Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kalpana.jpg?resize=600%2C337&ssl=1

தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்

பிரபல பின்னணிப் பாடகியான  கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

44 வயதான  கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில்,  அதிகளவான  தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால்  சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்  கல்பனா தற்போது   ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளார் எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்பனாவின் கணவரை பொலிஸார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424061

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2025 at 01:12, தமிழ் சிறி said:

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்பனாவின் கணவரை பொலிஸார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தூக்கமின்மையால் அதிக தூக்க மாத்திரைகளை எடுத்ததாக அவரே சொல்லியுள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டைப் பூட்டிவிட்டு தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினால் கணவன் என்ன செய்வார்?

ஏற்கனவே பிரிந்து வாழ்வதாகவே சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திறமை மிக்க பாடகி . அமைந்த வாழ்கை சரியில்லைபோலும். நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டார். மகள் வந்து சாடசி சொல்கிறார் . அப்படி ஒன்றுமில்லை என , யாரையோ காப்பற்ற முயல்கிறார் போலும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு @ போட முடியவில்லை. யாராவது ஓணாண்டியை @ போட்டு விடுங்கள். அவருக்கு ஒரு வழக்கு வந்துள்ளது. பொயிண்ட்ஸ் தேவைபட்டால் நெடுக்கை அணுகவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம்.

ஹைதராபாத்: மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார்.

சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்ட அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது: “வணக்கம். நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை குறித்தும், எனது கணவரைக் குறித்தும் தவறான வதந்தி பரவி வருகிறது. அது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன்.

நான் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு, எல்எல்பி போன்ற படிப்புகளை படித்து வருகிறேன். இதோடு நான் சார்ந்துள்ள இசைத்துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எனக்கு பல ஆண்டுகளாக தூக்கம் என்பது இல்லை. அதற்காக மருத்துவர்களை அணுகிய போது எனக்கு இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.

நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்தின் டோஸ் அண்மையில் கொஞ்சம் கூடிய காரணத்தால் எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்குச் சென்றேன். இப்போது நான் உயிரோடு உங்கள் முன்பு பேசக் காரணம் எனது கணவர் தான். அவர் வெளியூரில் இருந்தாலும் இந்த தகவல் அவருக்கு கிடைத்ததும் முதலில் போலீஸ் தரப்புக்கு தகவல் சொல்லி உள்ளார். அதோடு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளை துரிதமாக ஏற்பாடு செய்தார். அதனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று நான் உயிர் தப்பித்தேன்.

அதனால் எந்தவிதமான வதந்தியையும் தயவு செய்து நம்ப வேண்டாம். எனக்கு தனிப்பட்ட சிக்கல் எதுவும் இல்லை. கடவுளின் அருளினால் என் வாழ்வில் எனக்கு கிடைத்த அருமையான விஷயம் என்றால் அது எனது கணவர் பிரசாத் பிரபாகர் மற்றும் எனது மகள் தயா பிரசாத். இந்த தருணத்தில் போலீஸ், ஊடகம், சக இசைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பேன்” என்றார்.

பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

குடும்ப பிரச்சினை காரணமாக கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அதை அவரது மகள் மறுத்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து புதன்கிழமை (மார்ச் 5) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது கல்பனா விளக்கம் தந்துள்ளார்.

‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம் | singer kalpana explains via video to not believe rumors about her family - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.