Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of anchovies and text that says 'இடியப்பமும் முரல் மீன் சொதியும்'

மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்...
ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்...
மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்...

சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்...
அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்...

அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்...
அவைக்கு அவ்வளவு கிராக்கி....

சரி மீனை வாங்கிக்கொண்டு வீட்டை ஓடி வந்து மீனை கோடிப்பக்கம் கொண்டுபோய் ஒரு சட்டீல போட்டு அலசீட்டு அரிவாளில இருந்து செதில் அடிச்சு செட்டைய மண்ணில தடவி(வழுக்காம இருக்க) வெட்டி சொண்டையும் வெட்டி போட்டு பூவோட சொட்டு மேல் குடல உருவீட்டு வயித்த நெரிச்சு சரிமானகடையல உருவிட்டு நல்லா நாலு தண்ணீல அலசி கழுவினா மீன் சமையலுக்கு தயார்...

சரியெண்டு குசுனீக்க போனா மனிசி சின்னவெங்காயம் இரு இருவது பல்லு ரெண்டா பிளந்த பச்சமிளகாய் ஒரு பத்து ஒரு தேங்காயில புழிஞ்சரரெண்டு வகை பால்(முதல் பால் கப்பிப்பால்) தயாரா இருக்கும்... அங்கால வெள்ளை புட்டு சிவத்தை புட்டு இடியப்பம் எண்டு அதுவும் சைட்டா கமகமத்துக்கொண்டு வேகும்.... 😍😍

இப்ப பெரிய மீன் ஒரு பதினஞ்சு முழுசா சொத்திக்கு எடுத்து வைச்சிட்டு பிஞ்சு மீன் ஒரு இருவது பொரியலுக்கு...😊😊😊
நான் அளவா உப்பு மஞ்சல் தூள் போட்டு பொரியல் மீனை பிரட்டி வடிய போட்டிருவன்....
அதுக்கு பிறகு கணக்கான மண்சட்டி ஒண்ட அடுப்பில வைச்சு அதுக்க வெட்டின வெங்காயம் மிளகாய் ரெண்டு பேணி கப்பிப்பால விட்டு மூடி போட்டு வேக விடுவன்... 

அதுக்க இதமான ரெண்டு பாட்டு பாட விட்டிருவம் பட்டுவும் அம்மப்பாவும் அம்பது தடவை குசுனீக்க வந்து நோட்டம் விட்டிட்டு போவினம்... 
சரி இப்ப மூடிய திறந்து உப்பு அளவா போட்டு மெல்ல மீனை அடுக்கு கப்பி பால முழுவதையும் விட்டு திறந்த படி மீனை வேக விடுவம்... முரல் வாசம் மூக்கை துளைக்கும் அப்பிடியே மனிசீட முகத்தை பாத்து லைட்டா சிரிச்சா காதலும் கூடவே ருசி சேர்த்திடும்... கொதிச்சு வர முதல் பாலை விட்டு அதில புற அகப்பையால மஞ்சல் தூள அமத்தி சாடயா துலாவிவிட்டா ஒரு தரம் கலர் வரும் பாருங்கோ... 

இப்ப ஒரு கொதியோட சொதிய இறக்கி அதுக்க ரெண்டு தேசிக்காய வெட்டி நல்லா புழிஞ்சு புழி விட்டா ஆ சொதி அசத்தீடும்... லைட்டா உள்ளங்கைல சுடச்சுட விட்டு நக்கினா அடடே அமிர்தமெல்லோ.  மனிசியும் ஓரமா கைய நீட்டுவா கொஞ்சமெடுத்து ரொம்ப ஊதிட்டு அவவிட கையில விட்டா ஒரு குட்டிக் கையும் மேல நீளும் ஆருமில்ல பட்டுவோட குட்டிக் கை...

சுடுமாத்தை மெல்ல எண்டு சொல்லு பக்குவமா அவாக்கு ஒரு சொட்டு மருந்து...
பிறகு அடுப்பில ஒரு தாச்சி சட்டிய வைச்சு நல்லா காய விட்டிட்டு செக்கில ஆட்டின நல்ல நல்லெண்ணை மீனை மூடுற அளவுக்கு விட்டு கொதிக்க வைச்சிட்டு உப்பு மஞ்சல் ஊறி வடிஞ்ச மீனில ஒரு அஞ்ச ஒண்டா மெல்லமா அடுக்கி மூடி விட்டா... "டுப்பு டுப்பு எண்ட சத்தத்தோட தரமா பொரிஞ்சுவர மெல்ல அகப்பையால பிரட்டி விட்டு மத்தப்பக்கமும் பொரிய விட்டு எடுத்தா மீன் பொரியலு ரெடி... அப்பிடியே எல்லாரும் நான் மனிசி பட்டு அம்மப்பா தங்கச்சி எல்லாரும் ஒண்டா இருந்து புட்டு நிறைய சொதி ரெண்டு சொதி மீன் ரெண்டு பொரியல் எண்டு போட்டு வெளுத்து கட்டுறப்ப சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்... இப்ப சீசன்... வாழ்க்கை வாழ்வதற்கே ஆதலால் நீங்களும் வாழ்ந்திடுங்கள் தோழர்களே...

அன்புடன் கலைவாணன்.

