Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1738928705-25-67a55b75388f7.jpg?resize=6

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி  உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும்  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக   கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார் எனவும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி  வெளிப்படுத்தாவிடின்  வீதிகளில்   போராட்டம் முன்னெடுக்கப்படும் என  கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கத்தினை ஆட்சியில் அமர்த்துவதற்கு  கொழும்பு பேராயர்  குழுவினர் பாரிய  ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் எனவும்  எனவே தற்போது  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ஜனாதிபதி  வாக்குறுதியளித்தவாறு உரிய ஆதாரங்களுடன் உண்மையான சூத்திரதாரி அடையாளப்படுத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும், அத்துடன்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி செய்த செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1428809

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; ஜனாதிபதி குறிப்பிடவுள்ள புதியவர் யார் ? - சரத் வீரசேகர

Published By: VISHNU 18 APR, 2025 | 10:49 PM

image

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் பிரதான பொறுப்புதாரிகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நாளை இந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி எதை சொல்ல போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி  தேவாலயத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 தினத்துக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார்.

குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிடின் ஏப்ரல் 21 தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அது பேராயரை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும்.

குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட  பயங்கரவாதி சஹ்ரானை கொண்டு நௌபர் மௌலவி இந்த தாக்குதல்களை நடத்தினார் என்பதை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தேன்.

நியூசிலாந்து நாட்டில்  பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர்  கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கூட்டாக ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறிப்பிட்டு சுய உடன்படிக்கை செய்துக் கொண்டுள்ளனர். இவ்விடயம் விசாரணைகளில் வெளிவந்தன.

இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தை குறுகிய அரசியல்  தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும்  நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில்  நீதியரசர் விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற  விசேட தெரிவுக்குழு அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இமாம் அறிக்கை மற்றும் அல்விஸ் அறிக்கை ஆகியன உரிய தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த அறிக்கையிலும் 'அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக'குறிப்பிடப்படவில்லை. அனைத்து அறிக்கைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்தனர். மேற்கொள்ளப்பட்ட 4 சர்வதேச மட்ட விசாரணைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி, மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/212334

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நியூசிலாந்து நாட்டில்  பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர்  கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர்

இவரின் கூற்றை கேட்டால் சிரிப்பாக வருகிறது. நியூசிலாந்து பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதலுக்கு இலங்கை தமிழர் கத்தோலிக்க தேவாலயத்தில் பழிவாங்கப்பட்டனராம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட இவரால் மட்டுந்தான் முடியும். தாக்குதல் நடத்தியவர்கள் சொல்லாத காரணத்தை இவர் ஏன் வலிந்து திணிக்கிறார்? அப்போ இவரும் சூத்திரதாரியே!

7 hours ago, ஏராளன் said:

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

கோத்தாவை ஆட்சிக்கு கொண்டுவரவும் கர்தினால் முன்னின்றவர். கள்ளனிடமே திறப்பை கொடுத்தவர் தான் அவர்.

7 hours ago, ஏராளன் said:

அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

கோத்தபாயவாலும் ஏமாற்றப்பட்டார் மல்கம்!

7 hours ago, ஏராளன் said:

பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும்  நெருக்கடிக்குள்ளாக்கும்.

ஆடு நனையுதென்று இந்த ஓநாய் இவ்வளவு காலமுமில்லாமல் இப்போ அழுகுது.

7 hours ago, ஏராளன் said:

அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை.

அனுராவின் அறிக்கை இன்னும் வரவில்லை, குண்டுத்தாக்குதலுக்கான காரணமும் அவர்களால் வெளிப்படுத்தவில்லை. இவர் ஏன் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படவில்லை, நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கல் என்று விசாரணையை திசை திருப்புகிறார்? நியூசிலாந்துக்கும் இலங்கைத்தமிழருக்கும் கத்தோலிக்கருக்கும் என்ன தொடர்பு? இவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும், தாங்களாகவே வாயை கொடுத்து பொறியில் மாட்டப்போகிறார்கள். ஒருத்தர் முந்திக்கொண்டு ஆஜர் ஆகிறார். இவர் விசாரணையை திசை திருப்புகிறார், தாக்குதலுக்கு முன், தாக்குதலாரிகள் பேசிய காணொளி ஒன்று பின்னாளில் வெளிவந்தது. அதில் அவர்கள் சொல்லாத காரணத்தை சரத் வீரசேகர சொல்கிறார். ஆகவே இதைப்பற்றி விமர்சனம் செய்யும் யாவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம்.

