Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானும் பெங்களூர், சென்னை அணிபோல் தனது மைதானத்தில் தோற்கும் அணி.

ராஜஸ்தான் அணிக்கு இரண்டு இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்து அந்த அணியினை தோற்கடிக்கிறார்கள்.🤣

  • Replies 3.3k
  • Views 98.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • நிலாமதி

  • சுவி

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • சுவி

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

நாளைக்கு சுவி ஐயா, கந்தப்பு, நான் மூன்று பேருக்கும் பொங்கு சனி அல்லது மங்கு சனி...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

நாளைக்கு சுவி ஐயா, கந்தப்பு, நான் மூன்று பேருக்கும் பொங்கு சனி அல்லது மங்கு சனி...............🤣.

சுவி, நந்தன், ரசோதரன். மூவரையும் கொஞ்சம் கீழே இறக்குவதற்கு நல்ல சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். குலுக்கல் இன்றே கடைசி நாள். அம்மாமாரே ஜாயாமாரே. வாருங்கள் வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். உங்கள் அதிஷ்டம் உங்களை அழைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, செம்பாட்டான் said:

சுவி, நந்தன், ரசோதரன். மூவரையும் கொஞ்சம் கீழே இறக்குவதற்கு நல்ல சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். குலுக்கல் இன்றே கடைசி நாள். அம்மாமாரே ஜாயாமாரே. வாருங்கள் வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். உங்கள் அதிஷ்டம் உங்களை அழைக்கிறது.

வாய்ப்பில்லை,

முதலாவது போட்டியில் குஜராத் வென்றாலும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியில் உள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் தமது சீருடைக்குள் லக்னோ சீருடை அணிந்தே வருவார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நாளைக்கு சுவி ஐயா, கந்தப்பு, நான் மூன்று பேருக்கும் பொங்கு சனி அல்லது மங்கு சனி...............🤣.

மரணசனி என்று ஒன்றும் உள்ளது.

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

வாய்ப்பில்லை,

முதலாவது போட்டியில் குஜராத் வென்றாலும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியில் உள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் தமது சீருடைக்குள் லக்னோ சீருடை அணிந்தே வருவார்கள்.🤣

அவங்கள விடுறதா இல்லை போல.

நம்ம வானிந்துவுக்கு ஒரு போனப் போடவேண்டியதுதான். நாளைக்கு உருட்டுறம்.

23 minutes ago, ஈழப்பிரியன் said:

மரணசனி என்று ஒன்றும் உள்ளது.

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

அது எங்களுக்கா. ஏதோ சனி என்று கதைக்கினம். நாளைக்கு சனிக்கிழமை வேற.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

மரணசனி என்று ஒன்றும் உள்ளது.

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

🤣...............

அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣...............

அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............

தம்பி நான் அவனல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

🤣...............

அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............

நான் நினைக்கிறன். ஒரு 15 பேர் சென்னை என்று.

ஆறுமுகத்துக்கு ஏறுமுகம் என்று வசி சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

நான் நினைக்கிறன். ஒரு 15 பேர் சென்னை என்று.

ஆறுமுகத்துக்கு ஏறுமுகம் என்று வசி சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள்.

அது ஒரு நகைசுவைக்காக, நானும் சென்னையினைத்தான் தெரிவு செய்துள்ளேன் ஆனால் 3 அணிகள் தமது இடத்தை துண்டு போட்டுவிட்டார்கள் ஏற்கனவே, சென்னை, கைதராபாத், ராஜஸ்தான்.

29 minutes ago, செம்பாட்டான் said:

அவங்கள விடுறதா இல்லை போல.

நம்ம வானிந்துவுக்கு ஒரு போனப் போடவேண்டியதுதான். நாளைக்கு உருட்டுறம்.