Organic Farm-Jaffna 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முரல்மீன் ..விருப்பம் தான்..சிறியர்...அந்த கருத்தகலர் ஓட்டைத்துண்டைகண்டால் ..அருவருப்பு ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
மாதகல் கடற்கரையை அண்டிய கடலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். 70 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை முரல் மீன் விற்பனையாகியுள்ளதாம்.
இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம் 🙂
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியர்களின், துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின், தென் அமெரிக்க மற்றும் வட இந்திய உணவுகள் உலகில் எல்லோராலும்  விரும்பப்படும் நிலையில் ஏன் இலங்கையரின் ( தென் இந்திய ), ஆப்பிரிக்க உணவுகள் ஏனைய உணவுகள் போல் விரும்பப்படுவதில்லை அல்லது குறைவாகேவே ரசிக்கப் படுகின்றது? 

Edited by பகிடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

எமது உணவு வகைகளான…. புட்டு, இடியப்பம், இட்டலி, தோசை போன்றவற்றை செய்வதற்கு நீண்ட தயாரிப்பு முறையும், நுண்ணியமான செய்முறையும் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

இடியப்பம், புட்டு தயாரிக்க மா… பதமாக அவித்து, அரித்து எடுத்து… கணக்கான சூடு அளவில் தண்ணீர் விட்டு குழைத்து எடுக்க வேண்டும். தண்ணீர்   கொஞ்சம் கூடிக் குறைந்தாலே… பிழைத்து விடும்.
இட்டலி, தோசைக்கும்…. முதல் நாள் அரைத்து, புளிக்க வைத்து பதமாக சுட வேண்டும். இதனை  பழகி வர… நீண்ட காலம் எடுக்கும். 
அதனால்… பிற நாட்டவர் எமது உணவுகளை தாம் தயாரிக்க அதிகம் அக்கறை காட்டுவதில்லை என நினைக்கின்றேன்.

எமது உணவுகள் தயாரிக்க…. இடியப்ப உரல், இடியப்ப தட்டு, புட்டுக்குழல், இட்டலி சட்டி என்று ஸ்பெஷல் உபகரணங்கள் தேவை. அதனை மினைக்கெட்டு வாங்கி சமைக்க எல்லோரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

பிற நாட்டவர்… எமது  உணவு விடுதிகளில் போய் சாப்பிடப் போனாலும்,
அங்குள்ள அழுக்கான நிலைமையும், உணவு பரிமாறுபவரின் உடைகளும்… மற்றவர்களை தலை தெறிக்க ஓட வைக்கும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

முரல்மீன் ..விருப்பம் தான்..சிறியர்...அந்த கருத்தகலர் ஓட்டைத்துண்டைகண்டால் ..அருவருப்பு ...🤣

அல்வாயன்… மீனின் நடுப்பகுதியில் வரும் அந்தப் கறுப்பு பொருளை,
விரல்களால் சிறிது நேரம் தேய்க்க போய் விடும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:
மாதகல் கடற்கரையை அண்டிய கடலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். 70 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை முரல் மீன் விற்பனையாகியுள்ளதாம்.
இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம் 🙂

இரவு 7:30 க்கு, மீன் வாங்கி துப்பரவாக்கி,  சமைத்து, சாப்பிட…
நள்ளிரவு ஆகி விடுமே.
ஆனாலும்… முரல் மீனின் சுவைக்கு எதுகும் ஈடாகாது. 👍🏽

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பகிடி said:

இத்தாலியர்களின், துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின், தென் அமெரிக்க மற்றும் வட இந்திய உணவுகள் உலகில் எல்லோராலும்  விரும்பப்படும் நிலையில் ஏன் இலங்கையரின் ( தென் இந்திய ), ஆப்பிரிக்க உணவுகள் ஏனைய உணவுகள் போல் விரும்பப்படுவதில்லை அல்லது குறைவாகேவே ரசிக்கப் படுகின்றது? 

ஏனெண்டால் நம்ம மிளகாய்த்தூளின்ர மகிமை அப்பிடி....😎
எதுக்கெடுத்தாலும் செத்தல் மிளகாய்,பச்சை மிளகாய்..... கெட்ட கேட்டுக்கு  போத்தில் மிளகாய்த்தூள் வேற.....நம்மளாலேயே மிளகாய்த்தூள் கொடுமை தாங்கேலாமல் கிடக்கு....😔
வெள்ளைக்காரன் எங்கட உறைப்பு கறியளிலை வாய் வைப்பானே?😂

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமும் முரல்மீன் சொதியும் சுவைதான் . ......... ஆனால் எனக்கு முரல் கருவாடு மிகவும் பிடிக்கும் . ......நாங்கள் சீசனுக்கு  மாதகல்லுக்கு சென்று ரெண்டு சிற்பமாக (குடலையாக கட்டியபடி இருக்கும் ) முரல் கருவாடு வாங்கி வருவதுண்டு . ........ அதை அப்படியே அடுப்புத் தணலுக்குள் புதைத்து விட்டு சுட்டதும் எடுத்து புட்டுடன் கடித்துக் கொண்டு சாப்பிட சுவையோ சுவையாக அந்தமாதிரி இருக்கும் . ........ இப்ப எல்லா நினைவுகளும் கனவாகிப் போச்சு . .........!  😇

பகிர்வுக்கு நன்றி சிறியர் . ........!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்… மீனின் நடுப்பகுதியில் வரும் அந்தப் கறுப்பு பொருளை,
விரல்களால் சிறிது நேரம் தேய்க்க போய் விடும்.

என்னங்க...இப்புடிச் சொல்லிப் போட்டியள்..😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.