Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

carney-victory-speech-thumb-clean-800x44

கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்

சிவதாசன்

எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது.

இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது.

லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ட்றம்ப் புயல் இன்னும் ஓயாமல் இருக்கும்போது. இது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவா அல்லது பொய்லியேவ் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவா? தர்க்க ரீதியாகப் பார்த்தால் பொய்லியேவைப் பதவியிலிருந்தும் தொகுதியிலிருந்தும் துரத்தியிருப்பது பண்டம் காலம் கடந்துவிட்டது (product expired) என்பதனாலாகவிருக்கலாம்.

கனடியர் அனைவரையும் பிரதிநிதித்த்துவப்படுத்திக்கொண்டிருந்த புரோக்கிரஸ்சிவ் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிராந்திய கன்சர்வேட்டிவ் கட்சியாக மேற்குக் கனடாவிற்குள் கொண்டுபோய் முடக்கியதிலிருந்து அக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கியிருந்தது. அக்கட்சியின் அதி தீவிரவாத அரசியல்வாதி ஸ்டொக்வெல் டே அவர்களின் அரசியல் வளர்ப்பு பிள்ளை தான் பொய்லியேவ். நீண்டகாலம அரசியலில் இருந்தாலும் எதையும் கற்காதவர். பலமான எதிரி முன்னர் அவரது பலவீனம் இனம்காணப்பட்டு விட்டது.

ட்றூடோ என்ற கண்ணன் அரசியலுக்கு வந்தபோது ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. தனது வயதுக்கேற்ற இளம் தலைமுறையின் முற்போக்கு கொள்கைகளை, புரிந்தும் புரியாமலும், அவர் நடைமுறைப்படுத்தினார். கோவிட் வந்து குறுக்கே படுத்துக்கொண்ட்போதுதான் கண்ணனுக்கு விடயமே புரியவாரம்பித்தது. பொருளாதாரத்தைத் தக்க வைக்க வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அள்ளிக்கொடுத்தார். பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய வசதி செய்து கொடுத்தார். கோவிட் முடிந்தபின் தொழில்களைத் தொடர்ந்து நடத்த கடன்களைப் பெறுவதற்காக வட்டி வீதத்தைக் குறைத்தார். பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க தற்காலிகம் என்ற பெயரில் குடிவரவாளர்களைக் கொண்டுவந்தார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்தியாவிலிருந்து , தருவித்து கடற்கரைகளை நாசப்படுத்தினார். இதற்கு ட்றூடோ மட்டும் காரணமல்ல. அவர் தொடர்ந்தும் தீராமல் விளையாடிக்கொண்டிருக்க அமைச்சரவை உதவிப் பிரதமர் தலைமையில் தமக்குள் ஒரு சிற்றரசை நடத்திக்கொண்டிருந்தது. 1 மில்லியன் புதிய குடிவரவாளர்கள் நாட்டுக்குள் வந்தது பற்றி குடிவரவு அமைச்சருக்கே தெரியாது என்ற நிலைமை. பஞ்சாப்பிலிருந்து படிக்கவென்று காணி பூமிகளை விற்று கனடா வந்த பலர் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குள் சென்று விட்டார்கள். கனடாவில் வேலை வாய்ப்பு, வீட்டு வசதிகள் எல்லாம் கைக்கெட்டாமல் போனபோது பழி ‘இந்திய’ மாணவர்களின் தலைகளில் பட்டுத் தெறித்து ட்றூடோ தலையில் விழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவின் அம்புகள் சரமாரியாக வந்து ட்றூடோ கோட்டைக்குள் விழ அமைச்சர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். அவரைப் பதவியிலிருந்து இறக்கினால்தான் பொய்லியேவ் அம்புகளிலிருந்து தாம் தப்பிக்கலாம் என அவர்கள் கனவு கண்டார்கள். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

