Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு உள்ளிட்ட  சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

Published By: DIGITAL DESK 3   28 JAN, 2025 | 09:53 AM

image
 

நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டது.

இன்றும் மேற்கூறிய பகுதிகளில் 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ca631524-ec9e-4752-bf7b-af181a12cfbf.jpg

காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு  அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

95.jpg

https://www.virakesari.lk/article/205092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் காற்றின் தரம் குறைவு; பாதுகாத்துக் கொள்ள 8 பாதுகாப்பு குறிப்புகள்

Published By: VISHNU    29 JAN, 2025 | 10:21 PM

image

இந்தியாவின் காற்று ஓட்டம் காரணமாக இலங்கை முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்திற்குக் குறைந்துள்ளது, கொழும்பு உட்பட பல மாவட்டங்கள் அதிகரித்த மாசுபாட்டை அனுபவித்து வருகின்றன என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று NBRO இன் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவின் இயக்குனர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். காற்றின் தரம் மோசமடைவதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

மோசமான காற்றின் தரத்திற்கு மத்தியில் பாதுகாப்பு குறிப்புகள்

சுகாதார அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்

  • வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்
  • முகக்கவசங்களை அணியுங்கள்
  • ஜன்னல்களை மூடி வைக்கவும்
  • காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துங்கள்
  • நிறைய தண்ணீர் குடியுங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுங்கள்
  • அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் காற்றின் தர அளவுகள் குறித்து கண்காணித்துகொள்ளுங்கள்
  • ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்கவும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

https://www.virakesari.lk/article/205283

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்

Published By: DIGITAL DESK 3   30 JAN, 2025 | 10:45 AM

image
 

இன்று வியாழக்கிழமை (30) நாள் முழுவதும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும்.

அதன்படி, காற்றின் தரக்குறியீடு 44 மற்றும் 72க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று புதன்கிழமை (29) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலும் வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, களுத்துறை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காணப்பட்டது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

456.jpg

https://www.virakesari.lk/article/205300

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of one or more people and text

 

May be an image of body of water and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முககவசங்களை அணியவும் - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

Published By: VISHNU   30 JAN, 2025 | 06:49 PM

image

(செ.சுபதர்ஷனி)

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக்கவசங்களை அணியுமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (30) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் இந்நாட்களில் வளி மாசு அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் சிறுவர்களிடையே சுகாதார பிரச்சினைகளும் உயர்வடைந்துள்ளன. விசேடமாக மூச்சுத்திணறல், இருமல், ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் சார்ந்த வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கும் நோய் நிலைமை தீவிரமடையலாம். ஆகையால் அனைவரும் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.

சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். நாட்பட்ட சுவாச நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முககவசங்களை அணிவது நல்லது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதியான வைத்தியரை நாடுங்கள். அத்தோடு இன்புளுவென்சா, சிக்கன் குனியா போன்ற வைரஸ் தொற்றுகளும் சமூகத்தில் வெகுவாக பரவி வருகிறது.

பாடசாலை மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள இக்காலத்தில் சிறுவர்கள் பல மணி நேரமாக வெளியிடங்களில் நடமாடுவதும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான இளைப்பு, தடிமன் உள்ளவர்களுக்கும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் வைரஸ் பரவல் காரணமாக நியூமோனியா ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலம் மாசடைந்த வளியை சுவாசிப்பது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இவ்வாறான சூழ்நிலைகளின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/205369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிதமான நிலையில் காற்றின் தரம்

Published By: DIGITAL DESK 3   03 FEB, 2025 | 10:11 AM

image

இன்று திங்கட்கிழமை (03) நாள் முழுவதும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 30 மற்றும் 78க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும் கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

AAQ_report_English_03.jpg

https://www.virakesari.lk/article/205649

  • கருத்துக்கள உறவுகள்

காற்றின் தரத்தை வெறும் கண்ணாலேயே பார்க்கும் அளவுக்கு புகை  மூட்டமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.  இதனால் நாட்டு மக்களுக்கு  நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீள முடியாது.

வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகளை சகட்டு மேனிக்கு எரித்தல் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

ஜேர்மனியில் 49, 000, 000 கார்கள் உள்ளன. பார ஊர்திகள் வேறு.
இவை வெளியேற்றும் புகைகளை கடினமான சோதனைக்குப் பின்பே, வீதியில் ஓட அனுமதிப்பதால் காற்றின் தரம் மாசு படுவது தவிர்க்கப் படுகின்றது. 
நல்ல தண்ணீர், நல்ல காற்று போன்றவற்றை கொடுப்பதும்…. அரசாங்கத்தின் பொறுப்புத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நிலவிவரும் காசு மாசுபாடு குறித்த முக்கிய தகவல் வெளியானது!

காற்றின் தரக்குறியீடு தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சீரான நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1419505

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!

மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் உள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும்.

இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அனைவரும் முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

https://athavannews.com/2025/1419728

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் டெல்கி மாதிரி வரப்போகிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான நகரங்களில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்; முகக்கவசம் அணியவும்

Published By: DIGITAL DESK 3   05 FEB, 2025 | 09:19 AM

image
 

நாட்டில் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை (05) நாள் முழுவதும் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 85 மற்றும் 128க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை  ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலை காணப்பட்டது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம். 

காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AAQ_report_English_05.jpg

https://www.virakesari.lk/article/205821

  • கருத்துக்கள உறவுகள்

வளி மாசடைதலினால் ஏற்படும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை - விசேட வைத்திய நிபுணர்

image
 

(செ.சுபதர்ஷனி)

சமூகத்தில் வளி மாசு இந்நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்றயதினம் (நேற்று) காலை காற்றின் தரம் 65 சதவீதமாக பதிவாகியிருந்தது, எனினும் சராசரியாக 50 வீதத்துக்கும் குறைவாகவே காற்றுத் தரச் சுட்டெண் அமைய வேண்டும். இந்நிலையில் நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கு நோய் நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகையால் வெளியிடங்களுக்கு செல்வதாயின் முககவசங்களை அணியுமாறு  சுவாசநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் போதிக்க சமரசேகர வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (05)  ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் வளிமாசு இந்நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அசுத்தமான நீர், உணவு போன்றவற்றை நாம் உண்ணாமல் அருந்தாமல் தவிர்க்களாம். எனினும் வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் சுவாசிக்காமல் இருக்க முடியாது.

வளர்ந்த மனிதன் ஒருவன் சராசரியாக நாளாந்தம் 10 லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறான். அவ்வாறிருக்கையில் சுவாசிப்பதை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் தற்போது வளிமாசு அதிகரித்துள்ளது. எம்மை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துக் கொள்வது அவசியம்.

நவீன கையடக்க தொலைபேசிகளில் காற்றின் தரத்தை அறிந்துக் கொள்வதற்கான பிரயோக செயலிகள் உள்ளன. அதற்கமைய இன்றயதினம் (நேற்று) காலை காற்றின் தரம் 65 சதவீதமாக பதிவாகியுள்ளது. சராசரியாக 50 வீதத்துக்கும் குறைவாகவே காற்றுத் தரச் சுட்டெண் அமைய வேண்டும்.

இந்நிலையில் நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கு நோய் நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. விசேடமாக ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோய் நிலைமைத் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.

வாகனப்புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வெளிநாடுகள் அறுவடையின் பின்னர் நிலங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அவற்றின் புகையும் வளியில் கலந்து வளிமாசு அதிகரித்துள்ளது. வளி என்பது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரந்துள்ளது. அதன் எல்லையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால் பிற நாடகளில் இடம்பெறும் வளிமாடையும் செயற்பாடுகளால் எமது நாடும் பாதிப்புக்குள்ளாகுகிறது.

வளி மாசு அதிகரித்திருக்கும் சந்தர்ப்பங்களில் தொண்டை மற்றும் கண்களில் அரிப்பு,  காய்ச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, கலக்கம், உடல் சமநிலையின்மை போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். அத்தோடு ஆஸ்துமா நோயாளர்களுக்கு இளைப்பு தீவிரமடைவதால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.

இதன்போது அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுவது நல்லது. நாட்பட்ட சுவாச நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார், வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுகிறேன்.

