Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ

Mani Singh SUpdated: Tuesday, March 4, 2025, 14:24 [IST]

Seeman Chennai Supreme Court

இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்‌ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க என்று பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை கொடுத்த புகாரின் பேரில் சீமானுக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண அறிவுறுத்திய நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

புது வீடியோ வெளியிட்ட நடிகை

இதற்கிடையே இது தான் என் கடைசி வீடியோ என்றும், எனக்கு நியாயம் கிடைக்காது.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன்.. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்று நடிகை புது வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்னாச்சு என்பதை மக்களுக்கு சொல்வதற்கு விருப்பப்பட்டேன். ஏனென்றால் நேற்று வந்த தீர்ப்பை வைத்து, செட்டில்மெண்ட் என்று சொல்லி எல்லாரும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நடிகைக்கு இரவோடு இரவாக சீமான் ரூ.10 கோடி செட்டில்மண்ட் பண்ணிட்டாரு என்று.. ஈழத்தமிழர்களோடு கஷ்டப்பட்ட பணத்தை எல்லாம், அவளுக்கு தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று அபாண்டமாக என் மீது பழியை போட்டுவிடுவார்கள். அதனால் நான் இப்போது இதற்கு ஒரு தெளிவினை சொல்லிவிடுகிறேன்.

என் தரப்பில் யாருமே ஆஜர் ஆகவில்லை

சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்ஐஆர் தள்ளுபடி செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தபோது, என் சார்பில் ஒரு வழக்கறிஞர் வாதாடினார். அவர் என் தரப்பு பாதிப்புகளை எடுத்து சொல்லி, அதற்கு பிறகு தான் நீதிபதி உத்தரவு கொடுத்தார். நேற்று உச்சநீதிமன்றத்தில் சீமான் ஒரு வழக்கை கொடுத்திருந்தார் இல்லையா.. அந்த வழக்கில் என் சார்பாக யார் ஆஜரானார்கள்.

என் சார்பாக யாராவது சென்று, இந்த பெண் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்கு. சும்மா சும்மா எல்லாம் வழக்கு போடல.. ரொம்ப துன்பப்படுத்தியிருக்கிறார்கள். அந்த பெண் சாகும் அளவுக்கு போயிருக்கிறார்.. நேற்று வரைக்கு அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்று தான் சொல்கிறார்கள் என்று என் தரப்பில் யாராவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் யாருமே சொல்லவில்லை.. இதனால் சீமான் சொன்ன கோரிக்கையை வைத்து அதனை ஏற்று கோர்டில் ஜட்ஜ்மெண்ட் கொடுத்து இருக்கிறாங்க..

Also Read

குடிபோதையில் விஜய்..செம கோபத்தில் சங்கீதா! மகனுக்கு உதவிய உதயநிதி! புட்டுபுட்டு வைக்கும் சூர்யா சிவா

நீதியும் கிடைக்காது.. நியாயமும் கிடைக்காது

இப்போது நான் என்ன கேட்கிறேன் என்றால், நான் ஏதோ சீமானிடம் பேசிவிட்டால், பார்த்தீங்களா காசுக்காக பண்றா.. காசுக்காக பண்றா.. என்று சொல்லி எல்லாரும் கத்துறீங்களே.. நேற்று ஏன் என் சார்பாக யாருமே போயி உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை. இந்த கேள்வி கேட்கும் போது, நான் எல்லாருக்கும் என்ன புரிய வைக்கின்றேன் என்றால், முந்தாநாள் நான் கதறி அழுதேன்ல.. அது ஏன் என்று தெரியுமா.. எனக்கு எந்த நீதியும் கிடைக்காது.. எந்த நியாயமும் கிடைக்காது இந்த வழக்கில்.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இத புரிஞ்சிக்கிட்டேன்.. சரியா..

இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். சீமானிடம் போய் யாரும், இந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது.. இந்த பெண்ணின் சாபத்தை கட்டிக்காத.. என்று சொல்லமாட்டாங்க.. எல்லாரும் அவள எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்து.. அசிங்கப்படுத்து, கஷ்டப்படுத்து என்ற ரூட்டில் தான் எடுத்து செல்வதால், அந்த அசிங்கத்துக்குல்ல இறங்கி நான் போராட வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது.

