Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப் போட்டியை ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது

14 MAY, 2025 | 01:40 PM

image

(நெவில் அன்தனி)

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்குகின்ற நிலையில் தனது தடையை மறந்துவிட்டு புதுமனிதனாக இறுதிப் போட்டியை கெகிசோ ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது.

தடைசெய்யப்பட்பட்ட ஊக்கமருந்து அல்லது போதைப் பொருள் பாவித்த குற்றத்தின்பேரில் ரபாடாவுக்கு தடைவிதிககப்பட்டது. இதனை அடுத்து அவரது நல்வாழ்வு குறித்து கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) தனது கரிசனையை வெளியிட்டது.

1405_kagiso_rabada...png

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துதை அல்லது பொதைப் பொருளை ரபாடா பாவித்துள்ளார் என்பது பரிசோதனையில் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஒரு மாத கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டது. இந்த விடயத்தை அறிந்த உடனேயே ரபாடாவின் நல்வாழ்வு குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் அக்கறை செலுத்தத் தொடங்கியது.

ரபாடா தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து அல்லது போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுபவர் அல்லர் என்பதை பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் டெம்பா பவுமா, தேசிய அணி மற்றும் உயர் செயல்திறன் நிலைய பணிப்பாளர் எனொக் நிக்வே ஆகியோர் புரிந்து கொண்டு ரபாடா குறித்து திருப்தி அடைந்துள்ளனர்.

இந்தத் தடையைத் தொடர்ந்து நல்வாழ்வு தொடர்பாக நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ள ரபாடா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்.

1405_kagiso_rabada.png

மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்கும் டேர்பன் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான SA20 போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் திகதி ரபாடா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்திருப்பது கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் அவர் என்னவகையான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளைப் பாவித்தார் என்பதை ஜூன் மாதம் 4ஆம் திகதி உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவனை இல்லாத விளையாட்டுத்துறைக்கான தென் ஆபிரிக்க நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

அதாவது ரபாடாவின் மேன்முறையீட்டுக்கான 30 தின கால அவகாசம் முடிவடைந்த பின்னரே அந்த அறிவிப்பு விடுக்கப்படவள்ளது.

அந்த நிறுவனத்தின் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான விதிகளின் பிரகாரம் கெனபிஸ், கொக்கெய்ன், ஹெரொய்ன் அல்லது மெய்மறந்த மகிழ்ச்சிக்கான ஊக்கமருந்து ஆகிய நான்கில் ஒன்றை ரபாடா பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ரபாடா ஒரே ஒரு தடவை மாத்திரம் பரவசம் அடைவதற்காக அவற்றில் ஒன்றைப் பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளை ரபாடா பாவித்தார் என்ற தகவல் வெளியானது முதல் அவருடன் நல்வாழ்வு குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வந்ததாக ஊடக சந்திப்பில் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின்போதே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தென் ஆபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு  முதல் தடவையாக   முன்னேறியுள்ள தென் ஆபிரிக்கா சந்திக்கவுள்ளது.

இறுதிப் போட்டி லண்டன், லோர்ட்ஸ் விளையாட்ரங்கில் ஜூன் மாதம் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களில் போட்டியில் முடிவு கிட்டாவிட்டால் 16ஆம் திகதி போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.

இறுதிப் போட்டிக்கான தென் ஆபிரிக்க கிரிக்கெட் குழாத்தில் ரபாடா தலைமையிலான 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் மூவர் இறுதிப் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆபிரிக்க குழாம்

டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கேஷவ் மஹராஜ், மார்க்கோ ஜென்சன், கோர்பின் பொஷ், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன்.

1405_sa_squad_for_wtc_final.png

https://www.virakesari.lk/article/214689

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12 போட்டிகளில் 5 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்?

14 MAY, 2025 | 02:49 PM

image

(நெவில் அன்தனி)

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கான அவுஸ்திரேலியாவின் அலைமோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக கடைசியாக நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் ஒருவர் மாத்திரமே நிரந்தர ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார். அவரது ஜோடியாக நான்கு வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆரம்ப வீரராக ஐந்தாவது வீரர் ஒருவர் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

டேவிட் வோர்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற பின்னர் உஸ்மான் கவாஜாவின் ஆரம்ப ஜோடியினராக நால்வர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், நேதன் மெக்ஸ்வீனி, சாம் கொன்ஸ்டாஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய நால்வர் கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் உஸ்மான் கவாஜாவின் ஆரம்பத் துடப்பாட்ட ஜோடியாக விளையாடியுள்ளனர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உஸ்மானின் ஐந்தாவது ஆரம்ப ஜோடியாக மானஸ் லபுஷேன் துடுப்பெடுத்தாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது சிறப்புவாய்ந்த ஒருவருக்கு உரிய பாத்திரமாக அமைந்துவிடாது என்ற கருத்தை தேசிய தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி வெளியிட்டுள்ளார்.

