Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.

கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீனியர்கள்

பட மூலாதாரம்,EPA

வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீனியர்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்

பாலத்தீனியர்கள் கடந்த சனிக்கிழமை அன்றே, வடக்கு நோக்கி திரும்புவதாக இருந்தது. ஆனால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற பெண்ணை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையால், இஸ்ரேல் நெட்ஸாரிம் பாதையை அடைத்து வைத்திருந்தது.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

 
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்பட்டது. யெஹுத், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 30) சிறைபிடிக்கப்பட்ட மற்ற இரண்டு பணயக்கைதிகளுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.

இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களுக்கு தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிர்ச்சியூட்டும் யதார்த்த நிலை

காஸா நகரின் வடக்கு பகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காஸா நகரின் வடக்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன

சிலர் இந்த தருணத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் வடக்கு காஸாவை அடைந்ததும், அங்கு அவர்கள் கண்ட யதார்த்த நிலை அதிர்ச்சியூட்டுவதாவே இருந்தது.

காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன.

அதிர்ச்சியூட்டும் யதார்த்த நிலை

பட மூலாதாரம்,REUTERS

வடக்கு காஸாவை அடைந்த குடும்பங்களில், முடிதிருத்தும் கலைஞரான முகம்மது இமாத் அல்-தினின் குடும்பமும் அடங்கும். தனது வீட்டை மீண்டும் பார்க்கும் ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

தனது வீடு முற்றிலும் எரிந்து போயிருந்ததாகவும், தனது சலூன்-அழகு நிலையம் திருடர்களால் சூறையாடப்பட்டதாகவும், அதன் பின்னர் அருகிலுள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அது மேலும் சேதமடைந்ததாகவும் முகம்மது இமாத் பிபிசி நிருபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

வடக்கு காஸா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வடக்கு காஸாவிற்கு வரும் மக்களுக்கு தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்

மற்றொன்று, லுப்னா நாசர் என்ற பெண்ணின் குடும்பம். அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன், வடக்கு காஸாவில் உள்ள தனது கணவருடன் மீண்டும் இணைவதற்காக, சோதனைச் சாவடியின் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருந்தார்.

ஆனால் தனது வீடு இருந்த பகுதியை அடைந்ததும் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது வீடு அழிக்கப்பட்ட இடத்திற்கு அருகே, அவரது கணவர் ஒரு கூடாரத்தில் வசித்து வருவதைக் கண்டார் லுப்னா.

வடக்கு காஸா

பட மூலாதாரம்,REUTERS

"எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்துவிட்டது, ஆனால் அந்த சந்தோஷத்தை வீட்டை இழந்ததன் துக்கம் மறைத்துவிட்டது. இப்போது வடக்கு காஸாவில் உள்ள ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம்" என்று பிபிசியிடம் கூறினார் லுப்னா நாசர்.

வடக்கு காஸா

பட மூலாதாரம்,REUTERS

ஹமாஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, "இதுவரை திரும்பி வந்தவர்கள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வடக்கு காஸாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்களுக்கு, தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்."

வடக்கு காஸாவில் இத்தகைய நிலை உள்ளபோதிலும், தெற்கு காஸாவில் பல மாதங்களாக துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க தருணமாகவே உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c07kvz84r8jo

இந்தப் படங்களைப் பார்க்கையில் 1995 அக்டோபர் 30 யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்தப் படங்களைப் பார்க்கையில் 1995 அக்டோபர் 30 யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?

இதே போல செய்திகளில் பார்த்த ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
காஸா

பட மூலாதாரம்,GETTY 

சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்பாண‌த்தை கைப்ப‌ற்றிய‌ போது இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ள் நான் சொல்வ‌து ச‌ரியா அண்ணா
..............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் மூலம் இடம்பெயர்வது என்பது சொல்லணா துயரங்கள் நிறைந்தது.
போர் இல்லா உலகம் வேண்டும். அவரவர் சொந்த மண்ணில் வாழும் கொடுப்பினை எல்லோர்க்கும் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

இதே போல செய்திகளில் பார்த்த ஞாபகம்

வலிகாம மக்கள் தென்மராட்சி நோக்கி A9 பாதையில் இடம்பெயர்ந்து போனது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

15 மாதங்களுக்கு பின்னர் காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்!

15 மாதங்களுக்கு பின்னர் காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது  15 மாதங்களுக்கு பின்னர் தற்போது  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்தவகையில்  முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் ஒப்பந்தப்படி பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

இதனால் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் இடம்பெயர்ந்த 6.5 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ” பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும் வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில் வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில், பாலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாக கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டனர். இது போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் உருவாக்கிய இராணுவ மண்டலமாகும். இந்த பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான வீதி முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1418488

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.