இன்றைய போட்டியில் சுயாஸ் கால் தடத்தினால் ஏற்பட்ட ஆடுகளத்தின் கடினமான பகுதியினை குறிவைத்து பந்து வீசினார், ஏனெனில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் ஆனால் அது புல் லெந்தில் இருப்பது துடுப்பாட்டக்காரருக்கு வசதியாக இருந்ததனால் அவரும் வஞ்சகமில்லாமல் 6, 4 என அடித்தார், வனிந்து சும்மாவே விக்கெட் எடுக்கிறேன் என அதே அளவில் தூக்கி போடுவார்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍...

சென்று வருக. மீண்டும் சந்திப்போம். 🤛 🙏

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஆட்டத்தின் நடுப்பகுதியினை ஆதிக்கம் செலுத்தும் சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் விக்கெட் எடுத்தால் அது மேலும் சிறப்பாக இருக்கும், சென்னை அணியின் தோல்விக்கு ஆட்டத்தின் நடுப்பகுதி துடுப்பாட்டக்காரர்கள் போடும் முட்டுக்கட்டை காரணமாக இருபப்து போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

அது ஒரு நகைசுவைக்காக, நானும் சென்னையினைத்தான் தெரிவு செய்துள்ளேன் ஆனால் 3 அணிகள் தமது இடத்தை துண்டு போட்டுவிட்டார்கள் ஏற்கனவே, சென்னை, கைதராபாத், ராஜஸ்தான்.

இன்றைய போட்டியில் சுயாஸ் கால் தடத்தினால் ஏற்பட்ட ஆடுகளத்தின் கடினமான பகுதியினை குறிவைத்து பந்து வீசினார், ஏனெனில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் ஆனால் அது புல் லெந்தில் இருப்பது துடுப்பாட்டக்காரருக்கு வசதியாக இருந்ததனால் அவரும் வஞ்சகமில்லாமல் 6, 4 என அடித்தார், வனிந்து சும்மாவே விக்கெட் எடுக்கிறேன் என அதே அளவில் தூக்கி போடுவார்.🤣

வானிந்து அப்பிடிப் போட்டா அடிக்கிறது கஷ்டம். அவற்ற பந்து நல்லா கீழ வரும். அவர் நல்லாக் குனிந்து, பந்தை விடும்போது மிகவும் கீழ இருந்துதான் விடுவார். அவருக்கு இப்போ அந்த லைன் சரியா வருதில்லை.

இன்று ஹேசுல்வூட்டும் புவனேஷும் குடுத்த அழுத்தத்தை, மற்றவர்களால் குடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

🤣...............

அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............

யாரோ பேபி டிவிலியர்ஸ் வருகிறாராம்.🤣

Just now, செம்பாட்டான் said:

வானிந்து அப்பிடிப் போட்டா அடிக்கிறது கஷ்டம். அவற்ற பந்து நல்லா கீழ வரும். அவர் நல்லாக் குனிந்து, பந்தை விடும்போது மிகவும் கீழ இருந்துதான் விடுவார். அவருக்கு இப்போ அந்த லைன் சரியா வருதில்லை.

பெரும்பாலான ஆடுகளங்கள் பெரிதாக எழுந்து வராது என்பதால் அவர் தேவையில்லாமல் முதுகை வளைக தேவையில்லை என கூறிவிடுங்கள் அவரிடம், பிறகு அவர் காயத்தினால் வெளியேறினால் ராஜஸ்தான் அணி மேலே உள்ள அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிடும்.🤣

4 minutes ago, செம்பாட்டான் said:

வானிந்து அப்பிடிப் போட்டா அடிக்கிறது கஷ்டம். அவற்ற பந்து நல்லா கீழ வரும். அவர் நல்லாக் குனிந்து, பந்தை விடும்போது மிகவும் கீழ இருந்துதான் விடுவார். அவருக்கு இப்போ அந்த லைன் சரியா வருதில்லை.

