Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.

சமத்துவம் - தனிநபராக தேரும் உரிமை.

Societal division of labour சமூகத்தின் வேலை பங்கு பிரிப்பு - நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்து கலாச்சாரம் வேறுபடும்.

இந்த பொதுமைக்குள், அதற்கு எதிராக போகும் தனி நபர்களை போகவிடுவதே சமத்துவம்.

சமூக வேலை பங்கு பிரிப்பு என்பது ஒரு கட்டாயம் அல்ல…

ஒரு சமூகத்தில் பாரம்பரியமாக நிலவியுள்ள வேலை பங்கீடு இன்றும் மாற்றமில்லாமல் தொடரவேண்டும் என்று கருதுவது தவறானது... காலத்தின் போக்கில் சமூக கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வேலை பங்கு மாற்றப்படுவது இயல்பான ஒன்று...

வேலை பங்கு பிரிப்பு என்பது ஒருவழித் தன்மையில் அமையக்கூடாது…

ஆண்கள் மட்டும் கட்டாயம் போர் கடமையை ஏற்க வேண்டும், பெண்கள் குழந்தை பெற்றல் பொறுப்பை மட்டும் ஏற்றால் போதும் என்ற கருத்து குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது...

சமத்துவம் என்பது தனிநபர் விருப்பத்தை மதிப்பது மட்டுமல்ல; சமத்துவ வாய்ப்புகளையும் வழங்குதல்…

“Societal division of labour” என்பது கட்டமைப்பே தவறாக இருக்கலாம்..

ஒரு காலத்தில் பெண்கள் கல்வி பெறக்கூடாது, வேலை செய்யக்கூடாது என்று இருந்தது. ஆனால், அந்த நிலைமையை மாற்றியதால் சமத்துவம் உருவானது... அதுபோல், பங்கு பிரிப்பும் காலப்போக்கில் மாற்றமடைய வேண்டும்…

சமத்துவம் என்பது உடல் கட்டமைப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கக் கூடாது…

ஆண்கள் மட்டுமே போர் கடமையில் ஈடுபட வேண்டும் என்பதற்கு உடல் வலிமை காரணமாக இருப்பதாக நீங்கள் கருதினால், அது தவறான அணுகுமுறை... பெண்களும் நல்ல உடல் பயிற்சி மூலம் ராணுவ சேவையில் சிறப்பாக பங்கெடுக்க முடியும் என்பது உலக அளவில் பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது…

சமூக பங்கு பிரிப்பு என்பது பாரம்பரிய அடிப்படையில் நடக்கக் கூடாது... சமத்துவம் என்பதன் பொருள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே; சமத்துவம்…

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதுதான் சொன்னேன்…

நீங்கள் சமத்துவம் என நம்பி கொண்டு, எதிர்ப்பது “பிரா போடாதமைதான் பெண்ணியம்” என கதைக்கும் கூட்டத்தின் interpretation ஐ.

ஆனால் சமத்துவம் என்பது அது அல்ல.

ஆணுக்கு பெண் சமம் எனவே ஆண்கள் எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என்பது எப்படி பட்ட மொக்கு கதையோ அதே போலத்தான், எடுத்த எடுப்பில் பெண்களையும் முன்னரங்கு அனுப்புங்கள் என்பது.

இந்த மொக்குகதை அல்ல சமத்துவம்.

உடலியல், உளவியல் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை புறந்தள்ளுவது அல்ல சமத்துவம்.

இல்லை ஆம்பிளை பிள்ளை பெற வேண்டும் என வலியுறுத்துவதுதான் சமத்துவம் என நீங்கள் நம்பினால் - அது உங்கள் புரிதல் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இது யாரோ தலையில் பெயிண்ட் டப்பாவை கவிழ்த, பிரா போடாமைதான் பெண்ணியம் என சொல்லும் ஆளிடம் கற்று கொண்ட, சமத்துவம் பற்றிய மிக தவறான புரிதலும் அதன் பால் ஏற்பட்ட விமர்சனமும்.

சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே விதமாக நடத்த வேண்டும் என்பதால், கொக்கு தேனீர் கொடுக்கும் நீண்ட குவளையில், நாய்க்கும் தேனீர் கொடுப்பதல்ல.

நீங்கள் சொல்வது தவறான ஒப்புமைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தை புரிந்து கொள்ளும் முயற்சியாக இருக்கிறது…

சமத்துவம் என்பது ஒற்றை மாதிரியாக நடத்துவது அல்ல; சமமான வாய்ப்புகளை வழங்குவதே அதன் நோக்கம்..

