Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 APR, 2025 | 04:12 PM

image

சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் பூசும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) இடம்பெற்றது. 

அந்த வகையில் புதுவருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருங்களுக்கு தலையில் புத்தாண்டு எண்ணெய் பூசும் சடங்கு இன்று புதன்கிழமை (16) காலை நடத்தப்பட்டது.

இதன்போது, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள 153 வயதான ஆமைக்கு முதலில் தலையில் எண்ணெய் பூசப்பட்டது.

இலங்கையில் உள்ள அதிக வயதான ஆமை இதுவாகும்.

இந்த ஆமையின் மொத்த எடை 400 கிலோவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆமை 1930 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்‘கடோல்’ எனும் யானையின் தலையிலும் கபில நிற கரடியின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது.

இந்நிகழ்வானது, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய, பிரதி பணிப்பாளர் தினுஷிகா மானவடு உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

WhatsApp_Image_2025-04-16_at_15.57.33.jp

WhatsApp_Image_2025-04-16_at_15.57.40.jp

WhatsApp_Image_2025-04-16_at_15.57.47.jp

WhatsApp_Image_2025-04-16_at_15.57.17.jp

https://www.virakesari.lk/article/212110

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

ஆமை, யானைக்கு எல்லாம் எண்ணை பூசியவர்கள்,

ஏன்... சிங்கம், புலி, கரடி, முதலைக்கு எல்லாம் எண்ணை பூசவில்லை. 😂

முக்கியமாக.... சிங்கத்தின் வம்சத்தில் வந்த சிங்களவர்,

சிங்கத்தை மறந்தது மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

செய்தியை வாசித்து இணைக்கும்போது அப்பாவிடம் சொன்னேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

செய்தியை வாசித்து இணைக்கும்போது அப்பாவிடம் சொன்னேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள் அண்ணை!

ஏராளன்... நீங்களும் சிங்கத்துக்கு ஈனம் எண்ணை வைக்கவில்லை என அப்பாவிடம் கேட்டீர்களா. அதற்கு அப்பா என்ன பதில் சொன்னார் என அறிய ஆவலாக உள்ளது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஏராளன்... நீங்களும் சிங்கத்துக்கு ஈனம் எண்ணை வைக்கவில்லை என அப்பாவிடம் கேட்டீர்களா. அதற்கு அப்பா என்ன பதில் சொன்னார் என அறிய ஆவலாக உள்ளது. 😂

ஏன் புலி, சிங்கங்களுக்கு எண்ணை வைக்கவில்லை இவர்கள் என கூற அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

ஏன் புலி, சிங்கங்களுக்கு எண்ணை வைக்கவில்லை இவர்கள் என கூற அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.

சிங்கம், புலிக்கு கிட்டப் போய்... எண்ணை வைக்க ஒருவருக்கும் "தில்" இல்லை.

கிட்டப் போனால், கடித்து குதறி விடும் என்பதே உண்மை.

அப்பாவி பிராணிகளின் மீதுதான், இவர்களின் சம்பிரதாயம் எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

491830035_1223071249522740_3181007803366

சிங்கத்துக்கு எண்ணை வைத்து, தலை வாரி விட்ட போது .... 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 18:23, தமிழ் சிறி said:

ஆமை, யானைக்கு எல்லாம் எண்ணை பூசியவர்கள்,

ஏன்... சிங்கம், புலி, கரடி, முதலைக்கு எல்லாம் எண்ணை பூசவில்லை. 😂

முக்கியமாக.... சிங்கத்தின் வம்சத்தில் வந்த சிங்களவர்,

சிங்கத்தை மறந்தது மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. 🤣

சிங்கத்துக்கு எண்ணை பூசினால், பூசின பிக்குவுக்கு சிங்கம் பாலூத்தி விடும் என்பதால் தவிர்த்திருக்கலாம்🤣.

2 hours ago, தமிழ் சிறி said:

491830035_1223071249522740_3181007803366

சிங்கத்துக்கு எண்ணை வைத்து, தலை வாரி விட்ட போது .... 😂

இப்பதான் முடியை வெட்டி நல்லா முழுகி போட்டு, நல்லெணை வச்சு மேவி இழுத்து கொண்டு வந்து யாழை திறந்தேன்….🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சிங்கத்துக்கு எண்ணை பூசினால், பூசின பிக்குவுக்கு சிங்கம் பாலூத்தி விடும் என்பதால் தவிர்த்திருக்கலாம்🤣.

