Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

CTC-BANNER-960x564.png

கனடியத் தமிழரின்  குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது.  ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது.

பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன:

1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை,

2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப்  பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது,

3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது.

இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப்  பிரதிபலிக்கத்   தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

புதிய நெருக்கடி நிலை

CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது.

raj-2-219x300.jpg

பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம்

கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள்  அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத்  தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச்  செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.  இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது.

(இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது)

Strengthening Canada Through Unity and Understanding

குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார்.  ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில்  பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச்  செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும்.

மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?  இந்தக்  கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா?

தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை  CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப்  பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக்  காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது.

இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல்

இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான  உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

Himalaya Declaration, with signatories

ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது.

இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது.

சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

Himalaya-Declaration-and-CTC.jpeg

வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம்

மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள்  நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது.

இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர்.

தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின்  பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

Himalaya-Declaration-withrowal-1024x374.

இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை.

இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா?

தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும்

தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது.

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல்  கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள்  விவகாரங்களில் வெளிநாடுகளின்  தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத்  தமிழர் பக்கம் உறுதியாக நின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு  இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட  நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட  இந்தக்  கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது.

LETTER TO PATRICK BROWN

கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான  முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது.

CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான,  ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள்  விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது  உட்பட்ட விடயங்களைக்  கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர்  குமார் ரட்ணம்   பகிரங்க மன்னிப்புக்  கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது.

Video Player

00:00

01:13

தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே  தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது:  ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்?

இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி.

வெளிவராத ஆலோசனை!

தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February  2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர்  இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது.

பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும்.  மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு  யுத்தியாகும்.

இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே?

இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது.

பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை

இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத்  திங்கள் அங்கீகாரத்தைக்  கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

raj-1-225x300.jpg

பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம்

இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின்  முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.  ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள்

சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர்  அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப்  புறக்கணித்தது.

இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே  சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக்  குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத்  தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக்  கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும்.

தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப்  பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில்  மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது.

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை.

CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற  எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும்  SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார்.

CJV-1024x473.jpg

CTC ஏற்பாடு செய்த SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo

CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும்  அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள்  கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது,  CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது  உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத்  திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல.  இந்த செயற்பாடுகளை  யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு  யார் பொறுப்பேற்பார்கள்?

அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது.  முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு  கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை.  இதில் சமூகத்தின்  அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக்  கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா?  என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை.

பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல்  பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை  உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.  அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும்.

EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS

பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக்  கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச்  செவிசாய்க்கத்  தொடர்ந்து மறுத்து வருகிறது  முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால்,  அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச்  சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர  இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை  குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான்.

பேரவையின் எதிர்காலம் என்ன?   

பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா?

2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா?

4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத்  தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா?

5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை  நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை  எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா,  அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி  விலகுவாரா?

இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்!

https://thesiyamnation.com/41151/

இலங்கதாஸ் பத்மநாதன்

  • கருத்துக்கள உறவுகள்+
On 15/3/2025 at 07:42, nunavilan said:

என்னைப் பொறுத்த வரைக்கும், குப்பையனுகளிலை குற்றம் கண்டுபிடிப்பதை விட -

இவர்களுக்கு நிகரான அ விடப்பெரியதான ஒரு அமைப்பை உருவாக்கி இவர்களை நீர்த்துப்போகச் செய்யலாம்தானே!

கனடாவாழ் தமிழர் ஒருவர் கூட ஏன் இதை செய்ய மறுக்கின்றனர்? அச்சமா?

நல்ல பயனுள்ள கட்டுரை... CTCஇன் வண்டவாளங்களை அறியாதோர் இதை வாசித்து அடிப்படை அறிவை பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2025 at 03:02, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரைக்கும், குப்பையனுகளிலை குற்றம் கண்டுபிடிப்பதை விட -

இவர்களுக்கு நிகரான அ விடப்பெரியதான ஒரு அமைப்பை உருவாக்கி இவர்களை நீர்த்துப்போகச் செய்யலாம்தானே!

கனடாவாழ் தமிழர் ஒருவர் கூட ஏன் இதை செய்ய மறுக்கின்றனர்? அச்சமா?

நல்ல பயனுள்ள கட்டுரை... CTCஇன் வண்டவாளங்களை அறியாதோர் இதை வாசித்து அடிப்படை அறிவை பெறலாம்.

சிறிலங்கா தூதுவர்களை அழைத்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேணும் என்ற ஒர் தரப்பு நீண்ட நாட்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது..."தமிழ்"என்ற சொல்லாடல் இல்லாமல் அமைப்புக்களை உருவாக்க வேணும் என்று விவாதிப்பவர்களும் இருக்கிறார்கள் ...

உதாரணத்திற்கு " தமிழ் பொறியியாலாள‌ர் சங்கம்", "தமிழ் மருத்தவர் சங்கம் " என பெயர் இருந்தால் ஒரு குழுவினர் சொல்லுவினம் "தமிழ்"என இருப்பதை எடுத்துவிட்டு சிறிலங்கா என வைப்போம் என்று....இவர்கள் அநேகர் கொழும்பு ,பேராதரனி போன்ற பல்கலைகழகங்களில் பயின்றவர்களாக இருப்பார்கள் ...அத்துடன் அவர்களுடன் கல்வி கற்ற சிங்கள நண்பர்கள் இவர்களின் அரசியல் ஆசான்களாக இருப்பார்கள் ...