ஆனால் விதி வேறு திட்டத்தை வைத்திருந்தது. கோவிட்டினால் தூக்கியெறியப்பட்ட ட்றூடோவைக் காப்பாற்ற விதி ட்றம்பை அனுப்பியது. மார்க் கார்ணியைக் கொண்டு பொய்லியேவ் படையெடுப்பை மட்டுமல்ல உள்ளக சதிகாரர்களையும் ஏக காலத்தில் தகர்த்தெறிந்து தனது அவமானத்தைத் துடைத்துக்கொண்டார். ஒரு ராஜ தந்திரிக்குரிய ஞானம் இப்போது தான் அவருக்குப் பிறந்திருக்கும் என நினைக்கிறேன்.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடையவில்லை மாறாக அதன் தலைவரே படு தோல்வியை அடைந்திருக்கிறார். மக்கள் நிதானமாகச் சிந்தித்தே வாக்களித்திருக்கிறார்கள். அறியாத, தெரியாத, முன் பின் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது அதனைக் கண்காணிப்பதற்காக பலமான எதிர்க்கட்சியையும் சேர்த்தே மக்கள் பாராளுமன்றைத்தை அமைக்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்க்கட்சியின் தலைவர் பொய்லியேவாக இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே கட்சித் தலைமையை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் ட்க் ஃபோர்ட்டைக் கட்சியும் அதன் முன்னரங்க காவலர்களும் வேண்டுமென்றே புறந்தள்ளியமையே முக்கியமான காரணமாகப் படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரது உள்வட்டப் பரிவாரங்கள் சில இருக்கின்றன. இவைகளில் பலவற்றை அரசியலுக்குள் கொண்டு வந்ததே முதல்வர் டக் ஃபோர்ட் தான். அப்படி இருந்தும் நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணத் தேர்தலின்போது “மாகாண கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எந்தவித உதவிகளையும் யாரும் செய்யக்கூடாது” என பொய்லியேவ் மிகவும் இறுக்கமான கட்டளை இட்டிருந்தார் எனப்படுகிறது. டக் ஃபோர்ட்டைப் புறந்தள்ளுவது கனடாவில் அதிக ஆசனங்களைக் கொண்ட (122) ஒன்ராறியோ மாகாணத்தையே முற்றாகப் புறந்தள்ளுவதற்குச் சமன் என்பதை அறியாத முட்டாளாக அவர் இருந்திருக்கிறார் என்றால் அரசியலில் ஒரு ஞானசூனியம்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நோர்த் ஐலண்ட்-பவல் றிவர் தொகுதியில் இந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஆரன் கண் என்பவர் ஒரு தீவிர வெள்ளைத் தீவிரவாதி. சுதேசிகளின் உரிமைக்கோரிக்கைகளை எள்ளிநகையாடும் இவரது தீவிரவாத கொள்கைகளுக்காக மாநில லிபரல் கட்சி இவரது கட்சி விண்ணப்பத்தை 2021 இல் நிராகரித்திருந்தது. 2025 இல் இவர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு விண்ணப்பித்தபோது இவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி பல சுதேசிய தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் பொய்லியேவிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு இத்தீவிரவாதியை பாராளுமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் பொய்லியேவ். எனவே கணிசமென்க் கூறமுடியாதெனினும் பல சுதேசியர்களின் வாக்குகளை அவர் இழந்திருக்கிறார்.

பாலஸ்தீன இனப்படுகொலை விடயத்திலும் யூதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பாலஸ்தீனியர்களைப் பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் தமது போராட்டங்களைக் கனடியத் தெருக்களுக்குக் கொண்டுவந்து இங்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாகவிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார். இதன் மூலம் முஸ்லிம்கள் உட்படக் கணிசமான மிதவாதப் போக்குடையோர் லிபரல் சாய்வை எடுக்க பொய்லியேவே காரணமாக அமைகிறார்.