'ஆரம்ப வீரர் ஸ்தானத்தை ஜொஷ் இங்லிஸாலும் நிரப்பமுடியும். அதேவேளை, மானஸாலும் நிரப்ப முடியும் என்பதை நான் கூறியிருந்தேன்' என 15 வீரர்கள் அடங்கிய குழாத்தை உறுதிசெய்த பின்னர் பெய்லி தெரிவித்தார்.

இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்திற்கான இறுதிப் போட்டியில் (லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் 2023 ஜூன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை) இந்தியாவை எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா 209 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகி இருந்தது.

இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா பலம்வாயந்த குழாத்தை அறிவித்துள்ளது. இந்தக் குழாத்தில் இடம்பெறும் அதே வீரர்கள், 2023 - 2025 WTC சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய குழாம் 

பெட் கமின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மெட் குனேமான், மானஸ் லபுஷேன், நேதன் லயன், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், போ வெப்ஸ்டர். 

பயணிக்கும் பதில் வீரர்: ப்றெண்டன் டொகெட்.

1405_kawaja_and_labuschane.png

https://www.virakesari.lk/article/214697

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.....................தென் ஆபிரிக்கா வென்றாலும் ம‌கிழ்ச்சி...........................

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள கணிப்பு போட்டி…

இன்னும் சில நொடிகளில்…

ஆவலோடு காத்திருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2025 at 17:24, ஏராளன் said:

கெனபிஸ், கொக்கெய்ன், ஹெரொய்ன் அல்லது மெய்மறந்த மகிழ்ச்சிக்கான ஊக்கமருந்து ஆகிய நான்கில்

Ecstasy என்ற போதைபொருளினைதான் (MDMA என்றும் சொல்வார்கள்) இப்படி நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்கள் 🤣. அதையும் எக்ஸ்டசி என்றே எழுதியிருக்கலாம். (ecstasy என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் பரவசம்).


39 minutes ago, goshan_che said:

யாழ்கள கணிப்பு போட்டி…

இன்னும் சில நொடிகளில்…

ஆவலோடு காத்திருங்கள்!!!

போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களை அள்ளுங்கள்.

பிகு

பரிசில் என்ன? ஆறுதல் மட்டுமே🤣

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: சம்பியன் அணிக்கு 107 கோடி ரூபா, தோல்வியுறும் அணிக்கு 62  கோடி  ரூபா

Published By: VISHNU

16 MAY, 2025 | 02:01 AM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படவுள்ள பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி உறுதி செய்துள்ளது.

இதற்கு அமைய சம்பியனாகும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 107 கோடியே 53 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (62 கோடியே 68 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவும் முதல் தடவையாக தென் ஆபிரிக்காவும் பங்குபற்றுகின்றன.

இந்த இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் 5 நாட்களில் முடிவு கிட்டாவிட்டால் 6ஆம் நாளன்று போட்டி தொடரும்.

கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களில் சம்பியன்களான நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் பெற்ற பணப்பரிசைவிட இம்முறை பணப்பரிசு இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தும், அவுஸ்திரேலியாவும்   கடந்த இரண்டு அத்தியாயங்களில் சம்பியனானபோது 1.6 மில்லியன் அமெரிக்கா டொலர்களைப் பணப்பரிசாக வென்றெடுத்தன.

அந்த இரண்டு அத்தியாயங்களிலும் தோல்வி அடைந்த இந்தியாவுக்கு தலா 800,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக கிடைத்தது.

மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி பருவ முடிவில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 69.44 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் அவுஸ்திரேலியா 67.54 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இதேவேளை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 4ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கைக்கு 840,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 25 கோடி ரூபா) கிடைக்கவுள்ளது.

ஏனைய பணப்பரிசுகள்

இந்தியா 3ஆம் இடம் - 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

நியூஸிலாந்து   4ஆம் இடம் - 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இங்கிலாந்து 5ஆம் இடம் - 960,000 அமெரிக்க டொலர்கள்

பங்களாதேஷ் 7ஆம் இடம் - 720,000 அமெரிக்க டொலர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் 8ஆம் இடம் - 600,000 அமெரிக்க டொலர்கள்

பங்களாதேஷ் 9ஆம் இடம் - 480,000 அமெரிக்க டொலர்கள்.

https://www.virakesari.lk/article/214843

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் சாம்பியன் பைனல்: ஆஸ்திரேலியா செய்துள்ள மாற்றம் தென் ஆப்ரிக்காவை குழப்பும் உத்தியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,X/JAY SHAH

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 11 ஜூன் 2025, 02:12 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணி மோதுகிறது. 1998 ஐசிசி நாக்அவுட் சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பின் தென் ஆப்ரிக்கா இதுவரை ஐசிசி சார்பில் எந்த கோப்பையையும் வென்றதில்லை.

ஆஸ்திரேலியா Vs தென் ஆப்ரிக்கா

ஐசிசி சார்பில் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவதும் இதுதான் முதல்முறையாகும்.

லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி நடப்பதும் இதுதான் முதல்முறையாகும். ஆனால் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதுவது முதல்முறை அல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு அணிகளும் இதே லார்ட்ஸ் மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளதாக வரலாறு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவது இது முதல்முறையாகும்.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்

இந்த லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் சந்தித்து 15 போட்டிகளை டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்க அணி 18 போட்டிகளில் 6 வெற்றிகள், 8 தோல்விகள், 4 டிரா செய்துள்ளது.

நூற்றாண்டு வரலாறு

1912ம் ஆண்டில் முத்தரப்பு டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையே நடந்தது. அந்த நேரத்தில் இந்த 3 அணிகள்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடியவை. அப்போது 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்கா அணியும் இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் விளையாடின.

113 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்தத் தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது

27 ஆண்டுகளாக காத்திருப்பு

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய அவமானத்துடன் இருக்கிறது.

தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

கடைசியாக இரு அணிகளும் 2022-23ம் ஆண்டில் டெஸ்ட் தொடரில் விளையாடின. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக இரு அணிகளும் தங்களுக்குள் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது.

இதுவரை இரு அணிகளுக்குள் 101 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் தென் ஆப்ரிக்க அணி 26 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 54 வெற்றிகளுடன் ஆதிக்கம் செய்கிறது. 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன, வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 வெற்றிகளும், தென்ஆப்ரிக்க அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

பொதுவான இடத்தில் 1912ல் நடந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என வென்றுள்ளது. இந்த இரு வெற்றிகளும் லார்ட்ஸ், மான்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளன.

ஆகவே கடந்த காலங்களில் இருந்து ஒப்பீடு செய்தால், டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செய்து வந்துள்ளது தெரியவருகிறது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், கடந்த கால வெற்றிகள், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வீரர்கள் வருகையால் தென் ஆப்ரிக்க அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளதால், கடந்த கால வரலாற்றை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.

அனுபவம் ஆஸி.க்கு வலிமை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் பெரும்பாலானவர்கள் இதற்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடிய அனுபவம் உடையவர்கள். இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி விளையாடலாம், எப்படி கையாளலாம் என்பதை நன்கு தெரிந்தவர்கள்.

அதனால்தான் கடந்த 4 ஆண்டுகளில் ஐசிசி சார்பில் நடந்த 3 விதமான போட்டித்தொடர்களில் 4 கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பந்துவீச்சில் உலகின் தலைசிறந்த வீரர்களான பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணியும், பேட்டிங்கில் அனுபவம் மிக்க ஸ்டீவ் ஸ்மித், இரு பைனல்களில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட்டும் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாகும்.

இதில் பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 4 பேரும் சேர்ந்து தலா 250 விக்கெட்டுகள் குவித்துள்ளனர். ஆனால், ரபாடா மட்டும் தனித்து 327 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவை குழப்பும் ஆஸ்திரேலியா புதிய உத்தியா?

ஆனால், இந்த பைனலில் தென் ஆப்ரிக்க அணியை குழப்பும் விதத்தில் பேட்டிங் வரிசையையே ஆஸ்திரேலிய அணி மாற்றி அமைத்திருக்கிறது. காயத்தால் பல மாதங்கள் ஓய்வில் இருந்து அணிக்குத் திரும்பிய கேமரூன் க்ரீன் பந்துவீச முடியாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் முதல்முறையாக உஸ்மான் கவாஜாவுடன் சேர்ந்து லாபுஷேன் தொடக்க வீரராகக் களமிறங்குகிறார். 3வது வீரராகக் களமிறங்கும் டிராவிஸ் ஹெட் நடுவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் ஆஸ்திரேலிய அணி பரிசோதனைக்காகச் செய்துள்ளதா அல்லது தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களைக் குழப்பும் வகையில் மாற்றி அமைத்துள்ளதா என்பது தெரியவில்லை.

இளம் படையுடன் தென் ஆப்ரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா

தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை இதுபோன்ற பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் உத்தி, திறன், தாக்குதல் குறித்து அறிந்திருக்கவில்லை, முதல்முறையாக பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்கிறது.

மார்க்ரம், ரிக்கெல்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்குவார். டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், கேப்டன் பவுமா, முல்டர், டேவிட் பெடிங்காம் நடுவரிசையில் களமிறங்குவார்கள். ஐபிஎல்லில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் பந்துவீச்சை சந்தித்த அனுபவத்தை இந்தத் தொடரில் பயன்படுத்தலாம்.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சுதான். கடந்த முறை இதே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டர்களை சிதைத்து பெரிய வெற்றியை ரபாடா பெற்றுக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் ரபாடாவின் மின்னல் வேக, ஈட்டிபோல் இறக்கும் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ரபாடா தவிர்த்து லுங்கி இங்கிடி, மார்கோ யான்சென், முல்டர் உள்ளனர். டேன் பாட்டர்ஸ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சேகவ் மகராஜ், மார்க்ரம் மட்டுமே உள்ளனர்.

