Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

அடியார்கள் அமைதி காக்கவும்🤣.

12 hours ago, ஏராளன் said:

மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

அடியவர்கள் என தாங்கள் குறிப்பிட்டதால் ஆண்டவரே என்று விளித்தேன்!

  • Replies 182
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண

  • goshan_che
    goshan_che

    முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20

  • செம்பாட்டான்
    செம்பாட்டான்

    பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டும

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣

இந்த மட்ச் போகின்ற போக்கைப் பார்த்தால் 3 நாளுக்குள் முடியும். யார் வெல்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் ட்ராவில் முடியாது! . நாலாம் நாள் ரிக்கெற் £60 க்கு வாங்கி refund க்கு அலையவேண்டுமா!

நேற்று வேலையிடத்திற்கு போயிருந்தேன். திரும்பும் பக்கம் எல்லாம் இருக்கும் ரிவிக்களில் கிரிக்கெட்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால் ஒரு ஓவர் ஆறுதலாகப் பார்க்கமுடியாத வேலை!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று BBC Radio 4 இல் ஆஸி கொமென்ரேற்றர் ஜிம் மக்ஸ்வெல் இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றார். பார்ப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அடியவர்கள் என தாங்கள் குறிப்பிட்டதால் ஆண்டவரே என்று விளித்தேன்!

நான் சொன்னது தெளிவா விளங்காமல் பேசும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த மட்ச் போகின்ற போக்கைப் பார்த்தால் 3 நாளுக்குள் முடியும். யார் வெல்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் ட்ராவில் முடியாது! . நாலாம் நாள் ரிக்கெற் £60 க்கு வாங்கி refund க்கு அலையவேண்டுமா!

நேற்று வேலையிடத்திற்கு போயிருந்தேன். திரும்பும் பக்கம் எல்லாம் இருக்கும் ரிவிக்களில் கிரிக்கெட்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால் ஒரு ஓவர் ஆறுதலாகப் பார்க்கமுடியாத வேலை!

மோனுக்கும் சேர்த்து 80 ரூபாய் பாஸ். கஸ்டப்பட்டு உழைச்ச காசு 🤣.

ஆனால் இப்பவெல்லாம் app தானே. ஆட்டம் நடக்காவிடில் (மினிமம் 15 ஓவர் full refund க்கு, 30 ஓவர் 50% refund க்கு) அவர்களாகவே refund ஐ பாங்கில் போட்டு விடுவார்கள். அலைய வேண்டி வராது.

என்ர லக்குக்கு 4ம் நாள், 16 ஓவர் அல்லது 31 ஓவர் விளையாட்டு நடக்கும் என நினைக்கிறேன்🤣.

இப்படித்தான் போன WTC final, 5ம் நாள், ஒவல் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட் இலவசமாக கிடைத்தது. இந்தியாவின் 6 விக்கெட்டை லஞ்சுக்கு முன்பே ஊதி தள்ளி விட்டது அவுஸ்.

வார நாட்களில் மகனை ஸ்கூல் கட் அடித்து கூட்டி போகலாம், ஆனால் வீட்டில அவன் என்ன பிழை விட்டாலும், கால் தடக்கி விழுந்தாலும் அதைத்தான் காரணம் என்பார்கள் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

DRINKS

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

Australia FlagAustralia

212

South Africa FlagSouth Africa

(35.1 ov) 87/4

Day 2 - Session 1: South Africa trail by 125 runs.

Current RR: 2.47

 • Min. Ov. Rem: 77.5

 • Last 10 ov (RR): 32/0 (3.20)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவுமா வை அவுட்டாக்க லாபுஷேஞ் பிடித்த கேட்ச் “வாவ்” ரகம்.

பெடிங்டன் ஒருத்தர்தான் டெஸ்ட் மேட்ச் போல ஆடுகிறார். பவுண்டரி அடிகள் கலக்கலாக இருந்தாலும்…அடிக்கடி லைனை கடந்து ஆடுகிறார். எப்போவேணும் எண்டாலும் எல்பி ஆகலாம்.

கடைசி ஓவரில் பெடிங்டன் handling the ball முறையில் அவுட் ஆகி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் அம்பயர்கள் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

AUS FlagAUS

212

SA FlagSA

(54.4 ov) 135/7

Day 2 - Session 2: South Africa trail by 77 runs.

CRR: 2.46

 • Min. Ov. Rem: 57.2

 • Last 10 ov (RR): 37/2 (3.70)

Batters

R

B

4s

6s

SR

Keshav Maharaj* (rhb)

5

9

1

0

55.55

David Bedingham (rhb)

45

109

6

0

41.28

Bowlers

O

M

R

W

Econ

Nathan Lyon (ob)

7.4

3

12

0

1.56

Pat Cummins (rf)

17

5

28

4

1.64

P'SHIP: 9 Runs, 2.4 Ov (RR: 3.37) • L'BAT: Marco Jansen 0 (3b)• FOW: 126/7 (51.6 Ov)

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில பூச்சியமே எங்கள் மூச்சு என்டுதான் வரும் போல கிடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, செம்பாட்டான் said:

கடைசியில பூச்சியமே எங்கள் மூச்சு என்டுதான் வரும் போல கிடக்கு

கேள்விகள் அப்படி 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன் மட்டும்தான் பட் கம்மின்சை தெரிவு செய்திருக்கிறார் போல இருக்கு!👏

கவாஜாவை தெரிவுசெய்தவர்களுக்கும் முட்டைதான்!!😭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரசோ அண்ணாவை தவிர வேறு யாரும் 6ம் கேள்விக்கு கமிண்சை தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ரசோதரன் மட்டும்தான் பட் கம்மின்சை தெரிவு செய்திருக்கிறார் போல இருக்கு!👏

கவாஜாவை தெரிவுசெய்தவர்களுக்கும் முட்டைதான்!!😭

ரசோதரன் ஒரு கிரிக்கட் சூறாவளி. IPL ல செய்த சம்பவத்தப் பார்த்தனீங்கள்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

ரசோதரன் ஒரு கிரிக்கட் சூறாவளி. IPL ல செய்த சம்பவத்தப் பார்த்தனீங்கள்தானே.