உங்கள் கருத்தில் உள்ள “கொக்குக்கும் நாய்க்கும் ஒரே விதமான குவளை” என்ற ஒப்புமை தவறானது... சமத்துவம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலையை உருவாக்குவதை குறிக்கவில்லை; மாறாக, ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறமைகள், உடல் நிலை, விருப்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமமான வாய்ப்புகளை வழங்குவதை குறிக்கிறது…

போரில் பங்கேற்பது ஆண்களின் கடமை என்று வரையறுப்பது தான் தவறான பங்கு பிரிப்பு…

சமத்துவம் என்பது உடல் இயல்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட முடியாது…

சமத்துவம் பற்றிய புரிதலை “பெண்ணியம்” என்று ஒதுக்கி விடுவது அடையாளக் குறைபாட்டை உருவாக்குகிறது…

பெண்கள் சமத்துவம் குறித்து பேசும் போதெல்லாம் அதை “பெண்ணியம்” என்று தள்ளிப் போடுவது சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவ குறைபாட்டை உறுதி செய்யும் ஒரு அறிகுறிதான்… சமத்துவம் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள், பொறுப்புகள், மற்றும் வாய்ப்புகளை வழங்குவதை குறிக்கிறது…

கொக்குக்கும், நாய்க்கும் ஒப்புமை இங்கே பொருந்தாது

ஒரு மனிதனுக்கும், ஒரு விலங்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது... ஆண் மற்றும் பெண் இருவரும் சமமான திறமைகளும், ஆற்றல்களும் கொண்டவர்கள்; மனவளர்ச்சி, திறமை, மற்றும் சுயாதீன விருப்பங்களில் அவர்கள் சமமாக இருக்க வேண்டும் என்பதே சமத்துவத்தின் உண்மையான நோக்கம்…

சமத்துவம் என்பது ஒத்ததைப் போல் நடத்துவதல்ல; சமமான வாய்ப்புகளை வழங்குவதே அதன் இலக்கு…

“கொக்குக்கும், நாய்க்கும்” என்ற தவறான ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தை மதிப்பீடு செய்வது சமூகத்தில் பாலியல் சமத்துவத்தைக் குறைக்க செய்யும் ஒரு பிழை... உண்மையான சமத்துவம் என்பது ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களையும், திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமமான வாய்ப்புகளை பெறுவதே…ஆண்களின் மேல் மட்டும் வலுக்கட்டாயமாக போர்க்களத்தை சுமத்தியும் பெண்கள் மேல் மட்டும் வலுக்கட்டாயமாக அடுப்படியை சுமத்தி விடுவதும் அல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவர்களுக்கு எங்கிருந்து வந்தது உடல் வலிமை எங்கிருந்து வந்தது ஓர்மம் வீரம்?

தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்..

இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்..

அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..?

யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. வீரப்பெண்கள் என மார்தட்டுவது தமிழ் சமூகத்தின் ஓர் அங்கம்.

ஒரு விடயம் அவசியமாகும் போது ஆண் பெண் பாகுபாடு பார்க்கப்பட மாட்டாது.முக்கியமாக போர் சம்பந்தப்பட்ட விடயங்களில்...

ஆனால் சாதாரண நிலைமை நிலவும் நாட்டில் போர் பயிற்சிக்காக வலிந்து பெண்களை அழைக்க மாட்டார்கள். பெண்மைக்குரிய பலத்துடன் பயிற்சிகளை நிறுத்தி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சொல்வது தவறான ஒப்புமைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தை புரிந்து கொள்ளும் முயற்சியாக இருக்கிறது…

சமத்துவம் என்பது ஒற்றை மாதிரியாக நடத்துவது அல்ல; சமமான வாய்ப்புகளை வழங்குவதே அதன் நோக்கம்..

உங்கள் கருத்தில் உள்ள “கொக்குக்கும் நாய்க்கும் ஒரே விதமான குவளை” என்ற ஒப்புமை தவறானது... சமத்துவம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலையை உருவாக்குவதை குறிக்கவில்லை; மாறாக, ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறமைகள், உடல் நிலை, விருப்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமமான வாய்ப்புகளை வழங்குவதை குறிக்கிறது…

போரில் பங்கேற்பது ஆண்களின் கடமை என்று வரையறுப்பது தான் தவறான பங்கு பிரிப்பு…

சமத்துவம் என்பது உடல் இயல்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட முடியாது…

சமத்துவம் பற்றிய புரிதலை “பெண்ணியம்” என்று ஒதுக்கி விடுவது அடையாளக் குறைபாட்டை உருவாக்குகிறது…

பெண்கள் சமத்துவம் குறித்து பேசும் போதெல்லாம் அதை “பெண்ணியம்” என்று தள்ளிப் போடுவது சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவ குறைபாட்டை உறுதி செய்யும் ஒரு அறிகுறிதான்… சமத்துவம் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள், பொறுப்புகள், மற்றும் வாய்ப்புகளை வழங்குவதை குறிக்கிறது…

