Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

10 MAY, 2025 | 04:47 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

வெசாக் பௌர்னமி தினத்தன்று இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையிலிருந்து 38 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 36 கைதிகளும்,  மஹர சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகளும் உள்ளடங்களாக 388 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும் திங்கட்கிழமையும் (12), செவ்வாய்கிழமையும் (13) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கைதிகளை பார்ப்பதற்கும், அவர்களுக்கு வீடுகளில் சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. எனினும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவற்றையும் வழங்க முடியாது. 

இவை தவிர சிறைச்சாலைகளில் வெசாக் நிகழ்வுகளும் மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/214381

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இந்த பொது மன்னிப்பில்… பிள்ளையானின் பெயரும் உள்ளதா. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்த பொது மன்னிப்பில்… பிள்ளையானின் பெயரும் உள்ளதா. 😂

அவர் விசாரணைக் கைதி தானே அண்ணை? குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அவர் விசாரணைக் கைதி தானே அண்ணை? குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

நான் சும்மா… பகிடிக்கு கேட்டேன் ஏராளன்.

பண்டத்தரிப்பில்…. ஒரு பெண்ணை அவமானப் படுத்தியதற்காக ஒரு யூ ரியூப் காரனை கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்கள் அல்லவா. அவரின் நிலைமை இப்போ என்ன? இன்னும்… உள்ளேயா, அல்லது வெளியே வந்து விட்டாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நான் சும்மா… பகிடிக்கு கேட்டேன் ஏராளன்.

பண்டத்தரிப்பில்…. ஒரு பெண்ணை அவமானப் படுத்தியதற்காக ஒரு யூ ரியூப் காரனை கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்கள் அல்லவா. அவரின் நிலைமை இப்போ என்ன? இன்னும்… உள்ளேயா, அல்லது வெளியே வந்து விட்டாரா?

பிணை வழங்கப்பட்டுவிட்டது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

பிணை வழங்கப்பட்டுவிட்டது அண்ணை.

என்ன கொடுமை இது…. ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள், தலைவன் என்கிறார்கள்?

எமது மக்கள் எங்கே போகின்றார்கள். 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

என்ன கொடுமை இது…. ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள், தலைவன் என்கிறார்கள்?

எமது மக்கள் எங்கே போகின்றார்கள். 😡

Three+Manki+copy.jpg

என்னண்ணை அதிசயமாக கேக்கிறியள்?! இப்ப இவர்கள் தானே கதாநாயகர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

என்ன கொடுமை இது…. ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள், தலைவன் என்கிறார்கள்?

எமது மக்கள் எங்கே போகின்றார்கள். 😡

கள்ளர்களுக்குள் பெரிய கள்ளன் தலைவன் தானே. என்ன செய்வது இதைத்தான் சொல்வது காலத்தின் கோலம் என....

சில வேளைகளில் மண்டபம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவார்கள். மக்கள் நலம்புரி மன்னன் மக்களுக்காக சிறை சென்று வந்துளார் வாழ்க வளர்க என நோட்டீஸ்ம் சுவர்களில் ஒட்டப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதனை யூ ரியூப்பிலும் போட்டு இருப்பதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை.

இந்த யூ ரியூப் கலாச்சாரம் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நினைக்க அச்சமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அவர் விசாரணைக் கைதி தானே அண்ணை? குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

தமிழ் கைதிகளையும். பொது மன்னிப்பு கொடுத்து விடுகிறார்களா?? அல்லது தனியாக சிங்களவர்கள். மட்டுமா.???

  • கருத்துக்கள உறவுகள்

வெசாக் கொண்டாடும் கைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவாராம், சில சமயம் போதை வஸ்து கடத்தியோர், ஆடு, மாடு கடத்தியோர், களவெடுத்தோர், தங்கச்சங்கிலி அறுத்தோர், பெண்களோடு சேட்டை விட்டோர் என்பவரும் இதற்குள் அடங்கலாம். தமிழ் அரசியல் கைதிகளே இல்லையாம் இலங்கை சிறைச்சாலைகளில். ஒருவேளை, அவர்களையும் காணாமல் செய்து போட்டார்களோ தெரியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

தமிழ் கைதிகளையும். பொது மன்னிப்பு கொடுத்து விடுகிறார்களா?? அல்லது தனியாக சிங்களவர்கள். மட்டுமா.???

உண்மையா எல்லா சிறைகளிலும் இருந்து நன்நடத்தை அடிப்படையில் விடவேண்டும் அண்ணை, விடுகிறார்களா என்பது சந்தேகமே?!

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2025 at 03:54, Kandiah57 said:

தமிழ் கைதிகளையும். பொது மன்னிப்பு கொடுத்து விடுகிறார்களா?? அல்லது தனியாக சிங்களவர்கள். மட்டுமா.???

0-1-1.jpg?resize=750%2C375&ssl=1

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

அதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1431669

############### ################# ###

கந்தையா அண்ணை ... இப்ப, உங்களுக்கு திருப்தியா. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை

12 MAY, 2025 | 11:24 AM

image

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை (12)  வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு  திங்கட்கிழமை (12)  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலும் சிறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது.

1000401747.jpg

https://www.virakesari.lk/article/214504

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

0-1-1.jpg?resize=750%2C375&ssl=1

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

அதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1431669

############### ################# ###

கந்தையா அண்ணை ... இப்ப, உங்களுக்கு திருப்தியா. 😂

அது சரி யாழ்ப்பாணத்தில். சிறையிலிருப்பவர்கள் அனைவரும் தமிழர்களா ??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அது சரி யாழ்ப்பாணத்தில். சிறையிலிருப்பவர்கள் அனைவரும் தமிழர்களா ??

நான் உள்ளுக்கு போய் பார்க்கவில்லை என்பதால்,

யாரார் உள்ளுக்கு இருக்கினம் என்று எனக்குத் தெரியாது. 😂

மேலதிக தகவல்: ஜே.வி.பி.ஐ ஆரம்பித்த தலைவர் ரோகண விஜேவீரவும் யாழ்ப்பாண சிறையில் தான், இருந்ததாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மேலதிக தகவல்: ஜே.வி.பி.ஐ ஆரம்பித்த தலைவர் ரோகண விஜேவீரவும் யாழ்ப்பாண சிறையில் தான், இருந்ததாக சொன்னார்கள்.

உள்ளே போய் பார்த்தீர்களா ?? 🤣🤣 இப்பவும் பல ஜேவிபி க்காரர் இருந்தாதக சொன்னார்கள் நானும் போய் பார்க்கவில்லை 🤪 ஆனால் விடுதலை செயயப்பட்டவர்களில். ஜேவிபி யிமிருக்கலாம். சிங்களவருமிருககலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் விடுதலை

12 MAY, 2025 | 03:58 PM

image

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில்  திங்கட்கிழமை (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில்  கைதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன்  ஜெயிலர்  உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே  இவ்வாறு இலங்கை முழுவதும்  உள்ள சிறைகளில் இருந்து 388 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-05-12_at_13.34.43.jp

WhatsApp_Image_2025-05-12_at_13.34.40__1

https://www.virakesari.lk/article/214537

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.