Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

2002 இல் ரணில் சமாத. ஒப்பந்தம் எழுதாமல் இருந்தால் ..புலிகள் தொடர்ந்தும் பலமுடன். இருந்து இருப்பார்கள் ராஜபக்ஷ குடும்பம் புலிகளை வென்றிருக்க. முடியாது இது பற்றி மருத்துவர் மகேஸ்வரன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் ...இந்த சமாத காலத்தில் இயக்கத்தில் கீழ் நிலையில் உள்ளவார்கள். அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு. விட்டார்கள் மேல் நிலையில் உள்ளாவர்கள்.

காணி. வேணடுதல்.

வீடுகள் கட்டுவது

வாகனங்கள் வேண்டுவது .... .....இப்படி பொது வாழ்க்கையில் படிப்படியாக இடுபட. ஆரம்பித்து விட்டார்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட கீழ் நிலையில் உள்ளவர்கள் வெளிநாட்டு போய்விட்டார்கள் அனைவரும் இல்லை ஒரு. பகுதியினர். ரணிலால். தான் புலிகள் பலவீனம் அடைந்தார்கள் ....2002 இல் ராஜபக்ஷ சண்டை இட்டிருந்தால். வெல்ல முடியாது வென்றுயிருக்கமாட்டார். ஆகவே போர் வெற்றிக்கு முதல் காரணம் ரணில் அவரது சமாதான ஒப்பந்தம் ஆகும் இது எனது கருத்துகள் இல்லை அந்த புத்தகம் சொல்கிறது ரணிலுக்கும். ராஜபக்ஷ க்கும். வாக்கு வித்தியாசம் எத்தனை வீதம். ?? ஒரு 5 வீதம்

இருக்குமா ?? சமாத ஒப்பந்தம் கையெழுத்திட்டப்படவில்லை. என்றால் புலிகள் இருந்து இருப்பார்கள் ...ஆனால் ஒப்பந்தம் எழுதிய பின். .....அந்த ஒப்பந்தால். புலிகள் பலவீனமான பின்னர் ரணில் கூட வென்று இருப்பார்

எழுதப்பட்ட திட்டங்கள் அமுல் படுத்த முடியாது இல்லையா??? அமுல் செயய முடியாத

திட்டங்கள் வரைபுகள். எப்படி சிறந்தது ஆகும் ??

2002 இல் சமாதான ஒப்பந்தம் எழுதியிருக்கவிட்டால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு அந்த பிரேக் தேவைப்பட்டது. மக்களுக்கும் தான், தொடர்ந்து கொண்டிருந்த யுத்தமும் இழப்புக்களும் மக்களை சோர்வையடை செய்தது. அப்படி இயக்கம் இருந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி தக்கவைப்பதற்கு தேவையான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. கைவசமிருந்த நிலங்களை தக்கவைப்பதே பெரும் சிரமமாக இருந்த காலம். வன்னிப்பரப்பில் இருந்தும் கிழக்கில் இருந்தும் மட்டுமே புதியவர்களை இணைக்க முடிந்தது. 1995 இன் பின்னர் யாழ்குடாவிலிருந்து இணைந்தவர்கள் வெகு சிலரே.

புலிகள் பலவீனமாக இருந்தாலும் ரணிலால் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. கோத்தாபய போல கெலியை எடுத்துக்கொண்டு போய் சண்டைக் களத்தில் இறங்கி இராணுவ தலைவர்களுடன் கலந்தாலோசிக்கும் வல்லமை கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ரணிலிடம் இருக்கவில்லை.

அமுல் செய்ய முடியாத திட்டங்கள் என்று எவ்வாறு கூற முடியும்? இங்கேதான் பிழை விட்டார்கள். கிடைப்பதை வாங்கி அதிலிருந்து மேலும் பேரம் பேசியிருக்க முடியும். அதைவிட சர்வதேச ரீதியாக "இலங்கை அரசாங்கம் இந்த அரசியல் சாசனத்தை அமுல் படுத்த வேண்டும்" என்ற ரீதியில் அழுத்தம் கொடுத்திருக்கலாம். வளர்த்தால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்ற நிலைப்பாட்டால் யாருக்கு லாபம்? கோசான் சொன்னது போல அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்திருக்கலாம். உலக அரசியல், பொருளாதாரம், நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. அதற்கேட்ப போராட்ட வடிவங்களும் மாற்றமடைய வேண்டும்.

ஏதாவது உலக நாடுகளுடன் ஒரு டீலை பேசுவது போல. இப்போ சேலன்ஸ்கி செய்வதும் இந்த டீல் அரசியல் தான். தலைவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர், எந்த டீலையுமே பேச விரும்பவில்லை. தமிழீழம், சுயஆட்ச்சி தவிர எதிலுமே அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. தமிழீழம் சிறந்ததா? - ஆம் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் நல்லது. அது உடனடியாக சாத்தியமாகுமா? இல்லை. இந்த இலக்கை அடைய சில நெளிவு சுளிவுகளை சந்திக்கத்தான் வேண்டும்.