நல்ல அவதானிப்பு.👍

  • கருத்துக்கள உறவுகள்

பிளட்டாக பந்து வீசுவதன் மூலம் பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருக்கும், ஆனால் புல் லெந்தில் பந்துவீசும் போது பிளட்டாக வீசினாலும் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

யாரோ பேபி டிவிலியர்ஸ் வருகிறாராம்.🤣

பாவம் அவரை இப்பிடி ஏத்திவிட்டே மண்ணாக்கி விட்டுட்டாங்கள். டிவில்லியர்ஸ் மாதிரி ஒருவர் இனி வருவாரோ தெரியாது. கிரிக்கட்டில் ஒரு பாரிய பாய்ச்சல் அவருடையுது. களத்தடுப்பு என்றால் என்ன என்று ஒவ்வொருவருக்கும் பாடம் எடுத்தவர். அவர் நிற்கும் பக்கம் எப்படியும் ஒரு 25 தொடக்கம் 30 ஓட்டங்களை தடுத்து விடுவர். அதுவே தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பெரிய வெற்றி.

அவரின் பின் தான் எல்லா அணிகளும் களத்தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. அதற்கு என்றே தனியாக பயிற்சியாளர்களை நியமித்தார்கள். இந்தியா இலங்கை போன்ற நம் நாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தன. கடந்த காலத்தை பார்த்தீர்கள் என்றால், எமது வீரர்கள் எப்படி களத்தடுப்பார்கள் என்று தெரியும் தானே. சில வீரர்களை நோக்கி பந்து சென்றால், இன்னும் ஒரு ஓட்டம் அதிகமாக ஓட முடியும் என்று துடுப்பாட்டக்காரர்களுக்கு தெரியும். சமீப காலத்தில் அஸ்வினைப் பற்றி அப்படி சொல்வார்கள். அவரை நோக்கித் தட்டி விட்டு ஒன்றுக்கு இரண்டாவது ஓட்டம் ஓடிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, vasee said:

பிளட்டாக பந்து வீசுவதன் மூலம் பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருக்கும், ஆனால் புல் லெந்தில் பந்துவீசும் போது பிளட்டாக வீசினாலும் அடிப்பார்கள்.

உண்மைதான். இப்போ எங்கே அப்பிடி ஒரு பந்து வரும் என்று பார்த்துக் கொண்டு நிற்கினம். கொஞ்சம் மேல வந்தாலே வெளுக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் ஒரு சுருக்கம் தர முடியுமா. இறுதிப் போட்டியில் இந்த இந்த அணி வெல்லும் என்று கணித்தவர்கள் எத்தினை பேர். யார், எந்த அணி என்று தேவையில்லை. எத்தனை பேர் எந்த அணி என்று தெரிந்தால் பம்பலா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, செம்பாட்டான் said:

பேபி ABயா. சென்னைக்கு நல்ல ஒரு இணைப்பு. விஜய்சங்கருக்கு ஆப்பு இருக்கும் போல.

விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?

  • கருத்துக்கள உறவுகள்

Facebookல் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார். நீண்டநாள் IPL ரசிகர்கள்தான் இது உண்மையா இருக்குமா என்று சொல்ல வேண்டும். அவரின் பத்தி கீழே:

நேற்றைய போட்டியில் லக்னவ் அணியின் பல முடிவுகள் வினோதம் - பவர் பிளெவில் அவர்கள் பந்துகளை நிறைய விட்டது, பண்ட் மிக மெதுவாக ஆடியது, மில்லரை மிகத் தாமதமாக இறக்கியது. கட்டக்கடைசியாக முக்கியமாக பிஷ்னாய்க்கு நான்காவது ஓவரைக் கொடுக்காதது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வினோதமோ சர்ச்சையோ இல்லை - எல்லா ஐ.பி.எல்களிலும் சில போட்டிகளை தாரை வார்ப்பார்கள் - பெரும்பாலும் சென்னையும் மும்பையும் மோசமாக ஆடிவரும்போது அவர்களுடைய ரசிகர் படையை சோர்வடையச் செய்யாமல் இருக்க, விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள் வெளியேறாமல் இருக்க, ஆட்டத்தொடரை விறுவிறுப்பாக்க நிர்வாகக் குழுவும் அணி உரிமையாளர்களுமாக இம்முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அதிகாரபூர்வ fixing இது. நேற்றைய போட்டியை சென்னைக்கு விட்டுக்கொடுத்தால், அதற்கு முந்தின நாள் போட்டி மும்பைக்குப் போனது. ஐ.பி.எல் தொடரின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இதனாலே மக்கள் மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பார்கள். விளையாட்டை முழுமையான பொழுதுபோக்காக, வியாபாரமாக மட்டும் பார்க்கையில் வரும் விபத்து இது. இறுதிப் போட்டியிலாவது பிக்ஸிங் பண்ணாதீங்க என்பதே என் வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கந்தப்பு said:

விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?

அவர்களுக்கு நடுவில் வரும் துடுப்பாட்டக்காரர்களாள்தான் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்யத்தான் இவர் உதவுவார். அதனால்தான் சங்கரோ என்று நினைத்தேன்.

ஓவர்டன் அவர்களுக்குத் தேவை. பேபிய impact sub ஆகக் கொண்டு வரலாம். அப்படியாயின் டூபே தொடங்க வேணும். அப்படியாயின் சங்கர்தான் பலி. திருப்பாதி மூன்றாம் இடத்துக்குத் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

Facebookல் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார். நீண்டநாள் IPL ரசிகர்கள்தான் இது உண்மையா இருக்குமா என்று சொல்ல வேண்டும். அவரின் பத்தி கீழே:

நேற்றைய போட்டியில் லக்னவ் அணியின் பல முடிவுகள் வினோதம் - பவர் பிளெவில் அவர்கள் பந்துகளை நிறைய விட்டது, பண்ட் மிக மெதுவாக ஆடியது, மில்லரை மிகத் தாமதமாக இறக்கியது. கட்டக்கடைசியாக முக்கியமாக பிஷ்னாய்க்கு நான்காவது ஓவரைக் கொடுக்காதது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வினோதமோ சர்ச்சையோ இல்லை - எல்லா ஐ.பி.எல்களிலும் சில போட்டிகளை தாரை வார்ப்பார்கள் - பெரும்பாலும் சென்னையும் மும்பையும் மோசமாக ஆடிவரும்போது அவர்களுடைய ரசிகர் படையை சோர்வடையச் செய்யாமல் இருக்க, விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள் வெளியேறாமல் இருக்க, ஆட்டத்தொடரை விறுவிறுப்பாக்க நிர்வாகக் குழுவும் அணி உரிமையாளர்களுமாக இம்முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அதிகாரபூர்வ fixing இது. நேற்றைய போட்டியை சென்னைக்கு விட்டுக்கொடுத்தால், அதற்கு முந்தின நாள் போட்டி மும்பைக்குப் போனது. ஐ.பி.எல் தொடரின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இதனாலே மக்கள் மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பார்கள். விளையாட்டை முழுமையான பொழுதுபோக்காக, வியாபாரமாக மட்டும் பார்க்கையில் வரும் விபத்து இது. இறுதிப் போட்டியிலாவது பிக்ஸிங் பண்ணாதீங்க என்பதே என் வேண்டுகோள்.

சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்).

திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது,

மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது.

இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான்.

ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார்.

பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

Rishabh Pant - Born To Rule ·

Priety Zinta Amazing Reaction on Pujab Kings Win vs KKR 😮

491351204_1206653884161160_4899191788392

இனிய காலை வணக்கம் . ........... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

அவர்களுக்கு நடுவில் வரும் துடுப்பாட்டக்காரர்களாள்தான் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்யத்தான் இவர் உதவுவார். அதனால்தான் சங்கரோ என்று நினைத்தேன்.

ஓவர்டன் அவர்களுக்குத் தேவை. பேபிய impact sub ஆகக் கொண்டு வரலாம். அப்படியாயின் டூபே தொடங்க வேணும். அப்படியாயின் சங்கர்தான் பலி. திருப்பாதி மூன்றாம் இடத்துக்குத் தேவை.

