Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு  ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி  ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1420033

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சீனாவிற்கு  ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி  ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1420033

பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்

சீனாவிற்கு  ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

JVP announces Dissanayake as presidential candidate - The Hindu

President Anura Kumara Dissanayake: Sri Lanka's Desire to Chart a New  Course. - Institute of Political Economy

Latest News on Anura Kumara Dissanayake: Get Anura Kumara Dissanayake News  Updates along with Photos, Videos and Latest News Headlines | The Indian  Express

அனுர குமார.... சவூதிக்கு  போகும் போது பச்சை சேர்ட், 
இந்தியாவுக்கு மஞ்சள்  சேர்ட், சீனாவுக்கு சிவப்பு சேர்ட், 
அமெரிக்காவுக்கு நீல சேர்ட் போட என்று... 
அவரின் அலுமாரி நிறைய கலர் சேர்ட்டுகள் வைத்திருக்கின்றாராம். 😂

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=199937

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்‍தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, டுபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதியின், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1420588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி!

‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று  பிற்பகல் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

அங்கு ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்திக்க உள்ளார்.

இதில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து டுபாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற எதிர்கால அருங்காட்சியகத்தில்(Future Museum) நடைபெறும் ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420706

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி

editorenglishFebruary 11, 2025
Summit-1170x646.jpg

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11/2/2025) ஆரம்பமாக உள்ளது.

இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10/2/2025) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்த உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டார்.

 

https://globaltamilnews.net/2025/211118/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'GOVERNA SOVERAMENTS SUMMENTS 2025(UAED 2025(UAE) SUMMIT WORLD GOVERNMENTS morning LOAN LOAN මිමිථි 1.02 11.02.20250 Sadeep radeep'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்!

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) இடம்பெற்றது.

இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பல்வகைப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினர்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் விளக்கமளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற, வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைக்கும் வகையில் செயற்பட முடியும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், பிரித்தானியாவின் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமையையும் டோனி பிளேயார் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் சுகாதாரம், துறைமுகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமரிடம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துமாறும் அழைப்பு விடுத்தார்.

காலநிலை இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், நல்லாட்சி, விவசாயம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் மற்றும் பயிற்சிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய டோனி பிளேயார், இலங்கையின் தற்போதைய ஆட்சிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

குறிப்பாக, தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கும் டோனி பிளேயார் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளார்.

https://athavannews.com/2025/1420913

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.