Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-251.jpg?resize=750%2C375&ssl

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன.

லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன.

இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“இது டெஸ்லா வசதியின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்” என்று லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தீப்பிடித்த வாகனங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, சம்பவத்தை “பயங்கரவாதம்” என்று அழைத்தார்.

அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எலோன் மஸ்க் அழுத்தம் கொடுத்ததற்காக அவர் எதிர்விளைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் வந்துள்ளன.

இந்த சம்பவங்கள் டெஸ்லாவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன, நிறுவனம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக விற்பனை சரிவை எதிர்கொள்கிறது.

கடந்த வாரம், எலோன் மாஸ்க்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக ட்ரம்ப் ஒரு டெஸ்லா வாகனத்தை வாங்கினார்.

இதற்கிடையில், டெஸ்லாவின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘Dogequest’ என்ற டாக்ஸிங் வலைத்தளம், டெஸ்லா உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தளம் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா உரிமையாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படுத்துகிறது.

https://athavannews.com/2025/1425732

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484274111_1089497689859755_9174716386038

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜெர்மனி, பெர்லினின் பிளான்டர்வால்ட் மற்றும் ஸ்டெக்லிட்ஸ் சுற்றுப்புறங்களில் நான்கு டெஸ்லா வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

உலகம் பூராகவும் எலான் மஸ்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Vaanam.lk


  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

484274111_1089497689859755_9174716386038

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜெர்மனி, பெர்லினின் பிளான்டர்வால்ட் மற்றும் ஸ்டெக்லிட்ஸ் சுற்றுப்புறங்களில் நான்கு டெஸ்லா வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

உலகம் பூராகவும் எலான் மஸ்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Vaanam.lk


அமெரிக்காவில் என்னவும் செய்யலாம் அது அவர்களின் பிரச்சனை ஜேர்மனியில் ஏன் எரிக்க வேண்டும்?? தேர்தலில் வாக்களிக்கும் போது யோசித்து புள்ளடி போடுவதிலலை நமக்கு என்ன செலவாகிவிடும் என்ற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? இதனாலெல்லாம் எந்தவொரு பிரயோஜனம் இல்லை போசாமால். ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

[ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏
கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும்
ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும்
காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்???
மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? ]

👍

நல்ல நோக்கம் கொண்ட நல்ல கருத்து

5 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் என்னவும் செய்யலாம் அது அவர்களின் பிரச்சனை ஜேர்மனியில் ஏன் எரிக்க வேண்டும்??

அமெரிக்காவில் என்றால் என்ன யேர்மனி அவுஸ்ரேலியா கனடா இலங்கை என்றால் என்ன தனியார் சொத்துக்கள் பொது சொத்துக்களை எரிக்கவோ அழிக்கபடவோ கூடாது.

இனவெறி கொண்ட மோசமானவர்களுக்கு வாக்களிக்க முதல் சிந்திக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்காவில் என்றால் என்ன யேர்மனி அவுஸ்ரேலியா கனடா இலங்கை என்றால் என்ன தனியார் சொத்துக்கள் பொது சொத்துக்களை எரிக்கவோ அழிக்கபடவோ கூடாது.

இனவெறி கொண்ட மோசமானவர்களுக்கு வாக்களிக்க முதல் சிந்திக்க வேண்டும்

முன்பொரு காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த பொது

நிறைய மது குடித்த வெறிகாரர்கள் இருந்தார்கள்.

இப்போது அதைவிட உலகமெல்லாம் மதம் பிடிக்காத இனவெறிகாரர்கள் தான் அதிகம்

எதை எரித்தும் எவரையும் அழிக்க முடியாது

ஆனால் எலோன் ஜெர்மன் நாட்டின் எல்லைக்குள் கால் வைப்பது மிகவும் கடினமாக இருக்கும் இப்போதைக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏

கமலா அக்கா கொம்பனி நல்லாட்சி தந்ததிற்கு நல்ல உதாரணங்களை சொல்ல முடியுமா?👈

தேவையில்லாத உக்ரேன் யுத்தத்திற்கான சீண்டல்கள் செய்தது அக்கா சார்ந்த அரசுதான்...
உலகமே அஞ்சி நடுங்கும் காஷா அழிவுகளுக்கு உடந்தையாக,உதவிகள் செய்ததும் அக்கா சார்பு அரசுதான்.

பல நாடுகளில் அவசியமில்லா போராட்டங்கள் உருவாக காரணமானர்களும் அக்கா சார்பு அரசியல்வாதிகள் தான்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

முன்பொரு காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த பொது

நிறைய மது குடித்த வெறிகாரர்கள் இருந்தார்கள்.