வெளியிடங்களுக்கு செல்வதாயின் முககவசங்களை அணிவது பாதுகாப்பானது. அடுப்புப் புகை உள்ளிட்ட வீட்டின் உட்புற சூழலில் நிகழும் வளி மாசடைதலை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை சுவாசநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் மாநாடு இடம்பெற உள்ளது. இதன்போது சமகாலத்தில் அதிகரித்துள்ள சுவாச நோய்கள் தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாட உள்ளது என்றார்.

இதேவேளை சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தமித் ரொட்றிகோ கருத்து தெரிவிக்கையில்,

உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தொற்றா நோய்களின் பட்டியலில் நாட்பட்ட சுவாச நோய் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நுரையீரல் புற்றுநோய் ஆறாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளிமாசு மற்றும் புகைத்தலே பெருமளவில் சுவாச நோய்களுக்கு காரணமாக உள்ளது.

சிகரெட் உள்ளிட்ட புகைத்தலுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி பொருட்களில் உள்ள நிகோடின், ஆசனிக், ஹைட்ரோ கார்பன், தார் போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நாட்களில் இளம் வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. தகாத பழக்கங்களினால் எதிர்காலத்தில் இவ்வாறன நோய் நிலைமைகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றார்.

வளி மாசடைதலினால் ஏற்படும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை - விசேட வைத்திய நிபுணர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க  கருத்துத் தெரிவிக்கையில் ” காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

காற்று மாசுபாடு முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது பொருளாதார ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

சுமார் 70,000 அறிவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், காற்று மாசுபாட்டால் 7 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைவதை நிரூபித்துள்ளன.

குறிப்பாக  காற்றில் உள்ள சில கூறுகள் நுரையீரலுக்குள் நுழையும் போது, புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. புகைப்பிடிப்பவர்களில் இந்த நிலை காணப்பட்டாலும், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பெண்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக இறப்புகளும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது” இவ்வாறு மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1420150

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு - வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க

Published By: VISHNU   06 FEB, 2025 | 06:41 PM

image

(செ.சுபதர்ஷனி)

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (5) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் வாழும் சூழலில் உள்ள வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாது. நாளாந்தம் 10 ஆயிரம் லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறோம். அவ்வாறு உடலை வந்தடையும் வளியில் உள்ளடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்களும், தீங்கு விளைவிக்கும் காரணிகளும் நுரையீரல் மாத்திரமல்லாமல் உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒருவரது ஆயுட்காலமும் குறைவடைந்துச் செல்வதாக தெரியவந்துள்ளது.

வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக, 70 ஆயிரம் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது மிகப் பெரிய தொகையாகும். வெளியிடங்கள் மற்றும் வீட்டின் உட்புற சூழலில் நிகழும் காற்று மாசு என்பன சுவாச நோய்களை ஏற்படுத்துவதுடன் நாட்பட்ட நோயாளர்களின் நோய் நிலைமையை தீவிரப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏனைய காரணிகளால் ஆண்களே அதிகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எனினும் அண்மைகாலமாக பெண்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு வளி மாசடைதலே பிரதான காரணம் என இந்திய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் சுவாசத்தின் ஊடக உடலினுள் சென்று இரத்த அணுக்களுடன் கலப்பதால் அடுத்த தலைமுறையினரும் சுவாச நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கர்ப்பிணித் தாய் ஒருவர் நச்சு வாயுக்கள் அடங்கிய காற்றை சுவாசிப்பதால் அவற்றின் தாக்கம் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/206012

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான காரணம் இந்திய தலைநகரம் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து எழுப்ப படும் காற்று மாசுக்கள் என்கிறார்கள் உண்மையாக இருக்குமா ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-245-750x375.jpg

மிதமான நிலையில் நாட்டின் காற்றின் தரம்!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (18) மிதமானதாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது.

NBRO இன் படி, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டியவில் காற்றின் தரம் பகலில் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று (17.02.2025) காற்றின் தரம் மிதமான அளவில் காணப்பட்டது.

இன்று காற்றின் தரம் 44 தொடக்கம் 116 க்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலும், இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் சற்று ஆரோக்கியமற்ற நிலை இருக்கும் என்பதை குறிக்கின்றது.

காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://athavannews.com/2025/1421912

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.