Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார்

ஒரு பொருளின் Authenticity யும் , பெறுமதியையும் அதிகரிக்க அந்த உற்பத்திப் பொருளின் பெயருக்கு, அதனை உற்பத்தி செய்த இடத்தின் அடையாளத்தை வழங்க வேண்டும்

அதேபோல், குறிப்பிட்ட உற்பத்தி பொருளுக்கு பிராந்தியத்தின் அடையாளம் (Regional identity) ஊடக Value சேர்க்கவும் பெயரிடல் அவசியமானது.

இவை மட்டுமன்றி, இந்த அணுகுமுறை Branding மற்றும் Storytelling-க்கும் முக்கியத்துவமானது

குறிப்பாக Himalayan Pink Salt, Maldon Sea Salt, Darjeeling Tea, Scotch Whisky, Manuka Honey உட்பட பிரபல உற்பத்திகள் பிராந்திய அடையாளங்கள் ஊடாகவே புகழ் பெற்று இருக்கின்றன

அதாவது பெயரிடல் அணுகுமுறை பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு (Economic development) மிக தேவையானது

அந்த வகையில் பூர்விக மக்கள் தங்கள் பிராந்திய வளம் மற்றும் உற்பத்தி என்கின்ற (Local pride) அடிப்படையில் முன்வைக்கும் கோரிக்கை அடிப்படையில் மிக நியாயமானது

ஆனால் கல்வியறிவற்ற திரு பிமல் ரத்நாயக்க (University Dropout) எங்களை இனவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்

மைத்திரிபால சிறிசேன கால இடைக்கால அறிக்கைக்கு ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என திரு அனுர குமாரவுடன் சேர்ந்து எழுதி கொடுத்த விமல் என்கின்ற இனவாதி எங்களுக்கு பாடம் நடத்துகின்றார்

உண்மையில் ஆனையிறவு உப்பள உற்பத்திக்கும் ஜேவிபி ஆட்சியாளர்களுக்கும் எந்த தொடர்புமில்லை

கடந்த கால ஆட்சியாளர்கள் உள்ளூர் முதலீட்டாளர்களை புறக்கணித்து தென்பகுதி வியாபாரிகளை பொறிமுறையில் உள்வாங்கியதால் தான் சிங்கள பெயர் வழங்கப்பட்டுள்ளது

அரசியல் மட்டுமின்றி பிராந்திய பொருளாதாரத்தின் பார்வையிலும் இது உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்

அதாவது தமிழ் பிராந்தியத்தின் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

இதனூடாக உப்பு பெயர் சர்ச்சைக்கு தீர்வு காண முடியும். ஆனால் அதற்கு தயாரில்லாத ஜேவிபி எங்களை இனவாதிகளாக்க முயற்சிக்கின்றது

இதற்கிடையில் சிங்கள ஆட்சியாளர்கள் தான் கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க பிரதேச வீதிக்கு 'தமிழ் சங்க வீதி' என பெயரிடவிடாமல் பல ஆண்டுகளாக தடுத்து வருகின்றார்கள்

வடக்கு மாகாணசபை அம்மாச்சி உணவகம் திட்டத்தை முன்வைத்த போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளால் பெயரின்றி உணவகங்களை திறக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருந்தது

ஜேவிபி பங்காளிகளாகவிருந்த கடந்த கால ஆட்சியாளர்கள் ஜேவிபி உட்பட்ட இனவாதிகளை காரணமாக வைத்து வெறும் பெயரில் மட்டும் பல நூறு அரசியல் செய்தார்கள்

குறைந்த பட்சம் ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் கூட இதை சரி செய்ய தயாரில்லை

பட்டலந்த விவகாரத்தில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை சர்வதேச உதவி பெற்றாவது தண்டிப்போம் என் பேசும் ஜேவிபி வடக்கில் பலவந்தமாக கடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என அறிவித்திருப்பது இனவாதமாகும்

அரசியல் கைதிகள் இல்லை என பகிரங்கமாக ஜேவிபி அறிவித்திருப்பது இனவாதமாகும்

அரச கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்தி தொடர்ச்சியாக எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு வாய்ப்பை ஜேவிபி மறுத்து வருவது இனவாதமாகும்

தமிழ் முஸ்லீம் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு விசாரணைகளை ஏவிவிடும் சம நேரத்தில் ஆக்கிரமிப்பு ஈடுபடும் பிக்குகளை ஜேவிபி பாதுகாப்பது இனவாதமாகும்

தொல்பொருள் திணைக்களம் ஊடக தமிழ் பிரதேசங்களில் புதிய தொல்பொருள் ஆய்வு களங்களை ஜேவிபி அனுமதிப்பது இனவாதமாகும்

பூர்விக மக்களுக்கு சொந்தமான வீதிகளுக்கு சட்டவிரோத கட்டுப்பாடுகளை விதிப்பது இனவாதமாகும்

ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் தேசிய மொழி கொள்கைக்கு எதிராக ஜேவிபி செயற்பட்டு வருவது இனவாதமாகும்

இவ்வாறு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஜேவிபி சொந்த மண்ணில் , நிம்மதியாக, கௌரவத்துடன் வாழ விரும்பும் தமிழ் தேசிய மக்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவது அசிங்கமானது

குறிப்பாக சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களுக்கோ அல்லது அவர்களது சமூக பொருளாதார, கலாச்சார வாழ்விற்கோ எண்ணிக்கையில் சிறிய தமிழ் தேசம் தடையாக இல்லாத நிலையில் அவர்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவதே இனவாதமாகும்.

இனமொன்றின் குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார்

நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2025 at 05:09, nunavilan said:

திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார்

உங்க்ளுக்கு உந்த உப்பு பெயர் மாற்றத்துக்கே இவ்வளவு கோபம் வருகின்றது என்றால்... எங்கன்ட நிலம்,மொழி,உயிர்கள்,உடமைகள் எல்லாம் சும்மா சும்மா இஸடத்துக்கும் உங்கள் இன அரசியலுக்கும் அதிகார்த்துக்கும் அழித்த பொழுது எங்களௌக்கு எவ்வளவு கோபம் வந்த்திருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா பாரம்பரிய கட்சி ஜேவிபி தான் என்று அமைச்சர் சொல்கின்றார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.