Recommended For You

பரபரப்பாக போன வழக்கு.. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞரை களமிறக்கி.. ஆட்டத்தை மாற்றிய சீமான்

இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன்

இதுவரைக்கு எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. நடிகை இப்போது கூட ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று மக்கள் நன்கு புரிந்துகொண்டு இருப்பாங்க.. எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க.. இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன் என்று நான் சொல்லிவிட்டேன். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்‌ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை..

இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க.. இவ்வளவு தான்.. இதுதான் என்னுடைய இரண்டு வார்த்தை.. இது தான் என் கடைசி வீடியோ.. இவ்வாறு அந்த நடிகை கூறினார்.

https://tamil.oneindia.com/photos/oscar-win-anora-movie-tamil-review-oi122188.html?ref_source=OI-TA-Home-Page&ref_medium=Display&ref_campaign=News-Cards#photos-7


வாழ்த்துக்கள் சீமான்….

இரெண்டு மாதம் டைம் கொடுத்தது சுப்ரீம் “மாமா” கோர்ட்.

நீங்கள் 24 மணிக்குள் சாட்சியை பின்வாங்க வைத்து விட்டீர்கள்.

இப்படி விஜி அண்ணி பின்வாங்க வைக்கப்படுவது இத்தோடு 3ம் முறை.

தமிழ்நாடு அரசு பேசாமால் வழக்கை முடிச்சு வைத்து விடலாம்.

சுப்ரீம் கோர்ட்டை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பாலியல் வழக்கு நீதிமன்றில் ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல. இப்படியே இழுபட்டால் தான் நல்லது. வழக்கு முடிந்து நிரபராதி என்று பாஜக நீதிமன்றம் அறிவித்தாலோ அல்லது குற்றவாளி என்று தீர்பளித்தாலோ அது சீமானுக்குத் தான் வாய்ப்பாகிவிடும். தன் மீது அரசியல் பழிவாங்கல் என்று பாலியல் குற்றவாளி சீமான் பிளேட்டை மாற்றிவிடுவார். இப்போது சீமனின் கூற்றுப்படி பாலியல் தொழிலாளியும் சீமானின் முதல் மனைவியுமான விஜி அண்ணிக்கு நிதிமறுக்கப்பட்டிருக்கின்றது என்று மக்கள் மன்றத்தில் கருத்துருவாக்கம் இடப்பட்டிருக்கின்றது. சீமான் விஜி அண்ணியை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள்வேண்டும் என்பதே சரியானதொரு முடிவாக இருக்கும். ஆனால் அதுக்கு கயல் அண்ணி உடன்படமாட்டாங்க. சீமானுக்கு ஆப்பு கயல் அண்ணியிடமிருந்துதான் வரும். வரவேண்டும்!

முன்பும் ஒருமுறை ரகுமான் விடயத்தில் சொன்னதுதான்:

வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்!

உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்!

குழல் என்றால் அதனை ஊதவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும்.

இத்தோட விட மாட்டாங்கள்.

தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும்.

இத்தோட விட மாட்டாங்கள்.

தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.

இத்துடன் பலமுறை இவர் இவ்வாறு சந்தர்ப்பம் பார்த்து உள்ளே வந்து குளப்புவதும் பல பக்கத்தாலும் வரவேண்டியவைகளை வாங்கி குவித்து விட்டு அவாவுக்காக நியாயம் கேட்டு நின்றவர்களுக்கு அல்வா கொடுப்பதும். கை கடிக்க மீண்டும் மீண்டும் வருவார். அதற்குள் சீமான் ஒன்றுமில்லாத பஞ்ச பரதேசியாகி விட்டால் தப்பித்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