அரசியல் ரீதியாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உறவுகளை வளர்த்திருக்க வேண்டும். உள்நாட்டில் இதற்காத்தான் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள். ஆனால் அவர்களால் ஒரு சததுக்கும் பிரயோசனம் இருக்கவில்லை. அவர்களில் பலருக்கு சட்டப்புலமையோ அரசியல் அனுபவமோ இருக்கவில்லை. உதாரணத்துக்கு குதிரை கஜன்.

வெளிநாடுகளில் அரசியல் உறவுகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் பாலசிங்கத்தார் மட்டுமே ஓரளவுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்பில் இருந்தார், அதைவிட இந்தியாவை பகைத்துக்கொண்டு எந்த அரசாங்கமும் இலங்கையில் எதுவுமே செய்யாது. ராஜீவ் காந்தியை, அதுவும் தமிழ் நாட்டில் வைத்து கொலை செய்திருக்காவிட்டால் ஒருவேளை இந்தியா உதவியிருக்கக் கூடும். சிங்களவர்களுக்கு இந்தியாவை பிடிப்பதில்லை. ஆனால் தங்கள் தேவைகளுக்கு வளைத்துப் போடுவார்கள். நாங்கள் அப்படி செய்திருக்க முடியாதா?

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

அமுல் செய்ய முடியாத திட்டங்கள் என்று எவ்வாறு கூற முடியும்? இங்கேதான் பிழை விட்டார்கள். கிடைப்பதை வாங்கி அதிலிருந்து மேலும் பேரம் பேசியிருக்க முடியும்.

இது கதைக்க நன்றாக இருக்கிறது நடைமுறையில் சாத்தியமில்லாதவை

உதாரணம்,...பண்டா. - செல்வா. ஒப்பந்தம்

டல்லி - செல்வா. ஒப்பந்தம் இவைகள் அதிகாம். குறைந்த ஒப்பந்தங்கள் ஏன் அமுல் படுத்த முடியவில்லை ?? சொல்லுங்கள் அறிவோம் நான் இவற்றை அமுல் படுத்த முடியாத ஒப்பந்தம்கள். எனப் பார்க்கிறேன் அவை கிழித்து ஏறியப்பட்டன. சாதாரண மக்களால் இல்லை பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பெரிய கட்சியின் தலைவர்கள் கிழிச்சே ஏறிந்து விட்டார்கள் இவர்களின் மேல் வழக்கு போட முடிந்ததா??

ஜேர்மனியில் ஒரு ஒப்பந்தம் கிழித்து ஏறிய முடியாது,.அது ஒரு சாதாரண வீட்டு ஒப்பந்தம் என்றாலும் கூட. உதாரணம் நான் ஒரு கடையை ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தேன் என்னால் நடத்த முடியவில்லை எனவே ஒப்பத்தை ரத்து செய்யுமாறு கோரினேன்.

கடை உரிமையாளர். முடியாது என்று விட்டார் மட்டுமல்ல ஐந்து ஆண்டுகளுக்கு வாடகையை கட்டு என்றார் இலங்கையில் புலிகள் செய்தது சரி தான் இங்கே ஒப்பந்தம்கள். பெறுமதி அற்றவை அவை சாதாரண பேப்பர் போன்றது

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் எழுதப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் அதில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றம் பிரிக்கலாம் என்றால் எப்படி ஒப்பந்தம் எழுதுவது??

அந்த நீதிபதிகளுக்கு மூன்று நீதிபதிகளுக்கு விமல் மாலை போட்டு பத்திரிகையில் பிரசுரித்து உள்ளார் காணி பொலிஸ் அதிகாரங்களை அமுல் செய்யவில்லை ஏன்??

எழுதப்படும் எந்தவொரு ஒப்பந்தம் மீதும்

பாராளுமன்றம்

பௌத்த பீடங்கள்

நீதிமன்றம்கள்.

ஆதிக்கம் செலுத்துகின்றன. இல்லையா?? இவற்றை தாண்டி ஒரு ஒப்பந்தம் வெளி வந்து உள்ளதா?? அல்லது வர முடியுமா ?? ஒருபோதும் முடியாது ஆகவே புலிகள் செய்தது சரியாகும்

10 hours ago, Thumpalayan said:

அதுவும் தமிழ் நாட்டில் வைத்து கொலை செய்திருக்காவிட்டால் ஒருவேளை இந்தியா உதவியிருக்கக் கூடும்.

இல்லை புலிகளை பூண்டோடு அழித்து இருப்பார் அவர் புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார். அவரை அணுகி இருக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

நாங்கள் அப்படி செய்திருக்க முடியாதா?

முடியாது எப்படி செய்யலாம்?? உதாரணமாக உங்கள் கூற்றுப்படி ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால். முதலில் செய்வது ஆயுதங்களை பூரணமாக களைய வேண்டும் அப்படி செய்தால் புலிகளை முழுமையாக சிறைப்படுத்தியே விடுவார்கள் அவ்வளவு தான் மற்றும்படி நீங்கள் எழுதியது சரி

  • கருத்துக்கள உறவுகள்

(1) The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the state to protect and foster the Buddha Sasana, while guaranteeing to all religions the rights granted by Articles 15 (1) and 15 (3).

