Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித நகருக்கு விழுந்த பூஜை அடி

Featured Replies

புனித நகருக்கு விழுந்த பூஜை அடி

2149IntoCamp2_J.jpg

சிங்களத்தில் : விமல் தீரசேகர

தமிழில் : அஜீவன்

விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அனுராதபுரத்தை புனித நகர் என அழைத்தாலும் , அதை விட அந்த நகரை இராணுவ நகர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும்.

வட கிழக்கு யுத்த தேவைகள் அனைத்தையும் செய்வதில் அனுராதபுரத்தின் இராணுவ நிலையே முதன்மை வகித்து வந்தது.

இப்படியான ஒரு பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது எல்.டீ.டீ. போராளிகள் ஊடருவி தொடுத்த தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் ஆகியன ராஜபக்ஸ அரசின் யுத்த அட்டவனை குறித்தும் பாதுகாப்பு நிலமை தொடர்பு குறித்தும் கேள்விகளை எம் மனதில் எழுப்பவே செய்கிறது?

இது குறித்து பேசுவதோ அல்லது இது குறித்து கேள்வி எழுப்புவதோ கூட இதை எழுதுபவருக்கு வினையாகலாம்?

இருப்பினும் இது தொடர்பான அதிகாரிகளின் அசமந்தப் போக்கே முதன்மையாகியுள்ளது எனலாம்.

அசமந்த போக்கு என்பது இயலாமை என்பதாகாது.

ஒரு நிறுவனத்தில் ஏற்படும் அசமந்த போக்கு அந்த நிறுவனத்தின் அழிவுக்கே வழி வகுக்கும்.

நாம் ஏன் அப்படியான வினாவை எழுப்புகிறோம் என்றால்?

யால வனவிலங்கு பகுதியல் இடம் பெற்ற தாக்குதலுக்கும்

அனுராதபுரத்தில் இடம் பெற்ற தாக்குதலுக்கும் முன்னர் இப்படியான ஒரு தாக்குதல்கள் இடம் பெற போவதான சமிக்கைகள் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு கிடைத்து இருந்ததாக அறிகிறோம். அதை சட்டை செய்யாது இருந்ததற்கு கிடைத்த பரிசே இந்த பேரழிவாகும்.

22ம் திகதி அதிகாலையில் நடந்த தாக்குதலுக்கு முதல் நாளான 21ம் திகதி மாலையில் விமானப் படைக்கு அருகாமையில் உள்ள வாவியில் (நீரோடை) சந்தேகத்துக்கிடமான நிலையில் சில படகுகள் நிராதரவாக இருப்பதை உணர்ந்த அருகே உள்ள உணவு விடுதி ஒன்றின் உரிமையாளர் 119 போலீஸ் அவசர அழைப்புக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

அந்த வாவியில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை அங்குள்ள மக்கள் அறிவர்.ஒரே குடும்பத்துக்கு சொந்தமான படகுகளை தவிர்த்து புதிய சில படகுகளை காணக் கூடியதாக இருப்பதை உணர்ந்த அந்த உணவு விடுதி உரிமையாளர் போலீசாருக்கு தெரிவித்தும் அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். இது குறித்து அறிவிக்கப்படும் தகவல்கள் ஒலிப்பதிவாவதால் அதை இப்போதும் பரிசீலித்து பார்க்க முடியும்.

இதிலிருந்தே விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தவிரவும் விமான தளத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வேலிகள் கூட பன்றிகள் உள்ளே வருவதை தடுக்க போடப்பட்டுள்ளவை போன்றவையாகும். அதை வெட்டிக் கொண்டு உள்ளே வருவதற்கு பெரிதாக எவரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. இவை வியப்பாக வேறு உள்ளது. சாதாரண மக்களது வீட்டு வேலி கூட மதில் ஒன்றால் அடைக்கப்ட்டு இருக்கும்.இதுவோ வயர்களாலான வேலியாக இருப்பதை காண எவருக்கும் வியப்பாகவே இருக்கும்? அது மின்சாரம் பாச்சப்பட்ட வேலியாகக் கூட இல்லை. சாதாரணமான இராணுவ நிலையொன்றை சுற்றி குறைந்தது இரண்டு வேலிகளாவது இருக்க வேண்டும். அதனிடையே நில கண்ணிகள் புதைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.இது குறித்த புரிதலுக்கு பெரியதோரு அறிவு தேவையில்லை. பாடசாலை கெடெட் மாணவர்கள் பெறும் அறிவு கூட போதுமானது. இது குறித்து இத் தளத்தின் பொறுப்பதிகாரி கூட தெரிந்து வைத்திருக்கவில்லையா என்று

எண்ணும் போது அவர்களது அசட்டை தனம் குறித்து கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் ராடார் திரைகளில் தென்பட்டதாக கூறினார்கள். அப்படியானால் அவற்றை தாக்க முடியாமல் போனது ஏன்?