மைத்திரியும் தனக்கு தெரியும் என ஒரு முறை சொல்லி இருந்தார். அவரை பிடித்து நாலு உதை கொடுத்தால் உள்ளது வரும். ஒருவரை ஒருவர் காப்பாற்ற நடாத்தும் நாடகம் என்பது தமிழ் மக்களுக்கு தெரியுமோ இல்லையோ உலகுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மைத்திரியும் தனக்கு தெரியும் என ஒரு முறை சொல்லி இருந்தார்.

இப்போ, மீண்டும் தான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எல்லோரும் சேர்ந்து ஆடிய ஊழிக்கூத்துதான் இது. அவர்கள் பயன்படுத்திய  பகடைக்காய் பிடிபட்டுள்ளார். யாரும் இப்படியொரு கட்சி அரசமைக்கும் என்று நினைக்கவில்லை. அதனால் எல்லோரும் தைரியமாக இருந்தார்கள், திரிந்தார்கள். அரசுமாற்றம் வந்தவுடனேயே எல்லோருக்கும் புரிந்து விட்டது. இதுவும் சிங்களகட்சிதான், காட்சிகள் வேறாக இருந்தாலும் முடிகள் ஒன்றாகத்தானிருக்கும். தங்களுக்கு வரக்கூடிய சவால்களை தடுக்கவும் மல்க்கம் ஆண்டகை கொடுக்கும் தொந்தரவு, விடுக்கும் எச்சரிக்கை,  தேர்தல் கலக்கம் அவர்களையும் ஏதோ செய்யத் தூண்டியுள்ளது.  ஒருவேளை அனுரா ஆட்சி கவிழ்ந்தால்; உடனடியாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். போரை தானே நிறைவுக்கு கொண்டுவந்தேன் என்று அறைகூவியவயவர், விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்று, தமக்கு உதவியதாலேயே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது எனக்கூறியும்,  எதிர்த்து சிவநேசதுரை சந்திரகாந்தன், வி. முரளிதரன் போரின் நிறைவுக்கு செய்த பங்களிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள, பாராட்ட தயாரில்லை. இப்போ இராணுவத்தை தம் பக்கம் இழுக்கவும்,  அனுராவின் செயற்பாடுகளை சிங்களவரை தூண்டி  தடுக்கசெய்யவுமே கம்மன்பில அவசரம் காட்டுகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எத்தனையோ பேர் கைதுசெய்யப்பட்டனர், இன்னும் சிலர் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆஜராகாத இவர்கள் ஏன் இந்த சந்திரகாந்தன் கைதுசெய்யப்படவுடன் முண்டியடிக்க வேண்டும்?     