5ம் கேள்வி சுவி அண்ணா, ரசோ அண்ணா க்களிடையே தீர்மானிக்கும் கேள்வியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

5ம் கேள்வி சுவி அண்ணா, ரசோ அண்ணா க்களிடையே தீர்மானிக்கும் கேள்வியாக இருக்கும்.

Just now, goshan_che said:

ரசோ ஒருவருக்குத்தான் முழு புள்ளிகளையும் எடுக்கும் வாய்ப்பு இப்போதும் உள்ளது! டிராவிஸ் ஹெட் அவுட் ஆகும்வரை!!

ஸ்மித்தை தெரிவுசெய்தோருக்கும் முட்டைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

லாட்ஸ் மைதானத்தில் என்னதான் நடக்குது. ஏழு விக்கட் போட்டுது.

கோசானின் நாளாம் நாள் கனவு என்னாவது. காசத் திருப்பித் தருவாங்கள் என்ட படியாப் பரவாயில்லை

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஐபிஎல் விளையாடி டெஸ்ட் போட்டியை மறந்திட்டாங்களோ?! அல்லது லோட்ர்ஸ் மைதான ஆடுகளம் தயாரிப்பவர் வேலையை காட்டிட்டாரோ?!

  • கருத்துக்கள உறவுகள்

லாட்ஸ் மைதானம் எப்பவுமே விருந்தினர்களுக்கு கடினமான மைதானம். போன வருடம் நடந்த இரண்டு போட்டிகள்.

இலங்கை 196, 292 ஓட்டங்கள்

மேற்கிந்தியத் தீவுகள் 121, 133 ஓட்டங்கள்

தென்னாபிரிக்கா கடைசியாக 2022ல் இங்கு விளையாடி இருந்தது. இங்கிலாந்து அணியை 165 மற்றும் 149க்கு உறுட்டி வெற்றி பெற்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ரசோதரன் ஒரு கிரிக்கட் சூறாவளி. IPL ல செய்த சம்பவத்தப் பார்த்தனீங்கள்தானே.

🙃............................

நானா அது.................... அதுவரை வேறு எவரும் கமிண்சை தெரிவு செய்யாமல் இருந்ததால் அவரை நான் தெரிவு செய்திருந்தேன். மற்றபடி அதே கிளி தான்................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

AUS FlagAUS

(32.1 ov) 212 & 93/7

SA FlagSA

138

Day 2 - Session 3: Australia lead by 167 runs.

CRR: 2.89

 • Min. Ov. Rem: 19.5

 • Last 10 ov (RR): 35/3 (

இப்பத்தான் பார்க்க நேரம் கிடைத்தது! அவுஸ் கட்டாயம் வெல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி தென்னாபிரிக்காவிடமிருந்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

STUMPS •  Starts 10:30 AM

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

AUS FlagAUS

(40 ov) 212 & 144/8

SA FlagSA

138

Day 2 - Australia lead by 218 runs.

CRR: 3.60

 • Last 10 ov (RR): 60/1 (6.00)

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும்.

தாங்கள் சொன்னதுதான் நடக்கப் போகுது. 250க்குக் கிட்ட துரத்த வேணும்.

உலகமே தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக. எல்லா தென்னாபிரிக்காவின் முன்னால் வீரர்களும் மைதானத்தில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன.

முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள்.

ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன.

இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி.


சுவி 30 🪑

வாதவூரான் 30 

ரசோதரன் 30 

வீரப்பையன் 20 

ஏராளன் 20

கிருபன் 20 

புலவர் 20

ஈழப்பிரியன் 20 

வசி 20 

வாத்தியார் 20 

அல்வாயான் 20 

எப்போதும் தமிழன் 20 

கோஷான் 20 

கந்தப்பு 20 

நுணாவிலான்  10 

பிரபா 10 

செம்பாட்டான் 00 🐥

2 minutes ago, செம்பாட்டான் said:

தாங்கள் சொன்னதுதான் நடக்கப் போகுது. 250க்குக் கிட்ட துரத்த வேணும்.

உலகமே தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக. எல்லா தென்னாபிரிக்காவின் முன்னால் வீரர்களும் மைதானத்தில்.

இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும்.

ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை.

தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம்.

எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

கோசானின் நாளாம் நாள் கனவு என்னாவது. காசத் திருப்பித் தருவாங்கள் என்ட படியாப் பரவாயில்லை

நாளைக்கே முடியும் போலத்தான் இருக்கு.

80+உள்ளே சாப்பாடு, நீகாராகாரம் =50, போக்குவரத்து 15.

ஒரு £150 பவுண் தப்பியது என விட்டு விட வேண்டியதுதான்.

பெர்மிங்ஹாம், மான்செஸ்டரில் இங்கிலாந்து - இந்தியா 3ம் நாள் டிக்கெட்டுகள் வாங்கி வைத்துள்ளேன். அதாவது ஒழுங்கா நடக்க வேணும் கடவுளே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.