வழக்கமாக ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகள் கூக்கபுரா பந்துகளில்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவை. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில், டியூக் பந்து பயன்படுத்தப்படுகிறது. டியூக் பந்தில் ரபாடாவின் பந்துவீச்சு பெரிய அளவுக்கு சிறப்பாக இருக்கும் என நம்பப்படுவதால், அவர் தென் ஆப்ரிக்காவுக்கு துருப்புச்சீட்டாக இருப்பார்.

லாபுஷேனுக்கு புதிய பொறுப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை கவனத்தை ஈர்த்திருப்பவர் லாபுஷேன். முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கும் லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக ஒன்டவுனில் இருந்து மாறி லாபுஷேன் பேட் செய்கிறார். லாபுஷேனின் சமீபத்திய சர்வதேச ஃபார்ம் கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் உள்நாட்டில் ஆடிய ஆட்டம், அடித்த சதம் நம்பிக்கையை அளித்து அணியில் இடம் பெறவைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் லாபுஷேனின் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பலமாகும்.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக லாபுஷேனை தொடக்க வீரராகக் களமிறக்கி பரிசோதிக்கிறது. கேமரூன் க்ரீன் 3வது வீரராக களமிறங்குகிறார், அவரால் பந்துவீச முடியாததால் பேட்டராக பயன்படுத்தப்படுகிறார். கூடுதல் வேகப்பந்துவீச்சாளருக்காக பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.காயத்திலிருந்து மீண்டு ஹேசல்வுட் வந்துள்ளதால், ஸ்காட் போலந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், வெப்ஸ்டர் ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு லேதன் லயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். நடுவரிசை பேட்டிங்கில் கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ்ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே ஆகியோர் உள்ளனர்.

ப்ளேயிங் லெவன்

ஆஸ்திரேலிய அணி விவரம் (உத்தேச அணி)

உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான், ஜோஷ் ஹேசல்வுட்

தென் ஆப்ரிக்க அணி விவரம் (உத்தேச அணி)

எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், டேவிட் பெடிங்காம், கெயில் வெர்னே, மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

ஆடுகளம் எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானம்

இங்கிலாந்தில் கோடைகாலம் தொடங்கியிருக்கிறது. ஆதலால் பகல்நேரத்தில் நல்ல வெப்பம் நிலவும், அதேசமயம், மாலை நேரத்தில் இடியுடன் மழையும் வரலாம். ஜூன் மாதத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமான ஆட்டங்கள் ஆடிய அனுபவம் ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இல்லை ஆதலால் காலநிலையை அறிந்து பந்துவீச இரு அணிகளுக்கும் சிறிது நேரம் ஆகலாம்.

ஆடுகளம் வறண்டிருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், இரு அணிகளிலும் இருக்கும் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் துருப்புசீட்டாக இருப்பார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு ஆடுகளம் இருக்கலாம். ஆனால், 2 நாட்களுக்கு ப்பின் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrnxv4207po

  • கருத்துக்கள உறவுகள்

WTC FINAL : ரபாடா சாதனையால் பும்ராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

12 Jun 2025, 9:39 AM

bhumrah gets outrage after rabada fifer in wtc 25

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 11) தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை பின் தள்ளி அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஆலன் டொனால்ட் மற்றும் நிட்டினியை தொடர்ந்து மூன்றாவது வீரராக இடம்பிடித்துள்ளார்.

அதே போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் எடுத்த பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் உடையவராக மாறியிருக்கிறார் காகிசோ ரபாடா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பவுலர் பும்ரா 64 விக்கெட்டுகளை 39.9 என்ற பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டில் வீழ்த்தியது தான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை 38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் முறியடித்துள்ளார் ரபாடா.

image-2468-1024x810.png

இதெற்கெல்லாம் மேலாக தற்போது நடைபெற்று வரும் பைனலில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பும்ரா அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாததை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர்.

https://minnambalam.com/bhumrah-gets-outrage-after-rabada-fifer-in-wtc-25/

  • கருத்துக்கள உறவுகள்

WTC Final : ரபாடா நிகிடி பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா… வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?

13 Jun 2025, 9:41 AM

20250613_093630-scaled.jpg

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் யுத்தம் நடத்தி வரும் நிலையில் இறுதிப்போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் குவித்தது. ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 138 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.

1000333093-1024x576.jpg

74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய ரபாடா தனது ஒரே ஓவரில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீனை வெளியேற்றினார்.

20250613_093606-1024x1015.jpg

மறுபக்கம் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அச்சுறுத்திய ஸ்மித் மற்றும் வெப்ஸ்டரை லுங்கி நெகிடி ஆட்டமிழக்கச் செய்தார்.