இப்போது அதைவிட உலகமெல்லாம் மதம் பிடிக்காத இனவெறிகாரர்கள் தான் அதிகம்

எதை எரித்தும் எவரையும் அழிக்க முடியாது

ஆனால் எலோன் ஜெர்மன் நாட்டின் எல்லைக்குள் கால் வைப்பது மிகவும் கடினமாக இருக்கும் இப்போதைக்கு..

என்ன வாத்தியார் ??? எலோன். Afd. தலைவியிடம். வரலாம் தானே??? ஏதாவது கொடுக்கல்வாங்கல்கள் இருந்தால் வேண்ட. வரலாம்

மேலும் அமெரிக்காவை இயற்கை எரித்து. அழித்து உள்ளது” தானே ?? அமெரிக்கா அதிபரால். இயற்கையை ஒன்றும் செய்ய முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

கமலா அக்கா கொம்பனி நல்லாட்சி தந்ததிற்கு நல்ல உதாரணங்களை சொல்ல முடியுமா?👈

தேவையில்லாத உக்ரேன் யுத்தத்திற்கான சீண்டல்கள் செய்தது அக்கா சார்ந்த அரசுதான்...
உலகமே அஞ்சி நடுங்கும் காஷா அழிவுகளுக்கு உடந்தையாக,உதவிகள் செய்ததும் அக்கா சார்பு அரசுதான்.

பல நாடுகளில் அவசியமில்லா போராட்டங்கள் உருவாக காரணமானர்களும் அக்கா சார்பு அரசியல்வாதிகள் தான்....

வாக்கு போட்டவார்கள்.....இந்த மனிதனுக்கு ஏன் வாக்கு போட்டோம். என்று அழுகிறார்கள்.

நீங்கள் என்னடா என்றால் தேனும். பாலும் ஓடுகிறது என்கிறீர்கள் முத்திய. ஆட்சிக்கும். இன்றைய ஆட்சிக்கும். என்ன வித்தியாசம் உண்டு” ?? பக்கத்து நாடு கனடாவை உலகில்…………… மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகிய கனடாவை தன்னுடைய நாட்டின் 51 ஆவது மாநிலம் என்கிறார் இதை இவர் எப்படி செல்லலாம்?? இது தான் அமெரிக்காவின் அபிவிருத்தியா ?? இன்றைய அமெரிக்கா அதிபர்  வரி விதிப்பதைத் தவிர எதையும் பெரிதாக இவரின்  ஆட்சி காலத்தில் செய்யப் போவதில்லை உலகில் ஒவ்வொரு நாடும் ஏதோ ஒருவகையில் மற்றைய நாடுகளில் தங்கியிருக்கிறது பெரிய நாடு சிறிய நாடு பணக்காரரா நாடு. ஏழை நாடு என்ற வித்தியாசம் அற்ற முறையில் ஒன்று ஒன்றில் தங்கியுள்ளது இவரின் ஒவ்வொரு செயலுக்கும் மறுதாக்கமுண்டு

மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் இன்று நடைபெறவில்லையா?? தொடர்கிறது தானே??

முன்னரை விட. மோசம் என்று சொல்லலாம் இவர்களின் பிரச்சனையால் ஜேர்மனியில் கார்களை எரிக்க வேண்டுமா ??? என்ன ??

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

வாக்கு போட்டவார்கள்.....இந்த மனிதனுக்கு ஏன் வாக்கு போட்டோம். என்று அழுகிறார்கள்.

😭

வாக்கு போட்ட சொந்த நாட்டு மக்களிடமும் பக்கத்து நாட்டு புதிய பிரதமரிடமும் பைத்தியம் என்ற பட்டத்தை மிகவும் குறுகியகாலத்தில் பெற்று கொண்ட பாட்டாளிகளின் தலைவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, Kandiah57 said:

வாக்கு போட்டவார்கள்.....இந்த மனிதனுக்கு ஏன் வாக்கு போட்டோம். என்று அழுகிறார்கள்.

டொனால்ட் ரம்பிற்கு வாக்களித்தவர்கள் மறதிக்குணமுள்ள ஆசிய ஆபிரிக்கர்கள் அல்ல...

உலக வல்லரசின் மக்கள் .