(2) The State shall consult the Supreme Council in all matters pertaining to the protection and fostering of the Buddha Sasana.

(3) For the purpose of this Article ``Supreme Council'' means a Council established by law in consultation with the Maha Sangha.

அம்மையாரின் / நீலன் ஐயாவின் பொதியின் அடிநாதம் + ஒற்றை ஆட்சி + மேலே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Sasi_varnam said:

ஒஸ்லோ பேச்சு வார்த்தையின் போது புலிகளின் பிரதிநிதிகள், இது நீக்கப் பட்ட ஏற்பாட்டைத் தான் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார்களா? அல்லது இது அப்படியே இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

இது கதைக்க நன்றாக இருக்கிறது நடைமுறையில் சாத்தியமில்லாதவை

உதாரணம்,...பண்டா. - செல்வா. ஒப்பந்தம்

டல்லி - செல்வா. ஒப்பந்தம் இவைகள் அதிகாம். குறைந்த ஒப்பந்தங்கள் ஏன் அமுல் படுத்த முடியவில்லை ?? சொல்லுங்கள் அறிவோம் நான் இவற்றை அமுல் படுத்த முடியாத ஒப்பந்தம்கள். எனப் பார்க்கிறேன் அவை கிழித்து ஏறியப்பட்டன. சாதாரண மக்களால் இல்லை பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பெரிய கட்சியின் தலைவர்கள் கிழிச்சே ஏறிந்து விட்டார்கள் இவர்களின் மேல் வழக்கு போட முடிந்ததா??

ஜேர்மனியில் ஒரு ஒப்பந்தம் கிழித்து ஏறிய முடியாது,.அது ஒரு சாதாரண வீட்டு ஒப்பந்தம் என்றாலும் கூட. உதாரணம் நான் ஒரு கடையை ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தேன் என்னால் நடத்த முடியவில்லை எனவே ஒப்பத்தை ரத்து செய்யுமாறு கோரினேன்.

கடை உரிமையாளர். முடியாது என்று விட்டார் மட்டுமல்ல ஐந்து ஆண்டுகளுக்கு வாடகையை கட்டு என்றார் இலங்கையில் புலிகள் செய்தது சரி தான் இங்கே ஒப்பந்தம்கள். பெறுமதி அற்றவை அவை சாதாரண பேப்பர் போன்றது

அப்போ இவற்றை எல்லாம் தெரிந்து (சிங்கள அரசு ஒப்பந்தத்தை கிழித்து எறியும், பவுத்த மத பீடங்கள் ஓத்துக்கொள்ளாது) கொண்டு ஏன் தலைவர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்

முடிபு

1) நீலன் தயாரித்த தீர்வுத்திட்டம் 1995, நீலனின் கொலை 1999, சமாதானப் பேச்சுவார்த்தை 2001

2) தீர்வுத் திட்டத்தை தயாரித்த காரணத்தால் நீலன் படுகொலை செய்யப்பட்டார்

3) சில வருடங்களில் அதே போன்ற தீர்வுக்கு புலிகளின் பாலசிங்கத்தார் தலைமையிலான குழு இணங்கியது.

4) நீலனை கொலை செய்ததால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2025 at 15:42, Thumpalayan said:

தலைவர்ஆயதத்திலே அசையாத நம்பிக்கை உடையவர். சமாதான ஒப்பந்தத்திலே விருப்பமின்றித்தான் கையொப்பம் இட்டார். சமாதான ஒப்பந்தம் இடும்போது புலிகள் மிகப் பலமான நிலையிலே இருந்தார்கள். ஓயாத அலைகள் சண்டையிலே அரியாலை மட்டும் வந்துவிட்டார்கள்.

இது நீங்கள் எழுதியது தான்

18 minutes ago, Thumpalayan said:

அப்போ இவற்றை எல்லாம் தெரிந்து (சிங்கள அரசு ஒப்பந்தத்தை கிழித்து எறியும், பவுத்த மத பீடங்கள் ஓத்துக்கொள்ளாது) கொண்டு ஏன் தலைவர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்?

6 minutes ago, Thumpalayan said:

முடிபு

1) நீலன் தயாரித்த தீர்வுத்திட்டம் 1995, நீலனின் கொலை 1999, சமாதானப் பேச்சுவார்த்தை 2001

2) தீர்வுத் திட்டத்தை தயாரித்த காரணத்தால் நீலன் படுகொலை செய்யப்பட்டார்

3) சில வருடங்களில் அதே போன்ற தீர்வுக்கு புலிகளின் பாலசிங்கத்தார் தலைமையிலான குழு இணங்கியது.

4) நீலனை கொலை செய்ததால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்

ஆமாம் உண்மை தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 க்கு பின்னர் எவரும் எதையும் எப்படியும் எழுதி விட்டு போகலாம்.

உண்மை நிலவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.