உதவிக்கு வந்த பெல் வானூர்த்தயை தவறுதலாக விமானப் படையால் தாக்கி அழிக்க முடியுமானால் , விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்க முடியாமல் போனது எப்படி?

இதற்கான பதிலை இராணுவ தளபதிகள் தெரிவித்தே ஆக வேண்டும். யுத்தமொன்றில் அதிக வரி கட்டும் அனைத்து மக்களும் இன்று இவர்கள் முன் வைக்கும் கேள்வி இதுவேயாகும்?

எது எப்படியானாலும் 4 முறை விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை முறியடிக்கும் திறன் அற்ற ஒரு விமான படை தளபதியை இனியும் அந்தப் பொறுப்பில் வைத்திருப்பது கேலிக்குரிய ஒரு செயலன்றி வேறில்லை. ஒன்று அவரை நீக்க வேண்டும் அல்லது அவர் தாமாக பதவி விலக வேண்டும். அதுவே முறை.

தாக்குதலுக்கு பின்னர் ,அஜாக்கிரதையாக இருந்தமை என்று சொல்வதை விட அவர்களது பேட்டிகளில் முட்டாள்தனம்தான் மேலோங்கி இருப்பதை காண முடிந்தது.எதிரி நன்கு பயிற்றப்பட்ட வீரர்கள் என்று முன் வந்து பேட்டி கொடுக்கிறார்கள் என்பதை அதுவே காட்டுகிறது. அது உண்மையோ பொய்யோ , எதிரி குறித்து இவர்கள் கூறும் தகமைகள் இவர்களது முட்டாள்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அது கூட அவர்களுக்கு புரிவதில்லை.

பழமையான ஒரு பேச்சு வழக்கு உண்டு முட்டாள் மின்னலாய் தென்படுவான். படு முட்டாள் மின்னி மின்னி தென்படுவான். அதை இனி இப்படி மாற்றிக் கொள்ளலாம்.

rambukwella_57397_140.jpg

அதாவது

படு முட்டாள் தாடியும் வளர்த்து கண்ணாடியும் அணிந்து மினுங்குவான்

என்று ...........

இரு தளபதிகள் நாட்டில் இல்லாமை கூட பெரிய பிரச்சனை இல்லை.

தொலைத் தொடர்பு ரீதியாக முன்னேறிய காலத்தில் அவர்கள் எங்கு இருந்தாலும் பிரச்சனை இல்லைதான். இருப்பினும் நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர்கள் நாட்டில் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான்?

இப்படி சொல்வதற்கு எம்மிடம் காரணிகள் இல்லாமல் இல்லை.

யால வன விலங்கு பகுதி தாக்குதலுக்கு முன் அப்பகுதியிலிருந்த புலனாய்வு துறையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் விடுதலைப் புலிகள் அங்கே இருப்பதாகவும் வானுர்தி (கெலிகப்டர்) இறங்கிய தடம் ஒன்று காண முடிவதாக மேலிடத்துக்கு அறிவித்ததாகவும் கூறினார்.

இது போன்ற பல விடயங்களை பின்னர் இன்னும் அலசுவோம்.

இருந்தாலும் ராஜபக்ஸவின் யுத்த அட்டவனை என்னவோ தற்போது கேள்விக்குரியதாகி நிற்பதை மட்டும் அனைவராலும் உணரமுடிகிறது?

அசமந்த : அஜாக்கிரதையான போக்குகளை வைத்துக் கொண்டு யுத்த முனைப்பில் ஈடுபடுவது தற்போதுள்ள நோய்க்கு மருந்தாகாது என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவதானப்படுத்த விரும்புகிறோம்.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியானாலும் 4 முறை விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை முறியடிக்கும் திறன் அற்ற ஒரு விமான படை தளபதியை இனியும் அந்தப் பொறுப்பில் வைத்திருப்பது கேலிக்குரிய ஒரு செயலன்றி வேறில்லை. ஒன்று அவரை நீக்க வேண்டும் அல்லது அவர் தாமாக பதவி விலக வேண்டும். அதுவே முறை.

