Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

11 MAY, 2025 | 09:00 AM

image

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

GqoDDZIXkAAUU0K.jpg

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.

GqnwCeFWgAARfrz.jpg

இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர்.

GqnwEmGW0AArF6-.jpg

https://www.virakesari.lk/article/214402

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-53-1.jpg?resize=600%2C300&ss

தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்டது!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் இன்றைய தினம்(11) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இணைந்து கலந்துகொண்டருந்தனர்.

இதேவேளை, மே மாதம் 18ஆம் நாளைத் தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431645

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்+

உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இது பன்னாட்டளவில் இனப்படுகொலை தொடர்பில் கட்டப்பட்ட இரண்டாவது நினைவுச் சின்னமாகும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை' என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் - பிரம்டன் மேயர்

Published By: RAJEEBAN

11 MAY, 2025 | 09:17 AM

image

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் , இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது, என தெரிவித்த பிரம்டன் மேயர் அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்,இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/214404

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை' என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் - பிரம்டன் மேயர்

அப்ப இனி சுமந்திரன் கனடாவுக்கு போகேலாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி; நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான ஒரு நினைவூட்டல் - கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன்

Published By: RAJEEBAN

12 MAY, 2025 | 11:00 AM

image

கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, என தெரிவித்துள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன்  நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

496057903_10171075254070007_154384269207

நேற்றைய தினம் அர்த்தபூர்வமானதாக அமைந்தது, தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை திறக்கும் நிகழ்வில் நான் எனது சமூகத்தவருடன் இணைந்துகொண்டேன்.

கனடிய தமிழர் தேசிய அவைக்கும், பிரம்டன் தமிழ் சங்கத்திற்கும் மேயர் பட்ரிக் பிரவுனிற்கும் நகரத்தின் கவுன்சிலர்களிற்கும் இந்த நினைவுத்தூபியை சாத்தியமாக்கிய சமூக அமைப்புகள் தலைவர்களிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன்.

இந்த சக்திவாய்ந்த இடம் தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமாக திகழ்கின்றது, இழக்கப்பட்ட உயிர்கள், துண்டாடப்பட்ட சமூகங்கள் பலர் அனுபவித்த வேதனைகளிற்கான அடையாளமாக திகழ்கின்றது.

மேலும் இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் காணப்படும், வலிமை மீள் எழுச்சி தன்மை நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றது.

மே மாதம் கனடா தமிழர்களிற்கு ஒரு வேதனையான குறிப்பிடத்தக்க மாதமாகும், உயிரிழந்தவர்களையும் தப்பியவர்களையும், அவர்கள் அனுபவித்தவற்றின் அதிர்ச்சிகளை தொடர்ந்து சுமந்துகொண்டிருப்பவர்களையும் நாம் நினைவுகூரும்போது, இந்த நினைவுச்சின்னம் அவர்களின் நினைவை போற்றுவதற்கும், வெறுப்பிற்கு எதிராக எழுந்து நின்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு பொறுப்பு குறித்து சிந்திப்பதற்குமான ஒரு இடத்தை வழங்குகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு கனடா, அவர்களின் பங்களிப்பு கனடாவை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் எனஅவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/214500

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2025 at 17:12, குமாரசாமி said:

அப்ப இனி சுமந்திரன் கனடாவுக்கு போகேலாது.

இங்கு ஒரு சின்ன சுமந்திரன் இருக்காரு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுரவின் நிர்வாகம் அமைந்துள்ளது - சஞ்ஜீவ எதிரிமான்ன

14 MAY, 2025 | 05:46 PM

image

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத இலங்கையர்கள் கனடாவில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று  பிரம்டன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. தமிழ் இனப்படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. கனடாவில் வாழும் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்   நிர்வாகம் அமைந்துள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

2024.08.14ஆம் திகதியன்று கனடாவில் பிரம்டன் நகரில் பொதுப் பூங்காவில் இந்த நினைவுத் தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடும் அதிருப்தியை கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிப்படுத்தினார்.

அத்துடன் இலங்கையில் தமிழ் இன அழிப்பு படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் தேசிய நல்லிணக்க உறுதிப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இலங்கை சார்பில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அலி சப்ரி முறைப்பாடு அளித்திருந்தார்.

நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் உத்வேகமடைந்துள்ளார்கள். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கடனா சென்றிருந்த போது புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார்.

இந்த நினைவுத் தூபி திறப்பு விழாவில் கலந்துகொண்ட கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெற்றிக் ப்ரொய்லர் 'தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத இலங்கையர்களை பிரம்டன் நகரம் அங்கீகரிக்காது, கனடாவும் அங்கீகரிக்காது. அவ்வாறானவர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்று மிகவும் பாரதூரமானது. தமிழ் இனப்படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார்.

https://www.virakesari.lk/article/214740

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு இலங்கை அரசு கண்டனம்

கனடாவின் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு இலங்கை அரசு கண்டனம்

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (14) கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

https://thinakkural.lk/article/317952

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இங்கு ஒரு சின்ன சுமந்திரன் இருக்காரு....

எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் - நினைவுத்தூபிக்கு அனுமதி - கனடா உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் ஆட்சேபனை

14 MAY, 2025 | 04:12 PM

image

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து  இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கனடா தூதுவரை அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்

இது குறித்து அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது.

ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்,அது தொடர்பில் நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசாங்கத்தின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன்.

இலங்கையின் பன்முகதன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளிற்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன்.

இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது-

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,  அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட  நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில்,  இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/214712

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, alvayan said:

இங்கு ஒரு சின்ன சுமந்திரன் இருக்காரு....

எங்கு புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்களோ அங்கு ஒரு சின்ன சுமந்திரனாவது இருக்கும். அதுக்கு பெயர்தான் தலைவிதி,தலையெழுத்து. 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அட இவங்களுக்கு ..இறுதி நாட்காளில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டது...ஒரு சின்ன விளையாட்டு..

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் விளக்குகள் அழிப்பு - கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம்

Published By: RAJEEBAN

16 JUN, 2025 | 10:23 AM

image

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

508177303_1112741474224042_5656217117265

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 2025 இல் இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன.

மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

508182871_1112741420890714_7093698596915

வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்படவேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட எங்கள் கனடா சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள் நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

https://www.virakesari.lk/article/217583

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.