மேற்கூறிய காரணங்களை விடவும் பிரதான மாரணமான ட்றம்ப் என்ற எதிரியைத் தனது மானசீக குருவாக வழிபட்டதன் விளைவே பொய்லியேவை மக்கள் ஒரு ‘இன்ஸ்டண்ட்’ தேசத்துரோகியாக ஆக்கியமை. ட்றம்ப் பற்றவைத்தை கனடிய தேசிய எழுச்சியின் முன் ட்றூடோவின் மீது பொய்லியேவ் சுமத்திய அனைத்துப் பழிகளும் பொசுங்கிப்போகுமென பொய்லியேவ் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலுக்கு முன் சில நாட்களில் தான் அவரது கட்சியின் விஞ்ஞாபனமே வெளியிடப்பட்டது என்றால் அவரது தலைமை ட்றம்பைத் தாங்கக்கூடிய ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தோரில் பலர் இளையோர் என்கிறார்கள். பொய்லியேவ் விற்ற வரிக்குறைப்பு – இமிகிரேஷன் – கிரைம் வாய்பாட்டை இவ்விளையோர் மனப்பாடம் செய்திருக்கலாம். அவர்கள் இன்னமும் தமது பெற்றோரின் வீடுகளில் வாழ்வதற்கு ட்றூடோவே காரணம் என அவர்கள் முற்றாக நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அப்பெற்றோரின் ஓய்வூதியங்களை வழங்குவதற்கான மூலம் இளையோர் இறுக்கும் வரியே தான் என்பதை அவர்களது முதிரா மூளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ட்றூடோ லிபரல் கட்சியை வெகுதூரம் இடது பக்கம் தள்ளிப்போயிருந்தது உண்மை. உலகம் முழுவதும் woke கலாச்சாரம் ஃபாஷனாக வந்துகொண்டிருக்கும்போது லிபரல் கட்சியின் இடது கூடாரம் ட்றூடோவின் மிதவாதப் போக்கைச் சாதகமாகப் பாவித்து கட்சியை இடது பக்கத்திற்குத் தள்ளியது. கப்பல் கவிழப்போகிறது என அறிந்ததும் அவர்கள் ட்றூடோவைத் தள்ளி விழ்த்திவிட்டுத் தப்பப் பார்த்தனர். ஆனால் கப்பல் அவர்களை அமிழவிட்டு ட்றூடோவை மட்டும் காப்பாற்றி விட்டது.

மார்க் கார்ணி ஒரு practical man. அவரை உட்புகுத்தியது ட்றூடோவாக இருந்தாலும் இதன் சூத்திரதாரி, பணம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் தான். ட்றூடோ நகர்த்திய இடது பக்கத்திலிருந்து அவர் கட்சியை மத்திக்குக் கொண்டு வருவார். பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த அவர் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளுக்கான பாதைகளைத் திறக்க வேண்டும். எரிபொருளும், கனிமங்களும் இப்புதிய சந்தைகளைச் சென்றடைவதற்கான பாதைகளை உருவாக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சில இணக்கப்பாடுகளைக் காணவேண்டும். கார்ணியின் முதல் நடவடிக்கையாக இருக்கப்போவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது. இரண்டாவது அமெரிக்காவிடம் வாங்கிய பணமுறிகள் (Bonds), அடமானக் கடன்கள் (Mortgage Backed Securities) போன்றவற்றை மீளக் கையளித்து தமது முதலீடுகளைத் திரும்பப்பெறுவது. தற்போதுள்ள அமெரிக்காவின் கடனின் பெரும்பங்கு யப்பான், சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமுமே இருக்கிறது. இவற்றில் யப்பானைத் தவிர இதர நாடுகள் ஏககாலத்தில் தமது பணமுறிகளைக் காசாக்க முற்படுவார்களானால் அமெரிக்க பொருளாதாரம் ஓரிரவில் முடங்கிப்போவதற்குக காரணமாகலாம். இது மட்டும் தான் உடனடியாகப் பாவிக்கக்கூடிய கார்ணியின் துரும்புச் சீட்டு. ஏனையவற்றைப் பாவிக்க பத்து வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் இணக்கப்பாடு கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. எனவே கார்ணி தன் துரும்புச் சீட்டைப் பாவித்தாரேயானால் ட்றம்ப் சீனாவுடன் சமரசத்திற்கு வரத் தயங்க மாட்டார். ஏனெனில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா அமிழும்போது அது ஏனைய நாடுகளையும் இழுத்துக்கொண்டுதான் போகும். எனவே கார்ணியின் இந்த துரும்புச் சீட்டு பலனளிக்கப் போவதில்லை.