ஓமுங்கோ, இதை சொன்ன அமைச்சருக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வீதியால் இழுத்து வர வேண்டும்.இல்லாவிடில் மாதன முத்தா கதை போல் கெகலியவின் தலையில் பானையை செருகி ....மிகுதியை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களம் சிங்கள இராணுவத்துக்கு மறைமுக ஆலோசனை வழங்கும் களமா?

அஜீவன் இது மொழி பெயர்ப்பு என்றாலும் சில வரிகளை தவிர்த்து இருக்கலாம்.

இதன் சிங்கள இணைப்பை தரமுடியுமா?

Edited by tamillinux

உது சிங்களவனின் பார்வையில், "புனித நகருக்கு விழுந்த பூஜை அடியை" இந்திய "றோ" எவ்வாறு பார்க்கிறது(இவ்விணையத்தளத்த

  • தொடங்கியவர்

யாழ் களம் சிங்கள இராணுவத்துக்கு மறைமுக ஆலோசனை வழங்கும் களமா?

அஜீவன் இது மொழி பெயர்ப்பு என்றாலும் சில வரிகளை தவிர்த்து இருக்கலாம்.

இதன் சிங்கள இணைப்பை தரமுடியுமா?

இல்லை

அது ஒருவரது கருத்து

அது நம்மை நாமே ஏமாற்றுவதாகிவிடலாம் .

இதோ இணைப்பு:

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=3412

இது ஏற்கனவே சிங்களத்தில் வந்து விட்டது.

அது மறைமுக ஆலோசனையாகாது.

எமக்கே பிரயோசனமாகும்.

நன்றி

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை

அது ஒருவரது கருத்து

அது நம்மை நாமே ஏமாற்றுவதாகிவிடலாம் .

இதோ இணைப்பு:

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=3412

இது ஏற்கனவே சிங்களத்தில் வந்து விட்டது.

அது மறைமுக ஆலோசனையாகாது.

எமக்கே பிரயோசனமாகும்.

நன்றி

இதில் எதை எமக்கு பிரயோசனம் என்று சொல்லுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையடிக்கும் நாம் ஒன்றைமட்டும் மறந்துவிட்டோம்

நாம் உதவியிருந்தால்

21 கடவுள்கள்

எம்மைக்காக்க

எம்முடன் இன்றும் இருப்பர்

எப்போ செயலாற்றப்போகின்றோம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவிரவும் விமான தளத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வேலிகள் கூட பன்றிகள் உள்ளே வருவதை தடுக்க போடப்பட்டுள்ளவை போன்றவையாகும். அதை வெட்டிக் கொண்டு உள்ளே வருவதற்கு பெரிதாக எவரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. இவை வியப்பாக வேறு உள்ளது. சாதாரண மக்களது வீட்டு வேலி கூட மதில் ஒன்றால் அடைக்கப்ட்டு இருக்கும்.இதுவோ வயர்களாலான வேலியாக இருப்பதை காண எவருக்கும் வியப்பாகவே இருக்கும்? அது மின்சாரம் பாச்சப்பட்ட வேலியாகக் கூட இல்லை. சாதாரணமான இராணுவ நிலையொன்றை சுற்றி குறைந்தது இரண்டு வேலிகளாவது இருக்க வேண்டும். அதனிடையே நில கண்ணிகள் புதைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.இது குறித்த புரிதலுக்கு பெரியதோரு அறிவு தேவையில்லை. பாடசாலை கெடெட் மாணவர்கள் பெறும் அறிவு கூட போதுமானது. இது குறித்து இத் தளத்தின் பொறுப்பதிகாரி கூட தெரிந்து வைத்திருக்கவில்லையா என்று

எண்ணும் போது அவர்களது அசட்டை தனம் குறித்து கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மேல் கூறப்பட்ட கட்டுரையிலுள்ள சில வரிகளையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்

Three layers of razor wire protect Anuradhapura airbase, considered one of the island's most secure bases.The installation serves as a key logistics hub for operations against the LTTE-held north.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23582