கொக்குக்கும், நாய்க்கும் ஒப்புமை இங்கே பொருந்தாது

ஒரு மனிதனுக்கும், ஒரு விலங்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது... ஆண் மற்றும் பெண் இருவரும் சமமான திறமைகளும், ஆற்றல்களும் கொண்டவர்கள்; மனவளர்ச்சி, திறமை, மற்றும் சுயாதீன விருப்பங்களில் அவர்கள் சமமாக இருக்க வேண்டும் என்பதே சமத்துவத்தின் உண்மையான நோக்கம்…

சமத்துவம் என்பது ஒத்ததைப் போல் நடத்துவதல்ல; சமமான வாய்ப்புகளை வழங்குவதே அதன் இலக்கு…

“கொக்குக்கும், நாய்க்கும்” என்ற தவறான ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தை மதிப்பீடு செய்வது சமூகத்தில் பாலியல் சமத்துவத்தைக் குறைக்க செய்யும் ஒரு பிழை... உண்மையான சமத்துவம் என்பது ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களையும், திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமமான வாய்ப்புகளை பெறுவதே…ஆண்களின் மேல் மட்டும் வலுக்கட்டாயமாக போர்க்களத்தை சுமத்தியும் பெண்கள் மேல் மட்டும் வலுக்கட்டாயமாக அடுப்படியை சுமத்தி விடுவதும் அல்ல..

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டைப், விதண்டாவாதம்.

இதே திரியில் நீங்கள் மேலே எழுதியதை இப்போ மறுதலித்து எழுதுகிறீர்கள்🤣.

அத்தோடு உதாரணங்களை அப்படியே literal ஆக பிரயோகிக்கிறீர்கள்.

எல்லாமுமே இயற்கையின் அடிப்படையில்தான் தீர்க்கப்படுகிறன.

ஆணுக்கு ஆண் சமம் எனவே என்னை இங்கிலாந்து கிரிகெட் டீமில் விளையாட விடுங்கள் என்பது சமத்துவம் அல்ல.

எனது அளவு திறமை உள்ள ஒரு வெள்ளைகாரர் விளையாடும் போது நானும் விளையாட கூடியதாக இருக்க வேண்டும். அதுதான் சமத்துவம்.

மிக முக்கியமான குறிப்பு ஐரோபிய மனித உரிமை சாசனம் - போலந்திலும் சட்டம். இது பாலின சமத்துவத்தை மீறாமையை உறுதி செய்கிறது. நீங்கள் சொல்வதுதான் சமத்துவம் என்றால் - டுஸ்க் சொன்னது சட்ட மீறல்.

ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

உண்மை. யேர்மனி 500 பில்லியன் யூரோக்களை தனது பாதுகாப்புக்காக ஒதுக்க உள்ளது. ட்ரம்ப்தான் ஆட்சிக்கு வருவார் என்பதை ஏற்கனவே கணித்திருந்ததால், சென்ற வருடமே யேர்மனி இராணுவத்துக்கான பயிற்சிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்திருந்தது.

ஜேர்மனி எப்படித்தான் நெளிவு சுழிவுகளுடன் ஓடினாலும் அமெரிக்கா இல்லையேல் தள்ளாடி விடுவார்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

மிக முக்கியமான குறிப்பு ஐரோபிய மனித உரிமை சாசனம் - போலந்திலும் சட்டம். இது பாலின சமத்துவத்தை மீறாமையை உறுதி செய்கிறது. நீங்கள் சொல்வதுதான் சமத்துவம் என்றால் - டுஸ்க் சொன்னது சட்ட மீறல்.

ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை.

வரலாறு எப்பவும் ஒரே மாதிரி இருந்ததில்லை.. நேற்று சரியாக இருந்தவை இன்று தவறாகிப்போய் இருக்கின்றன.. இன்று சரியாக இருப்பவை நாளை தவறானவை ஆகலாம்..

ஒரு நூற்றாண்டுக்கு முன் பெண்கள் படிக்ககூடாது அடுப்படிக்கே என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்று அது சரி என்று இருந்தது.. ஆனால் அன்றும் அவற்றை எதிர்த்து பலகலகக்குரல்கள் எழுந்திருக்கும்.. அன்றும் உங்களைப்போல் பலர் அதை எதிர்த்து எழுதி இருப்பார்கள்..

இன்று சரியாக இருப்பவை என்று கருதப்படுபவற்றில் ஒன்றுடன் எனக்கு முரண்பாடு.. என்னைப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த ஆண்களுக்கு எதிராக நிகழும் கட்டமைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பேசுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த பிராபோடாத பெண்ணியவாதிகளும், உங்களை போன்ற ஆண்கள் சங்கம் ஆட்களும் என்னை பொறுத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஆனால் உலகில் பெரும்பான்மை மக்கள் “சமத்துவம்” என்பதை அதன் இயற்கையான அர்த்ததிலேயே விளங்கி கொள்கிறார்கள்.

அது நான் மேலே கொடுத்த விளக்கங்கள்.

வரலாறு - அதை அதன்பாட்டில் விடுவோம். அது எப்படி திரும்புக்கிறது என நானோ, நீங்களோ பார்க்கப்போவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.