பின்னர் அரை சதம் நோக்கி நகர்ந்த அலெக்ஸ் கேரியை (43) ரபடாவும், கேப்டன் கம்மின்ஸை (6) நிகிடியும் வெளியேற்றினர்.

இருவரின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

எனினும் களத்தில் ஸ்டார்க் மற்றும் லியன் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

https://minnambalam.com/will-south-africa-chase-aus-and-take-crown/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா டெஸ்ட் சாம்பியன் ஆகுமா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் மார்க்ரம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 14 ஜூன் 2025, 03:08 GMT

    புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்துள்ளது.

களத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் பவுமா - மார்க்ரம் ஜோடி தங்களின் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஏதேனும் மாயஜாலம் நிகழ்த்துமா அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும்.

ஸ்டார்க் அரைசதம்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் 16, நேதன் லாயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

3வது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டது. லேயான் 2 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.

ஸ்டார்க், ஹேசல்வுட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முதல் முறை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இருவரும் 18 ஓவர்கள் களத்தில் இருந்தனர்.

ஸ்டார்க் 2019ல் ஓல்ட் ட்ராபோர்டில் முதல்முறையாக அரைசதம் அடித்தபின் 2வது முறையாக நேற்று அரைசதத்தை 131 பந்துகளில் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். ஹேசல்வுட் 17 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.

ரபாடா 9 விக்கெட்

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்த 74 ரன்களையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், யான் சென் 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி

282 ரன்கள் இலக்கை துரத்தி தென் ஆப்ரிக்க அணி நேற்று 3வது நாளில் உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது. மார்க்ரம், ரிக்கெல்டன் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய 2வது ஓவரில் ரிக்கெல்டன் 6 ரன்னில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிஅதிர்ச்சியளித்தார்.

அடுத்து வந்த முல்டர், மார்க்ரமுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். 12வது ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு சற்று நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது.

ஆனால் 18வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஸ்டார்க் பிரித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் முல்டர் 27 ரன்னில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக பேட் செய்து நங்கூரம் அமைத்தனர். இருவரையும் பிரிக்க கேப்டன் கம்மின்ஸ் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் அளிக்கவில்லை.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், கேப்டன் பவுமா இருவரும் நிதானமாக பேட் செய்தனர்.

ஸ்மித் காயம்

பவுமா 2 ரன்னில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பீல்டிங்கில் இருந்தார். பவுமா பேட்டில் இருந்து தெறித்த பந்தை ஸ்மித் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவரின் சுண்டுவிரலில் பட்டு சென்றது. இதில் ஸ்மித்தின் சுண்டுவிரல் எலும்பில் முறிவு ஏற்பட்டு கடும் வலியுடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

மார்க்ரம் - பவுமா வலுவான பார்ட்னர்ஷிப்

பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கேப்டன் பவுமாவுக்கு திடீரென தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் ரன்கள் ஓடாமல் விக்கெட்டை நிலைப்படுத்தும் விதத்திலேயே பேட் செய்தார். மார்க்ரம் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்தபோது மார்க்ரம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். 25 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களை எட்டி வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது.

இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடியும்பலன் கிடைக்கவில்லை. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததாலும், பந்து பேட்டை நோக்கி நன்கு வந்ததாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை.

இருவரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது. மார்க்ரம், பவுமா இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தியதால், 25வது ஓவரில் 100 ரன்களை எட்டிய தென் ஆப்ரிக்கா, 52வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 200 ரன்களை எட்டியது.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா

மார்க்ரம் சதம்

முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரமின் ஆட்டத்தில் இம்முறை தீர்க்கமான எண்ணம் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் கையாண்டார். பெரிதாக அவசரப்படாமல் லென்த் பந்துகளை லீவ் செய்து மார்க்ரம் ஆடியதால், தவறு செய்யவைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம் இரண்டாவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் சதம் அடித்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டை கழற்றி, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியை மார்க்ரம் வெளிப்படுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் அதிகளவு இருந்ததால், மார்க்ரமின் சதத்தை கரகோஷத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய 3 வேகப்பந்தவீச்சாளர்களும் மார்க்ரத்தை வெளியேற்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பந்துவீசியும் மார்க்ரம் அதை தவிடுபொடியாக்கி களத்தில் நங்கூரம் பாய்ச்சினார். மார்க்ரம் ஆஃப் சைடில் அருமையாக ஆடக்கூடியவர் என்பதால், ஆஃப் சைடில் விலக்கி வீசப்பட்ட பந்துகளை ரன்களாக மாற்ற அவர் தவறவில்லை, அவரின் சதத்தில் 65 ரன்கள் ஆஃப் சைடில் எடுக்கப்பட்டவை.

மார்க்ரம் கடைசியாக 16 இன்னிங்ஸ்களுக்கு முன் சதம் அடித்திருந்தார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று தொடங்கும்போது சதம் அடித்திருந்த மார்க்ரம் மீண்டும் முடியும்போது பைனலில் சதம் அடித்துள்ளார்.