Edited by tamillinux

தாக்குதலினால் ஏற்பட்ட விளைவுகள் இவ்வாறுதான் விவாதங்களுக்குள்ளாகும். ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் இராணுவத்திற்கு தகவல் கிடைத்திருந்தது. என்றுதான் ஒவ்வொருமுறையும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பின் பலவீனப்பகுதிகளில்தான் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சிங்கள எழுத்தாளர்களுக்குத் தெரியாதா? அதைவிட இந்தத் தளபதிகள் நாட்டில் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்று போட்டுள்ள போடு சிங்களவனையே திகைப்பிற்குள்ளக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரையின் அடிப்படை நோக்கம் விடுதலைப்புலிகளை பலமில்லாதவர்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்களிடம் காட்டுவதாகும். அதாவது பலமில்லாத ஒரு தளத்தை தாக்கியுள்ளார்கள் என்ற ஒரு மாயயை உருவாக்கல். ஆனால் கட்டுரையின் தலைப்போ வேறுவிதம். இது ஒரு உளவியல் தாக்கத்தை தமிழர்களுக்கு உருவாக்கும் தந்திரம் எனவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் ரம்புக்கல விடுதலை புலிகளின் படையணியை ஒரு திறமைமிக்க நன்றாக பயிற்சி பெற்ற அணி என்று உண்மையை தவறுதலாக ஒத்துக் கொண்டதற்காகவே அவரை தாடி வைத்தர் என்றெல்லாம் ஏதோ எழுதியுள்ளார்கள்.

நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர் வாழும் பிரதேசம் அநுராதபுரம். இதனால் அரச படைகள் தமது தளபாதுகாப்பைப் பற்றி அசட்டையாக இருக்கலாம். இந்தப் பகுதிக்குள் நுழைந்ததே கரும்புலி வீரரின் மிகப் பெரிய சாதனை. சிங்களவரின் பார்வையில் அவர்கள் இராணுவ வீர புத்திரர்கள் பற்றி அறிய தந்தமைக்கு அஜீவன் அவர்களுக்கு நன்றி. திரிபு படுத்தாமல், எழுதியதை விளங்கிக் கொண்டு படியுங்கள். அந்த கண்ணாடியணிந்த தாடிதான் இப்போது மஹிந்த சமஸ்தானத்து கோமளி.

ஜானா :rolleyes:

Edited by Janarthanan

பூனைதான் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிப்பதால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்!

புலிகள் அவ்வாறல்ல, சுற்றுவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை காது கொடுத்து கேட்டபடிதான் உறங்கும்!

அஜீவன் அவர்களுக்கு நன்றி!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அறியத்தந்தமைக்காக நன்றிகள் அஜீவன்.

  • தொடங்கியவர்

tamillinux அவர்களே

இக் கட்டுரையை எழுதியவர் இதை எழுதும் போதே

"இது குறித்து பேசுவதோ அல்லது இது குறித்து கேள்வி எழுப்புவதோ கூட இதை எழுதுபவருக்கு வினையாகலாம்?"

என்று குறிப்பிட்டே கட்டுரையை தொடங்கியிருக்கிறார்.

அடுத்து

தாங்கள்

புலம் பெயர் தமிழர்கள்

விடுதலைப் போராளிகளை தவறாக எடை போடக் கூடும் என்று

குறிப்பிட்டு இருக்கிறீர்கள்?

இல்லை என்பதே சாணக்கியர்களின் மற்றும் பகுத்தறிவு படைத்தவர்களின் கருத்தாகும்.

அதை இங்கு பல நண்பர்கள் புரிந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

நன்றி!

இனி சிந்திப்போம்..............

எவ்வளவு பராக்கிரம பலம் பொருந்திய வீரனையும் வீழ்த்த

ஒரு சிறு அசமந்தப் போக்கும் - பலவீனமும் போதும்.

ஒரு நொடி என்பதே அது................!

அந்த நொடியை தீர்மானிக்க

அது குறித்த புலனாய்வு தகவல்கள்

பயணிக்க வேண்டிய நேரங்கள்

தாக்கும் முறை இவைதான் வெற்றிகளை தருகின்றன.

ஒரு முறை பாவிக்கப்படும்

தாக்குதல் முறையை மீண்டும் விடுதலைப்புலிகள் தொடர்வதில்லை?

அடுத்து

எங்கே

என்ன நடக்கும் என்பதை எவராலும்

எண்ணியே பார்க்க முடியாது.

இதுவே கடந்தகாலத்தில் நாம் கண்டவை.