சியலில் முன் பின் அனுபவமில்லாத கார்ணியின் இரைச்சல்களை உடனடியாக பகுத்துணர முடியாதுள்ளது. ஆனால் ஒன்று அவரது ஆட்சி முழுமையான நான்கு வருட ஆட்சியாக இருப்பதற்கான சாத்தியமில்லை. அதற்கடுத்த ஆட்சி கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியாக அமையவேண்டுமாகில் அதன் தலைமை மேற்கு கனடாவிடமிடமிருந்து பறிக்கப்பட்டு ஜான் ஷறே அல்லது பீட்டர் மக்கே போன்ற மிதவாதிகளிடம் கையளிக்கப்படவேண்டும். ட்றம்ப் நாட்டில் நடைபெறவிருக்கும் மத்திய தேர்தல்களைத் தொடர்ந்து அவரது சிறகுகள் கத்தரிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் கார்ணி நான்கு வருடங்களை இலகுவாகத் தாண்ட முடியும்.

இத்தேர்தல் மூலம் கிடைத்த இன்னுமொரு அதிர்ச்சி என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கின் தோல்வி. இதற்கு ஒரே ஒரு காரணம் பாலஸ்தீனம் பற்றிய இவரது நிலைப்பாடு. இறுதி விவாதத்தின்போதும் அவர் “பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை” என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தவர். இதே நிலைப்பாட்டை இவர் முன்னரும் தெரிவித்திருந்தார். 2023 இல் இவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இவரது நிலைப்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கலாமோ என்று ஐயப்பட்டபோது இத் தோல்வி அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

கனடாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் மிகவும் கேவலமாக மதிக்கும் தொழிற் பட்டியலில் கடைசியாக இருப்பதுதான் அரசியல்வாதி. பழைய வாகன விற்பனையாளர்கூட அரசியல்வாதிகளைவிட மேன்மையாக மதிக்கப்படுபவர்கள். இனிமேல் ஜக்மீத் சிங்க் தலை நிமிர்ந்து வாழலாம்.

தமிழ் வேட்பாளர்களை / வெற்றியாளர்களைப் பற்றி எதுவும் இல்லையா என்கிறீர்கள். It’s party time. அடுத்தூர்வதகுதொப்பதில். (Image Credit: CNN)

https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/?fbclid=IwY2xjawKDWHxleHRuA2FlbQIxMQBicmlkETFHVnJoVnk4S1ZyWFRQTTRqAR7-2fZVNQuGUbLJjeQKxeQL-myiMvWp9kYDt53dFRd5FwEgwClMhALb4kTiWQ_aem_8PA3MO0gSJ5VN88iQICCTA#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை.

இந்தத் தேர்தலின் பின் Alberta பிரிந்து போகும் முயற்சியில் இறக்கி இருக்கிறது. தேர்தலின் சூடு தணிய சுதந்திர ஆல்பர்டா கனவும் தணியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் லிபரல் போலவே, அவுசிலும் தொழிற்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தம்பு வருவதற்கு முன்னர், இது நடக்காதென நம்பினார்களாம், ஆனால் "அவுஸி ட்ரம்ப்" என்று சிலரால் அழைக்கப் பட்ட பீற்றர் டற்றனுக்கு அந்தப் பெயரே ஆப்பாகி, அவரது தொகுதியிலேயே தோல்வியடைந்து விட்டார். ஈழத்தமிழ் அகதிகள் உட்பட, பல நாட்டு அகதிகளை அவுசுக்கு வெளியே முகாம்களில் அடைத்து வைத்து, சிலர் உயிர்மாய்த்துக் கொள்ளக் காரணமாக இருந்தவர் இந்த டற்றன். சரியான பாடம் கிடைத்திருக்கிறது இவருக்கு.

இனி, வேறு நாடுகளில் வலதுசாரிகள் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. தம்புக்கு போனைப் போட்டு "உங்கள் ட்ரம்ப் நிதியத்திற்கு நன்கொடை தருகிறேன். என்னையத் திட்டி நாலு வரி உங்கள் ட்ருத் சோசியலில் எழுதி விடுங்கள் மகராசா!" என்று கேட்டுக் கொள்ள வேண்டியது தான்😎!

