Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSoFYYICrnNtxs6ZE9shI5images?q=tbn:ANd9GcRKjm7VZ3wZPs662sLDiEt

கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.

தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kunalan Karunagaran

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள்.

தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.

  • கருத்துக்கள உறவுகள்

"கொந்தல்" இல்லாத மாம்பழமும் சைக்கிளும் இணைவது "நல்லது"! "யாருக்கு நல்லது?" என்பது உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியவரும்😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"கொந்தல்" இல்லாத மாம்பழமும் சைக்கிளும் இணைவது "நல்லது"! "யாருக்கு நல்லது?" என்பது உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியவரும்😂!

இவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இணைய வேண்டும்.

ஆனால் தனியே தேர்தல்களை குறிவைப்பது ஏற்புடையதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இணைய வேண்டும்.

ஆனால் தனியே தேர்தல்களை குறிவைப்பது ஏற்புடையதல்ல.

இது வரை கூட்டமைப்பிலும் சரி, ஏனைய தமிழ்க் கட்சிகளிலும் சரி, தேர்தல் நேரம் தானே ஆட்கள் வெளியேறுவதும் இணைவதும் நடந்திருக்கிறது? வெளியேறியோர் "தமிழ் தேசியத்திற்காகப் பயணிக்க வெளியேறினோம்"😎 என்று பேட்டிகள் கொடுப்பர், "சீற் கிடைக்காமல் வெளியேறினர்" என்பதை மக்கள் எப்போதும் புரிந்து கொண்டே மௌனமாக இருப்பர்.

இந்த இணைவும் இதே வழமையின் அங்கம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

"சீற் கிடைக்காமல் வெளியேறினர்"

சீற் கிடைக்காமல் வெளியேறுவது தவறுதான். ஆனால் சக உறுப்பினர்களுக்கு வெறுப்பூட்டி வெளியேற்றுவதும்,  மக்களால், கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட பின்னும் தனக்கென இல்லாத பதவிகளை உருவாக்குவதும், சர்வாதிகாரிபோல் அடுத்தவரின் பதவிகளை பறிப்பதும், பெயருக்கு சேறடிப்பதும், பொறுப்புகளை கையகப்படுத்துவதும், கட்சியை தன் தனிச்சொத்துப்போல கட்டுப்படுத்தி செயற்படாமல் தடுப்பதும் எந்தவகையில் நிஞாயம்?

6 hours ago, ஈழப்பிரியன் said:

தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இணைய வேண்டும்.

ஆனால் தனியே தேர்தல்களை குறிவைப்பது ஏற்புடையதல்ல

அதே! இல்லையாயின் மக்களுக்கோ, இவர்களுக்கோ எந்த நன்மையையும் கிடையாது. பயனடைவது எதிரியே. இப்படியே பல கட்சிகள் உருவாக்க வாய்ப்பாகும். ஒரே ஒரு கட்சியென மக்களின் நலன் காக்கும் கட்சி உருவாக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484275491_9696806233674967_1040981461215

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்ன கூட்டமைப்பில் இணைந்தனர் சிறீகாந்தா , சிவாஜிலிங்கம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கடந்த வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசுக் கட்சி இணைந்திருந்த நிலையில் அக்கூட்டமைப்பினை பலப்படுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சியும் இணைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நேற்றைய தினம் இக்கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டதாகவும் சட்டத்தரணி ந. சிறீகாந்தா புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில ஒற்றர்களின் ஊடுருவல் காரணமாக பல கட்சிகளாக உடைந்து சின்னாபின்னமாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை மீள் உருவாக்கும் காலம் இவ்வாறான தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையின் காரணமாக கனிந்துள்ளதாகவும் தற்போது உருவாகியுள்ள இக்கூட்டமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு கூறுகின்றனர்.

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்.

அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா, எல்லோரும் இணைகின்றனர், கழட்டிவிட்டு சென்றவர்களுடன் இணையவோ, இணைக்கவோ யாரும் மறுத்துவிட்டனர், வைத்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டனர். இப்போ, தமிழரசுக்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் இணைவு செய்தி, நாளைக்கு மறுப்புச்செய்தியும் வரலாம். சுயநலம் பிடித்த மூடரின் முடிவு எப்போதும் அழிவிலேயே முடியும். வீட்டில் குடியிருப்பது நச்சுப்பாம்புகளும் கறையான்களுமே. யாரும் குடியேற விரும்பவில்லை, நாளுக்கு நாள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.