மேலே இடப்பட்டுள்ள கட்டுரை

சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசுக்கும்

அவர்களது நிலை குறித்த தெளிவை கொடுப்பதற்காக

ஒருவரால் எழுதப்பட்ட கட்டுரை என்று

உங்கள் எண்ணங்களை மாற்றி சிந்தித்தால்

சில தெளிவுகள் கிடைக்கலாம்?

அனுராதபுரம் என்ற புனித நகர்

இலங்கையின் ஒரு முக்கிய ராஜதானி.

பண்டைக் காலத்தில் மிக பாதுகாப்பான நகராகவே

கருதப்பட்டு வந்திருக்கிறது.

அனுராதபுரம் புனித நகர்.

வெளிநாட்டவர் செல்லும் நகர்.

புராதன கலைச் சிற்பங்கள்

மற்றும்

பெளத்த இதிகாசத்தை வியம்பும் நகர்.

அதற்கு மேல் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரு நகர்.

இதெல்லாவற்றையும் விட

கடலால் வந்து தாக்குதல் தொடுக்க முடியாத ஒரு நகர்.

வந்தால் நிலம் அல்லது வான்.

நிலத்தால் எவரும் வரவே முடியாது என்று

தம்பட்டம் அடித்துக் கொண்ட இராணுவ தளம்.

முதலில் வந்தது

நிலத்தாலோ வானாலோ அல்ல

வாவி ஒன்றால் (தண்ணீர்) என்று

சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

இங்குதான்

வன்னியை தாக்குவதற்கான

ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடி பொருட்கள் அனைத்தும்

அண்மை காலமாக குவிக்கப்பட்டு வந்தன என்ற தகவல் வெளி வந்து இருக்கிறது.

வட கிழக்கு இராணுவ தளங்களின் இதயம் என

இலங்கை இராணுவம் நினைத்த இடம் அனுராதபுரம்.

இப்படியான ஒரு இடத்திலிருந்துதான்

இலங்கை அரசு தாக்குதலை முன்னெடுக்கப் போகிறது.

போர்தான் இன்றைய தீர்வு.

சமாதானத்தை விட

கடந்த சில காலங்களில் நடந்த

தாக்குதல்களால் புலிகளை பலம் இழக்க வைத்திருக்கிறோம்

என்ற சேதிகளை சிங்கள மக்கள் மனங்களில்

பரப்பிக் கொண்டிருக்கும் தருணத்தில்

இத்தாக்குதல் குறித்த இக் கட்டுரை

சிங்கள மக்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்களை சொல்கின்றன.

போரால் வெற்றி பெற முடியாது

என சிந்திக்க வைக்கிறது கட்டுரை!!!

ஒன்று அவர்களது அசமந்தப் போக்கு!

இரண்டு அனைத்து யுத்த முன்னெடுப்புக்கான அழிவு!

விமான எதிர்ப்பு தாக்குதலுக்கான ஆயுதங்கள் இருந்தும்

அவற்றை அவர்களால் பாவிக்க முடியாது போன இயலாமை!

அதற்கான ஒரு அரச பேச்சாளர் பேசும் கோமாளித்தனம்.

தமது உதவிக்கு வந்த வானுர்தியையே தாக்கி அழித்து

சேம் சைட் கோல் போட்ட செய்தி............ :rolleyes:

இனி எந்தவொரு விமானமும் உதவிக்கு வராது?

வந்தால் இவர்களால் யார் என்று அடையாளப்படுத்த முடியாமல்

தாக்குதலுக்கே உள்ளாவார்கள் என்பது போன்ற தன்மை?

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல

நடந்து கொள்ளும்

பாதுகாப்பு படை தகமைகள்.

அடுத்து இது ஒரு சிங்கள செய்தியாளரால் எழுதப்பட்ட கட்டுரை!

அதை மட்டும் உணர்ந்தால் போதும்.

யுத்தமே தீர்வு என்று கொக்கரிக்கும்

இலங்கை அரசுக்கும்

சேர்ந்து ஒத்து ஊதும் கூட்டத்துக்கும்

வாயை அடைக்க வைக்க இக் கட்டுரை

நிச்சயம் பயன்பட்டே இருக்கும்.

நன்றி!

  • தொடங்கியவர்

The 'unsacred' conduct in a 'sacred city'

(Lanka-e-News, 2007 Oct 23, 8.30 PM) Anuradhapura is more a military supply centre than a sacred city. LTTE's infiltration into an air base in such city and causing such havoc in combined ground and aerial attacks put Rajapakse regime's war agenda and the actions of security forces in grill.