46 minutes ago, Kandiah57 said:

நீங்கள் என்னடா என்றால் தேனும். பாலும் ஓடுகிறது என்கிறீர்கள்

உலகம் முழுவதிலுமிருந்து அமெரிக்காவை நோக்கி மக்கள் படையெடுக்க காரணம் என்ன மிஸ்டர் கந்தையர்? 😎

46 minutes ago, Kandiah57 said:

பக்கத்து நாடு கனடாவை உலகில்…………… மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகிய கனடாவை தன்னுடைய நாட்டின் 51 ஆவது மாநிலம் என்கிறார்

உண்மையும் அது தானே? அமெரிக்கா இல்லாமல் கனடா எப்போது தனியாக இயங்கியுள்ளது?😁

47 minutes ago, Kandiah57 said:

இன்றைய அமெரிக்கா அதிபர்  வரி விதிப்பதைத் தவிர எதையும் பெரிதாக இவரின்  ஆட்சி காலத்தில் செய்யப் போவதில்லை உலகில் ஒவ்வொரு நாடும் ஏதோ ஒருவகையில் மற்றைய நாடுகளில் தங்கியிருக்கிறது பெரிய நாடு சிறிய நாடு பணக்காரரா நாடு. ஏழை நாடு என்ற வித்தியாசம் அற்ற முறையில் ஒன்று ஒன்றில் தங்கியுள்ளது இவரின் ஒவ்வொரு செயலுக்கும் மறுதாக்கமுண்டு

எல்லா நாடுகளும் வருமான வரி / உள் நாட்டு வரிகளில் தான் தம் நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றார்கள்.👈

48 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொன்ன அனைத்தும் இன்று நடைபெறவில்லையா?? தொடர்கிறது தானே??

முன்னைய ஆட்சியாளர்களால் தீ மூட்டப்பட்டதை அணைக்க காலங்கள் தேவை.😥

48 minutes ago, Kandiah57 said:

இவர்களின் பிரச்சனையால் ஜேர்மனியில் கார்களை எரிக்க வேண்டுமா ??? என்ன ??

சொத்துக்களை எரிப்பது தவறு. எனினும் எலான் மஸ்க் உலகின் கதாநாயகன்.அவர் தயாரிப்புகள் இன்றைய உலகின் பேசு பொருள். 😎

auf Wiedersehen 😎

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உலக வல்லரசின் மக்கள் .

ஈராக் உடன் ஏன் தனியாக அடிபடவில்லை ??? இல்லை கேக்கிறேன. ஐரோப்பா இல்லாமல் ஈராக்கில் வென்று இருப்பார்களா???? எந்தவொரு நாட்டுடனும் தனியாக போர் செய்யட்டும. பார்ப்போம் ....முடியாது பிறகு ஏன் வல்லரசு என்று கூற வேண்டும் ???

27 minutes ago, குமாரசாமி said:

காரணம் என்ன மிஸ்டர் கந்தையர்? 😎

டொலர் மட்டுமே காரணம் டொலர்  200 300 400. ஆல் பெருக்கப்படுகிறது உலகம் முழுவதும் ஒரே நாணயம் எனில் அமெரிக்காவுக்கு யார் வருவன் ??

30 minutes ago, குமாரசாமி said:

உண்மையும் அது தானே? அமெரிக்கா இல்லாமல் கனடா எப்போது தனியாக இயங்கியுள்ளது

கனடா இல்லாமல் அமெரிக்காவும். இயங்க முடியாது அது தான் இணைக்க விரும்புகிறார்கள்

32 minutes ago, குமாரசாமி said:

எல்லா நாடுகளும் வருமான வரி / உள் நாட்டு வரிகளில் தான் தம் நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றார்கள்

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

முன்னைய ஆட்சியாளர்களால் தீ மூட்டப்பட்டதை அணைக்க காலங்கள் தேவை.

நாலு வருடங்கள். போதுமா ???

34 minutes ago, குமாரசாமி said:

சொத்துக்களை எரிப்பது தவறு. எனினும் எலான் மஸ்க் உலகின் கதாநாயகன்.அவர் தயாரிப்புகள் இன்றைய உலகின் பேசு பொருள். 😎

இருக்கலாம் ஜேர்மனிக்கு அவர் கதாநாயகன். இல்லை இங்கே தேர்தலில் வென்று காட்டட்டும். பாரப்போம்.

குறிப்பு,......எப்படி பதில்கள் நாளை மீண்டும் சந்திப்போம. 🙏

  • கருத்துக்கள உறவுகள்

எலோன் மஸ்கிற்கு SEC கீச்சகம் வாங்கிய விவகாரத்தினை முறையாக கையாளாமைக்காக குற்றப்பத்திரிகை அனுப்பியுள்ளது, 5% அதிகமான பங்குகளை வாங்கினால் அது தொடர்பான அறிவிப்பினை 10 நாள்களில் வெளியிட வேண்டும் எனும் சட்டத்தினை மீறியமைக்கான குற்றச்சாட்டில் நீதிமன்றில் SEC வழக்கு தொடர்ந்துள்ளது.

https://www.reuters.com/world/us/elon-musk-issued-summons-sec-case-over-twitter-stake-disclosure-2025-03-20/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.