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய மக்களுக்கு எனது அட்வைஸ் கொஞ்சம் பொறுமை தேவை. கார்பன் டக்ஸ் கார்ணி இன்னும் 3-1/2 வருடங்கள் எங்கட ட்றம்பை சமாளிக்க வேண்டும். அல்பேர்ட்டாவின் டானியல் ஸ்மித்தை சமாளிக்கவேண்டும். கட்சிக்குள் கிறிஸ்டியா பிறீலாண்ட் போன்ற முன்னாள் மூத்த அமைச்சர்களைச் சமாளிக்கவேண்டும். பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றைச் சமாளிக்கவேண்டும். எல்லாவற்றுக்கு மேலாக கனடாவின் பொருளாதாரம் குடியேற்றம் உட்கட்டமைப்பு எல்லாவற்றையும் சுழியத்தில் இருந்து சீரமைக்கவேண்டும். இவை எல்லாவற்றையும் சமாளித்து கார்பன் டக்ஸ் கார்ணி வெற்றிபெறுவாராயின் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்கலாம்.

குறிப்பு : அல்பேட்டா பிரியவேண்டும். பிரியும் அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு. அப்படிப் பிரிந்தால் அங்கு குடியேறிவிடுவேன்!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கனேடிய மக்களுக்கு எனது அட்வைஸ் கொஞ்சம் பொறுமை தேவை. கார்பன் டக்ஸ் கார்ணி இன்னும் 3-1/2 வருடங்கள் எங்கட ட்றம்பை சமாளிக்க வேண்டும். அல்பேர்ட்டாவின் டானியல் ஸ்மித்தை சமாளிக்கவேண்டும். கட்சிக்குள் கிறிஸ்டியா பிறீலாண்ட் போன்ற முன்னாள் மூத்த அமைச்சர்களைச் சமாளிக்கவேண்டும். பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றைச் சமாளிக்கவேண்டும். எல்லாவற்றுக்கு மேலாக கனடாவின் பொருளாதாரம் குடியேற்றம் உட்கட்டமைப்பு எல்லாவற்றையும் சுழியத்தில் இருந்து சீரமைக்கவேண்டும். இவை எல்லாவற்றையும் சமாளித்து கார்பன் டக்ஸ் கார்ணி வெற்றிபெறுவாராயின் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்கலாம்.

குறிப்பு : அல்பேட்டா பிரியவேண்டும். பிரியும் அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு. அப்படிப் பிரிந்தால் அங்கு குடியேறிவிடுவேன்!😎

இதில் கனேடிய பொருளாதாரம் தவிர்ந்த எல்லாம் செய்யக் கூடியவை அல்லவா? கார்பன் வரியை இல்லாமல் செய்வதாக தேர்தலுக்கு முதலே அறிவித்தாயிற்று (எனவே ஏன் இன்னும் கார்பன் வரி கார்னி என்கிறீர்கள் என விளங்கவில்லை, ட்ரம்பின் பிரச்சார பீரங்கிகள் போலவே "பட்டப் பெயர்" சூட்டும் வேலையென நினைக்கிறேன்😂)

கனேடிய குடியேற்றக் கொள்கை வருடா வருடம் மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு திரவ நிலைக் கொள்கை, நீதி மன்றங்களும் தலையிடாது. அதுவும் நடந்து விடும்.