நீங்கள் சொல்வது சரி சென்னை அணியின் மத்திய பகுதி பலவீனமான பகுதி, ஓட்ட விகிதம் 100 இற்கும் குறைவானதென கேள்விப்பட்டேன் (ஓட்ட சராசரி நினைவில்லை) இதுவரை சென்னை அணியின் ஒட்டு மொத்த ஓட்ட சராசரி 116 என்பதாக நினைவில் உள்ளது, ஆனாலும் திருப்பாதி அணியின் மேல்பகுதியில் ஒரு பலவீனமான நபராக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டியில் தொடருவாரா என்பது சந்தேகம் அதே போல் சங்கரும் அடுத்த போட்டியில் தொடுருவார என கருதவில்லை.

8 hours ago, செம்பாட்டான் said:

@கிருபன் ஒரு சுருக்கம் தர முடியுமா. இறுதிப் போட்டியில் இந்த இந்த அணி வெல்லும் என்று கணித்தவர்கள் எத்தினை பேர். யார், எந்த அணி என்று தேவையில்லை. எத்தனை பேர் எந்த அணி என்று தெரிந்தால் பம்பலா இருக்கும்.

குத்து மதிப்பாக 2/3 நபர்கள் சென்னை அணியினை தேர்வு செய்திருப்பார்கள்.🤣

மிகுதி 1/3 குஜராத் அணி (தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணி)

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

Facebookல் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார். நீண்டநாள் IPL ரசிகர்கள்தான் இது உண்மையா இருக்குமா என்று சொல்ல வேண்டும். அவரின் பத்தி கீழே:

நேற்றைய போட்டியில் லக்னவ் அணியின் பல முடிவுகள் வினோதம் - பவர் பிளெவில் அவர்கள் பந்துகளை நிறைய விட்டது, பண்ட் மிக மெதுவாக ஆடியது, மில்லரை மிகத் தாமதமாக இறக்கியது. கட்டக்கடைசியாக முக்கியமாக பிஷ்னாய்க்கு நான்காவது ஓவரைக் கொடுக்காதது. ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் வினோதமோ சர்ச்சையோ இல்லை - எல்லா ஐ.பி.எல்களிலும் சில போட்டிகளை தாரை வார்ப்பார்கள் - பெரும்பாலும் சென்னையும் மும்பையும் மோசமாக ஆடிவரும்போது அவர்களுடைய ரசிகர் படையை சோர்வடையச் செய்யாமல் இருக்க, விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள் வெளியேறாமல் இருக்க, ஆட்டத்தொடரை விறுவிறுப்பாக்க நிர்வாகக் குழுவும் அணி உரிமையாளர்களுமாக இம்முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அதிகாரபூர்வ fixing இது. நேற்றைய போட்டியை சென்னைக்கு விட்டுக்கொடுத்தால், அதற்கு முந்தின நாள் போட்டி மும்பைக்குப் போனது. ஐ.பி.எல் தொடரின் மிகப்பெரிய பலவீனம் இதுதான். இதனாலே மக்கள் மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பார்கள். விளையாட்டை முழுமையான பொழுதுபோக்காக, வியாபாரமாக மட்டும் பார்க்கையில் வரும் விபத்து இது. இறுதிப் போட்டியிலாவது பிக்ஸிங் பண்ணாதீங்க என்பதே என் வேண்டுகோள்.

இவர் முன்பு மும்பாய் டெல்லி போட்டி பற்றியும் எழுதியிருந்தார். சென்னை, மும்பாய் அணிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவ்வணிகள் வென்றாலும் தோன்றாலும் இவ்வணிகள் விளையாடும் போட்டிகளுக்கு இவ்வணிகளின் இரசிகர்கள் போட்டிகள் பார்க்க செல்வார்கள். நான் நினைக்கிறேன் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறார் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.