First, the writer puts in the questions he has over the conduct of the security forces since no one is dare enough to pose them and as it is very dangerous to take the war path in such context.

The most important factor is the 'carelessness'. It is not disability and carelessness can lead any institute to decay.

We have learnt that the security forces received information on Anuradhapura attack too and had to pay a huge ransom due to 'carelessness'

like in previous occasions.

A restaurant owner at the edge of Nuwaraweva called to 119 and informed that there were suspicious boats. The neighbors can identify the

boats of Nuwaraweva that belong to relatives of one family. His call on suspicious boats was unheeded. The calls to this number are recorded and can be checked to verify what we say. (An investigation committee has been appointed

to probe the attack.)

It is now proved that the LTTE cadres arrived the camp through Nuwaraweva in boats and the vigilance could prevent havoc.

On the other hand, the security fence is more like one set up to prevent wild bores. One simple tearing apart with pliers makes an easy

access. Amazingly, the airbase has only a simple wire fence while even the ordinary middleclass house has a parapet wall. The fence was not electrified. No two fences land mined in between. The commanding officer of the airbase was ignorant of these simple facts that even a school cadet is aware. Otherwise, this depicts his 'carelessness'.

Meanwhile the Air Force spokesman verified that the departure of the LTTE aircrafts were detected by radar. Then why did they fail

to attack them while the Air Force was capable to bring down its own Bell 212 that came to support from Vavuniya? Military top brass should answer these questions of the tax payers.

It is pointless to trust an Air Force commander who failed to safeguard the air space of the country four times repeatedly. Either he should be replaced or he should resign voluntarily if he has self-respect.

Immediate aftermath of the attack was full of follies. Defense spokesman themselves say that the enemy is well trained and seasoned. The

bearded, spectacled stupid should know at least to hide the truth.

The absence of two commanders in the country is not a serious issue to this writer in a time the information technology is so much developed. Their presence too cannot cure the diseases of carelessness.

Here are other proof of 'carelessness'.

An intelligence official of the Eastern Province informed the Colombo top brass that the LTTE cadres who are present in Yala Wildlife Park have a helicopter-landing pad there. He had received the information from one of his sources. He acknowledged Colombo everything with maps.

Yala Wildlife Park has three tiers, one visited by tourists, another visited only by wildlife officials and the other visited only by researchers but rarely. For twenty years no one, including the Park Warden with 35 years experience has stepped in there. The intelligence officer has received

information that the LTTE cadres live in the secured heart of this jungle, but the authorities failed to act. At least the warmonger Minister of Environment 'Champika Ranawaka' too, failed to respond to the information passed to him.

We say with utmost responsibility that the result of this 'carelessness' was the defeat at Thalgasmankada.

More examples can be pointed out at the incidents of Galle harbor, Katunayaka airport etc.

A coming article will question the war agenda of the Rajapakse regime, since this document can be too long.

Until then, we emphasize that waging war is useless without curbing 'carelessness'.

-Wimal Dheerasekara-

http://www.lankaenews.com/English/news.php?id=4815

தளமானது போதுமான பாதுகாப்பை கொண்டிருக்கவில்லை என்பதோ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதோ கேலிக்கூத்தான விடயம்...உச்சப்பாதுகாப்பும் அதைவிட பலமான பிரதேச மக்களின் கடும் பாதுகாப்பையும் கொண்டது அப்பிரதேசம்..ஆனால் இவற்றிலும் மேலாக தென்னிலங்கை புறச்சூழ்நிலை மாறிவருகிறது சகல தளங்களிலும்..... இதை பயன்படுத்தவேண்டியவர்கள் தேவையான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்..

இது அவர்களுக்கு புதிய விடயமுமல்ல...அதுதான் வரலாறு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tamillinux அவர்களே

இக் கட்டுரையை எழுதியவர் இதை எழுதும் போதே

"இது குறித்து பேசுவதோ அல்லது இது குறித்து கேள்வி எழுப்புவதோ கூட இதை எழுதுபவருக்கு வினையாகலாம்?"

என்று குறிப்பிட்டே கட்டுரையை தொடங்கியிருக்கிறார்.

அடுத்து

தாங்கள்

புலம் பெயர் தமிழர்கள்

விடுதலைப் போராளிகளை தவறாக எடை போடக் கூடும் என்று

குறிப்பிட்டு இருக்கிறீர்கள்?