யாருக்கு சாதகம்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் முடியவே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆடுகளம் கடைசி இருநாட்கள் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.

தென் ஆப்ரிக்காவின் வரலாற்று சாதனை படைக்க எய்டன் மார்க்ரமின் அற்புதமான(102) சதம், கேப்டன் டெம்பா பவுவுமாவின்(65) பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக இருக்கும். இருவரும் 38 ஓவர்கள் பேட்டிங் செய்து 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் ஆடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மார்க்ரம்

"சோக்கர்ஸ்" ஆவார்களா தென் ஆப்ரிக்கா?

3வதுநாள் ஆட்டநேர முடிவு வரை ஆட்டம் தென் ஆப்ரிக்க பக்கம் முடியவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இதுபோன்ற இக்கட்டான கட்டங்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. ஆதலால், கடைசி 2 நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தாலும் வியப்பில்லை. குறிப்பாக ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், நேதன் லேயான் ஆகியோரின் பந்துவீச்சு ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பிவிடும்.

தென் ஆப்ரிக்க அணி கிரிக்கெட் வரலாற்றில் பல நேரங்களில் நெருக்கடியான, அழுத்தமான தருணங்களில் அதை சமாளிக்க முடியாமல் வெற்றியை கோட்டைவிட்ட "சோக்கர்ஸ்" என்று பெயரெடுத்துள்ளது. இதை சாதகமாக வைத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று தங்கள் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியளித்தால், ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு தேவையான 69 ரன்களை சேர்க்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்யவும் முயற்சிக்கலாம்.

தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெப்ஸ், பெடிங்ஹாம் ஆகிய இரு விக்கெட்டுகள் வீழ்ந்தாலே அடுத்துவரும் பேட்டர்கள் பெரிதாக பேட் செய்யக்கூடியவர்கள் இல்லை. ஆதலால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் என்ன உத்தியோடு களமிறங்கப் போகிறார்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று இன்று தெரியும்.

இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மாயஜாலம் வெல்லுமா, அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clygwddyx3no

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி, தென் ஆப்ரிக்கா, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெம்பா பவுமா

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது.

தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது.

தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம்.

யார் இந்த டெம்பா பவுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி, தென் ஆப்ரிக்கா, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது.

“இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.”

இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது.

பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன?

பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன?

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார்.

பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர்.

இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி, தென் ஆப்ரிக்கா, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான்

2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.

ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது.

ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார்.

இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி, தென் ஆப்ரிக்கா, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார்.

டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார்.

விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி, தென் ஆப்ரிக்கா, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா

முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது.

கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது.

இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா.

இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crk2gpdrd4po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது?

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 14 ஜூன் 2025, 14:30 GMT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.

இது ஐசிசி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெல்லும் 2வது சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன் 1998ல் நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது.

இனியும் பதற்றத்தில் தோல்வியடையும் அணி அல்ல

ஐசிசி பைனல், அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்க அணி பதற்றத்தில் வெற்றியை நழுவவிடுவார்கள் என்ற அவப்பெயர் கடந்த காலங்களி்ல் அந்த அணி மீது இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அது அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணியினர் மாற்றிவிட்டனர்.

தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் 27 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் அணி ஐசிசி அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்ததைத்தான் பார்த்திருந்தார்கள்.

ஆனால், இந்த இளம் வீரர்கள்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர்.

கடைசியாக தென் ஆப்ரிக்க அணி 1998ம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. அதன்பின், 27 ஆண்டுகளாக பலமுறை ஐசிசி நடத்தும்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தென் ஆப்ரிக்க அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்திய அணியிடம் தோற்றது.

ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருப்பின் பலனாக இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக வென்றது.

இதுவரை நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தார்போல் 3வது அணியாக தென்ஆப்ரிக்கா சாம்பியனானது.

மார்க்ரம் ஆட்டநாயகன்

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் எய்டன் மார்க்ரம்

தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் (136) ஆகச்சிறந்த ஆட்டம் மற்றும் கேப்டன் பவுமாவின்(66) பொறுப்பான பேட்டிங் முக்கியக் காரணமாகும்.

முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம், 2வது இன்னிங்ஸில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஐசிசி இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார். இதற்கு முன் கிளைவ் லாய்டு (1985), அரவிந்த டி சில்வா (1996) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி பைனலில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது மார்க்ரம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

282 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மார்க்ரம் 156 பந்துகளில் சதத்தையும், பவுமா அரைசதத்தையும் நிறைவு செய்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது.

மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடன் களத்தில் இருந்து 4வது நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கேப்டன் பவுமா கூடுதலாக ஒரு ரன் சேர்த்து 66 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்க்ரமுக்கு ஒத்துழைத்து ஆடவே ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து பெடிங்ஹம் களமிறங்கி, மார்க்ரமுடன் சேர்ந்தார். இளம் வீரராக இருந்தாலும் பெடிங்ஹம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து அணியை மெல்ல வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்.

தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் மார்க்ரம் (136) மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர்.

அடுத்து, வெர்னே களமிறங்கி, பெடிங்ஹமுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெடிஹாம் 21 ரன்களுடனும், வெர்னே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டம்

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பெவிலியனிலும், டக்அவுட்டிலும் இருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கேசவ் மகராஜ், கேப்டன் பவுமா உள்பட பல வீரர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர்.

திருப்புமுனை பந்துவீச்சாளர்கள்

தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கேப்டன் பவுமா, மார்க்ரமின் சதம் எந்த அளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததோ, அதே அளவுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ரபாடா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும், யான்சென் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதில் குறிப்பாக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் கடைசி 5 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர், அதேபோல 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை ஒருபோதும் தென் ஆப்ரிக்க அணி தவறவிடவில்லை.

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது

தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை என்ற சாதனையை பவுமா தக்க வைத்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுடன் சேர்ந்து பார்ட்ன்ர்ஷிப் அமைத்து ஆடிய பவுமா வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். ஒரு கட்டத்தில் பவுமாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். இதனால் பவுமா ரிட்டயர்ஹர்ட் முறையில் பெவிலியன் வர வேண்டுமா என்ற விவாதம் வர்ணனையாளர்கள் மத்தியில் நிலவியது.

ஆனால், முக்கியத்துவம் மிகுந்த இந்த ஆட்டத்தில் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து கொண்ட பவுமா, நேற்றைய ஆட்டம் முடியும் வரை தசைப்பிடிப்பு வலியுடன் மார்க்ரமுடன் இணைந்து பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமாக இருந்தார்.

கால் நூற்றாண்டு காத்திருப்பு

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது.

அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது.

1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது.

1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது.

2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.

கடின உழைப்பு, நம்பிக்கை

தென் ஆப்ரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெம்பா, பவுமா, ஆஸ்திரேலியா எய்டன் மார்க்ரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா அளித்த பேட்டியில் " எங்களுக்கு கடந்த இரு நாட்களும் சிறப்பானதாக இருந்தது, சில நேரங்களில் நாங்கள் தென் ஆப்ரிக்க என்று உணரவைத்தது. இந்த தொடருக்காக கடினமாக உழைத்தோம், தயாராகினோம், அதிகமான நம்பிக்கையுடனும், ஏராளமான சந்தேகங்களைச் சுமந்தும் வந்தோம். சிறப்பாக ஆடிய அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு இரு ஆகச்சிறந்த தருணம், அடுத்த இருநாட்களில் எங்களை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்கள்.

இந்த எழுச்சியைத்தான், உணர்ச்சியைத்தான் அணியினர் அனைவரும் எதிர்பார்த்தார்கள் விரும்பினார்கள். மார்க்ரமை அணிக்குள் கொண்டுவந்த போது அவரைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் அனைத்தையும் அவரின் ஆட்டம் நொறுக்கிவிட்டது. ரபாடாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் பலவாறு சிதறி இருந்தாலும், தேசமாக ஒன்றாக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம், இதை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் ஆடாத பயிற்சியாளர்

தென் ஆப்ரிக்க அணியின் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் முக்கியக் காரணம். தென் ஆப்ரிக்க தேசிய அணியில் இடம் பெறாத, சர்வதேச போட்டியில் ஆடாத சுக்ரி கான்ராட் கடந்த 2023ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தென் ஆப்ரிக்க அணியில் ஏற்பட்ட மாற்றங்கள், வெற்றிகள் சாம்பியன்ஷிப் வரை கொண்டு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிக்கி கான்ராடின் மகன் சுக்ரி கான்ராட் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண அணிக்காக இளமைக் காலத்தில் ஆடிய சுக்ரி கான்ராட் 13 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கேப் கோப்ராஸ், கட்டெங், ஹைவீல்ட் லயன்ஸ் ஆகிய கவுன்டி அணிகளுக்குப் பயிற்சியாளராக சுக்ரி பணியாற்றியுள்ளார். உகாண்டா தேசிய அணிக்கு 2010-2011ல் பயிற்சியாளராகவும் சுக்ரி இருந்து அதன்பின் தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைமைப் பயிற்சியாளராக சுக்ரி நியமிக்கப்பட்டார்.

2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அணியை தயார் செய்த சுக்ரி, கேப்டனாக இருந்த மார்க்ரமை சமீபத்தில் மாற்றிவிட்டு, டெம்பா பவுமாவை நியமிக்க பரிந்துரை செய்தார். அதற்கான பலனும் கிடைக்கவே முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தென் ஆப்ரிக்கா வென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g6n5d19kjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தெம்பா பவுமாவும்

ரிசர்வேசனும்

27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க

ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது.

அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று

உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது.

வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன்

டெம்பா பவுமா பெறும் போது

உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

காரணம்

தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர்

ஒருவர் - கேப்டனாக இருந்து

கோப்பையை வெல்வார் என்று

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால்

இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது.

எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று

தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட

இனத்தில் இருந்து தலைவன் தோன்றி

இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை.

ஆம்...

தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில்

ரிசர்வேசன் எனும் கோட்டா முறை உண்டு.

ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட

அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில்

ஐந்து பேர் - வெள்ளையரும்

மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும்.

பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது???

என்னங்க இது விளையாட்டுல

எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்...

இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே...

தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்...

அப்போது நான் மூன்று பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன்

முதல் பதம்

சமூக நீதி (SOCIAL EQUITY)

இரண்டாவது பதம்

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS)

மூன்றாவது பதம்

முறையான/சமமான/ சரியான பிரதிநிதித்துவம்

( EQUAL REPRESENTATION)

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும்.

கல்வி

பொருளாதாரம்

கலை / இலக்கியம்/ விளையாட்டு

ஆகிய அனைத்து துறைகளிலும்

கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர்.

இதனால் அவர்களுக்கு

முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை.

இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும்

அணியில் இடம்பெற்றாலும்

அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர்

இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள்.

மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது.

இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது.

ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா

1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது.

மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது.

இத்தகைய வரலாற்றை அறிந்தால்

தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும்.

அதன் நியாயங்களும் விளங்கும்.

அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில்

"வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார்.

என்னைப் பொருத்தவரை

மனிதன் ஒரு சமூக விலங்கு

சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன்.

இதில்

சா*தி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும்

தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம்.

மேற்கூறிய விசயங்களால்

வாய்ப்புகள் கிடைப்பதிலும்

வாய்ப்புகளை ஒடுக்குவதிலும்

பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது.

சமூகத்தில் நிலவும் இத்தகைய

ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்"

இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும்.

இது இயற்கை.

உலகின் பெரும் புரட்சிகளும்

போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது.

எனவே என்னைப் பொருத்தவரை

சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி..

மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம் இருப்பதில்லை.

தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால்

அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால்

கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை.

அதற்குக் காரணம்

கருப்பு நிற வீரர்கள் அல்லர்

அவர்களை வெளிக்கொணராத

அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும்.

இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து

இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால்

நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை.

இதை உணர்ந்தால் நமக்கு

நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும்.

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு

அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி

மெய்யான வெற்றியே

தூய்மையான மகிழ்ச்சி

அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி

தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும்

பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும்

கிடைத்த இந்த கோப்பை

உண்மையில் மிகவும் வலிமையானது.

இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்...

தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன்.

டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம்.

ஏலேய் மக்கா

எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம்

"டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. "

இங்க தெம்பா என்றால் வலிமை / strength

மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது .

ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை

யாதும் ஊரே

யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார்

அதையே நானும் வழிமொழிகிறேன்..

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

E-mail

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெம்பா பவுமா

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்கா

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்."

- இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்.

கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது "ஜென்டில்மேன் கேமாக" இருக்க முடியும்.

தென் ஆப்ரிக்காவில் நிறவெறி

தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,CRAIG GOLDING/FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

படக்குறிப்பு,1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி.

அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி 'சோக்கர்ஸ்' (chokers) என்ற பெயரையும் பெற்றது.

மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,CRAIG PRENTIS /ALLSPORT

படக்குறிப்பு,1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது.

தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி?

தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது.

பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது.

தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை.

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிறவெறியால் தடை

தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது.

அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன.

1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது.

இடஒதுக்கீடு அறிமுகம்

தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர்.

1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது.

விளையாட்டில் இடஒதுக்கீடு முறை

இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம்.

இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு.

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினி

மகாயா என்டினி குற்றச்சாட்டு

தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

என்டினி பேசுகையில் "நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், 'சாப்பிடப் போகிறோம் வா' என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள்.

என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன்

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், "தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது" எனத் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் "கோட்டா ப்ளேயர்ஸ்", அதாவது 'இடஒதுக்கீடு வீரர்கள்' என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹாசிம் ஆம்லா

தொடர்ந்த நிறவெறி

2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார்.

உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர்.

கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை.

இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் " நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்" என்று தெரிவித்தார்.

இடஒதுக்கீடு முறை தேவையா?

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது.

ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது.

மாற்றத்துக்கான வெற்றி

தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது.

தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்" என்றார்.

யார் இந்த பவுமா?

தென் ஆப்ரிக்கா, இட ஒதுக்கீடு, டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமா

கேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார்.

2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார்.

2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.

டெஸ்ட் கேப்டன் பொறுப்பு

2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார்.

2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கனவிலும் நினைக்கவில்லை

சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார்.

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0eqe2xjgwqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.