சீமான் பாலியல் வழக்கு நீதிமன்றில் ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல. இப்படியே இழுபட்டால் தான் நல்லது. வழக்கு முடிந்து நிரபராதி என்று பாஜக நீதிமன்றம் அறிவித்தாலோ அல்லது குற்றவாளி என்று தீர்பளித்தாலோ அது சீமானுக்குத் தான் வாய்ப்பாகிவிடும். தன் மீது அரசியல் பழிவாங்கல் என்று பாலியல் குற்றவாளி சீமான் பிளேட்டை மாற்றிவிடுவார். இப்போது சீமனின் கூற்றுப்படி பாலியல் தொழிலாளியும் சீமானின் முதல் மனைவியுமான விஜி அண்ணிக்கு நிதிமறுக்கப்பட்டிருக்கின்றது என்று மக்கள் மன்றத்தில் கருத்துருவாக்கம் இடப்பட்டிருக்கின்றது. சீமான் விஜி அண்ணியை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள்வேண்டும் என்பதே சரியானதொரு முடிவாக இருக்கும். ஆனால் அதுக்கு கயல் அண்ணி உடன்படமாட்டாங்க. சீமானுக்கு ஆப்பு கயல் அண்ணியிடமிருந்துதான் வரும். வரவேண்டும்!

முன்பும் ஒருமுறை ரகுமான் விடயத்தில் சொன்னதுதான்:

வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்!

உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்!

குழல் என்றால் அதனை ஊதவேண்டும்!

இந்த கோணத்தில்தான் சீமானின் அரசியல் எதிரிகள் இதை அணுகுவார்கள்.

நீங்கள் சொல்வது போது இது சீமான் வாழ்வில் ஒரு தீராத வடுவாகவே இருக்கும்.

சீமான் குற்றவாளி, குற்றமற்றவர் என தீர்ப்பு வருவதை விட, இப்படி முடிவதே சீமானின் எதிர்களுக்கு மிகவும் சாதமகானது. இதை வைத்து வாழ்நாள் பூராவும் சீமானை வெளுப்பார்கள்.

நானும் எந்த நிலைக்கும் இறங்கி சீமானை வெளுக்க தயார்தான்.

ஆனால் இது மிக அநீதியானது.

பிகு

விஜி அண்ணி உயிருக்கு ஆபத்து ஏதும் வந்து விடக்கூடாது என்பதே சீமானின் இப்போதைய பெருங்கவலையாக இருக்கும்.

திமுக காரனே போட்டு தள்ள கூடும்.

அப்படி ஏதும் நடந்தால் சீமானின் அரசியல் வாழ்வுக்கு சங்குதான்.

  • கருத்துக்கள உறவுகள்

42 minutes ago, வாலி said:

ஆனால் அதுக்கு கயல் அண்ணி உடன்படமாட்டாங்க. சீமானுக்கு ஆப்பு கயல் அண்ணியிடமிருந்துதான் வரும். வரவேண்டும்!

இதில் எந்த பங்கும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாவது இவர் தான். தன் தாயின் வாழ்வையும் பாத்திருப்பார் அப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும், இனியாவது இவ்விடயத்தில் மனநிம்மதி ஏற்படட்டும். சில வாழ்வின் நிகழ்வுகள் விசித்திரமானவை தான்.

இவ்விடயம் இத்தோடு பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிடும், நீதிமன்றமும் இழப்பீடு கொடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது, பெரிய அண்ணிக்கும் உரிய ஆதரவு இல்லை, அவர் சீமான் உறவினரிடம் பேசிய ஒலிப்பதிவில் சமாதானம் பேச தயார் நிலையில் இருப்பது போலயே பேசினார். சீமான் இவ்விடயத்தில் வீண் பேச்சு பேசாமலிருந்தாலே இது அடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் முன்னரே எதிர்பார்த்தது தானே.😎

சத்தமாக சிரிக்கவேண்டும் போல் இருக்கின்றது. அப்படி சிரித்தால் விசரன் என பட்டம் கட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தால் அடக்கிக்கொள்கின்றேன்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, செவ்வியன் said:

இதில் எந்த பங்கும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாவது இவர் தான். தன் தாயின் வாழ்வையும் பாத்திருப்பார் அப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும், இனியாவது இவ்விடயத்தில் மனநிம்மதி ஏற்படட்டும். சில வாழ்வின் நிகழ்வுகள் விசித்திரமானவை தான்.

உண்மை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.