உட்கட்டமைப்பு, பொருளாதாரம் சார்ந்து, கனடா ஐரோப்பிய யூனியனோடும், மறைமுகமாக சீனாவோடும் ஒத்துழைப்பது தவிர்க்க இயலாதது. இது நடந்து, அமெரிக்காவின் கொண்டையில் சீனா கூடு கட்டும் போது தெரியும் "உலக சமாதான நாயகன்" ட்ரம்பின் "தூர நோக்கு"😂! அந்த நேரம், அல்பேர்ட்டாவை அமெரிக்கா வைச்சிருந்தாலென்ன, கனடா வைச்சிருந்தாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இதில் கனேடிய பொருளாதாரம் தவிர்ந்த எல்லாம் செய்யக் கூடியவை அல்லவா? கார்பன் வரியை இல்லாமல் செய்வதாக தேர்தலுக்கு முதலே அறிவித்தாயிற்று (எனவே ஏன் இன்னும் கார்பன் வரி கார்னி என்கிறீர்கள் என விளங்கவில்லை, ட்ரம்பின் பிரச்சார பீரங்கிகள் போலவே "பட்டப் பெயர்" சூட்டும் வேலையென நினைக்கிறேன்😂)

கார்பன் டக்ஸ் கார்ணியின் ஆலோசனையின் பேரில் தான் இந்த டக்ஸ் அமுல்படுத்தப்பட்டது. படித்து பெற்ற பட்டம் போல செயற்பாட்டால் பெற்ற பட்டத்தை சொல்ல காபன் டக்ஸ் கார்ணி வெட்கம்கொள்ளத் தேவையில்லை.

மேலும் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் மக்களை ஏய்க்கும் அறிவிப்பாக கார்பன் டக்ஸ் நீக்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் கனடாவின் காபன் வெளியேற்றம் மிகமிகச் சொற்பமானது. ஆனால் அதற்கு நாங்கள் தான் வரிசெலுத்தினோம் கார்ணியின் ஆலோசனையின் பேரில். இப்போது வரி இல்லை ஆனால் அந்த வரியைக் காரணம்காட்டி உயர்ந்த போக்குவரத்து கட்டணங்கள், விவசாய உற்பத்திகள், பொருட்களின் விலை குறைந்ததா என்றால் இல்லை. இதற்கு கார்பன் டக்ஸ் கார்ணியினால் தீர்வுகாண முடியாது!

Edited by வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

கட்சிக்குள் கிறிஸ்டியா பிறீலாண்ட் போன்ற முன்னாள் மூத்த அமைச்சர்களைச் சமாளிக்கவேண்டும்

இதொரு சின்ன பிரச்சனை.

Global News
No image preview

Freeland says Mark Carney is her son’s godfather | Watch...

Watch Freeland says Mark Carney is her son’s godfather Video Online, on GlobalNews.ca

2 min --------

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்குல பார்த்தால் கார்பன் கார்ணி அவர்கள் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வருவார் போல் உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒன்டாரியோவில் படு தோல்வி அடைந்து . இப்போது அவர் அல்பேர்டாவிற்கு சென்று, தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை பதவி விலக்கி, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் ஒரு வெட்கம் அற்ற மனிதர் ஆவார்.

கன்சர்வேட்டிவ் கட்சியில் பியர் பொய்லிவ்ரே போன்ற அதி தீவிர வலதுசாரி தலைவர் இருக்கும் வரை அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, பெரும்பாலான கனேடியர்கள் மிதவாதிகளாகவே (center left or center right) இருக்கிறார்கள். அல்பேர்டாவில் இருப்பவர்ககளில் மிக குறைந்த அளவான மக்களே (25 %) தனி நாடாக போவதற்கு ஆதரவு அளிக்கின்றார், விருப்பம் என்றால் பியர் பொய்லிவ்ரேரும் அவருடைய தீவிர ஆதரவாளர்களும் Trumpland க்கு குடிபெயரலாம்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

இதொரு சின்ன பிரச்சனை.

Global News
No image preview

Freeland says Mark Carney is her son’s godfather | Watch...

Watch Freeland says Mark Carney is her son’s godfather Video Online, on GlobalNews.ca

2 min --------

அப்ப முதலே தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் தன்னுடைய சண்ணிண்ட தொட்டப்பாவுக்கு ஏக மனதாக விட்டுக்கொடுத்திருக்கலாமே அம்மணி. ஓம் சின்னப் பிரச்சினை தான்! 😎

Edited by வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

அப்ப முதலே தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் தன்னுடைய சண்ணிண்ட தொட்டப்பாபுக்கு ஏக மனதாக விட்டுக்கொடுத்திருக்கலாமே அம்மணி. ஓம் சின்னப் பிரச்சினை தான்! 😎

அமைச்சர் பதவி வேணுமல்லவா உக்ரேனிய அம்மணிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

அமைச்சர் பதவி வேணுமல்லவா உக்ரேனிய அம்மணிக்கு.