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இப்போ, மீண்டும் தான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எல்லோரும் சேர்ந்து ஆடிய ஊழிக்கூத்துதான் இது. அவர்கள் பயன்படுத்திய  பகடைக்காய் பிடிபட்டுள்ளார். யாரும் இப்படியொரு கட்சி அரசமைக்கும் என்று நினைக்கவில்லை. அதனால் எல்லோரும் தைரியமாக இருந்தார்கள், திரிந்தார்கள். அரசுமாற்றம் வந்தவுடனேயே எல்லோருக்கும் புரிந்து விட்டது. இதுவும் சிங்களகட்சிதான், காட்சிகள் வேறாக இருந்தாலும் முடிகள் ஒன்றாகத்தானிருக்கும். தங்களுக்கு வரக்கூடிய சவால்களை தடுக்கவும் மல்க்கம் ஆண்டகை கொடுக்கும் தொந்தரவு, விடுக்கும் எச்சரிக்கை,  தேர்தல் கலக்கம் அவர்களையும் ஏதோ செய்யத் தூண்டியுள்ளது.  ஒருவேளை அனுரா ஆட்சி கவிழ்ந்தால்; உடனடியாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். போரை தானே நிறைவுக்கு கொண்டுவந்தேன் என்று அறைகூவியவயவர், விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்று, தமக்கு உதவியதாலேயே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது எனக்கூறியும்,  எதிர்த்து சிவநேசதுரை சந்திரகாந்தன், வி. முரளிதரன் போரின் நிறைவுக்கு செய்த பங்களிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள, பாராட்ட தயாரில்லை. இப்போ இராணுவத்தை தம் பக்கம் இழுக்கவும்,  அனுராவின் செயற்பாடுகளை சிங்களவரை தூண்டி  தடுக்கசெய்யவுமே கம்மன்பில அவசரம் காட்டுகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எத்தனையோ பேர் கைதுசெய்யப்பட்டனர், இன்னும் சிலர் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆஜராகாத இவர்கள் ஏன் இந்த சந்திரகாந்தன் கைதுசெய்யப்படவுடன் முண்டியடிக்க வேண்டும்?     

சற்றுமுன் மைத்திரி வாக்குமூலதால் புதிய திருப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

மைத்திரியும் தனக்கு தெரியும் என ஒரு முறை சொல்லி இருந்தார். அவரை பிடித்து நாலு உதை கொடுத்தால் உள்ளது வரும். ஒருவரை ஒருவர் காப்பாற்ற நடாத்தும் நாடகம் என்பது தமிழ் மக்களுக்கு தெரியுமோ இல்லையோ உலகுக்கு தெரியும்.

43 minutes ago, nunavilan said:

சற்றுமுன் மைத்திரி வாக்குமூலதால் புதிய திருப்பம்

நீங்கள் யாழ். களத்தில் மைத்திரிக்கு... நாலு உதை கொடுக்க வேண்டும் என்று எழுதியதை... மைத்திரி வாசித்து விட்டார் போலுள்ளது. அதுதான் உதைக்குப் பயந்து உண்மையை... உடனே சொல்லியுள்ளார். 😂

மைத்திரியும்... யாழ்.களம் வாசிப்பது எமக்கெல்லாம் பெருமை தானே.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? 😂

அது பிள்ளையான் பிள்ளையான் என்று தமிழ் யுரியுப்பர்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றார்கள். இது ஒரு ஜேவிபியின் தேர்தல் கால விளையாட்டாக தான் பார்ப்பதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம் . அமெரிக்கா மேற்குலகத்தினர் இலங்கை கிறிஸ்தவர்கள் (முஸ்லிம் மதத்தை பின்பற்றாதோர் ) மீதான ஜிஹாத் தாக்குதல் என்று முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்பு IS அறிவித்ததும் வெளிநாட்டு அரசுகள் இலங்கை அரசு விசாரணைகளில் IS டன் தொடர்புடைய இலங்கை புனிதபோர் மார்க்கவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது ம் ஏற்கெனவே தெளிவாகியது.

இப்போது மாற்றி அமைக்க போகின்றார்களா

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

ISS க்கும் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? ஏன் ISS இவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

491849063_1092781039553534_3540840331804

491841258_1092767446221560_5306126150366

491287581_1092332199598418_1079669791555

492385901_1092331559598482_3521232760296

எமது தேசிய வீரர்கள்.... பிள்ளையான்.

-சரத் வீரசேகர.-

  • கருத்துக்கள உறவுகள்

IS க்கு ஈராக் யாசிதிகளிடம் உள்ள பிரச்சனை தான் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இலங்கை இந்துக்கள் புத்த மதத்தவர்களிமும் IS க்கு உள்ள பிரச்சனை.

இஸ்லாமல்லாத மதத்தை மார்க்கமாக எவர் பின்பற்ற விரும்புவாரோ அவரிடமிருந்து அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.- குரான் - 3:85

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.