டி.எஸ் செனநாயக்க முதல் மகிந்தா,ரணில்,சந்திரிக்கா,இன்று இருக்கும் நம்ம மீட்பன் டோழர் அனுரா வரை தமிழர் விவவாகாரத்தில் ஒரே கொள்கை உடையவர்கள்....இவர்களின் "தமிழர்களை அழித்து அரவணைக்கும் கொள்கை" காலம் பூராகவும் தொடர்கின்றது ...அவர்களுக்கு உதவ எம்மவர்களில் சிலரை

வைத்துக்கொள்வார்கள் ...இவர்கள் அதி சிறந்த கல்விமான்களாக இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்+
18 hours ago, putthan said:

உண்மை ... இந்த தமிழ் அடையாளத்தை தூறவுங்கோ... சொறிலங்கனா இருப்போம் என்டுறவை எல்லா மாவட்டங்களிலும் வாழ்ந்தாலும் பெரும்பாலும் கூவுவது, கொழும்பாக்கள் தான்...

சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளமொன்றில் என்னுடன் வாதிட்ட கொழும்பு அக்கா ஒராள் - ஏன் நாம் சிறிலங்கனாய் இருக்க வேண்டும் என்றும் தமிழ், தமிழீழம் போன்றவற்றை துறக்க வேண்டும் என்றும் பாடமெடுத்தா...!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

இது உண்மை ..இது நுனி நாக்கு ஆங்கிலமும் ...சிங்கள்வரிடமும்சேர்ந்து வேலை செய்த குணமும்..இது நடுத்தர வயதினரிடமும்...வயது போனவர்களிடமும் இருக்கிறது...கோயிலுக்கு பக்தனாய் வருவார் ..பினர் கோயிலுகு தலவராகிவிடு ..சிங்கள தூதுவரை கூப்பிடுவார்....தூதராலயத்தில் நடைபெறும் பார்ட்டிகளீள் முதல் ஆளய் நிற்பினம் ..அங்கு சமத்து குடி ..நடனமும் ஒரு காரணம்...இதனைவிட இப்ப சி.ரி சி பணிப்பாளர் மலையக பாடசாலையொன்றுக்கு போயிருப்பதாக கேள்வி...அவர் வரும்போது ..புதிய பார்சலுடன் வருவார் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

இதில பகிடி என்னவென்றால் போராட்ட காலத்தில் அடக்கி வாசித்த அரசியலே தெரியாத சிலர் முன்வந்து அரசியல் பேசுவது தான் ...ஒரு காலத்தில் இவர்களின் மூத்தோர் கொழும்பிலிருந்து ஐ.தே.க க்கு செம்பு தூக்கியவர்கள் ..இப்பொழுது அவர்களின் வாரிசுகள் புலம்பெயர் பிரதேசத்திலிருந்து செம்பு தூக்கின்றனர்.

இந்த கூட்டத்தில் புதிதாக மலையக இடதுசாரிகள் சிலரும் கலந்துவிட்டார்கள் ...அவர்கள் வீட்டில் தமிழ் பேசுவார்கள் பாடசாலையில் சிங்களத்தில் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் ...இவர்களின் நுனி நாக்கில் சிங்களம் நன்றாக வரும் ..இவர்களை வைத்து தான் இப்பொழுது ஜெ.வி.பி காய் நகர்த்துகின்றது.

எப்படி ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் அப்பாடக்கர் என நினைத்தார்காளோ அது போல இப்ப ஆட்சியாலர்களை குளிர பண்ண சிங்களம் அப்பாடக்கர் என வாதிடுவார்கள் .

முன்னைய ஆட்சியாளர்கள் ஆங்கிலம் நுனி நாக்கில் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சியை நடத்தினார்கள் (அது முதலாளி வர்க்க ஆட்சியாம்)..தற்பொழுது நுனி நாக்கில் சிங்களம் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.(இது தொழிலாளி வர்க்க ஆட்சியாம்)

மொத்தத்தில் தமிழ் அடையாள அழிப்பு ஆட்சி ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இது உண்மை ..இது நுனி நாக்கு ஆங்கிலமும் ...சிங்கள்வரிடமும்சேர்ந்து வேலை செய்த குணமும்..இது நடுத்தர வயதினரிடமும்...வயது போனவர்களிடமும் இருக்கிறது...கோயிலுக்கு பக்தனாய் வருவார் ..பினர் கோயிலுகு தலவராகிவிடு ..சிங்கள தூதுவரை கூப்பிடுவார்....தூதராலயத்தில் நடைபெறும் பார்ட்டிகளீள் முதல் ஆளய் நிற்பினம் ..அங்கு சமத்து குடி ..நடனமும் ஒரு காரணம்...இதனைவிட இப்ப சி.ரி சி பணிப்பாளர் மலையக பாடசாலையொன்றுக்கு போயிருப்பதாக கேள்வி...அவர் வரும்போது ..புதிய பார்சலுடன் வருவார் பாருங்கள்

முன்பு றோயல் கல்லூரி டமிழ்ஸும்,சென்ற் தோமஸ் டமிழ்ஸும் ,கருவாக்காட்டு டமிழ்ஸும் உடரட்ட சிங்களவர்களும் இரண்டர கலந்து ஆங்கில ஆட்சி செய்தனர் ....அழிந்தனர் தமிழர்களை...கொழும்பிலிருந்து தமிழர் பகுதிக்கு சென்று அரசியல் செய்தனர்..

இப்ப அனுராதபுர அப்புஹாமியும் பண்டாரவளை சந்திர சேகரவும் கொழும்பிலிருந்து சென்று தமிழ்ர் பகுதியில் ஆட்சி செய்கின்றனர்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.