நுணா உங்களுக்கான பதில் எல்லா வெற்றிகளும் வெற்றிகளுமல்ல, எல்லா தோல்விகளும் தோல்விகளுமல்ல. எம் தலைவன் ட்ரம்ப் அவர்களே நல்ல எடுத்துக்காட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் லிபரல் கனடாவைக் குட்டிச் சுவராக்கிய காபன் டக்ஸ் கார்ணியின் வெற்றிக்கு ஒரே காரணம் தலைவன் ட்ரம்ப் மட்டும் தான். மற்றும்படி லிபரல்களின் திட்டங்களோ அல்லது முன்னைய நல்லாட்சியோ காரணமல்ல. நாடு அடுத்த 4 நான்கு வருடங்களில் மேலும் கட்டாக்காலி குடியேற்றவதிகளாலும் தலைவன் ட்றம்பின் வரிகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமைகளாலும் சீரழியப்போகின்றது. நாளை காபன் டக்ஸ் கார்ணி தலைவன் ட்ரம்பை வொசிங்டனுக்கு ஓடிச் சென்று சந்திக்கிறார். அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு கார்பன் டக்ஸ் கார்ணியால் எதுவும் செய்யமுடியாது.

மீண்டும் சொல்கின்றேன் வரும் 4 வருடங்களில் கார்பன் டக்ஸ் கார்ணி கனடாவை கட்டியெழுப்பினால் எனது ஆதரவு நிச்சயம் இருக்கும். எங்க ஊரில் சொல்லுவாக, முச புடிக்கிற நாய மூக்கில தெரியும் எண்டு, நிச்சயமா இந்த ஞமலி முச புடிக்காது என்பது திண்ணம்!😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 19:43, வாலி said:

நுணா உங்களுக்கான பதில் எல்லா வெற்றிகளும் வெற்றிகளுமல்ல, எல்லா தோல்விகளும் தோல்விகளுமல்ல. எம் தலைவன் ட்ரம்ப் அவர்களே நல்ல எடுத்துக்காட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் லிபரல் கனடாவைக் குட்டிச் சுவராக்கிய காபன் டக்ஸ் கார்ணியின் வெற்றிக்கு ஒரே காரணம் தலைவன் ட்ரம்ப் மட்டும் தான். மற்றும்படி லிபரல்களின் திட்டங்களோ அல்லது முன்னைய நல்லாட்சியோ காரணமல்ல. நாடு அடுத்த 4 நான்கு வருடங்களில் மேலும் கட்டாக்காலி குடியேற்றவதிகளாலும் தலைவன் ட்றம்பின் வரிகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமைகளாலும் சீரழியப்போகின்றது. நாளை காபன் டக்ஸ் கார்ணி தலைவன் ட்ரம்பை வொசிங்டனுக்கு ஓடிச் சென்று சந்திக்கிறார். அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு கார்பன் டக்ஸ் கார்ணியால் எதுவும் செய்யமுடியாது.

மீண்டும் சொல்கின்றேன் வரும் 4 வருடங்களில் கார்பன் டக்ஸ் கார்ணி கனடாவை கட்டியெழுப்பினால் எனது ஆதரவு நிச்சயம் இருக்கும். எங்க ஊரில் சொல்லுவாக, முச புடிக்கிற நாய மூக்கில தெரியும் எண்டு, நிச்சயமா இந்த ஞமலி முச புடிக்காது என்பது திண்ணம்!😎

முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது?

தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது?

தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.

மக்கள் கெட்டிக்காரர்கள் என்று இன்னும் சில காலாண்டுகளில் காபன் டக்ஸ் கார்ணி நிரூபிப்பார். மக்களை விட நீங்கள் மிகவும் கெட்டிக்காரர் என அதிகமுறை இங்கு நிரூபித்திருக்கிறீர்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.