இல்லை என்பதே சாணக்கியர்களின் மற்றும் பகுத்தறிவு படைத்தவர்களின் கருத்தாகும்.

அதை இங்கு பல நண்பர்கள் புரிந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

நன்றி!

அடுத்து இது ஒரு சிங்கள செய்தியாளரால் எழுதப்பட்ட கட்டுரை!

அதை மட்டும் உணர்ந்தால் போதும்.

யுத்தமே தீர்வு என்று கொக்கரிக்கும்

இலங்கை அரசுக்கும்

சேர்ந்து ஒத்து ஊதும் கூட்டத்துக்கும்

வாயை அடைக்க வைக்க இக் கட்டுரை

நிச்சயம் பயன்பட்டே இருக்கும்.

நன்றி!

இந்த கட்டுரை சிங்களவரால் எழுதப்பட்டதோ அல்லது தமிழரால் எழுதப்பட்டதோ என்பது எனக்கு தெரியாது.

இதை படித்து விடுதலை புலிகளை தவறாய் எடை போடுவதென்பது நகைப்புக்குரிய விடயமாகும். இது எல்லோருக்கும் புரியும். ஆனால் இதை எழுதியவர் அந்த வழியில் முயற்சி செய்கிறார்.

கீழுள்ள இந்த வரிகளே இந்த கட்டுரையின் தரம் எழுதியவரின் அறிவு திறமை என்பவற்றுக்கு சான்றாகும். இதை வைத்து வாயை அடைக்க உதவும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

தவிரவும் விமான தளத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வேலிகள் கூட பன்றிகள் உள்ளே வருவதை தடுக்க போடப்பட்டுள்ளவை போன்றவையாகும். அதை வெட்டிக் கொண்டு உள்ளே வருவதற்கு பெரிதாக எவரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. இவை வியப்பாக வேறு உள்ளது. சாதாரண மக்களது வீட்டு வேலி கூட மதில் ஒன்றால் அடைக்கப்ட்டு இருக்கும்.இதுவோ வயர்களாலான வேலியாக இருப்பதை காண எவருக்கும் வியப்பாகவே இருக்கும்? அது மின்சாரம் பாச்சப்பட்ட வேலியாகக் கூட இல்லை. சாதாரணமான இராணுவ நிலையொன்றை சுற்றி குறைந்தது இரண்டு வேலிகளாவது இருக்க வேண்டும். அதனிடையே நில கண்ணிகள் புதைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.இது குறித்த புரிதலுக்கு பெரியதோரு அறிவு தேவையில்லை. பாடசாலை கெடெட் மாணவர்கள் பெறும் அறிவு கூட போதுமானது. இது குறித்து இத் தளத்தின் பொறுப்பதிகாரி கூட தெரிந்து வைத்திருக்கவில்லையா என்று

எண்ணும் போது அவர்களது அசட்டை தனம் குறித்து கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இந்த விமானத்தளம் எவ்வளவு பாதுகாப்பானது சிறிது காலத்துக்கு முன்னர் பாப்பாணர் நாட்டு விமான தளபதிகள் வந்து இத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சென்றுள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை

இப்படியான தகவல்கள் எல்லாம் இங்கு மறைக்கபட்டுள்ளன.

ஆனால் புதிய பழமொழி மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது

காற்று புகாத இடத்திலும் விடுதலைப் புலிகள் செல்வார்கள்

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளமானது போதுமான பாதுகாப்பை கொண்டிருக்கவில்லை என்பதோ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதோ கேலிக்கூத்தான விடயம்...உச்சப்பாதுகாப்பும் அதைவிட பலமான பிரதேச மக்களின் கடும் பாதுகாப்பையும் கொண்டது அப்பிரதேசம்..ஆனால் இவற்றிலும் மேலாக தென்னிலங்கை புறச்சூழ்நிலை மாறிவருகிறது சகல தளங்களிலும்..... இதை பயன்படுத்தவேண்டியவர்கள் தேவையான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்..

இது அவர்களுக்கு புதிய விடயமுமல்ல...அதுதான் வரலாறு...

இது மறுக்க முடியா உண்மை. ஆனால் இதை கட்டுரை ஆசிரியர் பன்றிகள் இலகுவாக செல்லக் கூடிய வேலி என்று அறிவு பூர்வமாக கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் இப்போ இராணுவரீதியான அறிவுள்ளவர்களாக மாறி வருகின்றனர் என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை போலும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.