இப்பதான் முடியை வெட்டி நல்லா முழுகி போட்டு, நல்லெணை வச்சு மேவி இழுத்து கொண்டு வந்து யாழை திறந்தேன்….🤣.

பிக்கு… உசாரான பிக்கு. அவருக்கும் உயிர் மேல் ஆசை இருக்கும் தானே. 😂

நீங்கள், இங்கிலாந்திலும் நல்லெண்ணை முழுக்கு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அல்லது… சும்மா பம்பலுக்கு எழுதினீர்களா. 🤣

நான் நல்லெண்ணை முழுக்கை கைவிட்டு பல வருடங்களாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பிக்கு… உசாரான பிக்கு. அவருக்கும் உயிர் மேல் ஆசை இருக்கும் தானே. 😂

நீங்கள், இங்கிலாந்திலும் நல்லெண்ணை முழுக்கு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அல்லது… சும்மா பம்பலுக்கு எழுதினீர்களா. 🤣

நான் நல்லெண்ணை முழுக்கை கைவிட்டு பல வருடங்களாகி விட்டது.

பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன்.

தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன்.

தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣

உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே.

இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல்.

பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே.

இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல்.

பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂

ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள்.

முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை.

காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன்.

தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட்.

34 minutes ago, S. Karunanandarajah said:

ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.

கருவாடு மீனாகிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல்.

நலம்.நலமறிய ஆவல்.

என்று எழுதுவார்கள்.

இது என்னடா தலைமுடி நிலையை ஆவல்?

கடவுளே இன்னும் என்னென்ன கேட்கப் போறாங்களோ?

எதுக்கும் கோசான் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

491285093_1166540572150351_3220417677806

  • கருத்துக்கள உறவுகள்

491938301_702905515598048_31494212713855

இப்ப, வடிவா... இருக்கா பிரண்ட்ஸ். animiertes-gefuehl-smilies-bild-0046.gif 😂

@ஏராளன் , @suvy , @உடையார், @goshan_che , @S. Karunanandarajah , @ஈழப்பிரியன் ,

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் மனிசனாக மாற வெளிக்கிட்டு அசிங்கமாய் இருக்கு . ...... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

491938301_702905515598048_31494212713855

இப்ப, வடிவா... இருக்கா பிரண்ட்ஸ். animiertes-gefuehl-smilies-bild-0046.gif 😂

@ஏராளன் , @suvy , @உடையார், @goshan_che , @S. Karunanandarajah , @ஈழப்பிரியன் ,

அது ராஜாவாக இருக்க விடவே மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அது ராஜாவாக இருக்க விடவே மாட்டீர்களா?

வீட்டோட மாப்புள்ள என்றால் மரியாதை அம்மட்டும்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வீட்டோட மாப்புள்ள என்றால் மரியாதை அம்மட்டும்தான்🤣

மற்றைய நாடுகளில் எப்படியோ...

ஸ்ரீலங்காவில் சிங்கம், வீட்டோடு மாப்பிள்ளைதான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

மற்றைய நாடுகளில் எப்படியோ...

ஸ்ரீலங்காவில் சிங்கம், வீட்டோடு மாப்பிள்ளைதான். 😂

சிங்கமும், புலியும் இல்லாத நாட்டில் மனிதர்கள் சிங்கம், புலி என அடிபட்ட ஒரே நாடு சிறிலங்காதான்🤣.

காட்டில் பெரும்பா லும் ஆண் சிங்கம் இரை தேடுவதில்லை. மனிசி கொண்டு வாறத சாப்பிட்டு விட்டு, ஹாயாக தூங்குவது, ஆட்புலத்தை பாதுகாப்பது, அந்த வேலைக்கு யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆவது - இவைதான் அவரின் வேலைகள்.

அப்ப வீட்டோட மாப்பிள்ளைதானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2025 at 13:01, S. Karunanandarajah said:

ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.

492945891_3953893131519319_2178283896481

எண்ணை பூசி.... ஆமத்துறுவாக மாற்றப்பட்ட சிங்கம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.