லது பெரும்பாலோனோர் பயனாளர்கள்தான்…

மேல் அடுக்கு அதிக அதிகாரம், அதிக செல்வம்…
கீழ் அடுக்கு ஒப்பீட்டளவில் குறைவான அதிகாரம் குறைவான செல்வம்… 

கருணாநிதி குடும்பத்தின் அடுக்கு, சீனியர் திமுகவினரின் அடுக்கு என்பது பல ஆயிரக்கணக்கான கோடிகளை செல்வமாக ஈட்டிய அடுக்கு…

இங்கு திமுக என்பது ஒரு நிறுவனம்... பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட நிறுவனம்... அந்த நிறுவனத்திற்குள்ளே உள்ள உறுப்பினர்கள் அடுத்த மேல் அடுக்கிற்கு செல்வதற்காக அடித்து பிடித்து உழைப்பார்கள்…காரணம் அனைவரும் பயனாளர்கள்…

இந்த நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கான கருத்தியல் முகமூடிதான் திராவிடம், சமூக நீதி இத்யாதி இத்யாதி எல்லாம்…

• #இனி இந்த பிரமிட்டுக்கு வெளியே உள்ள பயனாளர்கள்

இந்த வெளியே உள்ள பயனாளர்கள்தான் நாம் காணும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், முற்போக்காளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தொழில் முனைவோர்கள், நடிகர்கள் இத்யாதி இத்யாதி.

இவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட கருத்தியலோடு இணைத்து புள்ளி விபரங்களை அள்ளி வீசுவார்கள். 

• #இது எல்லாம் அவர்கள் உளப்பூர்வமாக செய்பவைகளா?

இல்லை. இவர்களும் இதை லாப நட்ட கணக்கோடுதான் செய்கிறார்கள்.

இவர்களுக்கு தமது துறைகளில் அவரவர் ஏற்றத்திற்கான வழிகளை, செல்வத்தை பெருப்பிக்கும் வகைகளை, புதிய பதவிகளை, புதிய வாய்ப்புகளை அடைவதுதான் இலக்கு.

இந்த இலக்கை நோக்கி காய் நகர்த்துவதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்புதான் சகல வளர்ச்சிகளும் திராவிட கட்சிகளால் மட்டுமே நிகழ்ந்தது என கம்பி கட்டும் கதை சொல்வது எல்லாம். 

அதை தாம் சார்ந்த துறையிற்கே உரித்தான தொழில் நிபுணத்துவத்தோடு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

• #இந்த அடுக்கை திமுக மட்டும்தானா கொண்டிருக்கிறது?

இல்லை. இதே இடத்தில் அதிமுகவையும் நீங்கள் பொருத்தலாம்... மற்ற சில கட்சிகளையும் பொருத்தலாம்...

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக மட்டுமே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் இவை இரண்டுக்கும் மேலேயுள்ள பந்தி் அதிகமாக பொருந்தும்….

• #இதற்கிடையே இந்திய ஒன்றியத்தின் ஒற்றைமயமாக்கலை எதிர்ப்பது, மாநில சுயாட்சி, ஆரியத்தை எதிர்ப்பது போன்ற கப்சாக்கள்..

நான் கூறிய திமுக, அதிமுக போன்ற நிறுவனமாக இயங்கும் கட்சிகளின் பிரமிட்டுகளின் உயர் அடுக்குகளிலே இருப்பவர்கள் பல ஆயிரம் கோடி செல்வத்தை உடையவர்கள்...

சட்டரீதியாக இத்தனை ஆயிரம் கோடியை உழைப்பதற்கான எந்த பின்னணியும் இல்லாமல் ஈட்டிய செல்வம் அது…

இவர்களைத்தான் இந்திய ஒன்றியத்தின் பொறிமுறையை வீழ்த்த வந்தவர்கள் பாஜகவை வீழ்த்த வந்தவர்கள் என நீங்கள் எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் ரைட்டப் எழுதி கொண்டிருக்கிறார்கள்….

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.